search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்த்திபன்"

    தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு அரிசி மற்றும் மருந்து பொருட்களை நடிகர் பார்த்திபன் அனுப்பி வைத்துள்ளார். #Kerala #KeralaFlood
    கேரளாவில் பெய்த தொடர் மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதிலும் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து உதவிகள் கிடைத்து வருகின்றன. தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    நடிகர் பார்த்திபன் தனது ஆர்.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பாக 1250 கிலோ அரிசி மற்றும் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளை நிவாரணமாக அனுப்பி வைத்துள்ளார்.

    ‘கேரளாவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் அமலாபால் என்னை தொடர்பு கொண்டு நிவாரண பொருட்களை சேகரித்து தருமாறு வேண்டினார். நான் என்னுடைய மன்றம் சார்பிலேயே வழங்கி இருக்கிறேன். என் படமான கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் லாபத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவது தான் இந்த மன்றம்.



    நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் வாகனத்தில் கொண்டு செல்லும் போது யார் அனுப்புவது என்று இல்லாமல் இருந்தால் தேவையில்லாத பாதுகாப்பு பிரச்சினைகள் வரும் என்று டிரைவர் பயந்தார். எனவே தான் இது முழுக்க முழுக்க என் பொறுப்பில் அளிக்கப்படும் நிவாரண பொருட்கள் என்று அதில் பெயர் எழுத வேண்டியதாகி விட்டது. என் கையெழுத்தும் அவசியம் என்று கேட்டார்கள். எனவே இது வெளியில் தெரிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஈரோடு புத்தக திருவிழாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், அரசியல் தலைவர் ஒருவர் தன்னை அவரது கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக கூறினார். #Parthiban
    ஈரோடு புத்தக திருவிழாவில் நேற்று மாலை நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு ‘‘சினிமாயணம்’’ என்ற தலைப்பில் பேசினார்.

    சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆரம்பத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் தந்தை போஸ்ட் மேன் ஆக இருந்தார். அவரது வருமானத்தில் தான் வாழ்ந்தோம். என் அம்மா ரொம்ப கண்டிப்பானவர்.

    ‘‘அம்மா’’ என்றாலே கண்டிப்பானவர் தானே...? மேலும் சின்னம்மாவும் எனக்கு உண்டு. சின்னம்மா எப்படிபட்டவர் என்றும் உங்களுக்கு தெரியும் (சிரித்து கொண்டார்). இப்படி அம்மா... சின்னம்மா கண்டிப்பில் நல்ல பிள்ளையாக வளர்ந்தேன். படித்தேன்.

    என் உறவினர் ஒருவர் சினிமா கம்பெனிக்கு கார் ஓட்டி வந்தார். அவருடன் நான் ஷூட்டிங்கை பார்க்க போனேன். அப்போது நடிகர் நாகேஷ் நடித்த படம் எடுக்கப்பட்டது. இடைவேளை நேரத்தில் நாகேஷ் சேரில் உட்காருவார். அவருக்கு குடைபிடிப்பார்கள். விசிறி வீசுவார்கள். செம கவனிப்பு கவனித்தார்கள்.

    இதையெல்லாம் பார்த்த எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை ஏற்பட்டது. நாடக கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு போஸ்ட் மேன் (தபால்காரர்) வேடம் கிடைத்தது. என் அப்பாவும் தபால்காரர் தானே...? எப்படி பொருத்தமாக அமைந்திருந்ததை பாருங்கள். அதன் பிறகு எனது ஆசான் கே.பாக்யராஜிடம் சேர்ந்து அவருக்கு உதவியாளராக (துணை டைரக்டராக) பணிபுரிந்தேன். நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு நடிப்பதை விட டைரக்டர் ஆக தான் விருப்பம் அதிகம். ஆனால் பல படங்களில் நடித்து விட்டேன்.



    மாவீரன் கிட்டு என்ற படத்தின் மூலம் எனக்கு தேசிய விருது கிடைத்தது. எந்த வித பதட்டமும் இல்லாமல் மேடை ஏறி விருது பெற்றேன். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘‘ஹவுஸ் புல்’’ படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்தது. அப்போது தான் தேசிய விருதின் அருமை எனக்கு தெரிந்தது. இந்த விருதை பெற மீண்டும் 10 வரு‌ஷம் க‌ஷடப்பட வேண்டியதிருந்தது.

    இப்போது என்னிடம் 60 கதைகள் உள்ளது. இவற்றை எல்லாம் படம் எடுக்கு 600 கோடி வேண்டும். இதற்கு நான் எங்கே போவேன்? அதே சமயம் இன்னொரு வி‌ஷயத்தையும் இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

    அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன்.

    முன்பு கலைஞரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கைது செய்த போது இதை கண்டித்து நான் பேட்டி கொடுத்தேன். இதை கேட்டு ஜெயலலிதா சிவகுமார் சாரிடம் பார்த்திபன் கூறியதை கேட்டீர்களா? என்று கேட்டு வருத்தப்பட்டாராம்.

    இப்போது ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லையே... என்று ஆதங்கம் எனக்கு. காமராஜரை போல... ஒரு கக்கனை போல இனி வருவது கஷ்டம்.

    இவ்வாறு நடிகர் பார்த்திபன் பேசினார். #Parthiban
    கண்ணே கலைமானே படத்தை அடுத்து பிரபல நடிகருடன் தமன்னா மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Tamannah
    தமன்னா நடிப்பில் இறுதியாக ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணையும் புதிய படத்தை பார்த்திபன் இயக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    பிரபுதேவா - தமன்னா கூட்டணியில் ஏற்கனவே ‘தேவி’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை விஜய் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
    சென்னையில் 11 வயது சிறுமியை 17 பேரால் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டுள்ள குற்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பார்த்திபன், அறுத்தெறியுங்கள் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். #ChennaiGirlHarassment #Parthiban
    சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். போதை மருந்து கொடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஒருவர் மாற்றி ஒருவர் கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த குற்றத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ள நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பார்த்திபன் அறுத்தெறியுங்கள் என்ற தலைப்பில் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, 

    இந்த நிமிடம் 
    இதே மணிக்கு 
    இங்கோ அங்கோ எங்கோ 
    ஒரு பாலியல் வன் கொடுமை 
    நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது... 
    அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய 
    நிகழ்வை பார்த்தபடி!!! 
    அதை தடுப்பது எப்படி?
    ஏனெனில்,
    போன வாரம்
    போன மாதம்
    போன வருடம்
    வேறு ஒரு சிறுமியின் உறைந்த
    ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர்,
    ஈக்களாய் மொய்த்துக்
    கொண்டிருக்கையில்
    இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
    செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
    பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
    எனவே நம் கண்களையும், காதுகளையும்
    கூர்மையாக்கி, ____-க்கு அலையும்
    மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
    காயடிக்க வேண்டும்!

    என்று குறிப்பிட்டிருக்கிறார். #ChennaiGirlHarassment #Parthiban

    கியூப்புக்கு பதில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் என்று அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன் தெரிவித்தார். #Parthiban
    நடிகர் விஷால் தலைமையிலான அணி, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதும் பல வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமான ஒன்று கியூப் பிரச்சினை.

    கியூப்புக்கு மாற்றாக மற்றொரு தொழில்நுட்பத்தை கொண்டுவருவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனமும் இணைந்து யூனிட் ஒன்றை திறந்துள்ளனர்.

    இதன் திறப்புவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு, 5 ஸ்டார் கதிரேசன், நடிகர் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-

    இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கி இருப்பது இதுதான் முதல்முறை. உலக தரத்திற்கு இணையாக அனைத்து விதமான தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருக்கும் திரையரங்கிற்கும் உடுமலை சண்முகா திரையரங்கிற்கும் டெலிவரி செய்து சோதனை செய்யப்பட்டது.



    100 சதவீதம் இது வெற்றி அடைந்தது. இது ஒரு நல்ல நிறுவனம். முதல் அடி எடுத்து வைத்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான முதல் ஆரம்பம்.

    இதன் விலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சரியான விலையில் தரமான பொருளை தர அந்த நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அவர்களுக்கு ஒரு டெக்னீஷியனாக நட்புடன் ஒரு வி‌ஷயத்தை விளக்க விரும்புகிறேன். தற்போது மாறும் தொழில் நுட்பத்திற்கேற்ப நாம் மாறவில்லை என்றால் நம் இடத்திற்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள்.

    பிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு 5 முதல் 10 வருடம் தேவைப்பட்டது. இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல அவ்வளவு காலம் தேவைப்படாது. 5 மாதங்களே போதுமானது.

    இந்த தொழில்நுட்பத்தை தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ புரிந்துகொள்ளவில்லை என்றால் இத்துறை நம்மை விலக்கிவைத்துவிடும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பகைமை இல்லாமல் எந்த கருத்து வேறுபாடாக இருந்தாலும் நமக்குள்ளேயே பேசி சுமூகமாக தீர்ப்பது நல்லது.

    இது தயாரிப்புதுறை தனக்கான சந்தையை தானே உருவாக்கிய நுட்பமே தவிர யாருக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதனால் தயாரிப்பாளர்களுக்கு 100 சதவீதம் நன்மை உண்டு. சென்சாருக்கு ஒரு திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதுவும் மிக குறைந்த விலையில் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள். நிர்வாகிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது. நாங்க தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம். ஏனென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.

    அது போல தான் இந்த மைக்ரோ ஸ்டூடியோவின் முதல் படி. ஒருவன் பார் மசியில் கேட்கிறான். தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய் என்று கேட்கிறான். அதற்கு அவர் மருந்து கொட்டிவிட்டது என்றான்.

    தேள் கொட்டினால் கூட பரவாயில்லை. மருந்து கொட்டியதென்றால் ரொம்ப கஷ்டம். அதுபோல் சினிமா வியாபாரத்தில் எந்த பிரச்சினையும் இருக்கலாம். அதற்கு நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால் தான் அதை சீர் செய்ய முடியும். குறிப்பா செல்வமணி பெப்சியின் தலைமைக்கு அவர் வந்தவுடன் நல்ல ஒற்றுமை வந்துள்ளது.

    நான் கிட்டத்தட்ட 25 வருடம் சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது. தமிழ் சினிமா செல்வமணி சொன்னது போல் டெக்னிக்கெல்லாம் புரிந்து கொண்டு சினிமாவை நல்ல முறையில் கொண்டு வருவோம். #Parthiban

    சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Parthiban #Vadivelu
    விமல் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மன்னர் வகையறா’ படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. விமல் நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

    விமல் தற்போது எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் வைக்கைப் புயல் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் இந்த படத்தில் விமல் - வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.



    இந்த நிலையில், நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் விமல், வடிவேலுவுடன், பார்த்திபன் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Parthiban #Vadivelu

    விக்ரம் நடிப்பில் உருவாகும் `துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது #DhruvaNatchathiram #Vikram
    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்'. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். 

    இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. 

    இந்த நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.



    கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து `ஒரு மனம்' என்ற சிங்கிள் டிராக் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னமும் 18 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. #DhruvaNatchathiram #Vikram

    பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக `கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு பிறகு பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘உள்ளே வெளியே-2’ படத்தில் 10 பலமான நடிகர்களுடன் களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். #UlleVeliye2
    பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ‘உள்ளே வெளியே’  படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார். 

    இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்  வெளியாகி இருக்கிறது. 



    இந்த நிலையில், பார்த்திபனுடன் நடந்த உரையாடலின் போது அவர் தெரிவித்ததாவது, 

    நான் தயாராக இருக்கிறேன். சரியான தயாரிப்பாளர் அமைவதற்காக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. உள்ளே வெளியே 2, நான், சமுத்திரகனி, கிஷோர் என்று 10 பலமான நடிகர்களுடன் களம் இறங்குகிறேன். எதையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் என் பாணி. அது இந்த படத்தில் இருக்கும். என்னுடைய வழக்கமான படத்தை பார்க்கலாம். ஆனால் அதிர்ச்சியான ஒரு வி‌ஷயமும் படத்தில் உண்டு. #UlleVeliye2 #Parthiban

    நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்ட பார்த்திபன் எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். #Parthiban
    நடிகர், இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான சிந்தனைக்காக மட்டும் அல்லாமல் சமூக அக்கறைக்காகவும் பாராட்டப்படுபவர். அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்தி வர, இதுகுறித்து பார்த்திபனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

    ‘பெசண்ட் நகரில் ஒரு படகு போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டேன். பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து அந்த குப்பைகள் போடப்படுவதால் மீனவர்களின் வலைகளில் 20 சதவீதம் தான் மீன்கள் கிடைக்கின்றன. 80 சதவீதம் பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் தான் வருகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடலில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் செல்வதை தவிர்க்க ஒரு யோசனை கூறினேன்.

    என்னுடைய சொந்த செலவில் பெரிய பெரிய பைகள் வாங்கி தருகிறேன் என்றும் அவற்றின் மூலம் அப்புறப்படுத்தலாம் என்றும் கூறினேன். அப்போது நிருபர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை பற்றி கேட்டபோது ‘நான் அரசியலுக்கு வரும்போது சொல்கிறேன்’ என்றேன்.



    எப்போது என்று கேட்டால் நான் சமூக செயற்பாட்டில் இருப்பதால் இப்போதே அரசியலில் தான் இருக்கிறேன். காலம் வரும்போது நிச்சயம் முழுநேர அரசியலுக்கு வருவேன். கட்சி தொடங்குவது முக்கியம் அல்ல. சமூகத்துக்கு அவரவர்கள் பங்களிப்பை இதுபோல செய்தால் போதும்.

    குப்பத்து ராஜாவில் வடசென்னை சேரிப்பகுதியில் வாழும் கதாபாத்திரம், திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்தில் வித்தியாசமான திருடர் கூட்ட தலைவன், துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷான ஒரு வேடம். மூன்றுமே வேறு வேறு விதமான கதாபாத்திரங்கள். என்னுடைய கதாபாத்திரங்களை தேர்வு செய்யும்போது அந்த வேடம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இந்த படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி இருக்க வேண்டியவை. தாமதம் ஆனதால் கடந்த ஆண்டு எனக்கு படமே இல்லாதது போல் ஆகி விட்டது.

    எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும். #Parthiban

    கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார். #DhruvaNatchathiram #Vikram
    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்'. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். 

    இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. 



    கடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. 

    இந்த நிலையில், இன்று படத்தின் டீசரின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 



    `ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். #DhruvaNatchathiram #Vikram

    `கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு பிறகு பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஓட்டல்காரர் ஒருவரை முழுநீள காமெடியாக அறிமுகம் செய்யவிருக்கிறார். #Parthiban #UlleVeliye2
    தனது குருநாதர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை வைத்து `கோடிட்ட இடங்களை நிரப்புக' என்னும் படத்தை இயக்கினார் பார்த்திபன். அடுத்ததாக உள்ளே வெளியே 2 படத்தை இயக்கவிருக்கிறார். முழுநீள காமெடி படமாக உருவாகும் அந்த படத்தில் ஒரு ஓட்டல்காரரை காமெடியனாக்கி இருக்கிறார். 

    சினிமாவில் இருக்கும் நடிகர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை சாப்பிடும் ஓட்டல் ஒன்றை நடத்திவருபவர் கவிஞர் ஜெயம்கொண்டான். உதவி இயக்குனர்களுக்கு சலுகை விலை என்பதால் ஓட்டலில் கூட்டம் நிறையும். சில படங்களுக்கு பாடல்களும் எழுதி இருக்கிறார்.



    இவரது ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த பார்த்திபன் ஜெயம்கொண்டானை தனது அடுத்த படத்தில் முழுநீள காமெடியனாக்குவதாகவும், அதற்காக தாடி வளர்க்க வேண்டும் என்றும் கூறி சென்றிருக்கிறார். இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத ஜெயம்கொண்டான் பார்த்திபனுக்காக தாடி வளர்த்து வருகிறார். #Parthiban #UlleVeliye2

    ×