search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95216"

    34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் வீரப்பனின் சகோதரரை விடுதலை செய்ய தமிழக அரசு முன் வராதது எந்த வகையிலும் நியாயமல்ல என ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில்வில் கூறி இருப்பதாவது:-

    அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில் தான் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் அவரை விடுதலை செய்ய தமிழக அரசு முன் வராதது எந்த வகையிலும் நியாயமல்ல!.

    மாதையன் - வீரப்பன்

    74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக எஸ்.பி.அம்ரித் பொறுப்பேற்றார்

    ×