search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ‘கோவிந்தா’ என்றால் ‘எல்லாக் காலத்திலும்’, ‘எல்லா இடத்திலும்’, ‘எங்கும்’ என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான் என்று அர்த்தமாகும்.
    பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் “கோவிந்தா” என்றுதான் சொல்லும். ‘கோவிந்தா என்று சொன்னால் போனது வராது என்று அர்த்தமாகும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம் கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை கோ இந்தா என்றும் பிரிக்கலாம். அப்போது கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும். கோவிந்தா… கோவிந்தா… என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.

    எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் நமக்கு பூரணமாகக் கிடைக்கும்.
    கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்றும் பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

    “பார்வதி பதியே” என்று ஒரு பக்தர் சொன்னால், மற்ற பக்தர்கள் அவளது துணைவரான சிவபெருமானை குறிக்கும் வகையில் ‘ஹர ஹர மகாதேவ’ என்று சொல்வது வழக்கம். ஆனால், கோவிந்தநாமத்தைச் சொல்லும்போது முதலில் சொல்பவர் ‘கோவிந்தா’ என்று சொன்னால் கேட்பவர்களும் “கோவிந்தா கோவிந்தா” என்று தான் சொல்வார்கள்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்பவர்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது இந்த கோவிந்தா நாம கோஷத்தை கேட்டிருக்கலாம். ‘கோவிந்தா’ என்றால் ‘எல்லாக் காலத்திலும்’, ‘எல்லா இடத்திலும்’, ‘எங்கும்’ என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான் என்று அர்த்தமாகும். இந்த கோவிந்தா பெயர் எப்போது உருவானது தெரியுமா? பசுக்கூட்டத்தோடு பாலகிருஷ்ணனாக திரிந்த வேளையில் ‘கோவிந்தன்’ என்ற பெயர் உருவானது.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களைக் கொண்ட கேது, ராகு பகவானுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும்.
    உடல் - பாம்பு தலை, மனித உடல்
    கிழமை - சனிக்கிழமை
    நட்சத்திரம் - அசுவதி, மகம், மூலம்
    நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி
    மலர் - செவ்வரளி
    சமித்து - தர்ப்பை
    தான்யம் - கொள்ளு
    ரத்தினம் - வைடூரியம்
    அதிதேவதை - விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, சித்ரகுப்தர்
    உச்ச வீடு - விருச்சிகம்
    நீச்ச வீடு - ரிஷபம்
    காரக அம்சம் - ஞானகாரகன்
    உலோகம் - துருக்கல்
    வாகனம் - சிம்மம்
    மனைவி - சித்திரலேகா
    சுவை - புளிப்பு
    காலம் - எமகண்டம்

    இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட கேது, ராகு பகவானுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களைக் கொண்ட ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.
    உடல் - மனித தலை, பாம்பு உடல்
    கிழமை - சனிக்கிழமை
    நட்சத்திரம் - திருவாதிரை, சுவாதி, சதயம்
    நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி
    மலர் - மந்தாரை
    சமித்து - அருகு
    ரத்தினம் - கோமேதகம்
    அதிதேவதை - பத்திரகாளி, துர்க்கை
    உச்ச வீடு - விருச்சிகம்
    நீச்ச வீடு - ரிஷபம்
    காரக அம்சம் - யோகம்
    தான்யம் - உளுந்து
    உலோகம் - கருங்கல்
    வாகனம் - ஆடு
    மனைவி - கிம்ஹிசை
    உரிய திசை - தென்மேற்கு
    சுவை - புளிப்பு
    காலம் - ராகு காலம்

    இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 10-ந்தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைந்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    4-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதிஉலா வருகிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடை அடைக்கப்பட்டது.

    இன்று முதல், 17-ந்தேதி வரை அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, படிபூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்பின்பு 17-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். சபரிமலையில் இளம் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும்.
    எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.



    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.

    கீதாச்சாரம்

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்,
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய்,
    அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ,
    அது நாளை மற்றொருவருடையதாகிறது
    மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
    உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.
    உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதேபோல் நமது உடலும் பஞ்ச சக்தியான எலும்பு, தோல், முடி, நரம்பு, தசையால் இயங்கி வருகிறது. இதேபோல் இந்த உலகம் பஞ்ச உலோகம், பஞ்சபூத சக்தி, பஞ்ச சக்தி, பஞ்சகிரியா சக்தி, பஞ்சமுகம் ஆகிய பஞ்ச சக்தியாலும், ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய ஐந்து சக்திகளாகவும் இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.

    இதையொட்டி கோயில்கள், வீடுகள், சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிக்கும் முதலாவது குத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு துவங்குவது காலம் காலமாக நடந்து வரும் வழக்கம். குத்துவிளக்கில் கிழக்கு முகமாக விளக்கேற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக விளக்கேற்றினால் கிரக தோஷம், பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக விளக்கேற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும், திரண்ட செல்வம் உண்டு.

    தெற்கு முகமாக விளக்கேற்றினால் அபசகுனம், பெரும் பாவம் உண்டாகும். குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலனாக இருக்கும், இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமையுடன் இருக்கும், மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தியாகும், நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும் என்பது ஐதீகமாகும். இதேபோல் தாமரை தண்டில் திரியால் தீபமேற்றினால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத்தண்டு நூல் திரியால் தீபமேற்றினால் குலதெய்வக் குற்றம், சாபம் நீங்கும். புது மஞ்சள் சேலை துண்டு திரியால் தீபமேற்றினால் தாம்பத்ய தகராறு நீங்கும்.

    புதுவெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு திரியால் தீபமேற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். நெய்விளக்கு ஏற்றினால் லட்சுமி வாசம் செய்வாள். இலுப்பை எண்ணெயால் விளக்கேற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தியுண்டாகும். விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்.
    திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்பெற்றது.
    திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்பெற்றது.

    எனவே திருவாதிரையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சிவநேசன், சிவப்ரியன், சங்கரன், சிவசங்கரன், பரமசிவன், சொக்கலிங்கம், நாகலிங்கம், சிவலிங்கம், சுந்தரேசன், சர்வேஸ்வரன் என்றும், பெண்களுக்கு சங்கரி, சிவசங்கரி, விசாலாட்சி, ஆதிரை, சிவகாமி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெயர்களைச் சூட்டுவது வழக்கம். அதேபோல் திருவோணம் என்ற நட்சத்திரம் திரு என்ற அடைமொழியுடன் கூடியது. அது திருமாலுக்கு உகந்த நட்சத்திரமாகும். அதில் பிறந்தவர்களுக்கு திருமால் பெயர் அடிப்படையில் பெயர் சூட்டினால் பெருமை சேரும்.
    குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் புறப்பட்டது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் பறக்கும் வேல்காவடிக்கு பூஜை, கணபதி ஹோமம், வேல் தரித்தல் போன்றவை நடந்தது.

    நேற்று யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.

    மாலையில் பறக்கும் வேல் காவடிகள், புஷ்ப காவடிகள் திருச்செந்தூருக்கு புறப்பட்டன. இந்த காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் வழியாக சென்றது.

    வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலிலும் வேல்தரித்தல், காவடி பூஜைகள், அன்னதானம், காவடி அலங்காரம் போன்றவை நடந்தது. நேற்று காவடி ஊர்வலம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.

    மாலையில் பறக்கும் காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதுபோல், சேரமங்கலம் ஆழ்வார்கோவிலில் இருந்தும் பறக்கும் வேல்காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு சென்றது.

    குளச்சலில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பறக்கும் காவடி, வேல்காவடி எடுத்தும், சிறுவர்கள் முருகன் வேடம் அணிந்தும், குளச்சல் போலீஸ் நிலைய பகுதிக்கு வந்தனர்.

    அங்கு காவடிகளை வரவேற்க ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். பின்னர் காவடிகள் திங்கள்சந்தை வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    இரணியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இரணியல்கோணம், நெய்யூர், தலக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு திங்கங்சந்தையில் உள்ள ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அங்கிருந்து பறவை காவடி உள்பட பல்வேறு காவடிகள் ஊர்வலமாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டன. இந்த ஊர்வலம் கண்டன்விளை, தோட்டியோடு, நாகர்கோவில் வழியாக சென்றது. ஊர்வலத்தையொட்டி திங்கள்சந்தை நகரில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
    கடலிலோ, புண்ணிய நதிகளிலோ தீர்த்தமாடும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும்.

    தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரையில் தண்ணீரில் நனையும்படி நிற்க வேண்டும்.

    மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும். பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்யவேண்டும்.

    முதல் முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத் துளைகளை கைகளால் மூடி மூழ்க வேண்டும்.

    இரவில் தீர்த்த நீரில் மூழ்கக் கூடாது; சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.
    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
    கந்த சஷ்டி கவசம் விளக்கம்

    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

    இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

    ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான்.

    அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த் திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

    இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

    கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல்,

    தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.
    அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

    பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

    நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

    இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

    இந்திரனின் தேரோட்டியாக இருப்பவர் மாதளி. அவர் இந்திரனின் தேரோட்டியாக ஆன வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இந்திரனின் தேரோட்டியாக இருப்பவர் மாதளி. அவர் இந்திரனின் தேரோட்டியாக ஆனது எப்படி தெரியுமா? தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரில் இந்திரனின் மன ஓட்டத்தை அறிந்து, போரின் போக்கை கருத்தில் கொண்டு தேரைச் செலுத்தும், சமயோசித புத்தி கொண்டவர் இல்லாமல் இந்திரன் தவித்துப் போனான். தனக்கு தகுதியான தேரோட்டி கிடைப்பதற்காக அவன் வெகு காலம் காத்திருந்தான்.

    இந்த நிலையில் சமிக்யா என்ற முனிவரின் மனைவி, ஒரு ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் ஒன்றை வீதியில் விட்டு விட்டாள். அந்தக் குழந்தை, தேவலோக தலைவனான இந்திரனைச் சென்றடைந்தது. அந்தக் குழந்தையின் மதிநுட்பத்தை அறிந்த இந்திரன், குழந்தைக்கு ‘மாதளி’ என்று பெயரிட்டு வளர்த்தான். அதோடு பல கலைகளையும் கற்றுக் கொடுத்து, தன்னுடைய தேரோட்டியாக வைத்துக் கொண்டான்.
    ×