search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95259"

    கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை மாவு - 3 டீஸ்பூன்,
    தண்ணீர் - ஒரு கப்,
    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு - சிறிதளவு,
    எலுமிச்சம்பழம் - அரை மூடி,
    நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
    ஏலக்காய் - 2.

    செய்முறை:

    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும்.

    வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.

    பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும்.

    வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும் இந்த சம்பா கோதுமை கஞ்சி.

    கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது. மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
    தேவையான பொருட்கள்

    கைக்குத்தல் அரிசி - 4 டீஸ்பூன்
    பொரிகடலை - 2  டீஸ்பூன்
    சுக்குத்தூள் - ½  டீஸ்பூன்

    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்ததும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக உப்பி வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    அதே போல் அடுத்து கடாயில் பொரிகடலையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.

    இரண்டும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் 2 டீஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.

    மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.

    கஞ்சி தயார் ஆனவுடன் இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    இப்போது சத்தான பொரிகடலை அரிசி கஞ்சி ரெடி.

    வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை காலை வேளையில் குடிக்கலாம். இந்த கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி - 1 கப்
    பச்சை பயறு - 3/4 கப்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    பூண்டு - 1 பல்
    சின்ன வெங்காயம் - 3-4
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 8 கப்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்



    செய்முறை:

    பச்சை பயறு, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.

    பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

    நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் போட்டு வேக வைக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறினால், பச்சை பயறு - அரிசி கஞ்சி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் சத்தான சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று சாமை அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்
    வெந்தயம் - கால் ஸ்பூன்
    சீரகம் - கால் ஸ்பூன்
    முழுப்பூண்டு - 2
    தேங்காய் துருவல் - அரை கப்
    உப்பு - தேவைக்கேற்ப


     
    செய்முறை :

    சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

    முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, நன்றாக கழுவி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    உளுந்து பாதியளவு வெந்ததும் ஊறவைத்த சாமை அரிசியை சேர்க்கவும்.

    அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.

    அனைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான சாமை கருப்பு உளுந்துகஞ்சி ரெடி.

    கஞ்சி திக்காக இருந்தால் பால் அல்லது மோர் அல்லது சூடான நீர் சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியில் பல்வேறு விதமான ரெசிபிகளை செய்யலாம். இன்று கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி - அரை கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    பால் - 1 கப்



    செய்முறை :

    கவுனி அரிசியை நன்றாக கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    கவுனி அரிசியை அரைக்கும் போது தண்ணீரை தனியாக வடித்து வைத்து அரிசியை மட்டும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை அடி கனமாக பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் ஊறவைத்து தனியாக வைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

    கைவிடாமல் கிளற வேண்டும். கலவை நன்றாக வெந்து திக்கான பதம் வரும் போது பாலை சேர்க்கவும்.

    பால் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து கலக்கவும்.

    சத்தான கவுனி அரிசி கஞ்சி ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats) - அரை கப்
    கேரட் -  1
    பீன்ஸ் - 5
    பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி
    வெங்காயம் - 1 சிறியது
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
    சீரகம் -  அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 2 1/2 கப்



    செய்முறை :

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.

    மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.

    கஞ்சியை கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் பரிமாறவும்.

    குறிப்பு :

    கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் .
    சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியில் பால் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - அரை கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பால் - 2 கப்
    சுக்கு சீரகம் - கால் தேக்கரண்டி
    பூண்டு - 13 பல்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வரகு அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    அரிசி பாதியளவு வெந்ததும், உரித்த பூண்டு, சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.

    அனைத்தும் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

    சூடான வரகு பால் கஞ்சி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொள்ளு பார்லி கஞ்சியை தினமும் பருகுவதால் உடலுக்கு உறுதி கிடைக்கும். உடலில் உள்ள கெட்டநீர் முழுவதும் வெளியேறும். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வறுத்துப் பொடித்த கொள்ளு, வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
    கொள்ளு மாவு - 1 கப்
    பார்லி மாவு - அரை கப்
    சீரகத்தூள் - 1 சிட்டிகை,
    மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை

    கொள்ளு, பார்லி மாவை ஒன்றாக போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீல் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கொதிக்க விடவும்.

    அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். கஞ்சி வெந்து வாசனை வரும் போது சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.

    அருமையான கொள்ளு பார்லி கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பழங்கஞ்சியை பற்றி ஆராய்ச்சி செய்து அதில் இருக்கும் மருத்துவ குணங்களை எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பழங்கஞ்சி குளிர்ச்சிமிக்கதாக இருப்பதால் இது உஷ்ணம் தொடர்புடைய நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது.
    பழங்கஞ்சியானது செலவற்ற உணவு. முதல் நாள் இரவில் சாப்பிட்டு முடித்துவிட்டு மீதம் வரும் சாதத்தில், தண்ணீர் சேர்த்து மூடிவைத்தால் மறுநாள் காலையில் அது பழங்கஞ்சியாகிவிடுகிறது. கிட்டத்தட்ட பத்து மணி நேரம் இரண்டும் ஒன்றாக கலந்து ஊறிவிடும்போது அதற்கு தனி மணமும், ருசியும் கிடைத்துவிடுகிறது.

    முதல் நாள் இரவில் தயாரானது என்பதால் அதன் பெயரோடு ‘பழைய’ இணைந்துவிடுகிறது. இதற்கு தனியாக ‘ஸ்பெஷல்’ கூட்டு எதுவும் தேவையில்லை. கொஞ்சம் உப்பு கலந்துகொள்ளவேண்டும். நான்கு சிறிய வெங்காயம் அல்லது இரண்டு பச்சை மிளகாய் போதுமானது. சிலர் கருவாட்டை சுட்டுவைத்துக்கொண்டு வயிற்றை பழங்கஞ்சியால் நிரப்பிவிடுவார்கள். விவசாயிகள் விளைநிலத்தில் கடுமையாக உழைப்பார்கள். அவர்களது உழைப்புக்கு ஏற்ற ஊக்கத்தை தரும் உணவு என்ற பெருமை பழங்கஞ்சிக்கு உண்டு.

    ‘அன்னத்தை வீணாக்கக்கூடாது’ என்று அந்த காலத்தில் இருந்தே சொல்லி வந்திருக்கிறார்கள். அதோடு ‘எந்த நேரத்தில் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு இல்லை என்று கூறிவிடக்கூடாது’ என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால் தேவைக்கு சற்று அதிகமாக வீடுகளில் தாய்மார்கள் சாதம் வடித்துவிடுவார்கள். அவற்றில் மீதம் வந்துவிட்டால், வீணாக்கக்கூடாது என்பதற்காக தண்ணீர் ஊற்றி (சேமித்து) பாதுகாப்பார்கள். இப்படி ஏதோ ஒரு ஆதிகாலத்து தாய் சாதத்தை பாதுகாத்ததும், பயன்படுத்தியதும்தான் பழங்கஞ்சியின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அதில் ஒவ்வொருவரும் தங்கள் ருசிக்குதக்கபடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மிளகாய், சிறிய வெங்காயத்தை இடித்து அதில் சேர்த்து ருசிக்கிறவர்களும் உண்டு.

    பழங்கஞ்சியை விரும்புகிறவர்கள் அதற்கு எந்த பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் விரும்பும் ருசியை பெறவேண்டும் என்றால், மண்கலத்தை பயன்படுத்தவேண்டும். அதுபோல் அதை கவனமாக தயாரிக்கவும் வேண்டும். இரவு உணவு முடிந்த பின்பு மீதம் இருக்கும் சாதத்தில் குளிர்ந்த நீரை ஊற்றிவைக்கவேண்டும்.

    ஏற்கனவே வடித்துவைத்திருக்கும் கஞ்சி நீராக இருந்தாலும் நல்லது. இரண்டு சிறு வெங்காயத்தையும், ஒரு மிளகாயையும் கல்லில் இடித்து அதில் சேர்த்து, தயிர் இருந்தால் அதையும் சற்று கலந்து விடவேண்டும். தேங்காய் ஓட்டில் செய்த அகப்பையால் கிளறிவிடுவது நல்லது. அந்த பானையை அப்படியே உறியில் தூக்கிவைத்துவிடலாம். இரவு முழுவதும் அப்படியே இருந்து அது சுவையான பழங்கஞ்சியாக மாறிவிடும். இதை சாப்பிட ஆரம்பித்துவிட்டால், தினமும் எத்தனைவிதமான பலகாரங்கள் இருந்தாலும், பழங்கஞ்சியே பிடித்த உணவு என்று சொல்லத் தொடங்கிவிடுவீர்கள்.



    பழங்கஞ்சியை பற்றி ஆராய்ச்சி செய்து அதில் இருக்கும் மருத்துவ குணங்களை எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அது இரவு முழுவதும் இருந்து புளித்த உணவாக மாறிவிடுவதால், அதில் சத்துக்கள் நிறைய இருக்கிறதாம். வழக்கமாக நாம் சாப்பிடும் 100 கிராம் சுடு சாதத்தில் 3.4 மி.கி. இரும்புச் சத்து உள்ளது. அதே சாதம் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறி புளிக்கும்போது அதில் 73.91 மி.கி. இரும்புச் சத்தாகிவிடும். ரத்த அழுத்தத்தை சீரமைக்கக்கூடிய பொட்டாசியமும் பழங்கஞ்சியில் இருக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழலை குறைக்கும் விதத்தில் பழங்கஞ்சி செயல்படும் என்றும் சொல்கிறார்கள்.

    கூலி வேலை செய்பவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் காலையில் பழங்கஞ்சி குடித்துவிட்டு வேலைக்கு சென்றால் மதியம் வரை தளர்ச்சியடையாமல் உற்சாகமாக வேலைபார்ப்பார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அன்று முழுவதும் அவர்களது உடலுக்கு அது உற்சாகமளிக்கும். சோறும், தண்ணீரும் கலந்த அந்த உணவு மூலம் சுமார் 340 கலோரி சக்தி கிடைக்கும். மூன்று இட்லி சாப்பிட்டாலும் இதே கலோரி கிடைத்துவிடும். ஆனால் சாதமும், தண்ணீரும், புளிப்புத் தன்மையும் சேர்ந்து உடலுக்கு கூடுதலாக சில சத்துக்களையும் தந்து, உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். உடலில் தண்ணீர்த்தன்மையையும் உயர்த்தும்.

    எலும்புக்கு பலத்தை தரும் கால்சியம், மக்னீஷியம், செலீனியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளது. உடல் வேகமாக உறிஞ்சி எடுக்கும் சத்துக்களான வைட்டமின் பி- 6, பி-12 போன்றவைகளும் இருக்கின்றன. இந்த வைட்டமின்கள் உடலுக்கு உற்சாகத்தை தரும். அதனால்தான் பழங்கஞ்சி சாப்பிட்டவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இது ஜீரணத்தை எளிமைப்படுத்துகிறது. கூடவே அசிடிட்டி தொல்லை, அல்சர் தொல்லை போன்றவைகளையும் தடுக்கிறது. மலச்சிக்கலை தீர்க்கும் சக்தியும் இருக்கிறது.

    சருமத்திற்கு பொலிவைத்தரவும், இளமையை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்களே அதற்கு காரணமாக சொல்லப்படுகி றது. சருமத்தி்ல் நெகிழ்வுத்தன்மையை உருவாக்கும் கொலேஜன் செயல்பாட்டை மேம்படுத்தும் விதமாகவும் இது செயல்படுகிறது. பழங்கஞ்சி புளித்துவிடுவதால் அதில் லாக்டிக் அமிலம் உருவாகிறது. அது தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு, அதிக பால் சுரக்கச் செய்கிறது. பழங்கஞ்சி குளிர்ச்சிமிக்கதாக இருப்பதால் இது உஷ்ணம் தொடர்புடைய நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது.

    கம்பு வெஜிடபிள் கஞ்சி இரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. இந்த இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஊறவைத்த கம்பு - அரை கப்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    ஏலக்காய் - 2,
    பிரியாணி இலை - 1,
    வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) - 3 கப்,
    நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    பூண்டு - 3 பல்,
    உப்பு, மிளகுத் தூள் - சுவைக்கேற்ப,
    எலுமிச்சைப்பழம் - அரை மூடி.



    செய்முறை :

    கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும்.

    இதனுடன், வெஜிடபிள் ஸ்டாக், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும்.

    பிரியாணி இலையை எடுத்துவிட்டு, வெந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளவும்.

    இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

    பலன்கள்: இதில் இரும்புச் சத்து மிக அதிகம். இரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டிய உணவு. குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது கொள்ளு. இன்று கொள்ளுவை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    கொள்ளு - அரை கப்,
    உப்பு - தேவைக்கு.


    செய்முறை :

    கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.

    குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதை குக்கரில் போட்டு அதனுடன் கொள்ளுவை போட்டு மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.

    நன்கு குழைய வெந்ததும் அதில் கடைந்து அடுப்பில் வைத்து மேலும் நீர் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    சூப்பரான குதிரைவாலி கொள்ளு கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கொள்ளு - சிறுதானிய கஞ்சியை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்று கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொள்ளு - 2 டீஸ்பூன்
    சிறுதானியம் - 2 டீஸ்பூன் ( ஏதாவது ஒரு சிறுதானியம்)
    வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
    கொத்தமல்லி - சிறிதளவு
    மோர் - 2 கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    சீரகம் - 1 டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    கொள்ளு, சிறுதானியத்தை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    கொள்ளு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    சிறுதானிய அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து பொடித்த கொள்ளு, சிறுதானிய அரிசி, தண்ணீர், வெந்தயக்கீரை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் போட்டு இறக்கி வைக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மோர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு - சிறுதானிய கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×