search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
    ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார்.

    கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

    ஞான கவுரி

    ஒரு முறை சக்திதேவி, ‘உலக உயிர்கள் செயல்படுவது எனது சக்தியால்தான், ஆகையால் எனது சக்தியே உயர்ந்தது’ என்று வாதிட்டாள். சிவனாரோ, ஒருகணம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள், சிவபெருமானை பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவி தன் தவறுக்கு வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள். ஈசன் அன்னைக்கு ஆசி வழங்கி அவளை, அறிவின் அரசியாக்கினார். இதனால் அம்பிகை ‘ஞான கவுரி’ என போற்றப்பட்டாள்.

    பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக, கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’, ‘கவுரி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.

    சுயம் கவுரி

    சிவபெருமானை தன் மணமகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள், ‘சுயம் கவுரி’. திருமணத் தடையால் வருந்தும் பெண்கள், சுயம்வர கவுரியை வழிபட்டால் நல்ல கணவர் அமைவார். ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள், கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை ‘சாவித்ரி கவுரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

    கஜ கவுரி

    பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள். ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி, கணபதியோடு இருக்கும் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் கஜ கவுரி காட்சியளிக்கிறாள்.

    அமிர்த கவுரி


    உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவபெருமானின் தேவி என்பதால், அன்னைக்கு ‘அமிர்த கவுரி’ என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பார். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள கள்ளவாரணப் பிள்ளையார், அமுத விநாயகர் ஆவார்.

    கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி

    நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்த போதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக ‘விஜய கவுரி’ விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில், ஒருவரது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும். கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.

    சத்யவீர கவுரி

    நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.

    சுமித்ரா கவுரி

    உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறார். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள், நமக்கு தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு ‘சினேகவல்லி’ என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்று அழைக்கிறார்கள். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.

    வரதான கவுரி

    கொடை வள்ளல்கள் கரத்தில் ‘வரதான கவுரி’ குடி யிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ‘வரதான கவுரி’ என்று போற்றப் படுகிறாள். திருவையாறில் விளங்கும் அம்பிகை, அறம் வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் அறம்வளர்த்தீஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.


    சம்பத் கவுரி

    வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை ‘சம்பத்துகள்’ என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ‘சம்பத் கவுரி’. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. கவுரிதேவியே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி சமேத நந்தீசுவராகக் கோவில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் ‘மகாமங்கள கவுரி’, ‘சம்பத் கவுரி’ என்பார்கள். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தானியம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன.

    சுவர்ண கவுரி

    ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் சொர்ண லிங்கம் தோன்றியது. தேவர்கள் யாவரும் அந்த லிங்கத்தைப் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். அந்த தேவியை, ‘சுவர்ணவல்லி’ என்று தேவர்கள் போற்றினர். சொர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி வளர்பிறை திருதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று சொல்பவர்களும் உண்டு.

    யோக கவுரி

    யோக வித்தையின் தலைவியாக மகா கவுரி திகழ் கிறாள். இவளையே ‘யோக கவுரி’ என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவபெருமானுடன், அந்த அம்பிகை யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் ‘சித்த யோகேஸ்வரி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை ‘யோகாம்பிகை’, ‘யோக கவுரி’ என்று சொல்கிறார்கள். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை ‘யோக விநாயகர்’ என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை, யோக கணபதி என்று அழைப்பர். திருவாரூரிலுள்ள கமலாம்பிகை ‘யோக கவுரி’ ஆவாள்.

    த்ரைலோக்ய மோஹன கவுரி

    ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க வழி செய்வதால், இந்த கவுரிக்கு ‘த்ரைலோக்ய மோஹன கவுரி’ என்று பெயர். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்ய மோஹன கணபதி வீற்றிருக்கிறார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில், குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இந்த கவுரி தேவியை வழிபடலாம்.

    வஜ்ர ச்ருங்கல கவுரி

    உறுதியான உடலை ‘வஜ்ர தேகம்’ என்பர். அத்தகைய உடலை உயிர் களுக்குத் தரும் கவுரிதேவி ‘வஜ்ர ச்ருங்கல’ எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள், அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ‘ச்ருங்கலம்’ என்பதற்கு, ‘சங்கிலி’ என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால், ‘வஜ்ர ச்ருங்கல கவுரி’ எனப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து, நோய் நொடிகள் அணுகாமல் காத்து அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது சித்தி விநாயகர்.

    விஸ்வபுஜா மகாகவுரி

    தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி இவள். காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, ‘மனதார பூர்த்தி கவுரி’ என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திருதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

    அசோக கவுரி

    துன்பமற்ற இடமே ‘அசோகசாலம்’ எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ‘அசோக கவுரி’ என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை அடையலாம். இந்த கவுரியுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

    சாம்ராஜ்ய மகா கவுரி

    அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாகவும் வணங்குவார்கள். இந்த தேவியுடன் ராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.
    பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் படைத்து அம்மனை வழிபட்டனர்.
    கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இங்கு அம்மன் எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் காட்சி அளிக்கிறார்.சக்குளத்துக்காவு பகவதி அம்மனின் அருளைப் பெற பெண்கள், இருமுடி கட்டி விரதம் இருந்து தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் இங்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    இந்த ஆண்டின் பொங்கல் வழிபாட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். காலை 9.30 மணிக்கு கோவிலின் தலைமை பூசாரி ராதாகிருஷ்ணன் திருமேனி பொங்கல் அடுப்பில் தீ மூட்டி வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் சாலை ஓரங்களிலும், வீட்டு முற்றங்களிலும் அடுப்பு வைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பிற்பகலில் பொங்கல் நிவேத்தியம் நடைபெற்றது. இதில் 300 கீழ்சாந்திமார் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவையொட்டி கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 300- க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
    உடல் உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.
    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது.

    இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

    தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.

    அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

    சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல் உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.

    ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது. 
    நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும்.
    தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, முறுக்கு என வைக்கிறோம்.

    இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, சுவாமியா சாப்பிடுகிறார், அவர் பெயரைச் சொல்லி நீங்கள் சாப்பிடுகிறீர்கள், என கேலி செய்வர். இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தான் சொல்கிறார்கள்.

    நிவேதனம் என்பதன் பொருளை அறியாமல் அவர்கள் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா! இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும்.

    சுவாமியின் முன்னால் இலைபோட்டு விழாநாட்களில் மட்டுமே நிவேதனம் செய்கிறோம். இதை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு  நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். நோயில்லா வாழ்வு அமையும்.
    ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது. அந்த உபசாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.

    1. அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
    2. அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
    3. அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.

    4. நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
    5. ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
    6. உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.
    நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

    1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
    2. பூமி தானம் - இகபரசுகங்கள்
    3. வஸ்த்ர தானம்  (துணி) - சகல ரோக நிவர்த்தி
    4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி

    5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
    6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
    7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
    8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்

    9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
    10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
    11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
    12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி

    13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
    14. பால் தானம் - சவுபாக்கியம்
    15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
    16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
    அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
    பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

    அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

    கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
    வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .

    தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

    சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

    சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
    நமது பற்றுகளை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கச் செல்லும் பக்தர்கள் நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்று கூறுகின்றனர் ஞானிகள்.
    இருளை விலக்குவது விளக்கு. அருளை வழங்குவது விளக்கு. ஜோதியை வழிபட்டால் ஒளி மயமான வாழ்க்கை உருவாகும் என்பதால் ஜோதியோடு லெட்சுமியை ஒப்பிட்டு ஜோதிலெட்சுமி என்று சொல்வார்கள்.

    ஆதிலெட்சுமியும், ஜோதிலெட்சுமியும் உங்களுக்கு அருள் கொடுத்தால் பாதியில் நின்ற பணிகள் கூட பரபரப்பாக முடிவடையும். பணத்தேவைகளுள் பூர்த்தியாகும். மின் விளக்கிற்கும் நெய் விளக்கிற்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஒரு மின் விளக்கை மற்றொரு மின்விளக்கோடு ஒட்டி வைத்தால் பற்றிக் கொள்ளாது.

    ஆனால் அதே சமயம் ஒரு எரியும் நெய் விளக்கை மற்றொரு நெய் விளக்கோடு ஒட்டி வைத்தால், அதுவும் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கும் எனவே நமது பற்றுகளை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கச் செல்லும் பக்தர்கள் நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்று கூறுகின்றனர் ஞானிகள்.
    பெரியவர்கள் வாழ்த்தும் போது 16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.
    பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.

    வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

    இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.
    பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். பொதுவாக கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.

    இதனால் பக்தர்களின் வசதிக்காக கற்பக விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் பிறந்தவுடன் பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். அதன்படி இந்த ஆண்டும் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

    தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை இந்த நடை திறப்பு நீடிக்கும் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் டிரஸ்டிகள் கோனாப்பட்டு பி.அருணாசலம் செட்டியார், அரிமளம் என்.சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. எந்தக் கிரகத்தை வணங்குவதால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
    நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. எந்தக் கிரகத்தை வணங்குவதால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

    சூரியன் - ஆரோக்கியம், தலைமைப் பதவி, அரசு வேலை

    சந்திரன் - கீர்த்தி, சிந்தனாசக்தி, கற்பனை வளம்

    அங்காரகன் - செல்வம், வீரம், விவேகம், தன்னம்பிக்கை

    புதன் - அறிவு, வெளிநாட்டுயோகம், நகைச்சுவை உணர்வு

    வியாழன் - நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல், மரியாதை

    சுக்ரன் - அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை, குணமான வாழ்க்கைத் துணை

    சனி - சந்தோஷம், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம்

    ராகு - பகைவர் பயம் நீங்குதல், பணவரவு அதிகரித்தல்

    கேது - குல அபிவிருத்தி, ஞான மார்க்கம், ஆன்மிக வாழ்வு.
    பொதுவாகவே திருமணத்திற்கு என்று நாள் குறிக்கும் பொழுது, நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.


    பொதுவாகவே திருமணத்திற்கு என்று நாள் குறிக்கும் பொழுது, நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும்.

    * மாப்பிள்ளை அழைப்பிற்கான நேரம்

    * பெண் அழைப்பிற்கான நேரம்

    * திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம்!

    * சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்!
    ×