search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95259"

    சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு, மோர் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - கால் கப்
    தண்ணீர் - 1 கப்
    மோர் - 1 கப்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம் - கால் டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    வறுத்த கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

    கைவிடாமல் காய்ச்ச வேண்டும். அப்போது தான் அடிபிடிக்காது. கேழ்வரகு நன்றாக வெந்து வரும் போது இறக்கி குளிர வைக்கவும்.

    நன்றாக ஆறிய பின்னர் அதில் மோர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு - மோர் கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை ரவை - பயத்தம்பருப்பு கஞ்சி மிகவும் நல்லது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப் பட்டாணி - கால் கப்,
    உப்பு - தேவைக்கேற்ப.
    நெய் - சிறிதளவு,
    உருளைக்கிழங்கு - 2
    கோதுமை ரவை - 1 கப்,
    பயத்தம்பருப்பு - 50 கிராம்
    வறுத்த வேர்க்கடலை - 10 கிராம்.



    செய்முறை

    வேர்க்கடலையை கொரகொப்பாக உடைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு கோதுமை ரவை, பயத்தம்பருப்பை தனித்தனியாக வறுக்கவும்.

    பயத்தம்பருப்பை ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமாக நறுக்கி, தனியாக வைக்கவும்.

    குக்கரில் 3 கப் நீர் விட்டு வறுத்த ரவை, பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிட்டு, இறக்கவும்…

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வேர்க்கடலை தூவி, சூடாக பரிமாறவும்.

    சத்து நிறைந்த கோதுமை ரவை - பயத்தம்பருப்பு கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கருப்பு உளுந்து, கருப்பட்டி சேர்த்து சத்து நிறைந்த களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருப்பு உளுந்து - ஒரு கப்,
    கருப்பட்டித்தூள் - ஒரு கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    நல்லெண்ணெய் - கால் கப்,
    பச்சரிசி - 3 டீஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை.



    செய்முறை :

    வெறும் வாணலியில் உளுந்து, அரிசியை தனித்தனியாக சேர்த்து வறுத்து ஆற விடவும்.

    பிறகு மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்.

    கருப்பட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு கரைத்து வடிகட்டவும்.

    உளுத்த மாவுடன் தண்ணீர், கருப்பட்டி கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறவும்.

    அதனுடன் நல்லெண்ணெய் விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது கிளறி இறக்கவும்.

    சத்து நிறைந்த கருப்பு உளுந்து கருப்பட்டி களி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை வெறும் வயிற்றில் மாப்பிள்ளை சம்பா அரிசி நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும். இந்த இந்த நீராகாரத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாப்பிள்ளை சம்பா அரிசி - ¼ கிண்ணம்,
    மோர் - தேவையான அளவு,
    சின்னவெங்காயம் - 5,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை

    மாப்பிள்ளை சம்பா அரிசியை நன்றாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும்.

    நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும்.

    காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும்.

    காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×