search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பெற போவது டோனியா, ரெய்னாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் தொற்றிக் கொண்டது. இதனால் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை நெருங்குவது யார் என்ற போட்டியில் எம்.எஸ். டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.

    இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் டோனி 186 சிக்சர்களும், சுரேஷ் ரெய்னா 185 சிக்சர்களும், ரோகித் சர்மா 184 சிக்சர்களும் அடித்துள்ளனர்.



    இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிக்சர்கள் அடித்து 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 292 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
    ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #BCCI #Sreesanth
    புதுடெல்லி:

    2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடைபெற்றதை டெல்லி காவல் துறையினர் கண்டுபிடித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
     
    குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இது சம்பந்தமாக விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


     
    இந்த வழக்கின் விசாரணை முடிவைடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.
     
    மேலும் ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து அளித்துள்ள மனுவிற்கு பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க  வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #BCCI #Sreesanth
    நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் ஐபிஎல் அட்டவணையை வெளியிட வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #IPLSeason2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும் என தெரிவித்தார்.

    ஐபிஎல் தொடர் மார்ச் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் அட்டவணை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை வெளியிட வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்னதாகவே நடத்த இருப்பதால் இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான தொடர் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #INDvZIM
    ஜிம்பாப்வே அணி இதுவரை இந்தியாவில் வந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடியது கிடையாது. முதன்முறையாக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    உலகக்கோப்பை மற்றும் பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் முன்னதாகவே மார்ச் 23-ந்தேதி தொடங்கப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை தொடரை பிப்ரவரி 10-ந்தேதிதான் முடிக்கிறது.

    அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிப்ரவரி 24-ந்தேதி முதல் மார்ச் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவுடன் இரண்டு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா தொடருக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையே 10 நாட்கள்தான் உள்ளதால் இந்தியா - ஜிம்பாப்வே தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை டெஸ்ட் போட்டி டி20 போட்டியாக மாறலாம் அல்லது தொடர் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐபிஎல் 2019 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பேடி அப்டன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #IPLSeason2019 #RR
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்குகிறது. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன. பொதுத்தேர்தல் நடைபெற்றாலும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளதால் அணி உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஒவ்வொரு அணிகளும் வீரர்களை தேர்வு செய்துள்ள நிலையில் பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்-களை நியமித்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேடி அப்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

    இதற்கு முன் 2012 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தலைமை பயிற்சியாளராக பணிபுரிய இருக்கிறார். 2012-ல் புனே வாரியர்ஸ் அணியிலும், 2016 மற்றும் 2017-ல் டெல்லி அணியிலும் பணிபுரிந்துள்ளார். பிக் பாஷ் தொடரிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.
    முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் ஸ்டீவன் ஸ்மித் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்ததுள்ளது. #Smith
    கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய, அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு விளையாட தடை விதித்தது.

    அவரது தடைக்காலம் வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அவர் மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    தடைக்காலத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடி வந்தார்.

    இந்நிலையில் ஸ்டீவன் ஸ்மித்துக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வங்காளதேசத்தில் இருந்து நாடு திரும்புறார். அவரது காயத்துக்கு நாளைமறுதினம் ஆபரேஷன் செய்து கொள்கிறார். இதனால் அவர் குறைந்தது 6 வார காலம் கிரிக்கெட் விளையாட முடியாது.

    எனவே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் இடம் பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு 78 நாட்களே உள்ளதால் ஸ்டீவன் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பங்கேற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    உலகக்கோப்பை தொடருக்கு சற்றுமுன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் பந்து வீச்சாளர்கள் வேலைப்பளு குறித்து டு பிளிசிஸ் கவலை தெரிவித்துள்ளார். #WorldCup2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிக அளவில பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்களை ஒவ்வொரு அணிகளும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. பணம் அதிக அளவில் கிடைப்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி, மே மாதம் 2-வது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா? வெளிநாட்டில் நடத்தப்படுமா? என்ற கேள்வி ஏற்கனவே உள்ளது.

    இதற்கிடையில் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி நாடுகள் நட்சத்திர வீரர்களுக்கு ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது. மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தானாகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.



    ஐபிஎல் தொடர் முடிவடைந்து இரண்டு வாரத்திற்குள் உலகக்கோப்பை தொடர் வருவதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வேகப்பந்து வீச்சு குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி வருகிறார்.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனான டு பிளிசிஸ் லுங்கி நிகிடி, ரபாடா, கிறிஸ் மோரிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
    ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை அணிக்கு மாறிவிடுகிறேன் என டிம் பெய்ன் சீண்டியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ஐபிஎல் தொடர் குறித்து ஆரோன் பிஞ்சியிடம் கூறி சீண்டினார்.

    ரோகிர் சர்மா பேட்டிங் செய்யும்போது நாதன் லயன் பந்து வீசினார். அப்போது டிம் பெய்ன் ரோகித் சர்மாவை நோக்கி ‘‘எனக்கு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ அணிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி விடுகிறேன்’’ என்றார்

    மேலும், ‘‘ராயல்ஸ் அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்’’ என்றும் கூறியுள்ளார். டிம் பெய்ன் பேசியது ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது என்று ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். #ViratKohli #Starc
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் மிட்செல் ஸ்டார்க் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார்.



    ‘‘ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது. உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான வீரர். ஆஸ்திரேலியா தொடரில் தற்போது விளையாடி வரும் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியா உச்ச நிலையை அடையும்’’ என்றார்.
    முதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே வாங்கியது #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணியில் இருந்து இரவு 8.40 மணி வரை நடைபெற்றது. இதில அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.

    ஸ்டெயின், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை. யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் சுற்றில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. விலைபோகாத வீரர்கள் 2-வது சுற்றில் ஏலம் விடப்பட்டார்கள். அப்போது மும்பை இந்தியன்ஸ் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.

    அதேபோல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
    15 வயதே ஆன ஆல்ரவுண்டர் சிறுவனை 1.5 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது. #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் எதிர்பார்த்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்கள். சில வீரர்கள் எதிர்பார்த்த விலைக்கு ஏலம் போகவில்லை. அனுபவ வீரரகள் எந்த அணியும் சீண்டவில்லை.

    இதற்கிடையில் சில சுவாரஸ்யமான போட்டியும் நடந்தது. பஞ்சாப்-ஐ சேர்ந்த 17 வயதே ஆன பிரப்சிங் சிங்கை ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆர்வம் காட்டியது. பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்வந்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் குதித்தது. இதனால் அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கோடிகளை தாண்டியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    அதேபோல் 15 வயதே ஆன ஆல்ரவுண்ர் சிறுவனான பிரயாஸ் ராய் பர்மானை எடுக்க போட்டி நிலவியது. இறுதியில் 1.5 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞசர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்தது.
    8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை என சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #IPLAuction2018
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. 20 லட்சம் ரூபாயான அடிப்படை விலையில் இருந்து அவரது தொகை பல மடங்கு உயர்ந்தது. இறுதியில் 42 மடங்கு அதிகரித்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே எதிர்பார்க்கவில்லையாம். இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி கூறுகையில் ‘‘8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை. அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கே ஏலம் போவேன் என்று நினைத்தேன்.



    பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் உள்ளதால், அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்க்கு கிடைத்துள்ளது. சர்வதேச வீரர்கள் இருப்பதால் சவால்கள் நிறைந்திருக்கும. பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பந்து வீச்சை என்னிடம் எதிர்பார்க்கலாம்’’ என்றார்.
    ×