search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    நெல்லையில் நடைபெற்ற மகா புஷ்கர நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு வாய்ந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் மகா புஷ்கர நிறைவு விழா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 7 சிவாச்சாரியார்கள் நின்று வேத மந்திரங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் மலர்களை தூவி விழா நிறைவு செய்யப்பட்டது. அப்போது தாமிரபரணி அன்னையை போற்றி எழுதப்பட்ட பாடல், இசையுடன் பாடப்பட்டது. மேலும் பக்தர்கள் மீது தாமிரபரணி புனிதநீரும் தெளிக்கப்பட்டது. 
    வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது தான் பகவத் கீதையில் தத்துவமாகும்.
    பகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் ‘இறைவன்’. ‘கீதா’ என்றால் ‘நல்ல உபதேசம்’. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘கீதா’ என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது ‘தாகீ’ என்று மாறும். ‘தாகீ’ என்றால் ‘தியாகம்’ என்று பொருள்.

    வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது இதன் தத்துவமாகும். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் ‘கீதா’விற்குரிய ஆழமான பொருளாகும்.

    அர்ச்சுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, ‘தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் என்னையே சேரும்’ என்று பகவான் கிருஷ்ணர் கூறினார்.

    எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.
    ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது.
    ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கில் இருந்து விடும் மூச்சுக் காற்றினால் தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னிதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் அதன் காரணமாகத் தான்.

    கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக பூசிக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக பூசிக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.

    இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

    அவற்றுள் சில,

    1. பிரம்மா, விஷ்ணு, சிவன்

    2. சிவன், சக்தி, ஸ்கந்தர்

    3. அறம், பொருள், இன்பம்

    4. குரு, லிங்கம், சங்கமம்

    5. படைத்தல், காத்தல், அழித்தல்.
    திருப்பதி கோவிலில் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருட சேவை நாளை இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறுகிறது.
    திருப்பதி கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருட சேவை நாளை இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறுகிறது.

    அதில் உற்சவர் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 14-ந்தேதி கருடசேவை நடந்தது.

    இதையடுத்து இதே மாதத்தில் வந்த பவுர்ணமியையொட்டி நாளை இரவு மீண்டும் மற்றொரு கருடசேவை நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் தேவஸ்தானம் செய்து வருகிறது.
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளிலும் இந்த விழா நடந்து வருகிறது.

    தினமும் காலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த புஷ்கர விழாவில் வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு புனித நீராடி வருகிறார்கள்.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

    12-வது நாளான நேற்றும் புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளிலும், சீவலப்பேரி துர்காம்பிகை கோவில் படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


    சேரன்மாதேவி பக்தவச்சலபெருமாள் கோவில் வியாச தீர்த்தக்கட்டத்தில் நேற்று மாலை தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

    மேலும், பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் ஜடாயு படித்துறையிலும் நேற்று மாலையுடன் புஷ்கர விழா நிறைவடைந்தது.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் புஷ்பாஞ்சலி, 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நெல்லை மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெற்ற மகா புஷ்கர விழா இன்று மாலையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. 
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிர பரணியில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது.

    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடத்தப்பட்டு வருகிறது.

    தாமிரபரணிக்கு நன்றி கூறும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. தாமிரபரணி யில் உள்ள 64 தீர்த்தகட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந் தது. ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிர பரணிக்கு சிறப்பு வழிபாடு கள், வேள்விகள், யாகங்கள், கலை நிகழ்ச்சிகள், மாலையில் மகா ஆரத்தி நடைபெற்று வருகின்றன. 3 வேளை அன்ன தானமும் வழங்கப் பட்டு வருகிறது.

    புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங் கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற‌ மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இதனால் தாமிரபரணி கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. படித்துறைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 4 நாட்களாக ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    விழாவில் உச்சக்கட்டமாக நேற்று தாமிரபரணியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். மாலையில் நடந்த மகா ஆரத்தியையும் கண்டு தரிசித்தனர்.


    தைப்பூச மண்டபம் படித்துறையில் தண்ணீர் அதிகரித்ததால் பக்தர்கள் ஓரமாக நின்று நீராடிய காட்சி.

    புஷ்கர விழா நடைபெற்ற பகுதிகளில் நேற்று கட்டு கடங்காத கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பாபநாசத்தில் இரு இடங்களில் புஷ்கர விழா நடைபெற்றதால் அங்குள்ள பாபநாசநாதர் கோவில், அகஸ்தியர் அருவிக்கு அதிகளவில் பக்தர்கள் வந்ததாலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    ஏற்கனவே புஷ்கர விழாவிற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அகஸ்தியர் பட்டியிலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பஸ்களில் பாபநாசம் செல்ல ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அதே போல வடக்கில் இருந்து வந்த வாகனங்கள் முதலியார்பட்டி அருகேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே அந்த பாதையில் அனுமதிக்கப்பட்டன. பாபநாசம் தாமிரபரணியில் நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதே போல் சிங்கை, அம்பை, சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி படித்துறைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அம்பை காசிப தீர்த்தத்தில் புனித நீராடவும், தாமிரபரணியில் நீராடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. முக்கூடல், அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லையில் எங்கு பார்த் தாலும் வெளிமாநில பக்தர் கள் கூட்டம் காணப்பட்டது.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.

    குருஸ்தலமான தூத் துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மகா ஆரத்தியை காணவும் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியதையும், அங்கு பாதுகாப்பிற்காக ஆற்றில் படகு நிறுத்தப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

    இதே போல ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, ஆத்தூர் பகுதிகளிலும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.

    சித்தர்கள் கோட்டம் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாபநாசம் திரிநதி சங்கம தீர்த்தத்தில் நடை பெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள். அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவில் இன்று காலை லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை வழிபாடு நடந்தது. புஷ்கர விழா நிறைவு நாள் என்பதால் இன்று மதியம் இங்கு மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து சாத்தயதி பூஜை நடை பெற்றது.

    தொடர்ந்து அங்குள்ள சேனை தலைவர் சமுதாய கூடத்தில் பெண் துறவியர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது.

    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி படித்துறையில் இன்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு நடைபெற்றது.

    நெல்லை தைப்பூச மண்டபம் அருகே இன்று காலை வேத பாராயணம் மற்றும் மகா சண்டி ஹோமமும் நடைபெற்றது. சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையாக சாலையில் இன்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும் மகா சண்டியாகமும் நடந்தது. காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூரில் நடந்த மகா புஷ்கர விழாவில் இன்று ருத்ர ஏகாதசி பூஜை நடைபெற்றது.

    முறப்பநாட்டில் இன்று காலை சிறப்பு வேள்வியும், தாமிரபரணிக்கு வழிபாடும் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த விழாவில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட வைகளை நீக்கும் சத்ருசம் ஹார ஹோமம் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி புஷ்கர விழா தொடங்கப்பட்ட இடங்களில் இன்று மாலை மகா ஆரத்தியுடன் விழா நிறைவடைகிறது. இதனால் இந்த பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டிருந்தனர்.


    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்த போது எடுத்த படம்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    12-ந்தேதி புஷ்கர விழா தொடங்கிய பகுதிகளில் நாளை மாலை வரை வழிபாடுகள் நடக்கின்றன. புஷ்கர விழா நிறைவை யொட்டி இன்றும், நாளையும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தாமிரபரணியில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளதால் போலீசார் நீராடும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    மேலும் 24 மணி நேரமும் ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆற்றில் பக்தர்கள் நீராடும் பகுதியில் தண்ணீர் வரத்தை பொறுத்து பக்தர்களை போலீசார் நீண்ட வரிசையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

    கீழாம்பூர் மற்றும் ஆழ்வார்குறிச்சி வட்டார கடனா நதி பக்த ஜன சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து புஷ்கர விழாவை முன்னிட்டு கடனா நதியில் வழிபாடு நடத்தினர்.

    இதையொட்டி வேதவிற் பன்னர்கள் தேவி பாராயணம், கும்ப ஜெபம், விசே‌ஷ ஜெபம் மற்றும் நாம சங்கீர்த்தனம், தேவார பண்ணிசை பாடினார்கள். பின்னர் வைதீகர்கள் கடனாநதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கடனாநதிக்கு தீப ஆராதனை, உபசாரங்களுடன் மகா தீப ஆரத்தி நடத்தினர்.

    நிகழ்ச்சியில் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், பாப்பான்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வாணவேடிக்கை நடந்தது.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, பின்னர் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.

    2 முதல் 5-ம் திருநாள் வரை கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

    நவம்பர் 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    நவம்பர் 14-ந்தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகளும், பின்னர் 5 மணியளவில் அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்படுதலும் நடைபெறும். மாலை 6.30-க்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றுதல், இரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    திருவிழாக்காலங்களில் நாள்தோறும் காலையும், மாலையும் கோவிலின் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி, கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்று தெரியுமா?

    தர்ப்பணம் என்பது 'திருப்தி' என்னும் பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்தி படுத்துவது ஆகும். எள்ளும், நீரும் கலந்து தர்ப்பணம் செய்வது அமாவாசை அல்லது திதி நாட்களில் தான் செய்வர்.

    அமாவாசை அன்று வீட்டில் வெளியில் தண்ணீரில் எள் கலந்து வைப்பார்கள். அப்படி செய்தால் அந்த நாள் அன்று இறந்தவர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு அவர்கள் ஆசி வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

    சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாள் தான் அமாவாசை. அமாவாசை தினம் அன்று ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் எள் கலந்த தண்ணீர் வைத்தால் முன்னோர்கள் வந்து பசியினை தீர்த்து கொள்வர். அன்றைய தினம் இதனை செய்ய தவறினால் அது தோஷமாக மாறிவிடும் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பணம் செய்து முடித்ததற்கு பிறகே, வீட்டில் பிற காரியங்கள் அதாவது பூஜைகள் எல்லாம் நடத்த வேண்டும். இந்த தர்ப்பணம் செய்வது கூட வீட்டில் இருக்கும் அனைவரது நன்மைக்காகத் தான் செய்யப்படுகிறது.

    ஒரு வருடத்தில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள். 96 நாட்கள் தான் மிக மிக உத்தமமான நாட்கள் தாய், தந்தையரின் திதி நாட்கள் அன்றும் தர்ப்பணம் செய்யலாம்.

    திதி கொடுக்கும் போது பெயர் சொல்வதற்கு காரணம், ஒரே நாளில் பலருக்கு திதி கொடுப்பர். அது சரியாக முன்னோர்களுக்கு போய் சேருமோ என்று பலரும் எண்ணுவர், இனி இந்த சந்தேகம் யாருக்கும் வராது.

    துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு திதி செய்யும் நாட்கள் மிகவும் புண்ணியங்கள் தரும். இதனால் அவரவருக்கு சரியாக அந்த தர்ப்பணம் போய் சேரும்.
    பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும் கொடுக்கிறார்கள்.
    துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூஜைகளின் போதும் அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசி முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும்  கொடுக்கிறார்கள்.

    பெருமாளுக்கு பூஜை நடத்தப்படும் போது துளசி இலையால் அர்ச்சனை செய்யப்படும். அர்ச்சகர் போடும் துளசி இலை பெருமாளின் திருவடியில் விழும். அந்த  இலையை நாம் பிரசாதமாக வெறும்போது, பெருமாலின் அனுக்கிரகம் நமக்கு கிடைப்பதாக ஐதீகம்.

    பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதை வைத்து, அதில் துலசி இலை கலந்து துலசி தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் புண்ணிய நதி அல்லது அந்தந்த கோவில் தீர்த்தங்களையும் கலந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்.

    துளசி தீர்த்தத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் சேர்க்கப்படுவதுண்டு. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது.

    வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.

    ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில்  திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது.
    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. சென்னைப் பட்டணம் தோன்றுவதற்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அம்மன் அவதரித்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. ஆனால், அதையும் தாண்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.

    நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.

    ஆடிப்பூரத்துக்கு 1008 மலர் கூடைகள் எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சுடுதல் நடக்கும். நவராத்தி 10 நாளும் உற்சவ புறபாடு இருக்கும். 10 நாளும் 10 அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். எல்லா விசேஷ நாளிலும் அம்மனுக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபாடு நடக்கும்.
    தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
    தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

    இக்கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று. உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது. அன்னாபிஷேகம் என்பது வெண்ணெய் கலந்த சாதத்தால் லிங்கரூபமான அருணாசலேஸ்வரருக்கு அலங்காரம் செய்து அன்னத்தை படைப்பார்கள். இந்த விழா வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த விழாவின்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வழக்கம் போல் அனுமதிக்கப்படும்.

    அன்னாபிஷேகத்தன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. அதன்பிறகு வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

    அன்னாபிஷேக விழாவையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. வெளிநாட்டு பக்தர்களும் வந்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி நேற்று கோவிலுக்கு திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். 
    ×