search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஐயப்பன் மற்றும் முருகப் பக்தர்களின் வசதிக்காக பகல் முழுவதும் நடை திறந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொறு வருடமும் கார்த்திகை மாதம் தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடைத்திறந்திருக்கும்.

    பொதுவாக கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருகப்பக்தர்களும் மாலை அணிவிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கம். இதை முன்னிட்டு பக்தர்கள் சபரிமலை, பழனி கோவிலுக்கு செல்லும் வழியில் பிரசித்திப்பெற்ற கற்பக விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்காக இந்த கோவிலில் கார்த்திகை பிறந்தவுடன் பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும்.

    இந்தாண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரையும், வருகிற 16-ந்தேதி முதல் அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

    இந்த நடைமுறையின்படி கற்பக விநாயகர் திருக்கோவில் தைப்பூசம் வரை பகல் முழுவதும் நடை திறந்து இருக்கும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கோவில் டிரஸ்டிகள் அமராவதி புதூர் ஆர்.எம்.அண்ணாமலை செட்டியார் மற்றும் தேவகோட்டை எம்.நாகப்பசெட்டியார் தெரிவித்துள்ளனர்.
    ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். இவரை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்னும் அந்த அஷ்ட பைரவர்களுக்கும், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை என்னும் அஷ்ட மாதர்கள் துணைகளாக உள்ளனர்.

    அஷ்ட பைரவர்களுக்கும் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் என்னும் எட்டு வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு பைரவர்களும் எண்திசைகளில் இருந்து எட்டுவிதமான கடமைகளை செய்த படியால், அறுபத்து நான்கு பைரவர்களாக உருப்பெற்றனர். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவரின் மண்டபத்தில், எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம்.

    சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பார்கள். அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் கொண்ட கோவில் காஞ்சீபுரம் அருகிலுள்ள பிள்ளையார்பாளையம் என்ற இடத்தில் உள்ளது. விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள வடுவூர் சிவன் கோவிலில் எட்டு வடிவங்களில் உள்ள பைரவர்களைக் காணலாம். இதேபோல் அறுபத்து நான்கு பைரவர்களுக்கும் தனித்தனி பெயர் உள்ளது. இவர்கள் அனைவரின் திருவுருவங்களும், கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு ஆலயத்தில் காணப்படுகிறது.
    சோளிங்கருக்கு வந்து நரசிம்மருக்கு உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.
    ஒருநாள் தங்கி இருந்தாலே மோட்சம் தரக்கூடியது கடிகாசலம் என பெயர் கொண்டு விளங்கும் சோளிங்கர் திருத்தலம். பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆசாரியார்களில் ஸ்ரீமந்தநாத முனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீராமானுஜம், மணவாள மாமுனி போன்றோர் மங்களா சாசனம் செய்த பெருமையும் பெற்ற ஸ்தலம் இது.

    பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும். புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.

    பிரம்ம தீர்த்தம், பைரவ கலா வர்த்த தீர்த்தம், கவுதம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வராக தீர்த்தம், அனுமத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் போன்ற தீர்த்த நிலைகள் இருக்கின்றன. இதில் நீராடினால் பாவம் தொலையும், நன்மை விளையும்.

    கலியுகத் தொடக்கத்தில் பேய், பிசாசு போன்றவற்றின் தொல்லைகளில் மக்கள் நிம்மதி இழந்தனர். அவர்களிடம் இரக்கம் கொண்ட பிரம்மன், பிரம்ம தீர்த்தக் கரையில் தவம் இருந்தார். அவர் முன்பு நரசிம்மர் தோன்றி ‘பிரம்மா’ உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். ‘மக்கள் நோய் நொடியின்றியும் பேய், பிசாசு தொல்லை இன்றியும் வாழ அருள வேண்டும்’ என்று பிரம்மா கேட்டுக் கொண்டார். பிரம்மனுக்கு படைப்புத் தொழிலை யாதொரு இடையூறின்றி பண்ண நரசிம்மர் பணிந்தார். ஆஞ்சநேயருக்கு தம் சங்கு, சக்கரங்களை அளித்து எதிரே உள்ள சிறிய மலையிலிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் விருப்பங்களை, நிறைவேற்றுமாறும் அங்கேயே நித்தியவாசம் புரியமாறும் கட்டளையிட்டார்.

    சப்தரிஷிகளும் வாமதேவர் என்ற முனிவரும் பிரகலாதனுக்காக பெருமாள் காட்டிய நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கும் காட்ட வேண்டும் என்றும் இந்த மலையில் வந்து தவம் இருந்தனர். அப்போது கும்போதிர கால்கேயர் என்னும் அரக்கர்கள் தவத்திற்கு இடையூறு செய்தனர். அப்போது அரக்கர்களால் வரும் இடையூறுகளை அழிப்பதற்கு நரசிம்மர், ஆஞ்சநேயரை இந்த மலைக்கு அனுப்பி வைத்தார். நரசிம்மர் வழங்கிய சங்கு, சக்கரங்களை பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அரக்கர்களின் தலைகளைக் கொய்தார். ரிஷிகளுக்கு நரசிம்ம அவதாரத் தோற்றத்தை மீண்டும் காண்பித்தார் பெருமாள்.

    மலை மீது இறைவனை தரிசிக்கும்போது மனமும் உடலும் தூய்மை அடைகிறது. பில்லி சூனிய பீடைகள் அகன்று உடலில் உள்ள துர்நீர் உதிர்ந்து ஆரோக்கியமான உடம்பும் மீண்டும் கிடைக்கிறது. படியேறி வழிபடும் அளவுக்கு உடல் உரம் இல்லாத முதியவர்கள் கீழிருந்து திருக்கடிலையும் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் மனதில் நினைத்தாலே போதும், மோட்சம் கிட்டும். வருடம் முழுவதும் விழாக்கோலம் கொள்கிறது சோளிங்கர்.

    இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அலை, அலையாக மக்கள் வந்து வணங்கும் சோளிங்கருக்கு நீங்களும் போய் உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.
    விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி வருகிற 8-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வாய்ந்த சிம்மகுளம் திறக்கப்படுகிறது. குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் அன்று இரவு நீராடுகின்றனர்.
    வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற சிவதலங்களில் ஒன்று. இந்த கோவில் வேலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலையிலிருந்து மகாதேவகுப்பம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையான இக்கோவிலின் மதிலழகு சிறப்பு வாய்ந்தது. தஞ்சை கோவில் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் இக்கோவிலின் மதில் சுவர் சிறப்பினை அறியலாம்.

    அடிமுடி காண முடியாமல் பொய் சொல்லி திருஅண்ணாமலையாரிடம் பெற்ற சாபத்தை பிரம்மா, மார்க்கபந்தீஸ்வரரை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக இந்த தலத்தின் வரலாறு கூறுகிறது. இந்த கோவிலுக்குள் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விஷேசமானது.

    இக்குளத்தை ஆதி சங்கரர் பிரதி‌ஷ்டை செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இத்தீர்த்த குளம் ஆண்டிற்கு ஒருமுறை அதாவது கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை (வருகிற 8-ந் தேதி) நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும். இந்த தீர்த்த குளத்தில் நீராடினால் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம், வலிப்பு, தீவினைகள் பிடித்தவர்களுக்கு அகலவும் செய்யும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

    இவர்கள் முதலில் ஷீரா நதி என்னும் பாலாற்றில் நீராட வேண்டும். பின்னர் கோவிலின் அருகில் பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் தோன்றி பழம், பு‌ஷ்பம், பாலாடை கொடுத்து குழந்தை வரம் அருள்வார் என்பது நம்பிக்கை.

    இவ்வாறு சிறப்பு வாய்ந்த கடை ஞாயிறு விழா வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடக்கிறது. இதன்படி 8-ந் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறக்கப்படுகிறது. 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரியும், காலை 9 மணிக்கு பாலகனுக்கு உபநயன சிவதீட்சையும், காலை 9.30 மணிக்கு சுவாமி திருமாட வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அபிஷேகமும், மாலையில் மகா தீபாராதனையும், இரவு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சிம்ம தீர்த்தத்தில் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், தக்கார் பா.விஜயா, ஆய்வாளர் வெ.ராமுவேல், செயல் அலுவலர் ப.பரந்தாமகண்ணன், எழுத்தர் ஆனந்தன் உள்பட கோவில் பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் விரிஞ்சிபுரம் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    குமட்டகிரியில் உள்ள பாகுபலி சிலைக்கு நேற்று மஸ்தகாபிஷேகம் நடந்தது. இதில் திரளான ஜெயின் துறவிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் ஜெயின் மக்களின் புண்ணிய தலமாக கருதப்படும் கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான பாகுபலி சிலை அமைந்துள்ளது.

    இதேபோல, மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே கிராமத்தின் அருகே உள்ள குமட்டகிரி பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பாகுபலி சிலையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலை குமட்டகிரி மலையில் பாறை மீது அமைந்துள்ளது.

    இந்த நிலையில் குமட்டகிரியில் இருக்கும் பாகுபலி சிலைக்கு நேற்று மஸ்தகாபிஷேக விழா நடந்தது. இதில், மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக்க சுவாமி தலைமையில் இந்த மஸ்தகாபிஷேகம் நடந்தது. அப்போது பாகுபலிக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், விபூதி உள்ளிட்ட திவ்ய திரவ பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான ஜெயின் மத துறவிகள் கலந்துகொண்டு பாகுபலியை தரிசனம் செய்தனர். இந்த மஸ்தகாபிஷேகத்தையொட்டி நேற்று குமட்டகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்வார்கள்.

    திருவிழா காலங்கள் என்றில்லாமல் விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினங்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில் விடுமுறை மற்றும் முகூர்த்த தினமான நேற்று பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அதிகாலை முதலே மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது.

    முகூர்த்த தினம் என்பதால் திருஆவினன்குடி கோவிலில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. இதனால் அடிவாரம் பகுதி முழுவதும் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. அதே போல் பாதவிநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சாமி தரிசனம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள் தங்கள் வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தினர். இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் பக்தர்கள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
    ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
    ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

    சுக்லபட்சம் (வளர்பிறை)

    1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
    2. துவதியை - பிரம்மா
    3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
    4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
    5. பஞ்சமி - திரிபுர சுந்தரி
    6. சஷ்டி - செவ்வாய்
    7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்
    8. அஷ்டமி - காலபைரவர்
    9. நவமி - சரஸ்வதி
    10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
    11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
    12. துவாதசி - மகா விஷ்ணு
    13. திரயோதசி - மன்மதன்
    14. சதுர்த்தசி - காளி
    15. பவுர்ணமி - லலிதாம்பிகை

    கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)

    1. பிரதமை - துர்க்கை
    2. துவதியை - வாயு
    3. திரிதியை - அக்னி
    4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
    5. பஞ்சமி - நாகதேவதை
    6. சஷ்டி - முருகன்
    7. சப்தமி - சூரியன்
    8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
    9. நவமி - சரஸ்வதி
    10. தசமி - எமன் மற்றும் துர்க்கை
    11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
    12. துவாதசி - சுக்ரன்
    13. திரயோதசி - நந்தி
    14. சதுர்த்தசி - ருத்ரர்
    15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி,

    அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்.
    புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் நிகழ்வும் ஒன்று. புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சிறந்த மாதம்

    * சித்திரை
    * வைகாசி
    * ஆவணி
    * ஐப்பசி
    * கார்த்திகை
    * தை

    சிறந்த நாட்கள்

    * திங்கட்கிழமை
    * புதன் கிழமை
    * வியாழக்கிழமை
    * வெள்ளிக்கிழமை

    சிறந்த நட்சத்திரங்கள்


    அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை.

    சிறந்த லக்னம்

    * ரிஷபம்
    * மிதுனம்
    * கன்னி
    * விருச்சிகம்
    * கும்பம்
    நெல்லை அருகே உள்ள அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை அருகே உள்ள அருகன்குளம் பழைய கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமலிங்கசுவாமி சமேத பர்வதவர்தினி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் உள்ளது. இந்த கோவில் ராமபிரான் வழிபட்ட கோவிலாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

    இந்த கோவில் நேற்று காலை 10 மணிக்கு மகாதேவ அஷ்டமியையொட்டி ராமலிங்கசுவாமி, சிறப்பு கும்ப பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேகமும், இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள பிண்டம் போட்ட ராமருக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடந்தது.

    கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி திதி, மகாதேவ அஷ்டமியாகும். இந்த தேய்பிறை அஷ்டமியில் தான் கால பைரவர் தோன்றினார். இதனால் அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லையப்பர் கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி காலபைரவருக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள மகாதேவருக்கு நேற்று மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    வைரவரை வழிபட எந்தெந்த கிழமைகள் சிறப்பானது, பைரவர் எந்த கிழமைகளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஞாயிற்றுக்கிழமை: ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும்.

    திங்கட்கிழமை: வில்வார்ச்சனை செய்தால் சிவன் அருள் கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.

    புதன்கிழமை: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

    வியாழக்கிழமை: விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும்.

    வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும்.

    சனிக்கிழமை: சனி பகவானுக்கு குரு பைரவர், ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகும்.
    பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகக் கருதப்பட்டாலும், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் அதிக விசேஷமானவையாகக் கருதப்படுகின்றன.
    பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகக் கருதப்பட்டாலும், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் அதிக விசேஷமானவையாகக் கருதப்படுகின்றன.

    சந்தன காப்பு அபிஷேகம்

    பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.

    எப்போது வழிபட வேண்டும்?

    பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் மரணமில்லாப்பெருவாழ்வும் கூடகிட்டும்.

    பைரவ தீபம்

    பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக்கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றிவழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப்பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

    பிடித்த மாலைகள்

    பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வமாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலைஅணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

    பிடித்த உணவுப்பொருட்கள்

    பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
    பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக உள்ளன. எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.
    பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும், அவை

    மேஷம்-சிரசு,
    ரிஷபம்-வாய்,
    மிதுனம்-இரு கைகள்,
    கடகம்-மார்பு,
    சிம்மம்-வயிறு,
    கன்னி-இடை,
    துலாம்-புட்டங்கள்,
    விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள்,
    தனுசு-தொடை,
    மகரம்-முழங்கால்கள்,
    கும்பம்-காலின் கீழ்பகுதி,
    மீனம்-கால்களின் அடிப்பாகம் என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளன.

    மேலும் பைரவரின் சேவர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய அன்பர். எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

    ×