search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது.
    சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது.

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள பெரிய மலைக்கு ஏறிச் செல்லும் போது படிக்கட்டு ஓரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் தொட்டில் கட்டி தொங்க விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சில பெண்கள் தாங்கள் உடுத்தியிருக்கும் சேலை முந்தானையில் கொஞ்சம் கிழித்து, அதையே தொட்டில் போல் கட்டி தொங்க விட்டு நரசிம்மரை வழிபடுகிறார்கள்.

    இந்த வழிபாடு காரணமாக உடனே புத்திரபாக்கியம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது புது வீடு வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மலையில் கற்களை அடுக்கி வைக்கிறார்கள். இந்த நம்பிக்கை மூலம் வீடு வாங்கும் யோகம் உருவாகிறது.
    ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது இந்த கார்த்திகை மாதம் முழுவதும் அல்லது நரசிம்மருக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
    ஓம் திருக்கடிகைத்தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் அழியங்கையா போற்றி
    ஓம் அக்காரத் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி
     அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தெந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி
    ஓம் உலகமுண்டாய் போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக் கண்ணா போற்றி
    ஓம் காமனைக் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளிமணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமரா போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங்கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி
    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவர முனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப்பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகலே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம்  மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப்பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குருபரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னை யாளுடையாய் போற்றி
    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்டதிருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர்  தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
    ஓம் வில்லிறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக் கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி
    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் சிரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன் வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி
    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த  விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வர மருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி
    ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அகிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மன்னருக்கு அருளினார்.
    இந்திரதூமன் என்னும் அரசர் ஒருமுறை கவரிமானை வேட்டையாடி அதனை துரத்திக் கொண்டே சோளிங்கர் காட்டுக்குள் நுழைந்தார். அவர்துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத் தொடங்கியது.

    மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண் முன்னே அம்மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்து விட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அகிம்சையை பின்பற்றினார்.

    ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அகிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மன்னருக்கு அருளினார். சோழ சோளிங்கரில் கும்போதரன் என்னும் அரக்கனின் அட்டகாசத்தை மன்னர் இந்திரதூமன் அகிம்சை முறையிலேயே அடக்கி, அந்த ஊருக்கு அமைதியைக் கொண்டு வந்தார்.
    சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார் என்று பக்தர்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு சோளிங்கர் நரசிம்மர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அருமையான விளக்கம் அளித்தார்.
    சோளிங்கரில் ஸ்ரீயோக நரசிம்மர் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம்.

    சோளிங்கர் மலையில் சப்தரிஷிகளும் தவம் செய்து ஸ்ரீ யோக நரசிம்மரின் காட்சியைப் பெற்றனர். அப்படி சப்தரிஷிகள் அருள் பெற்றது போல பக்தர்களும் அருள்பெறவே கார்த்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்து பார்த்து அருள்கிறார் என்று சொல்கிறார்கள்.

    அது எப்படி சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார் என்று பக்தர்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு சோளிங்கர் நரசிம்மர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அருமையான விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    கார்த்திகை மாதம் மட்டும் எல்லா ஊர்களிலும் நரசிம்மருக்கு தைலக்காப்பு செய்து வைப்பார்கள். ஆனால் சோளிங்கர் தலத்தில் மட்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதில்லை. இதன்மூலம் இத்தலத்தில் நரசிம்மர் கண்திறந்து இருக்கிறார்.

    இது எந்த தலத்துக்கும் கிடைக்காத பெரும் பேறு. எனவே கார்த்திகை மாதம் ஏதாவது ஒருநாள் சோளிங்கர் வந்து ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் அவரது நேரடி பார்வையை பெற்ற புண்ணியத்தை அனுபவிக்கலாம். 12 மாதங்களில் ஒரே ஒரு மாதம் மட்டும் நரசிம்மர் இப்படி அருள்கிறார். எனவே பக்தர்கள் இந்த கார்த்திகை மாதத்தில் திட்டமிட்டு தங்களது புனித யாத்திரையை அமைத்துக் கொண்டால் சிறப்பான அனுபவத்தை பெறலாம்.

    இவ்வாறு சோளிங்கர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் தெரிவித்தார்.

    கார்த்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்து பார்ப்பதால் அவரை தரிசனம் செய்ய வைணவர்கள் மட்டுமின்றி அனைத்து பிரிவினரும் கோவில்களுக்கு வரத்தயங்குவது இல்லை. இதனால் கார்த்திகை மாதம் முழுவதும் சோளிங்கர் தலத்தில் பக்தர்கள் வெள்ளமென படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக கார்த்திகை மாதம் 5 வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சோளிங்கருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டுகிறது. நரசிம்மர் கண்திறந்து இருப்பதை நம் கண் குளிரப் பார்த்து தரிசித்துவிட வேண்டும் என்று பக்தர்கள் படையெடுத்து வருகிறார்கள்.

    பெரியமலை கோவிலில் ஒரே நேரத்தில் சில நூறுபேர் தான் இருக்க முடியும். இதனால் பக்தர்களின் வரிசை நாம் நடந்து செல்லும் மலை படிக்கட்டு வரை வந்து விடுகிறது.

    பெரிய மலைக்கு செல்ல மொத்தம் 1305 படிக்கட்டுகள் உள்ளன. இதில் 650-வது படிக்கட்டுகளிலேயே பக்தர்கள் வரிசை தொடங்கிவிடுமாம். அதாவது பாதி மலையிலேயே பக்தர்கள் வரிசை தொடங்கி விடுகிறது. எனவே கார்த்திகை மாதம் உங்கள் வசதிக்கு ஏற்ற நாளில் திட்டமிட்டு சோளிங்கர் சென்று வந்தால் நரசிம்மர் கண்திறந்து அருள்வதை கண்குளிர தரிசித்து வரலாம்.
    ‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.
    ‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.

    ஒரு முறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது மிகப்பெரிய அக்னி கோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. ‘லிங்கோத்பவம்’ என்றால் ‘லிங்கம் தோன்றுதல்’ என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயே தான் வழிபடப்பட்டு வருகிறார்.

    சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் ஷணிக லிங்கம், இஷ்ட லிங்கம், ஆத்ம லிங்கம் என 3 வகைப்படும்.

    ஷணிக லிங்கம்

    நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

    புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்
    ஆற்று மண் லிங்கம் - பூமி லாபம் தரும்
    பச்சரிசி லிங்கம் - பொன், பொருள் தரும்
    அன்ன லிங்கம் -அன்ன விருத்தி தரும்
    பசுவின் சாண லிங்கம் - நோய்கள் தீரும்
    வெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்
    ருத்ராட்ச லிங்கம் - அகண்ட அறிவைத்தரும்
    விபூதி லிங்கம் - அனைத்துசெல்வமும் தரும்
    சந்தன லிங்கம் - அனைத்துஇன்பமும் தரும்
    மலர் லிங்கம் - ஆயுளை அதிகமாக்கும்
    தர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலாநிலை தரும்
    சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பம் தரும்
    மாவு லிங்கம் - உடல் வன்மை தரும்
    பழ லிங்கம் - சுகத்தைத் தரும்
    தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்
    தண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்

    இஷ்ட லிங்கம்

    மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும்.



    மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும். யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.

    இந்திரன் - மரகத லிங்கம்
    குபேரன் - சொர்ண லிங்கம்
    எமன் - கோமேதக லிங்கம்
    வருணன் - நீல லிங்கம்
    விஷ்ணு - இந்திர நீல லிங்கம்
    பிரம்மன் - சொர்ண லிங்கம் அஷ்ட வசுக்கள்,
    வசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்
    வாயு - பித்தளை லிங்கம்
    அசுவினி தேவர்கள் - மண் லிங்கம்
    மகாலட்சுமி - ஸ்படிக லிங்கம்
    சோம ராஜன் - முத்து லிங்கம்
    சாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்
    வேதிகர்கள் - மண் லிங்கம்
    மயன் - சந்தன லிங்கம்
    நாகர்கள் - பவள லிங்கம்
    அரசுர்கள் - பசுஞ்சாண லிங்கம்
    பார்வதி - வெண்ணெய் லிங்கம்
    நிருதி - தேவதாரு மர லிங்கம்
    யோகிகள் - விபூதி லிங்கம்
    சாயா தேவி - மாவு லிங்கம்
    சரஸ்வதி - ரத்தின லிங்கம்
    யட்சர்கள் - தயிர் லிங்கம்

    ஆத்ம லிங்கம்

    இது தூய மனதுடன், இறைவனை மனதுக்குள் நிறுத்தி செய்யும் வழிபாடு. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ‘ஆத்ம லிங்க வழிபாடு’ எனப்படும்.

    காஞ்சீபுரம் - ஏகாம்பர லிங்கம்
    திருவானைக்கா - ஜம்பு லிங்கம்
    திருவண்ணாமலை - அருணாசல லிங்கம்
    திருகாளத்தி - திருமூல லிங்கம்
    சிதம்பரம் - நடராச லிங்கம்

    நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
    நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

    புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்
    ஆற்று மண் லிங்கம் - பூமி லாபம் தரும்
    பச்சரிசி லிங்கம் - பொன், பொருள் தரும்
    அன்ன லிங்கம் -அன்ன விருத்தி தரும்

    பசுவின் சாண லிங்கம் - நோய்கள் தீரும்
    வெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்
    ருத்ராட்ச லிங்கம் - அகண்ட அறிவைத்தரும்
    விபூதி லிங்கம் - அனைத்துசெல்வமும் தரும்

    சந்தன லிங்கம் - அனைத்துஇன்பமும் தரும்
    மலர் லிங்கம் - ஆயுளை அதிகமாக்கும்
    தர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலாநிலை தரும்
    சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பம் தரும்

    மாவு லிங்கம் - உடல் வன்மை தரும்
    பழ லிங்கம் - சுகத்தைத் தரும்
    தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்
    தண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்
    இந்து சமயத்தில் சில வழிபாடுகள் ஐந்தாக அமைந்துள்ள. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பஞ்ச கன்னியர்: அகலிகை, சீதை, தாரை, திரவுபதி, மண்டோதரி.
    பஞ்சவாசம்: லவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
    பஞ்சாமிர்தம்: சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
    பஞ்சபாண்டவர்: தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்.

    பஞ்சசீலம்: கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
    பஞ்சபட்சி: வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
    பஞ்சபுராணம்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்
    பஞ்சரத்தினம்: வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

    பஞ்சவர்ணம்: வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
    பஞ்சாங்கம்: கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
    பஞ்சமூலம்: செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
    பஞ்சபாதகம்: பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

    பஞ்சபாணம்: முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
    பஞ்சாயுதம்: சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
    பஞ்சபரமோட்டி: அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.
    பஞ்சசிகை: தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

    பஞ்சதேவர்: பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
    பஞ்சஸ்தலம்: காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
    பஞ்ச பூதங்கள்: நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்
    மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு பக்தர்கள் கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து செல்லும் விழா தொடங்கியது.
    மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்பாக கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான இருமுடி விழா இன்று தொடங்கி ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச ஜோதி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    இருமுடி விழா இன்று அதிகாலை மங்கள இசையுடன் தொடங்கியது. காலை 5.45 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது.



    இதைத் தொடர்ந்து இருமுடி அபிஷேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். முதலில் 9 சிறுமிகளும், 9 தம்பதிகளும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத் தலைவர் கோ.ப.செந்தில் குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினர் செய்திருந்தனர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. காலை 8.30 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

    கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க, பிரதான அர்ச்சகர்கள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டுகள் மல்லீஸ்வரி, குமார், கோபாலகிரு‌ஷ்ணா, உதவி பறக்கும்படை அதிகாரி நந்தீஸ்வரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சிறிய சே‌ஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 10 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
    நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மையும் நிகழ்வதாக சொல்கிறார்கள்.
    இறைவனை வழிபடுவதற்காக ஆலயங்களுக்குச் செல்லும் அனைவருக்கும், ஆலயத்தில் உள்ள அர்ச்சகர் விபூதி, குங்குமம் பிரசாதமாக கொடுப்பார். அப்படி தரப்படும் பிரசாதமான விபூதி, குங்குமத்தை நெற்றியும் வைக்கும் முறையும் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட விரல்களைப் பயன்படுத்தியே நெற்றியில் விபூதியை பூசிக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாக இருக்கிறது.

    நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மையும் நிகழ்வதாக சொல்கிறார்கள். ஆகவே விபூதியை எடுக்கும்போது, ஆன்மிக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சில விதிகளைப் பின்பற்றி நன்மைகளைப் பெற முயற்சி செய்வோம்.

    நெற்றியில் விபூதி அணிவதற்கு பயன்படுத்தும் விரல்களில், எந்தெந்த விரல்கள், என்னென்ன பலன்களைத் தருகிறது என்பதை இங்கே பார்ப்போம்.

    கட்டை விரல் என்று சொல்லப்படும் பெருவிரலால், விபூதியை அணிந்தால் தீராத வியாதி வந்து சேரும்.

    ஆள்காட்டி விரலை, விபூதி அணிவதற்கு பயன்படுத்துவதும் தவறு. அந்த விரலைக் கொண்டு விபூதி பூசுவதால், பொருள் இழப்பு உண்டாகும்.

    அதே போல் நடுவிரலைக் கொண்டும் விபூதி அணிந்து கொள்ளக் கூடாது. நடுவிரலில் விபூதியைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால் நிம்மதியின்மை ஏற்படும்.

    விபூதியை அணிந்து கொள்வதற்கு மோதிர விரலே சரியான ஒன்று. மோதிர விரலினால் விபூதியை தொட்டு அணிந்து கொள்ளும் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவார்கள்.

    சிறு விரல் எனப்படும் சுண்டு விரலும் விபூதி அணிந்து கொள்ள ஏற்றதல்ல. இதன் மூலம் விபூதி அணிந்து கொண்டால் கிரக தோஷங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

    மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து விபூதியை எடுத்து, மோதிர விரலால் விபூதியை நெற்றியில் அணிந்து கொள்பவர்களுக்கு, உலகமே வசப்படும். அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.
    உங்களது ஜாதகத்தில் சந்திரம் எந்த கிரகத்துடன் இணைந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சந்திரன் சூரியனுடன் இணைந்தால், அரச பயம், பண முடக்கம் போன்றவை தோன்றும்.

    சந்திரன் செவ்வாயுடன் இணைந்தால், சிறு விபத்து, ஆயுத பயம் ஏற்படும்.

    சந்திரன் புதனுடன் இணைந்தால், குழந்தைகளுக்கு நோய், கல்வித்தடை உருவாகும்.

    சந்திரன் குருவுடன் இணைந்தால், ஸ்தான நாசம் உண்டாகும்.

    சந்திரனும் சுக்ரனும் இணைந்தால், செலவு அதிகரிக்கும், வரவு குறையும்.

    சந்திரன் சனி, ராகுவுடன் இணைந்தால், கலகமும், குழப்பமும் தோன்றும்.

    சந்திரன் கேதுவுடன் இணைந்தால், துயரமான சம்பவம் இடம் பெறும்.

    இந்த பலன்கள் மற்ற ராசி, லக்னம், கிரகங்கள் உட்கார்ந்த வீடு, தசா புத்திகளை அனுசரித்து மாறுபடலாம்.
    ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் லட்ச குங்கும அர்ச்சனை செய்தனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம், நித்ய கைங்கர்யம், அபிஷேகம் ஆகியவை நடந்தன.

    காலை 6 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் லட்ச குங்கும அர்ச்சனை செய்தனர்.



    முன்னதாக திரளான பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை தட்டுகளில் வைத்து, கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதனை கோவில் சன்னதியில் வைத்து, சாமி தரிசனம் செய்த பெண் பக்தர்களுக்கு அந்த மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினர்.

    குங்கும அர்ச்சனையாலும், கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதாலும் கோவிலில் வழக்கம்போல் நடந்து வந்த குங்கும அர்ச்சனை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம் மற்றும் வாரத்தில், மாதத்தில் நடக்கும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் தொடங்கி நடக்கும் எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ×