search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ஸ்ரீ லட்சுமி என்று போற்றப்படும் மகா லட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. லட்சுமி தேவி எந்த இடத்தில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறாள் என்று அறிந்து கொள்ளலாம்.
    லட்சுமிதேவி வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகிறாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் பிரிதி லட்சுமியாகவும், வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

    திருமால் கோவில்களில் பகவத் சன்னதியில் உள்ள பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.

    ஸ்ரீ லட்சுமி என்று போற்றப்படும் மகா லட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. மாதுளங்கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மை என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகா ராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள் கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் அவள் போற்றப்படுகிறாள்.
    இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை தாகத்தில் வாட்டி வதைக்கிறது. அணைகளும், நதிகளும் வறண்டு போய்விட்டன. பயிர்கள் வாடுகின்றன. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என பல இடங்களில், இறைவனை நோக்கி வேண்டி நிற்கிறார்கள், விவசாய பெருமக்கள்.

    மக்களுக்கு மட்டும்தானா தாகம். உலகில் வாழும் ஜீவராசிகளுக்கெல்லாம் தாகம்தான். அந்த தாகம் தீருமா? மழை வருமா? என இறைவனை வழிபடும் ஆன்மிக அன்பர்களும் ஏராளம். இப்படி மழைக்காக நம் நாட்டில் பல வகையான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கொஞ்சம் வித்தியாசமானது, குற்றால மலை உச்சியில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு செய்யும் பூஜை. இந்த பூஜையில் சப்த ரிஷிகளில் தலைமை ரிஷியான அத்ரி மகரிஷிக்கும், பதினெட்டு தவ முனிவர்களில் தலைமை முனிவரான அகத்தியர், அவரது சீடர் தேரையர் ஆகியோருக்கு வழிபாடு நடைபெறுகிறது.

    தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் தோன்றும் ஒவ்வொரு நதியும் தமிழக மக்கள் வளத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் வானம் பொய்த்து விட்டால், பூமி வறண்டு விடும். அந்த வேளையில் நமக்கு ஒரே நம்பிக்கை இறைவழிபாடுதான். அப்படி ஆண்டு தோறும் மழைக்காக நடத்தப்படும் வழிபாடுகளில் ஒன்றுதான் இது.

    குற்றால மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பழங்கள் உள்பட பூஜை பொருட்களை சேகரித்துக்கொண்டு கடுமையான மலை பயணத்துக்கு தயாராகி விடுவார்கள். இந்த பயணம் குற்றாலம் மலையின் உச்சியில் உள்ள தெற்கு மலை எஸ்டேட் ஆன்மிக பயணம் என அழைக்கப்படுகிறது. நினைத்தநேரத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. வருடத்துக்கு ஒரு நாள் வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த பயணத்தை தொடர முடியும். இதனால் மழை வேண்டி பூஜை செய்ய வனத்துறை அனுமதி பெற்று கிராம மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    சிற்றாறு, மலை முகட்டில் ஓடி வரும் கரை வழியேதான் இந்த பயணம் செல்கிறது. பல இடங்களில் இந்த நதியில் இறங்கி, ஏறி மறுகரை சென்று, வளைந்து நெளிந்து பள்ளதாக்கில் ஏறி சென்றுதான் பூஜை செய்கிறார்கள்.

    குற்றாலம் மெயின் அருவியும், அருகில் உள்ள சிற்றருவியும், புலியருவியும் பலரும் அறிந்த அருவிகள். ஆனால் அதைத் தாண்டி மலை பயணத்தைத் தொடர்ந்து, செண்பகாதேவி அம்மன் கோவிலும், அதன் அருகே ஒய்யாரமாய் விழும் செண்பகாதேவி அருவியும் இன்னும் கூட சிலர் அறியாத இடமாக உள்ளது. இவ்விடங்கள் எல்லாமே தவசித்தர்கள் வாழும் பகுதி என்று சொல்கிறார்கள். அகத்தியர், குற்றாலத்தில் பெருமாளை, சிவலிங்கமாக மாற்றிவிட்டு, செண்பகாதேவி காட்டு வழியாக அத்ரிமலை மற்றும் பொதிகை மலைக்கு சென்ற வழித்தடம்தான் இது.

    இவ்விடத்தில் அபூர்வக் குகைகள் பல உள்ளன. இங்கு தட்சிணாமூர்த்தி குகை, வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தவமேற்றிய கசாய குகை, செண்பகாதேவி அருகில் உள்ள அகத்தியர் குகை உள்பட பல குகைகள் தவத்திற்கு ஏற்றது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 18 சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் சப்த ரிஷிகள் உள்பட பல ரிஷிகளும் தவமிருந்த இடம். சித்திரா பவுர்ணமி அன்று இந்த செண்பகாதேவி அருவியில் அம்மன் நீராட சப்பரத்தில் வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

    தட்சிணாமூர்த்தி குகையில் அமர்ந்திருந்தால், அருவியே நமது மேல் கொட்டுவது போன்ற அற்புதத்தை உணரலாம். தொடர்ந்து கரை வழியே சென்றால் கசாய குகை. அதில் சித்தர்கள் நீராடும் தடாகம் இருக்கிறது. மீண்டும் நதியில் பயணத்தை மேற்கொண்டால், அற்புதமான தேனருவி காட்டுக்குள் நுழையலாம். தேனருவி என்பது ‘சிவமதுகங்கை’ என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு சித்ரா பவுர்ணமி தோறும் ஈசனை, அம்பாள் உள்பட தேவர்கள் அனைவரும் தேனால் அபிஷேகம் செய்வதாக நம்பிக்கை. எனவேதான் இங்குச் சித்ரா பவுர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது. இந்த மஞ்சள் மழை துளிகளை, அங்குள்ள பாறைகளில் காணலாம். இப்போதும் கூட வெள்ளை வேஷ்டியை முதல் நாள் விரித்து வைத்து விட்டு, மறுநாள் போய் பார்த்தால் அந்த வேஷ்டி மஞ்சளாக இருப்பது அதிசயம்தான். இதுபோன்ற அபூர்வ இடங்களை கொண்டது தான் சித்தாற்றங்கரை. தற்போது தேனருவி செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது.


    தண்டத்திற்கு நடைபெறும் பழ அபிஷேகம்

    இந்த நதிக்கரையில்தான் மழை வேண்டி நடைபெறும் அபூர்வ பூஜை நடக்கிறது. இதற்காக காலை 7 மணிக்கு ஊர்மக்கள் குற்றாலம் சிற்றருவி அருகே ஒன்று கூடுவார்கள். பூஜை பொருட்களை எல்லாம் டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்வார்கள். ஓரளவு வயதானவர்கள் இந்த டிராக்டரில் ஏறி கொள்வார்கள். மற்றவர்கள் நடைபயணம்தான். முதலில் நாம் செல்வது, ‘பிரிஞ்சு பார்த்தான் பாறை' (இந்த பாறையில் இருந்து குற்றாலம் அழகை ரசிக்கலாம்). தொடர்ந்து மூலிகை தோட்டம் அதைத் தாண்டி மேலே செல்லவேண்டும்.

    டிராக்டர் வழித்தடத்தில் சென்றால் நேரம் பிடிக்கும். ஆகவே குறுக்கு வழியாக உள்ள ஏற்றம் வழியாக ஏறி காத்தாடி மொட்டை என்ற பகுதிக்கு வந்து, மேலே ஏறிச்செல்லும் போது புங்கன்சோலை வருகிறது. அடர்ந்த காடு. எங்கும் வித்தியாசமான பறவைகளின் இன்னிசை. சோர்வு தெரியாமல் இருக்க நமது முகத்தில் அடிக்கும் தென்றல், புது உற்சாகத்தைத் தரும். இந்தச் சோலையை அடுத்து மேலே ஏறினால் ‘நெல் தீ மொட்டை' என்ற பகுதி வருகிறது. அங்கு உள்ள மஞ்சள் மாரியம்மனை வணங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்.

    தெற்கு மலை எஸ்டேட்டுக்குள் நுழைகிறோம். இது தனியாருக்கு சொந்தமான எஸ்டேட். இங்கு மங்குஸ்தான் பழங்கள் பயிரிடப்பட்டுள்ளது. சரியாக சொல்லப்போனால் தேனருவிக்கு மேல்தளத்தில் தான் இவ்விடம் உள்ளது. உள்ளே நுழைந்து சிற்றாற்றை கடக்கிறோம். அங்கு நிறைய நறுவளி செடிகள் ஆற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இவ்விடத்தில் காலை வைத்தால் ஆன்மிக அதிர்வை உணரலாம். இந்த அதிர்வுதான் குற்றாலத்தில் குளித்தால் மனநோய் தீருகிறது என்பதைச் சொல்லும் அறிவியல் உண்மை.

    அடுத்து தபால்காரன் பாறை. அந்த காலத்தில் குற்றால மலைக்கு மேலே கண்ணாடி பங்களாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு, தபால் வந்தால் இந்த பாறையில் தான் உள்ளூர் தபால்காரர்கள் கொண்டு வந்து வைப்பார்களாம். ஆங்கிலேயர்கள் குதிரையில் வந்து தபாலை எடுத்து செல்வார்களாம். தபால்காரன் பாறையை அடுத்து, பரதேசி புடை உள்ளது. இதை அடைவதற்கு மீண்டும் சிற்றாற்றின் எதிர்கரைக்கு வரவேண்டும். இந்த புடையானது அகத்தியர் தவம் இருந்த பகுதி.

    தொடர்ந்து பயணித்தால், ‘யானை உச்சான் பாறை' வரும். யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று இந்த பாறைகளில் உரசிக்கொண்டு நிற்பதால் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்து யானை ஓய்வெடுக்கும் ‘யானை அசண்டி.' அதைத் தாண்டினால், ‘சென்ற ராமன் கல்' என்ற இடம் உள்ளது. இவ்விடம் ராமன் சீதாபிராட்டியுடன் கடந்து சென்ற இடமாக கருதப்படுகிறது. தொடர்ந்து அகத்தியர், ராவணன் இசைப் போட்டியின்போது உருகிய மலை இருக்கிறது. அதன் அடிவாரத்தில் சிற்றாற்றங்கரை நடுவில் அகத்தியர் பாதம் உள்ளது. இங்கு சென்று அகத்தியர் பாதத்தினை வணங்கி விட்டு மீண்டும் பயணிக்கிறோம்.

    குற்றால மலையில் 2,500 மூலிகை செடிகள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். அதன் வாசம் இவ்விடத்தில வீசுகின்றன. இந்த வழியாக நாம் கடந்து சென்றாலே போதும், நமது உடலில் உள்ள நாள்பட்ட நோய் தீர்ந்து விடும். தொடர்ந்து ‘அரிசிப்பட்டிப் பாறை.’ அதைத் தாண்டி கடினமானப் பயணம். இரண்டு முறை ஆற்றைக் கடந்து சென்றால் ஒரு பாறையில் போய் நிற்கிறோம். அந்தப் பாறையில் 2 அடியில் தண்டம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் தற்போதும் அகத்தியர், அத்ரி, தேரையர் ஆகிய மகா முனிவர்கள் தவம் செய்வதாக நம்பப்படுகிறது.

    தண்டமானது, பாறை குழியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிற்றாற்றில் அடித்து செல்லும் வெள்ளம் இந்த தண்டத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது மிகப்பெரிய அதிசயம்தான். அங்கு தான் மழை வேண்டி சிறப்பான பூஜை நடைபெறுகிறது. இந்தபூஜையில் ரசமும், ரொட்டியும்தான் சிறப்பு பிரசாதம். இந்த பிரசாதத்தை தயார் செய்யும், பூசாரி வாயை கட்டிக்கொண்டு செய்கிறார்.

    அதன் பின் தண்டத்துக்கு சிறப்பு பூஜை அலங்காரம், ஆராதனை நடைபெறும். கூடி நின்ற மக்கள் எல்லோரும் அந்த தண்டத்தின் முன்ப விழுந்து நெடுஞ்சாண் கிடையாய் கிடந்து மழை வேண்டி பூஜை செய்வார்கள். அதில் சிலர் இறைவனின் அருள் வந்து, அருள்வாக்கும் கூறுவார்கள். மதிய வேளைக்குள் இந்த வழிபாடுகள் முடிவடைந்து விடும். அதன்பின் அனைவரும் மலையில் இருந்து கீழே இறங்குவார்கள். அவர்கள் கீழே வருவதற்குள் மழை பெய்யும் என்பது ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கண்கூடாக காணும் உண்மை.

    இந்த பூஜைக்கு பின்னர் தான், விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ந்து அந்த ஆண்டுக்கான விவசாய வேலையை ஆரம்பிக்கிறார்கள். ஆச்சரியமான இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் வந்து, காலை 7 மணிக்கு தங்களது ஆதார் அட்டையை வனத்துறையிடம் காண்பித்து, இந்த பூஜையில் கலந்துகொள்ளலாம்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    திருவண்ணாமலையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசாபிஷேகம் நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான நேற்று காலை 4-ம் கால யாக பூஜைகள் அம்மன் சன்னதி கொடி மரம் முன்பு நடந்தது.

    இதையடுத்து 1,008 கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.
    கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். இவர்களின் நட்பை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார். குசேலர் பரம ஏழையாக தன் ஊரிலேயே வாழ்ந்து வந்தார். திருமணமாகி அவருக்கு 27 குழந்தைகள் பிறந்ததால் சாப்பாட்டுக்கே அல்லாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.
    குசேலரின் மனைவி சுசீலை. கணவர் மனம் நோகாதபடி குடும்பம் நடத்தினார்.

    ஒருநாள் அவர் கிராமத்தில் எல்லாரும் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றி புகழ்ந்து பேசினார்கள். தன்னை நாடி வரும் அனைவருக்கும் பொன்னும், பொருளுமாக வாரி, வாரி கிருஷ்ணர் கொடுப்பதாக கூறினார்கள்.

    உடனே சுசீலை குசேலரிடம், குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. கிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்றார். முதலில் தயங்கிய குசேலர் பிறகு குழந்தைகளுக்காக ஒத்துக்கொண்டார். ஒரு துணியில் சிறிது அவல் கட்டிக்கொண்டு நண்பனை காண துவாரகாபுரி சென்றார். குசேலர் வந்துள்ள தகவல் அறிந்ததும் கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார். குசேலரை அழைத்துச் சென்று தன் சிம்மாசனத்தில் அமர வைத்தார்.

    பிறகு குசேலர் கால்களை மஞ்சள் நீரால் கழுவி உபசரித்து பல்சுவை உணவு கொடுத்தார். குசேலருக்கு இது கூச்சமாக இருந்தது. செல்வ செழிப்பில் மிதந்த கிருஷ்ணருக்கு அவலை எப்படி கொடுப்பது என்று வெட்கப்பட்டார். இதை கவனித்துவிட்ட கிருஷ்ணர் குசேலர் மறைத்த அவல் பொட்டலத்தைப் பிடுங்கி, ஆகா எனக்குப்பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார்.

    கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் “அட்சயம்” என்று உச்சரித்தார். மறு வினாடி கிராமத்தில் குசேலர் வீட்டில் வசதிகள் பெருகின. குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருநாளைத் தான் “அட்சய திருதியை” திருநாள் என்றழைக்கிறார்கள்.
    ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவங்கள் வரை, 108 தாண்டவங்களை சிவபெருமான் ஆடியிருப்பதாக வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
    சிவபெருமான் ஆடும் சுருக்க நடனம், தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நடனமானது, சிவபெருமானின் முரட்டு சக்தியை, பிரபஞ்சத்தின் உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவுடன் தொடர்பு கொண்டதாக சித்தரிக்கிறது.

    இசை மற்றும் நடனத்தின் திறமை வாய்ந்த சிவபெருமான், தன்னுடைய தாண்டவங்களை, தண்டு முனிவருக்கு கற்பித்தார். ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவங்கள் வரை, 108 தாண்டவங்களை சிவபெருமான் ஆடியிருப்பதாக வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.

    இவை அனைத்தும் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகிறது.
    சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர். திருநாங்கூரில் உள்ள பன்னிரு பீட சிவ திருத்தலங்களை இங்கே பார்க்கலாம்.
    சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர். திருநாங்கூரில் உள்ள பன்னிரு பீட சிவ திருத்தலங்களை இங்கே பார்க்கலாம்.

    1. தத்புருஷ பீடம் - திருநாங்கூர் ராஜ மாதங்கி சமேத மதங்கீஸ்வர சுவாமி திருக்கோவில்

    2. அகோரபீடம் - கீழைத் திருக்காட்டுப்பள்ளி அகிலாண்ட நாயகி சமேத ஆரண்யேஸ்வர சுவாமி ஆலயம்.

    3. வாமதேவ பீடம் - கீழ்சட்டநாதபுரம் திருயோகீஸ்வரம் யோகாம்பாள் சமேத யோகநாத சுவாமி ஆலயம்.

    4. சத்யோத்ஜாத பீடம் - காத்திருப்பு சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வர சுவாமி திருக்கோவில்

    5. சோம பீடம் - திருநாங்கூர் அமிர்தபுரீஸ்வரர் திருக்கோவில்

    6. சார்வ பீடம் - அல்லிவிளாகம் செம்பதனிருப்பு நாகநாத சுவாமி ஆலயம்.

    7. மகாதேவ பீடம் - திருநாங்கூர் பக்தவத்சலாம்பிகை சமேத நம்புவார்க்கன்பர் சுவாமி திருக்கோவில்

    8. பீமபீடம் - திருநாங்கூர் கயிலாசநாத சுவாமி திருக்கோவில்

    9. பவபீடம் - திருநாங்கூர் சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்

    10. பிராண பீடம் - அத்தீஸ்வரம் பெருந்தோட்டம் அதுல்ய குஜாம்பாள் சமேத ஐராவதேஸ்வர சுவாமி ஆலயம்.

    11. ருத்ரபீடம் - அன்னப்பன் பேட்டை சுந்தராம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

    12. பாசுபத பீடம் - மேல்நாங்கூர் நயனவரதேஸ்வர சுவாமி ஆலயம்
    நரசிம்மருக்கு உண்மையான பக்தர்களையே பிடிக்கும். நரசிம்மருக்கு உகந்த சில முக்கியமான தகவல்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    1. நரசிம்மருக்கு உண்மையான பக்தர்களையே பிடிக்கும்.

    2. அசைவம் சாப்பிடுபவர்களை நரசிம்மர் ஏற்பதில்லை.

    3. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளான் என்பதை உணர்த்துகிறது.

    4. நரசிம்மருக்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது.

    5. வைணவத்தில் அதிகம் வழிபடக் கூடிய தெய்வம் நரசிம்மர் தான்.

    6. வட இந்தியாவை விட தென் இந்தியாவில் தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.

    7. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில் தான்.

    8. தமிழ்நாட்டில் உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட ஒரே இடம் புதுச்சேரி அருகே உள்ள சிங்கிரி என்ற ஊரில் உள்ள ஆலயமாகும்.

    9. சோளிங்கரில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறந்து பார்ப்பதாக ஐதீகம்.

    10. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களகிரியில் பானக நரசிம்மர் உள்ளார். இவர் பானகம் அருந்துவதை கண்கூடாக பார்க்கலாம்.

    11. நரசிம்மர் மூர்த்தங்களில் மொத்தம் 32 வகையான அமைப்புகள் உள்ளன.

    12. தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை அருகே கீழபாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்தும் சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.
    காசிப முனிவருக்கும், கத்ரு என்ற பெண்ணுக்கும் பிறந்த நாக குலத்தினர்களின் ஒருவனான தட்சகன் நாகர்களின் அரசனாக இருந்தவன். இவரது வரலாற்றை பார்க்கலாம்.
    காசிப முனிவருக்கும், கத்ரு என்ற பெண்ணுக்கும் பிறந்த நாக குலத்தினர்களின் ஒருவன், இந்த தட்சகன். இவன் நாகர்களின் அரசனாக இருந்தவன். இவன் காண்டவ வனத்தில் தன் இனத்தைச் சார்ந்தவர்களுடன் வாழ்ந்த வேளையில், ஒருமுறை தட்சகன் குருசேத்திரம் சென்றிருந்தான். அப்போது இந்திர பிரஸ்தம் என்ற நகரை நிர்மாணிக்கும் பொருட்டு, தட்சகன் வாழ்ந்த காட்டை அழித்து நகராக மாற்றினான் அர்ச்சுனன். அதில் தட்சகனின் குடும்பம் முழுவதும் அழிந்தது. தட்சகனின் மகன் அஸ்வசேனன் மட்டுமே உயிர் பிழைத்தான்.

    ஒரு முறை அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மன்னன், மவுன விரதத்தில் இருந்த முனிவரின் கழுத்தில் இறந்த பாம்பை போட்டு அவமதித்தான். அந்த முனிவரின் மகன், பரீட்சித்து மன்னன், 7 நாட்களில் நாகம் தீண்டி இறப்பான் என்று சாபமிட்டான். அதன்படி 7-ம் நாள் பரீட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறந்து போனான்.

    தன் தந்தையை கொன்ற தட்சகனின் நாகர் குலத்தையே வேரோடு அழிக்க நினைத்த பரீட்சித்து மன்னனின் மகன் ஜனமேஜயன், நாக வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்வியில் நாகர் இனத்தைச் சேர்ந்த அனைவரும் விழுந்து இறந்தனர். தட்சகன் தன்னுடைய நண்பனான தேவலோகத்தின் தலைவன் இந்திரனின் உதவியை நாடினான். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து ஆஸ்திகர் என்ற முனிவர், ஜனமேஜயனிடம் பேசி, நாகவேள்வியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக தட்சகன் மட்டும் உயிர் பிழைத்தான்.

    நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
    நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்“ என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

    நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.

    இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், “இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்” என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

    சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974--&ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

    நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

    “எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்” என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

    சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.

    அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும். வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

    மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடும் போது “ஸ்ரீநரசிம்ஹாய நம” என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும். “அடித்த கை பிடித்த பெருமாள்” என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள். நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும்.

    அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

    ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

    மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.
    நரசிம்மருக்கு சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கு பாத்திரமாகலாம். மேலும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
    நரசிம்மரை வழிபட்டால் சிவன் - பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும். ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

    நரசிம்ம மூர்த்தியை தியானிப்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். நரசிம்ம மூர்த்தியை உபாசனா தெய்வமாகக் கொள்பவர் அஷ்டதிக்குகளிலும் புகழ்பெற்று விளங்குவர்.

    ஸ்ரீவைஷ்ணவ ஜோதிட சம்பிரதாயத்தில் ஞானகாரகன் கேதுவுக்கு அதிதேவதையே நரசிம்மர்தான். பில்லி, சூன்யம், ஏவல், ஆபிசாரம் போன்ற மனிதர்களின் மறைமுக எதிரிகளின் தொல்லைகளையும் நேர்முகமான எதிரிகளால் வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் நிவர்த்தி செய்வதும் நரசிம்மர்தான்.

    சுவாதி நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும் அசுரன் மறுபிறவியில் பிரகலாதன் ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியுள்ளார்.

    மேலும் துலா ராசியில் சூரியன் சங்காரம் செய்யும் போது சுவாதி நட்சத்திரத்தன்று தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகின்றது. ஆகவே சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கு பாத்திரமாகலாம்.
    நலங்களை அருளும் நரசிம்மர் பல்வேறு தோற்றங்களில் அருள்பாலிக்கிறார். எந்த கோவிலில் எந்த வடிவில் காட்சியளிக்கிறார் என்பதை பார்க்கலாம்.
    கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர விமானம் என வணங்கப்படுகிறது. விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.

    மதுரை, மாட்டுத்தாவணியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தக்கடையின் அருகே யானைமலை அமைந்துள்ளது. இங்கு அருளும் நரசிம்ம மூர்த்திக்கு பிரதோஷ காலத்தில் பானகம் நிவேதித்து வேண்டிட நினைத்த காரியம் நிறைவேறுகிறது.விழுப்புரம், பரிக்கல்லில் அஷ்டகோண விமானத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி அருள்கிறார். பதவி உயர்வு வேண்டுவோரும், இழந்த பதவியைத் திரும்பப் பெற வேண்டுவோரும் இவரை தரிசித்து பலனடைகின்றனர். பில்லி, சூன்ய பாதிப்புகள் இவரை நினைத்த மாத்திரத்திலேயே நீங்கும்.

    காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார். திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார்.

    சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலம், கர்நூலில் உள்ள அகோபிலத்தில் பிரகலாத வரதன் எனும் திருப்பெயரில் பக்தபிரகலாதனுக்கு அருளிய நரசிம்மரையும் அவர் வெளிப்பட்ட உக்ரஸ்தம்பத்தையும் தரிசிக்கலாம். இத்தலம் நவ நரசிம்மத் தலமாக போற்றப்படுகிறது.

    திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள். திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர் 8 அடி உயரத்தில் திருமகளை தன் இடது மடியில் இருத்தி அருட்கோலம் பூண்டிருக்கிறார். ஒவ்வொரு சுவாதி நட்சத்திர தினத்தன்றும் இந்த நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

    மைசூர் ஜெயலட்சுமிபுரம், காளிதாசர் சாலை, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் பசு நெய் விளக்கேற்றி வழிபட, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதாக நம்பிக்கை.சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோகநரசிம்மருக்கே. அவர் எப்போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக்கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.

    திண்டிவனத்தில் உள்ள நரசிங்கப்பெருமாளை அவர் கோபம் தீர, வேண்டிக் கொள்ளும் தாயாரை வணங்கிய கோலத்தில் தரிசிக்கலாம். ராகுதசை நடப்பவர்கள் மற்றும் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.
    நரசிம்மருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் 12 பெயர்கள் மிக மிக முக்கியமானவை. இந்த 12 திவ்ய நாமங்களை தீபம் சொல்லி வர கவலைகள் நீங்கும். வாழ்வு வளமாகும்.
    நரசிம்மருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் 12 பெயர்கள் மிக மிக முக்கியமானவை. அந்த 12 பெயர்களையும் தினமும் காலையில் பூஜை அறையில் உச்சரித்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது. நாளடைவில் இந்த பூஜைக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். சிறப்பு வாய்ந்த அந்த 12 பெயர்கள் வருமாறு:-

    1. மகாசுவாலா,
    2. தூம்ர கேசரி,
    3. கிருஷ்ண பிங்காட்சா,
    4. விதாரண,
    5. பஞ்சமஸ் சைவ,
    6. கசிபுமர்த்தன,
    7. சததித்ய கந்தாச,
    8. தீநவல்லப,
    9. பிரகலாதவரதோ,
    10. நந்தகஸ்தகா,
    11. மகாரவுத்ரோ,
    12. கருணாநிதி.

    இந்த 12 திவ்ய நாமங்களை தீபம் சொல்லி வர கவலைகள் நீங்கும். வாழ்வு வளமாகும்.
    ×