search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    தீப தானத்தை சூரிய உதயத்திற்கு முன்பே தர வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. எமன் இந்த தீப தானத்தினால் மிகவும் திருப்தி அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.
    லட்சுமி தேவியே தீப மங்கள ஜோதியாக விளங்குபவள். இல்லங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொண்டு அந்தி மயங்கியதும் தீபம் ஏற்றி தெய்வத்தை தொழுவதால் லட்சுமி விஜயம் செய்வாள்.

    தங்களையும் அழகு செய்து கொண்டு, கொல்லைக் கதவை அடைத்து வாசல்கதவை திறந்து வைத்து, விளக்கைத் துடைத்து குங்குமம் இட்டு மலர் சூட்டி, அழகு செய்து, குத்துவிளக்கை ஏற்றி தூய உள்ளத்துடன் தொழும்போது அந்த தீபச் சுடரிலே ஊரூராக வீடு வீடாக சுற்றிப்பார்த்து வரும் மகாலட்சுமியின் சுடர்மேனியை தரிசித்து பேறு பெறலாம் என்பர்.

    விளக்கே லட்சுமியின் உருவாகும். விளக்கை ஏற்றாமல் எந்த பூஜையையும், சுப காரியத்தையும் நாம் செய்வதில்லை. தீபம் இருளை விரட்டி ஒளியை பரப்புகிறது. குத்துவிளக்குகளில் சாதாரணமாக ஐந்து முகங்கள் உண்டு. இந்த ஐந்தையும் திரிபோட்டு ஏற்றினால் மங்களகரமாக விளங்குகிறது.

    குத்துவிளக்கு திருமணமான பெண்களுக்கு அளிக்கப்படும் சீர்வரிசைகளில் முக்கியமானதாகும். இந்த ஐந்து முகங்களும் பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐநது முக்கிய குணங்களை நினைவூட்டுகிறது என்பார்கள். அவை அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோகித புத்தி, சகிப்புத்தன்மை.

    அம்பிகையை பூஜிக்கும் போது தீபத்தில் ஆவாகனம் செய்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அப்படி தீபத்தில் அம்பிகையை ஆவாகனம் செய்யும் போது சாட்சி தீபம் என்று மற்றொரு தீபம் இருக்க வேண்டும். குத்துவிளக்குகள் லட்சுமி சொரூபம். இரவில் குத்துவிளக்கை அணைக்கும் முன் அதற்கு பால்தொட்டு வைத்து பின்னரே அணைப்பது வழக்கம். எந்த தெய்வ வழிபாடும் குத்துவிளக்கு இல்லாமல் செய்வதில்லை.

    குத்துவிளக்கு திரிமூர்த்தி சொரூபம் எனவும் கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம சொரூபம். நடுத்தண்டாகிய மத்திய பாகம் விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் பகுதி சிவன். அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன். சிகரமாக உள்ள உச்சப் பகுதி சதாசிவன்.

    நெய்-நாதம், திரி-பிந்து, சுடர்-திருமகள், தீப்பிழம்பு-கலைமகள், தீ-சக்தி.

    இந்த விளக்கு நம் உடலிலும் இருக்கிறது. அடிப்பாகம் நாபிக்குக் கீழ் உள்ள மூலாதாரம். மேல்நோக்கி ஓடும் சுசூம்னா நாடியே விளக்கின் தண்டு. கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தலைப்பாகம். புருவ மத்தியில் ஜோதி ஜோலிப்பதே குத்துவிளக்கின் சுவாலை. ஆத்ம ஜோதியை வணங்குவதே தீப பூஜையின் தத்துவம்.

    தமிழர்கள் விளக்கையை தெய்வமாகக் கொண்டனர். இருட்டில் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்பது தமிழர்களின் கொள்கை. 8 மங்கள பொருட்களின் ஒன்றாக விளக்கையும் சேர்த்தார்கள்.

    திருமணமாகி புதுக் குடித்தனம் செய்ய போகும் பெண்ணுக்கு அளிக்கும் சீர்வரிசைகளில் குத்துவிளக்கு முதலிடம் பெறுகிறது. சில திருமண சடங்குகளில் ஏற்றி வைத்த குத்துவிளக்கை மணமக்கள் வலம் வருவது உண்டு. ஊஞ்சலில் மணமக்கள் மனமகிழ உட்கார வைத்து தீபத்தை எடுத்துக் கொண்டு சுமங்கலிகள் சுற்றி வருவதைக் கவனித்திருக்கலாம்.

    ஆலயங்களில் விளக்கு ஏற்றுவது மாபெரும் புண்ணியம். பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் கோவில்களில் விளக்கு எரிய காணிக்கை அளித்ததுடன் அந்த விளக்கினை எரிய நெய் இடுவதற்காக பல நிவந்தங்களும் ஏற்படுத்தி இருந்தனர்.

    குலோகத்துங்க சோழன் ஆட்சியில் ஒரு வேடன் தவறுதலாக ஒரு மனிதனைக் கொன்றுவிட்டான். அந்த கொலை குற்றத்துக்காக அவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகையை கொண்டு கோவிலில் எப்போதும் அணையாத விளக்கு ஏற்றி வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இறந்துபோனவனின் ஆவியினால் கொலை செய்தவனுக்கு ஏற்படும் தீங்குகளில் இருந்து அவனைக் காக்க இத்தகைய வழி கண்டு பிடிக்கப்பட்டது.

    ராஜராஜசோழன் பிருகதீஸ்வரர் கோவிலில் நாள் தோறும் நெய் விளக்கு ஏற்ற நாள் ஒன்றுக்கு இவ்வளவு நெய் அளிக்க வேண்டும் என்று ஏராளமான பசுக்களை மானியமாக அளித்தான். இந்த மாதிரி பல மன்னர்கள், பிரபுக்கள் நிவந்தம் ஏற்படுத்தி உள்ளனர். லட்சுமி தீபத்தில் பூஜை செய்வது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். செவ்வாய்க்கிழமைகளில் செய்வது மங்களகவுரி விரதம் எனப்படும். இதை அங்கார வார விரதம் என்றும் சொல்வார்கள்.

    தீபத்திற்கான திருவிழாக்களில் முதன்மையானது தீபாவளி. தீப ஆவலி (தீபவரிசை) தான் தீபாவளியாகி விட்டது. நரகாசூரன் கொடுமை என்ற இருள் உலகில் சூழ்ந்த போது கண்ணன் என்ற ஒளி பிரகாசித்தது. அதைக் கொண்டாடுவதே தீபாவளி என்று வடநாட்டில் தீபாவளி அன்று தீபங்களை ஏற்றி வரிசையாக வைக்கிறார்கள்.

    இந்த விழாக்களில் விளக்கு ஏற்றுவது பெரிதல்ல. அவைகளை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கு அணைவது தீய சகுனம், விளக்கில் இருந்து பொறி உதிர்ந்தால் இறை அருள் நிச்சயம் என்ற அர்த்தம். சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் அத்துடன் எழுந்துவிடுவது முற்கால வழக்கம். ஆதிசங்கரர் சிறுவனாக இருந்த போது ஆற்றுக்குச் சென்றார். அப்போது ராக்காலம் அவருடைய காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டது. அப்போது ''என் தாயாரிடம் சொல்லிவிட்டு வருகிறேன்'' என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு சங்கரர் அன்னையிடம் வந்து நடந்ததைக் கூறினார். சங்கரர் ஆற்றிற்குத் திரும்பிய போது அவர் அன்னை ஒரு எரிகிற விளக்கை மரக்காலுக்குள் மறைத்துக் கொண்டு வந்தாள்.

    முதலை சங்கரரின் காலைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. பின்னால் நின்ற அன்னை மூடியிருந்த விளக்கை திடீரென்று வெளியே காட்டி உடனே அணைத்துவிட்டாள். தீய சகுனம் ஏற்பட்டு விட்டதால் முதலை அவரை உண்ணாமல் விட்டது. சங்கரர் உயிர் தப்பினார். ஆறு அறிவு இல்லாத பிராணிகள் கூட தர்மத்திற்கு கட்டுப்பட்டிருந்த காலம் அது.

    பண்டைக்கால விளக்குகளில் இத்தீபங்களை வைக்கவே தனிமாடங்கள் அமைக்கப்படும். வாயிற்படியின் இருபுறங்களில் இந்த தீப மாடங்கள் கட்டாயம் இருக்கும். கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்துவிட்டு சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் வீடு திரும்பும். பசு லட்சுமி சொரூபமானதால் அவை வருவதற்கு முன்பே தீபம் ஏற்றிவிடுவது வழக்கம்.

    இந்த விளக்குகளில் தான் எவ்வளவு வேலைப்பாடுகள், ஹம்சம், கிளி, மயில், இவைகளை எல்லாம் விளக்கின்மேல் அமைத்து அபூர்வ வேலைப்பாடுகளுடன் விளங்கும். மொகலாய சக்கரவர்த்தி அக்பர் ஒவ்வொரு விளக்குமே தெய்வீக ஒளியின் அம்சம் என்று கருதினார். வேத காலத்தில் அக்னி எப்போதுமே அணையாது பாதுகாக்கப்படும். அணையாமல் அதை காப்பது குடும்பத் தலைவியின் முக்கிய கடமைகளில் ஒன்று.

    அக்பர் தன் அரண்மனையில் இந்த வேதகால வழக்கத்தைப் பின்பற்றி அக்னியை அணையாமல் காத்துவர ஏற்பாடு செய்தார் என்று அபூ பைசல் எழுதிய ''அயீன் அக்பரி'' கூறுகிறது. ஏற்றிய தீபத்தை தானம் அளிப்பது பத்துவித முக்கிய தானங்களில் ஒன்றாகும். இறந்தவர்களின் ஆவி நற்கதி அடைய இந்த தானம் கொடுக்கப்பட்ட விளக்கின் ஒளி வெளிச்சம் காட்டுகிறதாம்.

    முன் காலத்தில் இந்த தீப தானத்தை சூரிய உதயத்திற்கு முன்பே தர வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. எமன் இந்த தீப தானத்தினால் மிகவும் திருப்தி அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் 16 வித தீப தானங்கள் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. பனை ஓலையில் படகு மாதிரி செய்து அதில் தீபம் ஏற்றி தானம் செய்வது.

    அதில் ஒரு முறை, கங்கைக்கரையில் தீப தானம் அளிப்பது மிகவும் விசேஷம். கங்கையில் அகலில் தீபத்தை ஏற்றி அதை மிதக்க விடுவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. தீபத்தை எடுத்துக் கொண்டு பிரதட்சணம் வருவதில் பெரும் புண்ணியம் உண்டு. கன்னிப்பெண்கள் இப்படி தீபத்துடன் பிரதட்சணம் செய்தால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும். தபோவனம் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் மடத்தில் இந்த வழக்கம் தினமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
    பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.
    * ஆன்மிக ரீதியாக சிவபெருமானின் பஞ்ச பூத தலங்கள் இருக்கின்றன. அவை:- காஞ்சீபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்).

    * பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

    * சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது, சிதம்பரம் நடராஜர் ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளை கொண்ட அற்புத தலம் இது.

    * இங்குள்ள நடராஜ பெருமானின் சன்னிதிக்கான, கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

    * இத்தலத்தில் நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் இறைவன் அருள்பாலிக்கிறார். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங் களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    * சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி, தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

    * திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிதம்பரம் திருத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். எனவே அந்த நால்வரின் குரு பூஜையும், இந்த ஆலயத்தில் பெரிய திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    * சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழா மிகவும் முக்கியமானது.

    * முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, நட ராஜரை துதித்து வழிபடுவார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுப்பாராம்.

    * சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது.

    * சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்த குளம் அருகில் சிறு தூண் நடப்பட்டிருக்கும். அங்கிருந்து பார்த்தால், ஆலயத்தின் 4 ராஜ கோபுரங்களையும் தரிசிக்க முடியும்.

    * சிதம்பரம் ஆலயம் என்றதுமே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த ஆலயத்தின் மூலவர் நடராஜர் என்பதாகத்தான் நினைப்பு வரும். அனைவரும் ஆலயத்திற்குள் நுழைந்ததும் நடராஜரைத் தேடியே ஓடுவார்கள். ஆனால் உண்மையில் இந்த ஆலயத்தின் மூலவர், லிங்க வடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    தீபாவளி அன்று காவேரியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன்களைப் பெறலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் முதலிடத்தைப் பெறுகிறது கங்கை. கங்கை நதியை தெய்வமாகப் போற்றுவது நமது மரபு. கங்கை நதியில் நீராடுவது எல்லோராலும் இயலாது. எனவே, கங்காதேவியே தீபாவளி நாளில் அனைத்து நீர்நிலைகளிலும் எழுந்தருள்வதாக ‘துலாக் காவேரி மகாத்மியம்‘ கூறுகிறது.

    மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் கங்காதேவிக்கு தனிசந்நிதி உள்ளது. தீபாவளித் திருநாளில் கங்காதேவி, மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கும் வைபவம் நடைபெறும். அப்பொழுது பக்தர்கள் நீராடுவது வழக்கம். இது ஆண்டுதோறும் நடைபெறும்.

    இது கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தான் காவேரி நதியை தட்சிண கங்கை என்று போற்றுகிறார்கள்.

    தீபாவளி அன்று காவேரியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன்களைப் பெறலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

    பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பூவசரங்குப்பம் என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், பாண்டிச்சேரியிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், கடலூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. மூலமூர்த்தி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவருடைய தேவி அமிர்தவல்லி தாயார் இவர்கள் இக்கோவில் உள்ள பிரதான மூர்த்திகளாவார்கள்.

    தலபுராணத்தின்படி வடக்கு கடற்கரையிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வசித்து வந்த சப்தரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர். அவர்களால் பகவானுடைய கடும் கோபத்தீயை தாங்க முடியாமல் போகவே அவரை சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர். அதனால்இங்கு அமிர்தவல்லி தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்து ஒரக்கண்ணால் பகவானையும், மற்ற கண்ணால் முனிவர்களையும் அருள்பாலித்தார்.

    பகவானுடைய கோபத் தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். தாயார் லட்சுமியின் கருணைகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சி அளிக்கிறார்.

    பூவசரங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா?

    பல்லவ அரசர்கள் ஜைன மதத்தை தழுவி விஷ்ணு கோவில்களையும் சிவன் கோவில்களையும் இடித்து தகர்த்து நாசமாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் திருக்கோவில்களை தகர்ப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடுபட்டனர்.

    ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான். நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார்.அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தான். முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார்.

    இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின. முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான். இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் அரசன் நரஹரி முனிவரைத் தேடி அலைந்தான். கடைசியாக ஒரு பூவரச மரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அரசனுடைய கனவில் தோன்றிய பெருமாள் “நீ உன்னுடைய சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாய் முனிவர் இங்கு வந்து உன்னை ஆசீர்வதிப்பார்” என்று கூறினார்.

    அரசன் உறங்கி விழித்தவுடன் பெருமாளைக் காண முடியவில்லை. அப்போது அந்த பூவசர மரத்திலிருந்து ஒரு இலை அரசன் மேல் விழுந்தது. அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது.

    அவனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தபோது, நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார் அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான்.
    அந்த முனிவரின் விருப்பத்தின்படி அரசனும் பூவரசங்குப்பத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு ஒரு திருக்கோவில் எழுப்பினான். அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.

    ஆணுக்கு பெண் சமம்

    நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.

    ஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. இந்த கோவில்களை ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    ஸ்ரீநரசிம்மர் வழிபாடு என்பது மிகப் பழமையான நாளிலேயே தோன்றியதாகும். ஸ்ரீநரசிம்மரைப் பற்றி 18 புராணங் களிலும், முக்கியமாக ஸ்ரீமத் பாகவத் புராணம், பிரம்மாண் புராணம், பத்ம புராணம், ஸ்ரீஅரிவம்சம், ஸ்ரீவிஷ்ணு புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது விசேஷமாகும். முதன் முதல் வேதமாகப் போற்றப் படுகின்ற ரிக் வேதத்தில் ஸ்ரீநரசிம்மரைப் பற்றிய குறிப்புள்ளது.

    ஸ்ரீநரசிம்ம அவதாரம் என்பது விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாகும். தன்னுடைய மிகச் சிறந்த பக்தனான பிரகலாதனுக்காக, அசுரத்தன்மை உடைய தந்தையான இரண்யகசிபுவினிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக தோன்றிய அவதாரமாகும்.

    ஸ்ரீ நரசிம்மரின் அவதாரம் மக்களுக்கு அவருடைய அவதார மகிமையின் மூலமாக, அவர்பால் ஈர்ப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இன்றும் பல திருக்கோவில் களில் தம் வாழ் நாளில் கடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்களே ஸ்ரீநரசிம்ம பகவானுக்கு பூஜை செய்கின்றனர். ஆகையால் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அக்கோவில்களுக்கு சென்று, தங்கள் மனவிருப்பம் நிறைவேற்றுவதற்காக தங்களால் இயன்ற பூஜையை செய்கின்றனர்.

    தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்க பெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக் கல் ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சிங்கிரிக்குடி

    பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக் குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை. திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.

    பூவரசன்குப்பம்

    பரிக்கல்லில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.

    பரிக்கல்

    விழுப்புரத்திலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். பெருமாளின் திரு நாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார்.

    திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த 3 லட்சுமி நரசிம்மர் கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசன்குப்பம், இறுதியில் பரிக்கல் என்ற வரிசைப்படி தரிசிக்க வேண்டும்.

    பிரார்த்தனை தலங்கள்

    சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களும் பிரார்த்தனைக்குரிய தலங்கள் ஆகும். எனவே இந்த மூன்று தலத்திலும் நரசிம்மரிடம் நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அவற்றை நரசிம்மர் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

    சிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது.
    (ஸ்ரீவித்யாரண்யர் அருளியது)

    சிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது. இதைப்படித்தால் சகல வித்தைகளும் வரும். மங்களங்களும் உண்டாகும். அந்த அஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-

    ஸ்ரீசிருங்கேரியில் வசிப்பவளே! சுகர் முதலிய மகரிஷிகளால் சேவிக்கப்படுகிற பாத கமலங்களை உடையவளே! தனது அங்கங்களின் காந்தியால் திரஸ்கரிக்கப்பட்ட சந்திரனையும் இந்திரவாகனமான ஐராவதத்தை யும் உடையவளே, வாக்கு சக்தியை அளிப்பவளே, ஸ்ரீபரமசிவன், ஸ்ரீலட்சுமீபதி முதலிய சிறந்த தேவர்களின் சமூகங்களால் சந்தோஷமாய் பூஜிக்கப்படுகிற பிரம்ம தேவனின் மனைவியான சாரதே, வித்தையையும், சுத்தமான புத்தியையும் எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.
    கலியுகத்தின் ஆரம்பத்தில் சிறந்த தேவகணங்களால் பிரார்த்திக்கப்பட்டவரான ஸ்ரீபரமசிவன் வேதத்தில் கூறிய பாகங்களை உலகில் நன்கு நடைபெறச் செய்வதற்காக சன்னியாசி ரூபியான ஆதி சங்கரராக சிருங்கேரியில் வந்து உங்களை பிரதிஷ்டை செய்து பலவித ஸ்தோத்திரங்களால் துதித்து நமஸ்கரித்து சாரதாதேவியே! வித்தையையும் சுத்தமான முக்தியையும் எனக்கு சீக்கிரம் கொடுக்க வேண்டும்.

    பல ஜென்மங்களில் செய்த பாபக் கூட்டங்களை நாசம் செய்து, மேலும் சீக்கிரமாய் புண்ணியங்களின் குவியலைச் சேர்த்து வைத்து, வேதம் குரு இவர்களின் சொற்களில் ஆதரவையும் ஆஸ்தீக புத்தியையும், தேவதைகள், ஆசாரியன், வேதம் கற்ற பெரியோர்கள் இவர்களிடத்திலும், தங்களுடையதான மந்திரங்களின் சமூகத்திலும் நிரம்ப ஸ்திரமான பக்தியையும், வித்தையையும், சுத்தமான புத்தியையும், பிரம்மதேவனின் மனைவியான சாரதே! எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    வித்யா முத்திரை (ஞான முத்திரை), ஜெபமாலை, அமிர்தம் நிரம்பிய குடம் இவைகளால் விளங்குகின்ற ஹஸ்த பத்மங்களின் கூட்டத்தை உடையவளே! பக்தர்களுக்கு வித்தையைக் கொடுப்பதில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவளே! என்னுள்ளே இருக்கின்றதும், என்னுடன் கூடப் பிறந்த சந்துருக்களுமான காமம், கோபம் முதலியவைகளை சீக்கிரம் வேரோடு அழித்து பிரம்ம தேவனின் மனைவியான சாரதே! எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    தங்கள் வர்ணாச்சரம் தர்மத்திற்கு உரிய கர் மானுஷ்டானத்தில் நிலைத்த மனதையும், அந்த அனுஷ்டானங்களை செய்வதற்கு தேகத்தில் நல்ல வலுவையும், நீண்ட ஆயுளையும், மூன்று உலகங்களாலும் அறியக்கூடிய புகழையும் பாபச் செயலிலிருந்து திரும்புதலையும், சாதுக்களின் சங்கத்தையும், நல்ல கதைகளைக் கேட்பதையும், எப்பொழுதும் எனக்கு கொடுப்பதோடு கருணைக் கடலான பிரம்மதேவனின் மனைவியான சாரதே! எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    தாயே! தங்களுடைய பாத கமலத்தை முறைப்படி புஷ்பங்களால் பக்தியுடன் ஒரு சமயமும் பூஜிக்கவில்லை. மந்த புத்தி யுள்ளவனும், சுறுசுறுப் பற்றவனுமான நான் உங்களது குணங்களை சிறந்த சுலோகங்களால் பாடுவதற்கு சக்தியற்றவன். தங்களை சேவிக் காதவனான என்னிடத்தில் ஊமைக் குழந்தையினிடத்தில் தாய்போல் அளவற்ற கருணையைச் செய்து, பிரம்ம தேவனின் மனைவியான சாரதே! வித்தையையும் சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் எனக்கு கொடுக்க வேண்டும்.

    சாந்தி முதலிய மங்களத்தைச் செய்யும் சம்பதுக்களை எனக்கு அளிக்க வேண்டும். நித்திய, அநித்ய வஸ்து விவேகத்தையும், வைராக்கியத்தையும் (விஷயங்களில் ஆசையின்மையும்) மோட்சத்தில் ஆசையையும், லட்சுமியாலும், பார்வதியாலும் சேவிக்கத்தகுந்த நீ பிரயாசையின்றி கொடுக்க வேண்டும். வித்யாரண்யர் முதலிய சிறந்த யோகிகளின் கரகமலங்களால் பூஜிக்கப்பட்ட சரண கமலங்களை உடைய பிரம்ம பத்தினியான சாரதே! வித்தையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.

    சத் சித் என்ற சொரூபமாக இருக்கும் எனக்கு வேதார்த்தத்தை மனனம் செய்து நிதித்யாசனம் செய்வது (அதாவது அந்தப் பொருளை மனதில் நிறுத்திப் பார்ப்பது) இவைகளையெல்லாம் சீக்கிரம் சம்பாதித்து கொடுத்து அதனால் இந்த மனதை நிர்விகல்ப சமாதியில் எப்பொழுதும் ருசியுள்ளதாகவும் செய்து, துங்கா நதிக்கரையின் சமீபத்தில் விளங்குகின்ற சிறந்த கோவிலில் ஸ்ரீசக்கரத்தின் நடுவில் விளங்குகின்ற பிரம்ம தேவனின் பத்தினியான சாரதா தேவியே, வித்யையும் சுத்தமான புத்தியை சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.
    புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம். புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

    நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம்.

    கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும், சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும்.

    மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும். மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

    அரிய வகை மரகத லிங்கங்கள், மாணிக்க லிங்கங்கள், கருநீல லிங்கங்கள், கனக புஷ்பராக லிங்கங்கள் என பலவகை லிங்கங்கள் உள்ளது.
    1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் சிருங்கேரியில் அம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார்.
    1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் சிருங்கேரியில் அம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார். பிறகு பனிரெண்டாவது குருவான ஸ்ரீ வித்யாரண்ய மகாசுவாமிகள் கேரள ஆலயங்களைப் போன்று ஓடுகளால் வேயப்பட்ட மேல் தளத்தை உடைய மூங்கில்களாலான ஆலயத்தை நிர்மாணித்து, பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அபிஷேகம் முதலியவைகளால் ஆராதிக்கப்பட்டு வந்ததால் சிதிலமாகத் தொடங்கியிருந்த சந்தன விக்ரகத்திற்கு பதிலாக தற்போதுள்ள தங்கத்தாலான விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.

    33-ம் குருவான ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ மகாசுவாமிகள், மெருகூட்டப்பட்ட கருங்கற்களாலான மதிற்சுவர் களைக் கொண்ட, தற்போது காணப்படும் ஆலயத்தை உருவாக்கினார். 35-ம் குருவான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள் ஆலயத்திற்கு மேலும் பல திருப்பணிகளைச் செய்தார்.

    தற்போதைய குருவான ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு தங்கத்தாலான நிலைப் படியையும், கதவுகளையும் உருவாக்கியதுடன் அம்பாளுக்கென்று தங்கத்தேர் ஒன்றையும் அர்ப்பணித்திருக்கிறார். ஆலயத்தினுள் இருக்கும் நவரங்க மகாமண்டபம் மிகத் தேர்ச்சியான சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய பற்பல தூண்களைக் கொண்டது. இத்தூண்களில் துர்கா, ராஜராஜேஸ்வரி முதலான கடவுள்களின் பிம்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சர்வ அலங்காரங்களுடன் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ சாரதாம்பாளைக் காண கண்கோடி வேண்டும்.
    சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது சாரதா பீடமாகும்.

    2. துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.

    3. ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா பீடம் இருக்கிறது.

    4. சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.

    5. ஸ்ரீ சாரதாதேவி மடத்திலேயே குறைந்த வாடகையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன.

    6. கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

    7. சிருங்கேரி செல்பவர்கள், இங்கிருந்து 22 கி.மீ. தொலைவிலும், கிக்கா என்ற இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஸ்ரீமனே நீர் வீர்ச்சியை கண்டு களித்து வரலாம். இந்த நீர் வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள மிக அழகிய நீர் வீழ்ச்சியாகும்.

    8. யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து “காமகோடி” பீடத்தை ஸ்தாபித்ததாக சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோட்சலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும் போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன.

    9. சாரதை கோவில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர்.

    10. சதா நேரமும், அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை, நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு பணம் கட்டினால் பிரசாதம் என்று பெரிய அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள்.

    11. குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

    12. சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது.

    13. நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.

    14. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

    15. அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

    16. சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது.

    17. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.

    18. கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.

    19. அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

    20. நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    21. உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர்.

    22. ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

    23. நடை திறக்கும் நேரம் :- தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

    24. அருகிலுள்ள விமான நிலையம்- மங்களூர் 7 கி.மீ., அருகில் உள்ள ரெயில் நிலையம்- சிருங்கேரி 55 கி.மீ.

    25. ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன. நவராத்திரி முதலிய விசேஷ நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்க ரதப் பவனி உண்டு. பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்கரத, வெள்ளி ரத சேவை கிடைக்கும்.



    26. சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது.

    27. வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள்.

    28. மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர மவுலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார்.

    29. ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது.

    30. இங்குள்ள அத்வைத ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    31. குரு நிவாஸ் என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

    32. சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக் கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டு மானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம்.

    33. வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத் தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும்

    34. வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு திராவிட, ஹொய்சாள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது.

    35. கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைபிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

    36. துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

    37. படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம்.

    38. சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான்.

    39. சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர்.

    40. சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடகநல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்சண சிருங்கோ” என்று வர்ணித் தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும்.

    41. சிருங்கேரியில் தங்கம், வெள்ளி தேர்கள் உள்ளன.

    42. பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது.

    43. துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகாமையில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள்.

    44. ஸ்ரீசுரேஸ்வரர், ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீ கஸ்தாமலகர், ஸ்ரீதோடகர் ஆகிய நான்கு சீடர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்ரீசங்கரர், சிருங்கேரியில் வாசம் புரிந்தார்.

    45. சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது.

    46. கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மை யான பழமொழியாகும்.

    47. சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருதடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர்.

    48. சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார்.

    49. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா மடத்துக்கு கிளைகள் உள்ளன.

    50. சாரதாதேவியின் கிருபையால் தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும்.

    கணபதியை ஆராதனை தெய்வமாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு சிருங்கேரியில் அருட்பரவசம் நிறைந்த விருந்தே காத்திருக்கிறது. சிருங்கேரியின் பஞ்சமகாகணபதிகள் (5 கணபதிகள்) மிகப்பிரசித்தி பெற்றவர்கள்.
    கணபதியை ஆராதனை தெய்வமாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு சிருங்கேரியில் அருட்பரவசம் நிறைந்த விருந்தே காத்திருக்கிறது என்று கூறினும் அது மிகையாகாது. சிருங்கேரியின் பஞ்சமகாகணபதிகள் (5 கணபதிகள்) மிகப்பிரசித்தி பெற்றவர்கள்.

    1200 வருடங்களுக்கும் மேலாக ஜகத்குருக்களின் பூஜையில் இருந்து வரும் ஸ்படிகத்திலான ஸ்ரீ ரத்னகர்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தினுள் வீற்றிருக்கும் ஸ்ரீ சக்தி கணபதி, ஸ்ரீ வித்யாசங்கரர் ஆலயத்தினுள் வீற்றிருக்கும் ஸ்ரீ வித்யா கணபதி, மடத்துள் நுழைந்தவுடன் முதலாவதாக, ஒருநிலைப்படியில் இருந்து அருள் பொழியும் ஸ்ரீ தோரண கணபதி மற்றும் ஸ்ரீ மலகானிகரேசுவரர் ஆலயத்தினுள் ஒரு தூணில் 400 வருடங்களுக்கு முன் 24-ம் ஜகத்குருவால் மஞ்சள் கிழங்கினைக் கொண்டு வரையப்பட்டு நாளடைவில் ஒரு முழு சிற்பமாகவே புடைத்தெழுந்த ஸ்ரீ ஸ்தம்ப கணபதி ஆகிய ஐந்து கணபதிகளும் பக்தர்களால் தினமும் வழிபடப்படும் கடவுளர்களாக விளங்கி வருகின்றனர்.

    ஸ்ரீ சக்தி கணபதிக்கு செய்யப்படும் பிரதோஷ பூஜை பக்தர்களை மெய்மறக்கச் செய்யும் ஒன்றாகும்.
    சிவலிங்கம் மூன்று பாகமாக பிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன், நடுபக்கம் விஷ்ணு, அடிப்பக்கம் பிரம்மா என்று சிவலிங்கத்தை கூறுவர்.
    ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள். நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக உள்நாக்கில் இறங்கும். இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும். எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்த சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ, அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது. அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம். இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம்.

    எப்படி சிவலிங்கம் மூன்று பாகமாக பிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன், நடுபக்கம் விஷ்ணு, அடிப்பக்கம் பிரம்மா என்று சிவலிங்கத்தை கூறுவர். அதை போலவே நம்முடைய மூலாதாரம் பல உயிர்களை உண்டாக்கும் சக்தி உடையது அதனால் பிரம்மா என்றும், திருவேணி சங்கமம் என்று சொல்லப்படும் மார்புபகுதியில் நம் உடலை காக்கின்ற இதயம் இருப்பதால் நம்மை காக்கின்ற விஷ்ணு இருக்கும் இடமாக கருதுகிறோம்.

    உடலின் முக்கியமான இடமான மூளை இருப்பதாலும், வாசியோகத்தின் முடிவிடம் என்பதாலும் முக்கன்னனான சிவபெருமனை தலை பாகத்திற்க்கு வைத்துள்ளோம். அதனால் தான் கபாலம் வலியாக உயிர் பிரிந்தால் முக்தி என்று புராணம் கூறுகிறது. நன்றாக பாருங்கள் நமது பெருநாக்கு ஆவுடையார் பாகம் போலவும், சிருநாக்கு லிங்கபாகம் போலவும் இருப்பதை காணலாம் .இதை என்று நாம் இணைக்கிறமோ அன்று நாம் சிவனாகவே மாறிவிடுவோம்.

    ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், உயிர்கள்( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று விதமான வடிவங்களை எடுத்துக்கொண்டு வந்து, நமக்கு அருள்செய்கின்றான்.

    அவ்வடிவங்கள்,

    அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது- >இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
    உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப் புலப்படும்-இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
    அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை-இது சகள நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
    இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது, உருவம் - உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர் - போன்றவை. 

    இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு(64) வகையாக உள்ளதாகஆகமங்கள் கூறுகின்றன, அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து(25)வடிவங்கள் - மகேசுவர மூர்த்தங்கள் என்றுசொல்லப்படுகின்றன.மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே - சிவலிங்கம் எனப்படும்."இலிங்கம்" - என்பதற்கு குறி என்பது பொருள், " குறி " - என்றால் = ஒரு அடையாளம்ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமேசிவலிங்கம் எனப்படும்.
    சிருங்கேரிக்கு முதன் முறையாக வருகை தரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சிருங்கேரியின் பல்வேறு ஆலயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    இறைநாட்டமுள்ள அன்பர்களுக்கு சிருங்கேரியின் அற்புத ஆலயங்கள் அமுதுண்டாற் போன்றதொரு அனுபவத்தை தரவல்லவை. ரம்மியமானதொரு இயற்கைச் சூழலில் வேத கோஷங்கள் காதுகளைக் குளிர்விக்க தூய்மையின் சிகரங்களாய் விளங்கும் அனைத்து ஆலயங்களுக்கும் சென்று இறை தரிசனம் செய்தால் உண்டாகும் பரவசநிலையை வார்த்தைகளில் வடிக்க இயலாது. அனுபவிப்பதால் மட்டுமே உணரமுடியும்.

    சிருங்கேரிக்கு முதன் முறையாக வருகை தரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சிருங்கேரியின் பல்வேறு ஆலயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    (அ) மடத்து வளாகத்தினுள் துங்காநதியின் தென்கரையில் அமைந்துள்ள ஆலயங்கள்:
    1. தோரண கணபதி சன்னிதி
    2. ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆலயம்
    3. ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்
    4. ஸ்ரீ சக்தி கணபதி சன்னிதி (ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில் உள்ளது)
    5. ஸ்ரீ கோதண்டராமசாமி சன்னிதி (ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தின் வாயிலில் உள்ளது)
    6. ஸ்ரீ மலையாள பிரம்மா சன்னிதி (ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தின் வாயிலில் உள்ளது)
    7.ஸ்ரீ சுரேஸ்வராசார்யார் சன்னிதி
    8. ஸ்ரீ வாகீஸ்வரி வித்யாரண்யா சன்னிதி
    9. ஸ்ரீ ஜனார்தனசுவாமி ஆலயம்
    10. ஸ்ரீ கருடபகவான் சன்னிதி (ஸ்ரீ ஜனார்தனசுவாமி ஆலய வாயிலில் உள்ளது)
    11. ஸ்ரீ ஆஞ்சனேயசுவாமி சன்னிதி (ஸ்ரீ ஜனார்தன சுவாமி ஆலய வாயிலில் உள்ளது)
    12. ஸ்ரீ விருத்த நரசிம்மபாரதீ சுவாமிகளின் சமாதி ஆலயம் (ஸ்ரீ ஜனார்தனசுவாமி ஆலயத்தின் பின்புறம் உள்ளது)
    13. ஸ்ரீ வித்யாசங்கரதீர்த்தர் ஆலயம் (ஆலயத்தின் உள்ளே ஸ்ரீ சக்தி கணபதி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீ கர்த்தவீர்யாஜுனர் சன்னிதிகள் உள்ளன)
    14. ஸ்ரீ சுப்ரமண்யசுவாமி ஆலயம்
    15.துங்காநதிதீரம் (நதியையே இறைவடிவாக வழிபடும் இடம்)
    (ஆ) மடத்து வளாகத்தினுள் துங்காநதியின் வடகரையில் அமைந்துள்ள ஆலயங்கள்
    16. ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்மபாரதீ மகாசுவாமி களின் சமாதி ஆலயம்
    17. ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரபாரதீ மகாசுவாமிகளின் சமாதி ஆலயம்
    18. ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளின் சமாதி ஆலயம்
    19.ஸ்ரீ சந்திரமவுலீசுவரர் ஆலயம் (குருநிவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது)
    20. ஸ்ரீ காலபைரவர் ஆலயம்
    21. ஸ்ரீ வேத வியாசர் ஆலயம்
    (இ) மடத்து வளாகத்திற்கு வெளியே உள்ள ஆலயங்கள்
    22. ஸ்ரீ மலகானிகரேசுவரர் ஆலயம் (குன்றின் மேல் உள்ளது)
    23. ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம்
    24. ஸ்ரீ கெரே ஆஞ்சநேயர் ஆலயம்
    25. ஸ்ரீ வனதுர்காம்பாள் ஆலயம்
    26. ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்
    27. ஸ்ரீ சூர்யநாராயணர் ஆலயம்
    ×