search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95381"

    • வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

     

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சஞ்சய்தத் - பிரித்விராஜ்

    சஞ்சய்தத் - பிரித்விராஜ்

     

    இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ், தமிழ் நடிகர் அர்ஜுன் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய்

    விஜய்

     

    மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சஞ்சய்தத்

    சஞ்சய்தத்

     

    இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இந்தி நடிகர் சஞ்சய்தத்க்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்க படக்குழுவினர் முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எப் 2 படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.50 கோடிக்கும் டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


    வாரிசு

    'வாரிசு' படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    இந்நிலையில், இப்படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் ஜீவாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜாகான், லவ் டுடே, திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.
    • இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், விஜய்யுடன் யோகிபாபு இணையும் 6-வது படமாக 'தளபதி 67' இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    விஜய் - ராஷ்மிகா

    இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார்.


    விஜய்

     இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட் என்று கமெண்ட் செய்து பதிவை வைரலாக்கி வருகின்றனர். 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
    • இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.

    நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது. அரபிக் குத்து வீடியோ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    பீஸ்ட் - அரபிக் குத்து

    பீஸ்ட் - அரபிக் குத்து

    இந்நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து வீடியோ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

     

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நடிகர் விஜய் ஹைதராபாத் பயணித்துள்ளார். அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம் செய்துள்ளார். அப்போது விஜய் உடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.


    விஜய் - வரலட்சுமி

    அந்த பதிவில், "ஹைதராபாத்திற்கு இவ்வளவு நல்ல விமானம் இதுவரை இருந்ததில்லை. எனக்கு பிடித்த நடிகர் விஜய் எனக்குப் பக்கத்தில். ஒரு நல்ல நாள். கூடவே நிறைய அரட்டையும் சிரிப்பும் கொஞ்சம் லூடோவும் மொத்தத்தில் நல்ல விமானப்பயணம்" என்று வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.

    விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

     

    இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ், தமிழ் நடிகர் அர்ஜுன் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

     

    விஜய் - கீர்த்தி சுரேஷ்

    விஜய் - கீர்த்தி சுரேஷ்

    மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மற்றொரு நடிகையாக இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு சர்க்கார், பைரவா போன்ற படங்களில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

     

    இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர்.

     

    சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. மருத்துவமனையில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட்டனர்.

     

    இந்த நிலையில் விஜய்யும், படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவும் காதல் காட்சியில் பங்கேற்று நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. 26 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வாரிசு காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி வருவதால் படக்குழு குழப்பத்தில் உள்ளனர்.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

     

    வாரிசு 

    வாரிசு 

    வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர்.

    பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளி விட்டு சண்டைபோடும் காட்சிகள் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது.

    வாரிசு 

    வாரிசு 

     

    இந்நிலையில் மருத்துவமனையில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. படம் திரைக்கு வரும் முன்பே படக்காட்சிகள் ஒவ்வொன்றாக இணயதளத்தில் வெளியாகி வருவது படத்துக்கான எதிர்பார்ப்பை குறைத்து விடும் என்றும் எனவே படப்பிடிப்பில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் படக்குழுவினரை விஜய் ரசிகர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், வாரிசு படத்தின் அப்டேட்களை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே நடிகர் விஜய் ஹைதராபாத்தில் உள்ள மகேஷ்பாபுவுக்கு சொந்தமான திரையரங்கில் தெலுங்கு படத்தை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.


    வாரிசு

    இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இப்படம் 2023- ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய்.
    • இவர் மீது விதித்த அபராதத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய், கடந்த 2016-17-ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த போது அதில், அந்த ஆண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிபிட்டுள்ளார்.

    அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.


    புலி

    இதையடுத்து, இந்த வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.


    புலி

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும்,  விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    ×