search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    சிவபெருமான் மேல் கொண்ட பக்தியால் யானை, சிலந்தி இரண்டு உயிரினங்களும் போட்டி போட்டு சேவை செய்த கதையையும், அவற்றிற்கு சிவபெருமான் புரிந்த திருவருளையும் பார்க்கலாம்.
    வெண்ணாவல் காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் அந்த யானை ஒரு நாள் சிவலிங்கத்தை கண்டது. உடனே யானை அங்கேயே தங்கி விட்டது. தினந்தோறும் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு தனது தும்பிக்கையால் நீரை எடுத்துக்கொண்டு சில பூக்களையும் தளிர்களையும் காய்கனி கிழங்குகளையும் பறித்துக்கொண்டு வந்து, லிங்கத்திருமேனி மீது விழுந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி விட்டு வணங்குவதை வழக்கமாக கொண்டது. இத்திருப்பணி பல ஆண்டுகளாக நடந்து வந்தது.

    யானை திருப்பணி செய்து கொண்டிருந்த அதே கால கட்டத்தில் ஒரு சிலந்தியும் அங்கு வந்து சேர்ந்தது. அதுவும் முற்பிறவியில் ஏற்பட்ட விதி வசத்தால் சிவத்தொண்டு செய்தது. சிலந்தி தன் வாய்நூலால் தினமும் சிவபெருமானுக்கு அழகிய பந்தலமைத்து மரச்சருகுகள் மற்றும் குப்பைகள் லிங்கம் மீது விழ விடாமல் காத்து வந்தது. மரத்தின் மீது அமர்ந்தால் சிவ அபசாரம் ஏற்படும் என கருதி பணி முடிந்ததும் வேறு இடத்திற்கு சென்று தங்கியது. சிலந்தியின் வலைப்பின்னலை பல நாட்கள் யானை பிய்த்து எறிந்தது. ஆனால் மறுநாள் சிலந்தி மீண்டும் வலை பின்னியது.

    சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் யானையும், சிலந்தியும் ஒருவர் செய்வது இன்னொருவருக்கு தெரியாமல் செய்த திருப்பணிகள் நீடித்து வந்தது. ஒரு நாள் யானை சினங்கொண்டு வலைப்பின்னலை தனது தும்பிக்கையால் பிய்த்து எறிந்தபோது சிலந்தி யானையின் தும்பிக்கை துவாரம் வழியாக புகுந்து தலையின் உச்சியில் போய் கடித்தது. உயிர் நிலையில் சிலந்தி கடித்ததால் யானை மரணத்தை தழுவியது. தும்பிக்கையில் இருந்து வெளியே வர முடியாமல் சிலந்தியும் உயிரை மாய்த்துக்கொண்டது.

    தன் மீது உள்ள பக்தியால் இந்த இரண்டு உயிரினங்களும் போட்டி போட்டு சேவை செய்து உயிரை இழந்ததை சிவபெருமான் அறிந்தார். அவற்றின் பக்தியை மெச்சி யானையை கயிலாயத்தில் பூத கண தலைவனாக நியமித்தார். சிலந்தியை சோழ மன்னனாக பிறக்க திருவருள் செய்தார். அன்று முதல் வெண்ணாவல்காடு திரு ஆனைக்காவாக பெயர் மாறியது.
    எந்த லிங்கத்தையும் விட, அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் தான் இறைவனுக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகமும் உயர்வு பெறுகிறது.
    மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன், மிகச் சிறந்த வில்லாளி. அதே நேரத்தில் சிவ பூஜை செய்பவர்களிலும் சிறப்பு பெற்றவனாக இருந்தான். அவனுக்கு ‘தன்னை விட சிறப்பாக சிவ பூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்து பூசிப்பவர் யாருமில்லை’ என்ற கர்வம் இருந்தது.

    அர்ச்சுனன் பாதை மாறிச் செல்லும் வேளையில் எல்லாம், நண்பனாக இருந்து பல அறிவுரைகளைச் சொல்லி நல்வழியில் செலுத்தியவர் கண்ணன். அவருக்கு அர்ச்சுனனின் கர்வம் அறிந்து நகைப்பு தான் வந்தது. அவர் அர்ச்சுனனிடம், “உன்னை விட அதிகமான, உயர்வான லிங்கங்களை வைத்து சிவபூஜை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர். அவர்களே சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்” என கண்ணன் கூறினார்.

    “அவர்கள் யார்?” என்று கேட்ட அர்ச்சுனனுக்கு, ஒரு குடியானவனையும், அவரது மனைவியையும் காட்டினார் கண்ணன்.

    அர்ச்சுனன், மறைவாக இருந்து அந்தக் குடியானவனின் ஒரு நாள் நடவடிக்கைகளை கவனித்தான். அவன் கவனித்த நாளில் ஒரு முறை கூட அந்தக் குடியானவன் சிவபூஜை செய்யவில்லை.

    கண்ணனிடம் வந்த அர்ச்சுனன், “குடியானவன் சிவபூஜையே செய்யவில்லை. அவர்களின் வீட்டில் சிவலிங்கமே இல்லை” என்றான்.

    புன்னகை புரிந்த கண்ணன், “நீ அங்கே கவனித்த போது, அவர்கள் எப்போதாவது வழிபாடு செய்தார்களா?” என்றார்.



    “ஆம்.. ஒரு முறை மட்டும் தம்பதியராக நின்று சாதம் வடித்த பானையை வழிபட்டனர்” என்றான் அர்ச்சுனன்.

    உடனே கண்ணன் “உலக ஜீவ ராசிகளின் பசிப்பிணி தீர்க்க பொன்மணி தேவையா? அரிசிமணி தேவையா?” என்றார்.

    “அரிசி தான் பொன்னை விட உயர்ந்தது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்று என்ற பழமொழி வந்தது” என்று கூறினான் அர்ச்சுனன்.

    “அப்படியானால் ஒரு அன்னப் பருக்கை ஒரு லிங்கத்திற்கு சமம் தானே?”

    கண்ணனின் கேள்வியை ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டான் அர்ச்சுனன்.

    “அந்த தம்பதியர் வணங்கிய சாதம் வடித்த பானையில் எத்தனை ஆயிரம் லிங்கங்கள் இருந்திருக்கும். அத்தனை லிங்கங்களை வணங்கிய அவர்கள் தானே, சிறந்த சிவ பக்தர்கள்” என்று கூறிய கண்ணனின் கிடுக்கிப்பிடியில் திணறிப்போனான் அர்ச்சுனன். அவனது கர்வம் தவிடுபொடியாகிப்போனது.

    எந்த லிங்கத்தையும் விட, அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் தான் இறைவனுக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகமும் உயர்வு பெறுகிறது.

    தினமும் வீட்டில் சாதம் செய்த பின், அது வேகவைக்கப்பட்ட பானையில், விபூதி பட்டையிட்டு சிறிது பூவும் வைத்து, கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் கிடைக்கும்.
    பரக்கலக்கோட்டையில் உள்ள பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரமாக காட்சி தருகிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை.

    ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும்.

    மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள். ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


    பொது ஆவுடையார் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த காட்சி.

    ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை சோமவார விழா கடந்த மாதம்(நவம்பர்) 19-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவில் நடை திறக்கப்பட்டு பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடைசி சோமவார விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து தங்களது வயலில் சாகுபடி செய்யப்பட்ட நெல், உளுந்து மற்றும் தேங்காய், ஆடு, கோழி மற்றும் தானியங்களை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெல், மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெல் கோவில் வளாகத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதேபோல தேங்காய்களும் அதிகளவு குவிந்தன.

    விழாவையொட்டி பொது ஆவுடையார் கோவிலுக்கு வேதாரண்யம், மன்னார்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பேராவூரணி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சம்பத்குமார், பரம்பரை அறங்காவலர்கள் சடகோபராமானுஜம், ராமானுஜம் மற்றும் பரக்கலக்கோட்டை கிராம மக்கள் செய்து இருந்தனர். 
    திருச்சானூரில் நடந்து வரும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை வாகனத்தில், ‘திரிவிக்ரமன்’ அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், ‘திரிவிக்ரமன்’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நண்பகல் 12 மணியில் இருந்து 2.30 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 11 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஜான்சிராணி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டிபாஸ்கர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.15 மணியளவில் தேரோட்டமும், இரவு குதிரை வாகன வீதிஉலாவும் நடக்கிறது. 
    மார்கழி மாதம் 14-ம் நாள் (29.12.2018) அஷ்டமி திதிஅன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.
    சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள் மார்கழி மாதம் 14-ம் நாள் (29.12.2018) சனிக்கிழமையன்று வருகின்றது. இந்த அஷ்டமி திதிஅன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.

    அன்றைய நாளில் அன்னதான வைபவங்களை நாம் செய்தால் புண்ணியமும் நமக்குக் கிடைக்கும். பொருளாதார நிலையும் பெருகும். “மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் கூறியதாக வர்ணிக்கப்படும் இந்த மார்கழி மாதம் மகத்தான மாதமாகும். காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய இந்த மாதத்தில் படியளக்கும் திருநாளில் வழிபாட்டை மேற்கொண்டால் படிப்படியாக முன்னேற்றம் வந்து சேரும்.

    அன்றைய தினம் இறைவன் சன்னிதியில் ஒரு ஸ்பூன் அளவு அரிசி வைத்து வழிபட்டு, அதை உணவில் சேர்த்துக் கொண்டால் உணவு பஞ்சமின்றி தினமும் உணவு கிடைக்கும் யோகமும் ஏற்படும்.

    நெல்லை அருகன்குளம் ஜடாயு படித்துறையில் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    தாமிரபரணி மகாபுஷ்கரத்தையொட்டி நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அங்குள்ள எட்டெழுத்து பெருமாள், ராமலிங்க சுவாமி, லட்சுமி நாராயணர் மற்றும் காட்டு ராமர் கோவில்களில் வழிபாடு நடத்தினர்.

    தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறை அருகில் ஜடாயு தீர்த்தம், ராமதீர்த்தம், சிவதீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களும் கலப்பதால் இங்கு புனித நீராடுவது சிறப்பானது என்று கூறப்படுகிறது. இதனால் இங்கு தினமும் பக்தர்கள் வந்து புனித நீராடி செல்கிறார்கள்.

    தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதம் விழா நடந்த 12 நாட்களும் இங்கு மகா ஆரத்தி நடந்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மகா ஆரத்தி எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயு துறையில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறையில் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பூக்களை தூவி வழிபாடு நடத்தப்பட்டது. தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மழை பொய்க்காமல் சீராக பெய்யவும், உலக நன்மை மற்றும் பக்தர்கள் குடும்ப நலன் வேண்டியும் இந்த ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    வேடசந்தூர் அருகே 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வமாக பாவித்து வினோத வழிபாடு நடத்திய ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    வேடசந்தூர் அருகேயுள்ள அச்சனம்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆழி பூஜை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் ஆழி பூஜை நடந்தது. இதற்காக கடந்த 7 நாட்களுக்கு முன்பு, அந்த ஊரை சேர்ந்த 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட 7 சிறுமிகளை தேர்வு செய்தனர். பின்னர் அந்த சிறுமிகளுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் 7 சிறுமிகளுக்கும் மஞ்சள் ஆடை அணிவித்து, கையில் காப்பு கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து 7 சிறுமிகளை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டது. இதற்காக அந்த சிறுமிகள் கோவிலில் தங்க வைத்து, தெய்வத்துக்கு நடத்துவது போன்று பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7-வது நாளான நேற்று முன்தினம் இரவு காலை, ஆழி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது ஊர் எல்லையில் இருந்து 7 சிறுமிகளும் சப்த கன்னிமார்களாக நெய்விளக்கு ஏந்தி ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு பூக்குழி (ஆழி) வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 7 சிறுமிகளுக்கு சப்த கன்னிமார் பூஜை நடத்தப்பட்டது.

    பின்னர் ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி பூஜை செய்தனர். இதைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் 200-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கியது, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, நத்தம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இது குறித்து ஐயப்ப பக்தர்களின் குருசாமியான அழகர்சாமி கூறுகையில், சப்த கன்னிமார் என்பது கிராமத்தை காவல் காக்கும் தெய்வமாகும். அந்த தெய்வங்களாக நினைத்து 7 சிறுமிகளை அழைத்து 7 நாட்கள் கோவிலில் தங்கி விரதம் இருப்போம். பூக்குழி இறங்கும் போது பக்தர்களை காக்கவேண்டும் என்பதற்காக, 7 கன்னிமார்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். கன்னிமார்கள் முன்னிலையிலேயே பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். இதனால் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை ஆகும், என்றார். 
    மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும்.

    மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும். யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.

    இந்திரன் - மரகத லிங்கம்
    குபேரன் - சொர்ண லிங்கம்
    எமன் - கோமேதக லிங்கம்
    வருணன் - நீல லிங்கம்
    விஷ்ணு - இந்திர நீல லிங்கம்
    பிரம்மன் - சொர்ண லிங்கம் அஷ்ட வசுக்கள்,
    வசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்
    வாயு - பித்தளை லிங்கம்
    அசுவினி தேவர்கள் - மண் லிங்கம்
    மகாலட்சுமி - ஸ்படிக லிங்கம்
    சோம ராஜன் - முத்து லிங்கம்
    சாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்
    வேதிகர்கள் - மண் லிங்கம்
    மயன் - சந்தன லிங்கம்
    நாகர்கள் - பவள லிங்கம்
    அரசுர்கள் - பசுஞ்சாண லிங்கம்
    பார்வதி - வெண்ணெய் லிங்கம்
    நிருதி - தேவதாரு மர லிங்கம்
    யோகிகள் - விபூதி லிங்கம்
    சாயா தேவி - மாவு லிங்கம்
    சரஸ்வதி - ரத்தின லிங்கம்
    யட்சர்கள் - தயிர் லிங்கம்
    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.
    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    கிழமைகளும் பலன்களும் :

    ஞாயிற்றுக்கிழமை :


    ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

    திங்கட்கிழமை :

    திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பானவன். இனிய சொற்களால் அனைவரையும் மயக்கிவிடுவார்கள். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.

    செவ்வாய்கிழமை :

    செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். தந்திரக்காரனாய் இருப்பார். பிறருக்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள்.

    புதன்கிழமை :

    புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பவர். நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள்.

    வியாழக்கிழமை :

    வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார். அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள்.

    வெள்ளிக்கிழமை :

    வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர்பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

    சனிக்கிழமை :

    சனிக்கிழமையில் பிறந்தவர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள். பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்.
    விநாயகர் சதுர்த்தியன்று எந்த காரணத்தை கொண்டும் சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
    விநாயகர் சதுர்த்தியன்று எந்த காரணத்தை கொண்டும் சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. அரிசி மாவினால் செய்த இனிப்பை கொண்ட கொழுக்கட்டை விநாயகருக்கு ரொம்ப பிடிக்கும். அதாவது பிறந்தநாளின் போது அவர் வீடு, வீடாக சென்று கொழுக்கட்டைகளை பெற்று கொண்டு இருந்தார்.

    அதிகமாக இவற்றை சாப்பிட்டு விட்டு இரவில் அவர் எலியின் மீது அமர்ந்து பவனி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு பாம்பை பார்த்து எலி பயந்து விட்டது. அதனால் விநாயகர் கீழே விழுந்து விட்டார். அவரது வயிறு கிழிந்து கொழுக்கட்டைகள் வெளியே வந்தன. அவற்றை மீண்டும் விநாயகர் தன் வயிற்றுக்குள் திணித்தார். அந்த பாம்பை தன் வயிற்றை சுற்றி கட்டிக்கொண்டார்.

    ஆகாயத்தில் இருந்து இதை பார்த்து கொண்டு இருந்த சந்திரன் கல கல என்று சிரித்து விட்டார். இதை பார்த்து கோபம் கொண்ட விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதை சந்திரனை நோக்கி எறிந்தார்.

    விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை யாரும் பார்க்க கூடாது என்று சபித்தார். அப்படி அவர்கள் பார்த்தால் அவர்கள் இகழ்ச்சியையும், பாவத்தையும் அடைவர். தவறாக எவராவது பார்த்து விட்டால் அதற்கு பிராயச்சித்தமாக ஸ்ரீமத்பாகவத்தில் சயமந்த கமணியை ஸ்ரீகிருஷ்ணர் திரும்ப பெற்றார் என்ற கதையை அவர்கள் கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
    அசுரர்களை அழிக்கவே நரசிம்மரிடம் இருந்து சங்கு சக்கரங்களை ஸ்ரீஆஞ்சநேயர் பெற்றார். ஆனால் அந்த சங்கு, சக்கரம் ஆஞ்சநேயரிடமே தங்கி விட்டது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    அசுரர்களை அழிக்கவே நரசிம்மரிடம் இருந்து சங்கு சக்கரங்களை ஸ்ரீஆஞ்சநேயர் பெற்றார். அசுரர்களை அழித்த பிறகு சங்கு, சக்கரங்களை நரசிம்மரிடம் ஆஞ்சநேயர் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த சங்கு, சக்கரம் ஆஞ்சநேயரிடமே தங்கி விட்டது.

    இதன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக சோளிங்கர் ஆலய தலைமை குருக்கள் ஸ்ரீதர் பட்டாச்சார்யா விளக்கம் அளித்தார். அதாவது வைணவர்கள் ஒருவருக்கு சங்கு, சக்கரத்தை கொடுத்தால் அவற்றை ஒரு போதும் திரும்பி வாங்க மாட்டார்கள்.

    அந்த அடிப்படையில் தான் ஸ்ரீஆஞ்சநேயருக்கு கொடுத்த சங்கு, சக்கரத்தை நரசிம்மர் திரும்ப பெறவில்லை என்று ஸ்ரீதர் பட்டாச்சார்யார் கூறினார். நான்கு கரங்களுடன் இருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர் 2 கைகளில் சங்கு, சக்கரம் வைத்துள்ளார். மற்ற இருகரங்களில் ஜெபமாலையும் ஜெப சங்கையும் வைத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
    சோளிங்கர் ஸ்தலத்தில் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் வழிபட்டால் துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் விலகும்.
    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும்.

    சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் நரசிம்மரும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் நமக்குக் காட்சி அளித்து, அருளை வாரி வழங்குகிறார்கள்.

    பெரிய மலையில் கார்த்திகை மாதத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை உள்ள நாட்கள் மிகவும் பிரசித்தம். இந்த மாதத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் யோகத்தை கலைத்து, கண் திறந்து பார்ப்பதால் கார்த்திகை சோளிங்கர் பயணமும் நரசிம்மர் தரிசனமும் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தீராத நோயுள்ளவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் மலை அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் குளித்து விட்டு 1305 படி ஏறி நரசிம்ம சாமியை தினம் 108 முறை பிரதட்சணம் செய்தால் ஸ்ரீயோக நரசிம்மனே அவர்கள் கனவில் வந்து குறை தீர்ப்பதாகத் தல புராணம் கூறுகிறது.

    108 பிரதட்சணம் செய்பவர்கள் வசதிக்காக கோவிலின் மூன்றாவது பிரகாரம் மட்டும் அதிகாலையே திறப்பது வழக்கம். எந்த நிலையிலும், எவருக்குமே இரவில் மலை மேல் தங்க அனுமதி இல்லை.

    துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் இந்த ஸ்தல பெருமாளை வழிபட்டால் விலகும். நோய்கள் மூலம் அவஸ்தைப்படுகிறவர்கள் தினமும் அடிவாரத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி மலை மீது ஏறி பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்த நோய்கள் அனைத்தும் விலகும் என்பது மிகுந்த நம்பிக்கை.
    ×