search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? என்று பார்க்கலாம்.
    இன்று (சனிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறந்தாச்சு.

    கார்த்திகை மாதம் என்றதும் கார்த்திகை தீப விழாதான் நம் நினைவில் வரும். இதுவும் ஒரு ஒளி விளக்குகள் விழாதான். கார்த்திகை தீப விழா மிக அதிகமாகக் கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில்தான்.

    சொல்லப் போனால் தீபாவளி, நவராத்திரி ஆகிய பண்டிகைகளை தமிழர்கள் கொண்டாட ஆரம்பிக்கும் முன்னதாகவே கார்த்திகை திருவிழா கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. இதனை அக நானூறு பாடல்களில் காண முடிகின்றது.

    கார்த்திகை பவுர்ணமி அன்று பரணி தீபம் எனக் கொண்டாடப்படும் இவ்விழாவிற்கும் பல சிறப்பு புராண கதைகள் உள்ளன.

    தீபம். தீப ஒளி என்றாலே தீமைகளை அகற்றுவது என்ற பொருளும் கூறப்படுகின்றது. என்ன தீமைகளை அழிக்கின்றது? ஒருமுறை பிரம்மாவும், விஷ்ணுவும் யார் பெரியவர் என்ற ஒரு போட்டி இருந்தபோது சிவபிரான் பெரும் தீப்பிழம்பாகி ஒளிர்கிறார். இவரது அடியையும், முடியையும் காண பிரம்மா அன்னமாக உருவெடுத்து அவரது முடியினைக் காண உயர்கின்றார். விஷ்ணு வாராக உருவமெடுத்து அவரது அடியினை காண முனைகின்றார். இருவரும் எவ்வளவு முயன்றும் அவர்களால் அடி முடியினைக் காண முடியவில்லை.

    இதனைத்தான் அடி முடி காண முடியா ‘அண்ணாமலையோனே’ என்கின்றோம். அருணாசலா என்பதற்கு புனித ஒளிப்பிழம்பு மலை என்று பொருள். இதனை கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையில் தீபம் ஏற்றி வழிபட்டு மனதில் அகங்காரம், பெறாமை, ஆணவம் என்ற தீமைகளை அகற்றுகின்றோம்.

    மற்றொரு புராண கதையும் உண்டு. முன்பு ஒரு காலத்தில் ஒரு ராஜாவிற்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு வேறு சகோதர, சகோதரிகள் இல்லை. அவள் தன் அரண்மனையில் இருந்த யானையினை மிகுந்த ஆசையோடு வளர்த்து வந்தாள். அவளது திருமணத்திற்குப் பிறகு யானையை பிரிய வேண்டி நேர்ந்தது. தன் சகோதரனைப் பிரிவது போன்ற மன வருத்தம் அவளுக்கு ஏற்பட்டது.

    இதனால் கஜ விளக்கு ஏற்றும் பழக்கம் வந்தது.

    யானை வாழ: அரசன் வாழ: பெண் வாழ: பிறந்தகம் வாழ என தீபத் திருநாளன்று தன் சகோதரர் நலனுக்காகவும் பிறந்த வீடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கமும் நம் வழிபாட்டு முறையில் உள்ளது.

    கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதுதான் திருகார்த்திகை விழா. சர்வாலய தீபம் என இந்நாளை கொண்டாடுவர்.

    கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று குமராலய தீபம் என முருகன் ஆலயங்களில் வழிபடுவர். கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரமும் வரும். அந்த நாளை விஷ்ணு ஆலய தீபம் என வழிபடுவர்.

    பொதுவாக விரதம் இருப்பவர்கள் பரணி நட்சத்திரம் அன்று காலையில் நீராடி கோவிலுக்குச் சென்று பகல் ஒருபொழுது மட்டும் உண்டு கார்த்திகை நட்சத்திரம் முடியும்போது விரதத்தினை முடிப்பர். கார்த்திகை திருநாள் அன்று காலை நீராடி பிள்ளையார் பூஜை, குல தெய்வ பூஜை, நித்திய பூஜைகளை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து காலையிலேயே சிவ பூஜையும், குமார பூஜையும் செய்ய வேண்டும். பூஜை என்பது சிவன், முருக அஷ்டோத்தரங்களைக் கூட சொல்லி வணங்கலாம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் நைவேத்தியம் செய்யலாம்.

    மாலையில் திருவண்ணாமலை தீபம் ஏற்றிய பிறகே வீடுகளில் விளக்கேற்றுவது வழக்கம். பொரி, வெல்லம் சேர்த்த உருண்டை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், அப்பம் இவைகள் நைவேத்தியமாகச் செய்யப்படும். சில குடும்பங்களில் 21 நாட்கள் விரதம் இருந்து நோன்பு கயிறு கட்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. சிலர் மாவிளக்கு போடும் வழக்கமும் உண்டு.

    கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். குறைந்தது ஆறு தீபங்களாவது ஏற்றுங்கள் என்று கூறுவர். ஒளி ரூபம் சிவன், அக்னியினில் உருவான முருக பெருமான். காக்கும் கடவுள் விஷ்ணுவிற்கு ஏற்றப்படுபவைதான் இந்த தீபங்கள்.

    ஆமாம் தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது?

    தீபம் என்பது அக்னி-நெருப்பு. அக்னி தான் நமது வேண்டுதல்களையும், நாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கைகளையும் இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றது என்பது ஐதீகம்.  அக்னி இறைஞானத்தினை அளிப்பது. அக்னி இல்லாமல் வேத சம்பிரதாயங்களே இல்லை. தீபம் ஒருவரின் இறை நம்பிக்கையினை மேலும் உறுதியாக்கி ஆன்மீக பாதையில் அழைத்துச் செல்லும். தீபம் ஏற்றி வழிபட்டு தீப விளக்கின் பாதத்தில் பூசேர்த்து என் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்த்து விடு என பிராத்திப்பது வழக்கம்.

    இருளை நீக்கும் தீப ஒளி மன இருளினையும் நீக்கும். தீபத்திற்கு தீய சக்தியினை விரட்டி இறை சக்தியினை ஈர்க்கும் சக்தி உண்டு. தீப கதிர் வீச்சு சுற்று புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப் பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. நெய் தீபம், உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் இவற்றுக்கு உகந்ததாகக் கூறுகின்றனர்.

    நல்ல எண்ணெய்யால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது. நீண்ட கால தீரா பிரச்சினைகளால் உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி இவைகளின் பாதிப்பில் உடையவர்கள் நல்ல, எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

    வேப்பிலை எண்ணெய் குல தெய்வ வழிபாடு பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது. சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் வேப்ப எண்ணெய் கொண்டு 8 விளக்கேற்றி அமாவாசையில் பைரவரை வழிபடலாம்.

    விளக்கெண்ணை கொண்டு தீபம் ஏற்றுவது குடும்ப வளம், குடும்ப உறவுகள் ஒற்றுமை இவற்றினை கொடுக்கும்.
    தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்ற பிள்ளையார் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி பெருகும்.
    பஞ்சு எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி, அறிவுப்பூர்வ எண்ணங்கள், வறுமை, நோய் இவற்றினை நீக்கும்.
    பொதுவில் நெய் தீபமும், நல்ல எண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது.

    கிழக்கு நோக்கி தீபம் ஏற்றுவது ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம்.
    மேற்கு நோக்கி தீபம் ஏற்றுவது கடன்தொல்லை, சனிதோஷம் நீக்கும்.
    வடக்கு நோக்கி தீபம் ஏற்றுவது திருமண தடைகளை நீக்கும்.
    தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
    மண் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும்.
    வெள்ளி விளக்கில் திருமகள் வாசம் செய்வாள்.
    பஞ்சலோக விளக்கில் தேவதை வசியமாகும்.
    வெண்கல விளக்கில் ஆரோக்கியம் கிடைக்கும்.
    இரும்பு விளக்கினால் சனி தோஷம் நீங்கும்.

    குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு (கடைகளில் கிடைக்கும்) நெய் ஊற்றி விளக்கேற்றி, பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.

    மேற் கூறியவைகளை குறிப்பிடுவதன் காரணம் இவற்றினை அறிந்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்பது தான். கார்த்திகை பண்டிகையின் முதல்நாளை பரணி தீபம் என்று தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்.

    இரண்டாம் நாள் கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாட வேண்டும்.மூன்றாம் நாள் கொல்லைப்புரம், குப்பைதொட்டி, மாட்டு கொட்டகை இவைகளில் அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது பாரம்பரிய தமிழர் பண்பாடு ஆகும். 23.11.18 அன்று வரும் கார்த்திகை தீபத்தன்று விமரிசையாகக் கொண்டாடுங்கள். ஆனால் மாதம் முழுவதும் தினமும் காலையிலும், மாலையிலும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைப்பது கூடுதல் சிறப்பு ஆகும். இந்த பழக்கம் கேரளாவில் அதிகம் உள்ளது.

    ‘திருச்சிற்றம்பலம்’
    சோளிங்கபுரத்தில் யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் மோட்சம் கிட்டும். பாவங்கள் நீங்கும். துன்பங்கள் பறந்தோடும்.
    நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர். ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

    திரேதாயுகத்தில் வாழ்ந்து வந்த இந்த்ரத்யும்னன் என்ற மன்னன், தன் தோள்களில் திருமாலின் சின்னங்களான சங்கு, சக்கர அடையாளங்களோடு பிறந்தவன். எப்போதும் ஹரி நாமத்தை மனதில் இருத்தி வாழ்ந்து வந்தான். தினமும் உறங்குவதற்கு முன், ஹரிநாமம் சொல்வது அவன் வழக்கம். ஒருநாள் அவனறியாமல், ‘ஹர’ என்று உச்சரித்தான்.

    உடனே ஈசன் அவனுக்கு தரிசனம் தந்து, ‘‘மன்னா, நீ கூறிய ஹர நாம ஒலியில் மகிழ்ந்தே நான் உனக்குக் காட்சி தந்தேன்’’ என்று கூறினார். மன்னனுக்கோ ஆனந்தம். ஒரே ஒருமுறை ஹர என்று சொன்னதற்கே ஈசன் தனக்கு தரிசனமளித்துவிட்டாரே! உடனே மகாதேவன், ‘‘நான் வேறு, திருமால் வேறு அல்ல. உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’’ என்று கேட்க, தனக்கு மோட்சம் அருளுமாறு இந்த்ரத்யும்னன் வேண்டினான்.

    ஆனால் ஈசனோ, ‘‘நாராயணன் ஒருவனே மோட்சம் அளிக்க வல்லவன். பிரகலாதனுக்கு அருள் புரிந்த பின், உலகோர் அனைவருக்கும் அருள்புரியத் திருவுளம் கொண்டு கடிகாசலம் என்று விளங்கும் சோளிங்கபுரத்தில் நரசிம்ம மூர்த்தியாய் திருமால் வீற்றிருக்கிறார். அங்கு யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் உனக்கு மோட்சம் கிட்டும்’’ என்று கூறினார். அதன்படியே இந்த்ரத்யும்னன் நரசிம்மரின் அருள்பெற்று உய்வடைந்தான்.

    சப்த ரிஷிகளும் வாமதேவர் எனும் முனிவரும் பிரகலாதனுக்குப் பெருமாள் காட்டியருளிய நரசிம்ம திருக்கோலத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். அதற்காக அவர்கள் சோளிங்கபுரம் வந்தடைந்து தவம் செய்தனர். அப்போது கும்போதரர், காலகேயர் போன்ற அரக்கர்களின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடின. தவம் செய்த முனிவர்களை அவர்கள் துன்புறுத்தினர்.

    அவர்களிடமிருந்து முனிவர்களை காக்க நரசிம்மர், அனுமனிடம் சங்கு, சக்கரங்களைக் கொடுத்து அரக்கர்களை கொல்ல ஆணையிட்டார். அரக்கர்கள் அழிவுக்குப்பின் சப்த ரிஷிகளும் ஆஞ்சநேயரும் இத்திருத்தலத்தில் நரசிம்மமூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தனர். நரசிம்மரின் ஆணைப்படி அவர் அருள் புரியும் பெரிய மலையின் அருகே உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் அமர்ந்து அனுமன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
    தெய்வங்களையும், குருவையும் வணங்கும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பிரம்மா, விஷ்னு, சிவன் இம்மூவரை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும். குருவை வணங்கும் போது, நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசரையும், தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.

    பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும். மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பூமியில் நெடுஞ்சாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள், மாதா, பிதா, குரு, தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது!
    வந்தவாசி டாஸ்மாக் கடையில் விற்பனை அமோகமாக நடைபெற மது பாட்டில்களுக்கு விசே‌ஷ பூஜை செய்து வழிபாடு நடத்தினர். #Tasmac #TasmacShop
    வந்தவாசி:

    வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகே கோட்டை அகழி பகுதியில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு 3 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    புதிதாக திறக்கப்பட்ட இந்த கடைக்கு எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது. வியாபாரமும் அமோகமாக நடைபெற வேண்டும் என்று வேண்டி டாஸ்மாக் கடை ஊழியர்கள் 3 பேரும் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    அவர்கள் படையலில் குவாட்டர் பாட்டில், தேங்காய், கற்பூரம், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து விசே‌ஷ பூஜை செய்து வழிபட்டனர்.

    அப்போது குவாட்டர் பிராந்தி பாட்டிலை சிறிதளவு பூமியில் ஊற்றிவிட்டு கடைக்கு வந்த குடிமகன் ஒருவருக்கு இலவசமாக வழங்கினர்.

    வந்தவாசி நகரில் ஆரணி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அச்சரபாக்கம் சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறந்தபோது, பொதுமக்கள் கடையை திறக்க விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் கடை மூடப்பட்டது.

    மதுக்கடையால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் புதிதாக திறந்த இந்த கடைக்கு எந்தவித பிரச்னையும் வரக்கூடாது. விற்பனை அமோகமாக இருக்க வேண்டும் என்று ஊழியர்கள் மதுபாட்டில்களுக்கு விஷேக பூஜை செய்தனர்.

    டாஸ்மாக் ஊழியர்களின் இந்த செயலை குடிமகன்களும், ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். #Tasmac #TasmacShop

    குடும்ப முன்னேற்றம் கருதி எடுக்கும் முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அவற்றை செயல்படுத்துவதற்கு உகந்த நேரம் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு குடும்பங்களிலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுக்கும் முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.

    ஆனால் அவற்றை செயல்படுத்துவதற்கு உகந்த நேரம் வளர்பிறை நாட்கள் தான். சந்திரனை ‘மதி’ என்று அழைப்பார்கள். நாம் மதிநுட்பத்தோடு செயல்படவும், சரியான முடிவெடுக்கும் திறனைக் கொடுக்கவும், செயலாற்றும் பொழுது தடையில்லாமல் இருக்கவும் சந்திரனே காரணமானவராக இருக்கிறார்.

    எனவே அவர் வளர்ந்து வரும் வேளையான, வளர்பிறை தினங்களில் முக்கிய முடிவுகளை செயல்படுத்துவதே சரியானதாக இருக்கும்.
    ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம் ஆகும்.
    சண்முக தத்துவம்

    சண்முகனுக்கு, ஆறுமுகம் என்பது நாம் அறிந்ததே. தெய்வங்களின் அம்சங்களாக அருள்புரியும் சண்முகனின் தத்துவம் இது. ஒரு முகம் மகாவிஷ்ணுவாகவும், இரு முகம் அக்னிக்கும், மூன்று முகம் தத்ராத்ரேயருக்கும், நான்கு முகம் பிரம்மாவுக்கும், ஐந்து முகம் சிவன், அனுமன், காயத்ரிதேவி, கணபதிக்கும் உரித்தாகி, ஆறாவது முகம் கந்தனுக்கு என்பதே சண்முகத் தத்துவமாக சாஸ்திரங்கள் கூறுகின்றது.

    ஆறு குண்டலினி தலங்கள்

    மனிதன் உயர்நிலையை அடைய, புற உடலில் உள்ள ஆறு சக்கரங்களை அடக்கியாள வேண்டியது அவசியமாகிறது. குண்டலினிகள் எனப்படும் இவைகளை சரியாக பயன்படுத்தியதால் தான், சிலர் மனித நிலையிலிருந்து மகான் நிலையை அடைந்தார்கள். நம் முருகனின் ஆறுபடை வீடுகள், ஆறு குண்டலினிகளாக விளங்குவது சிறப்பு. திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம், பழனி- மணிபூரகம், சுவாமிமலை - அனாகதம், திருத்தணிகை- விசுத்தி, பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை ஆகியவை ஆகும். இத்தலங்களில் உள்ள முருகனை நினைத்து விசாகம், பவுர்ணமி, கிருத்திகை நாட்களிலும், கந்த சஷ்டியிலும் துதித்தால் மனித வாழ்வு உயர்வு பெறும்.

    மூன்று மயில் வாகனம்

    முருகனுக்கு வாகனம் மயில் என்பதை அறிவோம். ஆனால் மூன்று மயில்களாக கந்தனின் சரித்திரத்தில் உள்ளது தெரியுமா? மாங்கனி வேண்டி உலகை சுற்றி வந்த முருகனின் வாகனம் ஆன மயில் ‘மந்திர மயில்’ எனவும், சூரபதுமனை வதம் செய்ய சென்றபோது முருகனுக்கு வாகனமாக வந்த இந்திரன் மயிலாக கந்தனைத் தாங்கினான். அந்த மயில் ‘தேவ மயில்’ என்றும், சூரனின் அகங்காரம் அழித்து அவனை இருகூர் ஆக்கியதில் உருவான மயில் ‘அசுர மயில்’ எனவும் புராண செய்திகள் கூறுகிறது.

    சஷ்டி விரதம் மகிமை

    ஐப்பசி மாதம் வளர்பிறையில் இருந்து ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. தீபாவளிஅன்று வரும் அமாவாசையன்று முருகனை ஒருமனதாக நினைத்து, ஒருவேளை மட்டுமே உணவருந்தி, மனிதனின் தீய குணங்களான கோபம், குரோதம், காமம், பொறாமை போன்றவற்றை விலக்கி ஆறாம் நாள் கந்தனை வழிபடுவதே விரதத்தின் நியதி. அசுரர்களான சூரபதுமன் ஆணவ மலமும், தாரகாசுரன் மாயா மலமும், சிங்கமுகன் கன்ம மலமும் கொண்டு அகங்காரத்துடன் இருந்ததால், அவர்களை ஞானம் எனும் வேல் கொண்டு முருகப்பெருமான் வெற்றிகொண்டார். எனவே முருகப்பெருமானை நினைத்து வழிபடும் போது, நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் அழிந்து, ஞானம் என்னும் பெருவாழ்வு கிடைக்கிறது.

    மும்மூர்த்திகளின் அம்சம்

    ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீரம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கும் திருமுகங்களைக் கொண்டவர் முருகன். இவர் பிரணவத்தின் சொரூபியாவார். ‘மு’ என்றால் முகுந்தன். ‘ரு’ என்றால் ருத்திரன். ‘கா’ என்றால் பிரம்மா. ‘முருகா’ என்று அழைக்கும்போது மூன்று தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மேலும் சிவனின் அக்னியில் இருந்து தோன்றியதால் ‘சிவமே ஆறுமுகம்; ஆறுமுகமே சிவம்’ என்றும் பொருளாகிறது. கந்தனிடம் கையேந்தி விரதம் இருப்பவர்களின் கவலைகளை, அந்த ஈசனும் தீர்த்து வைப்பார் என்பது நிச்சயம்.

    முழுமையான தரிசனம்

    சூரனை அழித்து வதம் செய்த தலமான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடும் இத்தல முருகனை, வருடம் ஒருமுறை இவ்விழாவின் போது ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கைகளும் கொண்ட மூர்த்தியாக முழுமையாக தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அங்கவஸ்திரம் அலங்கரித்திருக்கும். ஆகவே சஷ்டி விழா பக்தர்களின் வருகையால் சிறப்புமிக்கதாகிறது.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    புராண கதாபாத்திரங்கள் :

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம். சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    ஏகலைவன் :


    மகாபாரதத்தில் வேடுவர்களின் தலைவனாக இருந்தவர் ஹிரனியதனுஷ். இவரது மகன் தான் ஏகலைவன். இவன் குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக சொல்லப்படுகிறான். வேடவர் குலத்தில் பிறந்த ஏகலைவனுக்கு, குருவில் சிறந்தவரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர துரோணர் மறுத்து விடுகிறார். இதனால் துரோணரின் உருவ சிலையை செய்து, அவரை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை பயில்கிறான், ஏகலைவன். அதன் மூலம் வில்வித்தையில் சிறந்தவராக மகாபாரதம் குறிப்பிடும் அர்ச்சுனனைவிட சிறப்பானவனாக திகழ்கிறான். இதனை அறிந்த அர்ச்சுனன், அதுபற்றி துரோணரிடம் கூறுகிறான்.

    துரோணரோ, ஏகலைவனை அழைத்து, குரு தட்சணையாக அவனது வலது கை கட்டைவிரலைக் கேட்கிறார். சற்றும் யோசிக்காத ஏகலைவன், தன் குருவிற்காக தன் கட்டை விரலையே காணிக்கையாக செலுத்தி, குரு பக்தியில் சிறந்து விளங்கினான் என்கிறது மகாபாரதக் கதை.

    காந்தாரி :


    அஸ்தினாபுரத்து அரசன் திருதிராஷ்டிரரின் மனைவி தான் காந்தாரி. கவுரவர்கள் என்று அழைக்கப்பட்ட துரியோதனன் முதலான 100 பேரையும் பெற்றெடுத்தவள் காந்தாரி. திருதிராஷ்டிரர் பார்வையற்றவர் என்பதால், காந்தாரியும் கணவரின் இருள் உலக துயரை பகிர்ந்து கொள்வதற்காக, மணம் முடிந்த காலம் முதல் தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டாள். தன் பிள்ளைகள், தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தியவள்.



    சனுரா :

    மதுராபுரியை ஆண்டு வந்தவன் கம்சன். இவன் கிருஷ்ணரை பெற்றெடுத்த தேவகியின் சகோதரன். தங்கையின் மகனால் தன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல பலவித முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் கோகுலத்தில் இருந்த கிருஷ்ணரை, மதுராபுரிக்கு அழைத்து மல்யுத்தம் செய்து கொல்ல முடிவு செய்தான், கம்சன். கிருஷ்ணரையும், பலராமரையும் மல்யுத்தம் புரிந்து கொல்வதற்காக நியமிக்கப்பட்டவன் தான் சனுரா. இவனுக்கு முஷ்டிகன் என்ற சகோதரன் உண்டு. இருவரும் மாபெரும் மல்யுத்த வீரர்கள். ஒரு அரங்கத்தில் சனுரா கிருஷ்ணரிடம் சவால் விட, அந்த ஆபத்தான சண்டையில் கிருஷ்ணர் சனுரானையும், பலராமர் முஷ்டிகனையும் வீழ்த்தினார்.

    பகீரதன் :

    பகீரதன் சூரிய வம்சத்து அரசர். இவர்தான் கங்கையை ஆகாயத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வந்தவர் என்று புராணங்கள் சொல்கின்றன. இவர் தனது முன்னோர் மோட்சம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கான வழியைத் தேடினார். அதற்கு ஆகாயத்தில் இருக்கும் கங்கையை, பூமிக்கு கொண்டு வந்து சிவபெருமானை அபிஷேகித்து பூஜிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதனால் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வர கடுமையாக தவம் இருந்தார். இதையடுத்து சிவபெருமானின் அருளால் கங்கை, பூமியை வந்தடைந்தது. அதன் மூலம் பகீரதனின் முன்னோர்கள் முக்தி அடைந்தனர். கங்கையை பூமிக்குக் கொண்டு வர பகீரத பிரயத்தனம் செய்த காரணத்தால்தான் அவரது பெயர் ‘பகீரதன்’ என்று ஆனது.

    சிந்தாமணி :

    அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்று தான் சிந்தாமணி என்ற ஒருவகை கல். அந்த அற்புதக் கல்லை, சிறந்த முனிவராக திகழ்ந்த கபில முனிவரிடம் அளித்தனர். அந்த முனிவர் சிந்தாமணி கல்லை, இளவரசர் கனராஜனுக்கு ஆடம்பர விருந்து அளிப்பதற்கு உபயோகித்தார். சிந்தாமணி செய்யும் அற்புதத்தை கண்டு வியந்த இளவரசன், அதை அபகரித்து சென்று விட்டான். எனவே அந்த கல்லை மீட்டு தருமாறு விநாயகப்பெருமானிடம் முனிவர் வேண்டினார். அவர் இளவரசனுடன் போரிட்டு, சிந்தாமணி கல்லை மீட்டார்.

    ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம் ஆகும்.
    ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம் ஆகும்.

    சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுடன் ஆன்மிகத்தில் சிறந்த ஞானிகள் மட்டுமே உணரக்கூடிய ‘அதோ முகம்’ எனும் ஆறாவது முகமும் உண்டு.

    இந்த ஆறுமுகங்களிலும் உள்ள நெற்றிக்கண்ணின் தீப்பொறிகளில் இருந்து தோன்றியவரே கந்தர் சஷ்டியின் நாயகன் முருகன்.
    இந்த உலகத்தில் சில செயல்களும், வழிபடும் தெய்வங்களும், சில நிகழ்வுகளும் என இப்படி பலவும் 7 என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன.
    இந்த உலகத்தில் சில செயல்களும், வழிபடும் தெய்வங்களும், சில நிகழ்வுகளும் என இப்படி பலவும் 7 என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    கன்னியர்கள் :

    பிராம்மி
    மகேஸ்வரி
    கவுமாரி
    வைஷ்ணவி
    வராகி
    இந்திராணி
    சாமுண்டி

    ரிஷிகள் :

    அகத்தியர்
    காசியபர்
    அத்ரி
    பரத்வாஜர்
    வியாசர்
    கவுதமர்
    வசிஷ்டர்

    சிரஞ்சீவிகள் :


    அனுமன்
    விபீஷணர்
    மகாபலி சக்கரவர்த்தி
    மார்க்கண்டேயர்
    வியாசர்
    பரசுராமர்
    அசுவத்தாமன்

    கொடிய பாவங்கள் :

    ஆணவம்
    சினம்
    பொறாமை
    காமம்
    பெருந்தீனி
    சோம்பல்
    பேராசை

    மலைகள் :

    இமயம்/கயிலை
    மந்த்ரம்
    விந்தியம்
    நிடதம்
    ஹேமகூடம்
    நீலம்
    கந்தமாதனம்

    முக்கிய தலங்கள் :

    வாரணாசி
    அயோத்தி
    காஞ்சீபுரம்
    மதுரா
    துவாரகை
    உஜ்ஜைனி
    ஹரித்துவார்



    கிரகங்கள்

    சூரியன்
    சந்திரன்
    செவ்வாய்
    புதன்
    குரு
    சுக்ரன்
    சனி

    (ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் ஆகும்)

    நதிகள் :

    கங்கை
    யமுனை
    கோதாவரி
    சரஸ்வதி
    நர்மதா
    சிந்து
    காவிரி

    நீக்கவேண்டியது :

    உழைப்பு இல்லாத செல்வம்
    மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி
    மனிதம் இல்லாத விஞ்ஞானம்
    பண்பு இல்லாத படிப்பறிவு
    கொள்கை இல்லாத அரசியல்
    நேர்மை இல்லாத வணிகம்
    சுயநலம் இல்லாத ஆன்மிகம்

    மழையின் வகை :

    சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
    ஆவர்த்தம் - நீர் மழை
    புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை
    சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
    துரோணம் - மண் மழை
    காளமுகி - கல் மழை
    நீலவருணம் - தீ மழை (எரிமலை, சுனாமி)

    தலைமுறைகள் :

    முதல் தலைமுறை (நாம்)
    இரண்டாம் தலைமுறை (தந்தை - தாய்)
    மூன்றாம் தலைமுறை (பாட்டன் - பாட்டி)
    நான்காம் தலைமுறை (பூட்டன் - பூட்டி)
    ஐந்தாம் தலைமுறை (ஓட்டன் - ஓட்டி)
    ஆறாம் தலைமுறை (சேயோன் - சேயோள்)
    ஏழாம் தலைமுறை (பரன் - பரை)
    பரன்- பரை என்பதே ‘பரம்பரை’ என்று சொல்லப்படுகிறது.

    பாணலிங்கம் என்பது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமமானது, ஒரு பாணலிங்கம் என்கிறார்கள்.
    சிவலிங்க வழிபாட்டின் மகிமை, சிவபூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைப் பற்றி, முனிவர் ஒருவர் தனது சீடர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற பாணாசுரன் என்ற அசுரன் அதைக் கேட்க நேரிட்டது. அதனைக் கேட்ட அசுரனுக்குத் தானும் சிவபூஜை செய்து, நல்ல பலன்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    அதனால் சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவமிருக்கத் தொடங்கினான். அவனது தவத்தில் மகிழ்ந்த இறைவன், அவன் முன்பாகத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். உடனே பாணாசுரன், “ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்கள் வேண்டும்” என்று கேட்டான்.

    சிவபெருமானும் அவன் வேண்டிய வரத்தை அளித்தார்.

    அதன் பிறகு சிவபெருமான், தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணாசுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் அனைத்தும் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன.

    பாணலிங்கம் என்பது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். பாணலிங்கம் என்பது, ‘பாணம்’ எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.

    கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமமானது, ஒரு பாணலிங்கம் என்கிறார்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் கிடைக்கின்றன.
    கந்த சஷ்டியின் போது சிந்தனை முழுவதும் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்வதில் இருக்க வேண்டும். சரவணபவ மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
    பொதுவாகவே விரதங்களின்போது அந்தந்த தெய்வங்களின் நாமத்தை உச்சரிப்பது நல்லது. அதே போல் கந்த சஷ்டியின் போது சிந்தனை முழுவதும் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்வதில் இருக்க வேண்டும்.

    முடியாதவர்கள் எளிதாக சொல்லக்கூடிய மகாமந்திரமான ‘சரவண பவ’ என்பதைச் சொல்லலாம். எளிய மந்திரமானாலும் அதன் மகிமை அளவிட முடியாதது.

    ச- லட்சுமி கடாட்சம்,
    ர- சரஸ்வதி கடாட்சம்,
    வ- போகம்,
    ண-சத்துரு ஜெயம் (எதிரிகள் வெற்றி ),
    ப - ம்ருத்தய ஜெயம்,
    வ- நோயற்ற வாழ்வு.

    எனவே சரவணபவ மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.

    ஆறு எனும் எண்ணுக்கும், முருகப்பெருமானுக்கும் நெருங்கிய தொடர் உண்டு. இது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
    ஆறு எனும் எண்ணுக்கும், முருகனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

    முருகப்பெருமானின் திருமுகங்கள் ஆறு, அவரை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, ‘சரவணபவ’ எனும் மந்திரத்தின் எழுத்துக்கள் ஆறு, முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் படைவீடுகள் ஆறு, கந்தர் சஷ்டி விரதம் இருப்பது ஆறு நாட்கள், ஆறாம் நாளில்தான் சூரசம்ஹாரம் வரும்.

    முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் என்பது, மாதந்தோறும் வளர்பிறை அல்லது தேய்பிறையில் ஆறாம் நாள் வரும் சஷ்டி திதியாகும்.
    ×