search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர்"

    • ஹாலிவுட் நடிகரான Chad Mcqueen உடல்நலக் குறைப்பாடால் காலமானார்.
    • தி கராத்தே கிட் என்ற படத்தில் டச் கதாப்பாத்திரத்தின் மூலம் புகழடைந்தார்.

    ஹாலிவுட் நடிகரான Chad McQueen {63} உடல்நலக் குறைப்பாடால் கடந்த 11 ஆம் தேதி காலமானார். Chad Mcqueen பிரபல கார் ரேஸரான ஸ்டீவ்- இன் மகனாவார்.

    இவர் 1984-ல் வெளியான தி கராத்தே கிட் என்ற படத்தில் டச் கதாப்பாத்திரத்தின் மூலம் புகழடைந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கராத்தே கிட் படத்தை தொடர்ந்து மார்ஷியல் லா, ஜிம்மி ஹாலிவுட் மற்றும் ரெட் லைன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். நடிப்பு மட்டும் அல்லாமல் கார் ரேஸிங்கில் மிகவும் ஆர்வம் உள்ளவர். பல ரேஸிங் போட்டியில் கலந்து பரிசுகளை வென்றுள்ளார்.

    இவருக்கு சொந்தமாக கார் கஸ்டமைஸ் செய்யும் நிறுவனம் இருக்கிறது அதை தற்பொழுது இவரது மகன் பார்த்துக் கொண்டுள்ளார்.

    • அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " நான் என் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை கேள்விப் பட்டேன். இது முற்றிலும் பொய்யானது. நான் என் மீது உள்ள நியாயத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். உண்மையான குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். மத்ததெல்லாம் சட்ட ரீதியாக கையாளப்படும்" என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சிறை வளாகத்தில் சேர் போட்டு, கையில் சிகரெட் மற்றும் காப்பி குவளையுடன் தர்ஷன் அமர்ந்துள்ளார்.

    கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார். போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் தர்ஷன் சிறை வளாகத்துக்குள் கையில் சிகரெட் மற்றும் காப்பி குவளையுடன் தனது மேலாளர் மற்றும் இரண்டு சிறை நண்பர்களுடன் சொகுசாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சிறையில் இதுபோன்ற வசதிகளா? அதிகாரிகள் துணை இன்றி இது நடக்க சாத்தியமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

     

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடகா சிறைத்துறை டிஜிபி மாலினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் தர்ஷன் சிறைக்குள் இருந்தபடி வீடியோ காலில் பெரும் காணொளி வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில் திரைத் துணியால் மறைக்கப்பட்டு சிறை அறையில் மஞ்சள் டீ-சர்ட் அணிந்து அமர்ந்திருக்கும் தர்ஷன், நபர் ஒருவருடன் பேசும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 

    • உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பிரஞ்சு நியூ வேவ் சினிமாட்டிக் இயக்கத்தின் முக்கிய முகங்களும் ஒருவராக திகழ்ந்தவர் அலைன் டெலோன்.
    • 'பர்பில் நூன்' [1960], 'லே சாமுராய்' [1967] உள்ளிட்ட படங்கள் மூலம் அலைன் டெலோன் உலகப் புகழ்பெற்றார்.

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகரும் ஆரம்பக்கால பிரஞ்சு சினிமாவின் ஸ்டைல் ஐகானாக திகழ்ந்தவருமான அலைன் டெலோன் [Alain Delon] [88 வயது] உடல்நலக்குறைவு காரணமாக நேற்று[ஆகஸ்ட் 18] காலமானார்.

    உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பிரஞ்சு நியூ வேவ் சினிமாட்டிக் இயக்கத்தின் முக்கிய முகங்களும் ஒருவராக திகழ்ந்தவர் அலைன் டெலோன். 'பர்பில் நூன்' [1960], 'லே சாமுராய்' [1967] உள்ளிட்ட படங்கள் மூலம் அலைன் டெலோன் உலகப் புகழ்பெற்றார்.

     

    2019 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் நிலை மோசமடைந்து வந்தது. இதற்கிடையில்கேன்சர் நோயுடனும் போராடி வந்த அவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சூழ அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார்.

     

    அலைன் டெலோனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், 'சிறப்பு வாய்ந்த பாத்திரங்களை ஏற்று நடித்து உலகைக் கனவு காண வைத்தவர்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகம் முழுவதிலும் உள்ள இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
    • வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

    தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.

    இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன், சீமான், தொல். திருமாவளவன், அன்புமணி இராமதாஸ், டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் திமுகவிலிருந்து யாரும் வாழ்த்து சொல்லவில்லை. குறிப்பாக தமிழ் திரைத்துறையில் நடிகராக தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.

    நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.

    ஆனால் விஜயின் இந்த வாழ்த்து செய்திகளே ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசிற்கு எதிராக பதிவிட்டதும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசியதும் திமுக அரசிற்கு நெருக்கடியை உருவாக்கியது.

    இதனால் தான் விஜய்க்கு திமுகவிலிருந்து யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    • வாழ்த்துக் கூறிய அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
    • பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    "எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும். சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கமல்ஹாசன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய நெல்லை முபாரக்,

    சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர். மதிப்பிற்குரிய கே. அண்ணாமலை.

    முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய எஸ். திருநாவுக்கரசர். முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய டி. ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்" என்று கூறியுள்ளார்.

    • நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது.
    • நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    யோகா என்பது நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. மனம் மற்றும் இடத்தை ஒருசேர ஒருங்கிணைக்க அறிவியல் பூர்வமாக இயற்கையின் வழி நின்று உதவும் ஒரே கருவி யோகாதான். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடிகைகள் ரகுல் பிரீத்சிங், அபிராமி, சம்யுக்தாஷான் ஆகியோர் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.
    • இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல், இசை, நாடக கலைஞர், திரைப்பட நடிகர், பாடகர் என்று பன்முகங் களை கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டி.ஆர்.எம்.சுகுமார் பவனத் தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    இன்று காலை பிரபல பின்னணி பாடகி பி. சுசிலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணி யன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம் மார்பளவு சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட்டு மூத்த வக்கீல் டி.கே.கோபாலன் தலைமை தாங்கினார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம் பரம், தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் நடிகர் ராஜேஷ், நகைச்சுவை நடிகர் செந்தில், நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதி, நடிகை சச்சு, நடிகர் அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டி.ஆர்.மகாலிங்கம் பேரன் டி.ஆர்.எம்.எஸ்.ராஜேஷ் மகாலிங்கம், டி.ஆர்.வித்யா ஆகியோர் வரவேற்றனர். மாலை தென்கரையில் அமைந்துள்ள டி.ஆர்.மகாலிங்கம் நினைவு கலையரங்கில் பிரபல பின்னணி பாடகர் பங்குபெறும் டி.ஆர்.எம்.எஸ். சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    இதைத்தொடர்ந்து வெண்ணிறை ஆடை நிர்மலா செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாட லுக்கு நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.வி.கருப்பையா, ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் பங்களா மூர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், தென்கரை தி.மு.க. கிளை செயலாளர் சோழன் ராஜா மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், இசை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.

    'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

    மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

    சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.

    அண்மையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெயிட்டார்.

    இந்நிலையில், 'ஹிட் லிஸ்ட்' படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய்யிடம் காண்பித்து படக்குழு வாழ்த்து பெற்றுள்ளது.

    1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.
    • இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

    மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

    சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.

    இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். அப்போது கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள விக்ரமன் மகனுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

    ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.

    இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

     அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18  கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.

     நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

    ×