search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை ‘பிரதமை’யன்று கருட தரிசனம் ஆகும்.
    எந்த திதியன்று கருட தரிசனம் செய்கிறோமோ அந்தத் திதியின் அதிதேவதையின் அருளாசியும்,சுபிட்சங்களும் நமக்கு கிடைக்கும். கல்வி,ஞானம், அறிவு, படிப்பில் நல்ல உயர்வு, வெற்றி கிடைக்க வேண்டுவோர் வளர்பிறை ‘நவமி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    அஷ்ட ஐஸ்வர்யங்கள் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டுவோர் வளர்பிறை ‘அஷ்டமி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை ‘பிரதமை’யன்று கருட தரிசனம் ஆகும்.
    சந்திரனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக வளர்பிறை ‘திரிதியை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை ஸப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக வளர்பிறை ‘சஷ்டி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க ‘வளர்பிறை சதுர்த்தி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும் வேண்டுவோர் வளர்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    கருட பகவானுக்கு உரிய திதி ‘பஞ்சமி’ ஆகும். எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு. பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.

    தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்யவேண்டும்.

    மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் ‘துவாதசி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும் வாழ்வில் நல்ல மேம்பாடு அடையவும் வேண்டுவோர் தேய்பிறை ‘தசமி’திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    முனிவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமானால் தேய்பிறை ‘சப்தமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.

    குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை ‘பிரதமை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    எமபயம் நீங்கவும் மரண பயம் விலகவும் தேய்பிறை ‘நவமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.

    கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை ‘ஏகாதசி’ அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.

    ராகு கேதுக்களின் அனுக்கிரகம் கிடைக்கவும் ராகு கேது தசாபுத்தி நடைமுறையில் உள்ளவர்கள் தேய்பிறை ‘அஷ்டமி’ அன்று கருட தரிசனம் செய்ய நல்ல பலன்கள் நடைமுறைக்கு வரும்.

    அமாவாசை திதி அன்று கருட தரிசனம் செய்வது பித்ருக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். இதனால் அளப்பறிய நன்மைகள் வாழ்வில் உண்டாகும்.

    ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.

    பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.

    சிவனின் அருளாசி கிட்ட தேய்பிறை ‘திரயோதசி’ பிரதோஷ காலத்தில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    திருமண பாக்கியம் உண்டாக தேய்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். நல்ல வரன் கிடைக்கும்.

    ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், லாபமும், அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுவோர் தேய்பிறை, ‘சஷ்டியில்’ கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    எந்த திதி அன்று கருட தரிசனம் செய்தாலும் அத்திதியின் அதி தெய்வ அருளாசியால் நமக்கு நல்ல பலன்களே விளையும்.

    எனவே ‘ நித்திய கருட தரிசனத்தை ஒரு வழக்கமாக பழக்கமாக, தவமாக, வழிபாடாகக் கொண்டால் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் பெற்று வாழலாம்.
    ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தில் தவறாமல் கருட தரிசனம் செய்தே ஆக வேண்டும்.
    ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் - வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.
    அசுரர்கள் எனும் ஆணவ சக்தி தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தும் போதெல்லாம் இறைசக்தி புதிய அவதாரம் எடுத்து, அவற்றை அழிக்கும். இதற்கு சம்ஹாரம் என்று பெயர். சூரனை சம்ஹாரம் செய்வதால் சூரசம்ஹாரம் என்கிறோம்.

    உலகம் முழுவதும் தமிழர்களுக்கு, சூரசம்ஹாரம் என்றதும் திருச்செந்தூர் தலத்தில் கடலோரத்தில் நடக்கும் சூரசம்ஹாரம் தான் நினைவுக்கு வரும். தற்போது திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ் பெற்று வருகிறது.

    ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் - வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.

    சூரபன்மன் எனும் அரக்கனை ஒழிக்கவே முருக அவதாரம் நிகழ்ந்தது. அது போல மகிஷாசுரனை அழிக்க அம்பாள் முத்தாரம்மனாக அவதரித்தார்.
    முருகப்பெருமானுக்கு வலுவூட்டும் வகையில் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்தில் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம். அது போல அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் அதாவது புரட்டாசி அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையில் இருந்து 9 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம்.

    சஷ்டியன்று திருச்செந்தூரில் முருகன் தேரில் எழுந்தருளி சூரபன்மனை சம்ஹாரம் செய்வார். குலசையிலும் முத்தாரம்மன் கடற்கரையில் தேரில் எழுந்தருளி மகிகனை சம்ஹாரம் செய்வாள்.

    முருகன் சம்ஹாரம் செய்யும் முன்பு சூரன் விதம் விதமான வேடங்களில் வருவான். அது போலவே குலசையிலும் மகிஷன் மூன்று வடிவங்களில் வருவான்.
    திருச்செந்தூர் கடற்கரையில் சூரபன்மனை தம் வேலால் முருகன் சம்ஹாரம் செய்வார். குலசையில் மகிஷனை சூலத்தால் அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    சம்ஹாரம் நடப்பதற்கு முன்பு திருச்செந்தூரில் வேலுக்கும் குலசையில் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவையெல்லாம் இரு தலத்திலும் உள்ள ஒற்றுமையான சம்ஹார தகவல்களாகும்.

    ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம் திருச்செந்தூரில் சூரபன்மன் முருகனால் சம்ஹாரம் செய்யப்படும் நிகழ்வுகள் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷன் அழிக்கப்படும் நிகழ்வு மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும்.

    மற்றொரு வித்தியாசம் திருச்செந்தூரில் மாலை நேரத்தில் சூரசம்ஹாரம் நடத்தப்படும். குலசையில் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.
    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகனை குளிர்விக்க அபிஷேகம் செய்வார்கள். குலசையிலும் அம்பாளுக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் நடைபெறும்.

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் 90 சதவீத பக்தர்கள் புறப்பட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் குலசையில் விடிய, விடிய தசரா குழுக்களின் ஆடல் நிகழ்ச்சி நடைபெறும். குலசை சூரசம்ஹாரத்தை திருச்செந்தூர் சம்ஹாரத்தில் இருந்து மிகவும் வித்தியாசப்படுத்தி காட்டுவது இதுதான்.

    மற்றப்படி இரு சூரசம்ஹாரத்துக்கும் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடைக்காத இத்தகைய சிறப்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

    புஷ்கரத்தின் போது மட்டுமல்ல மற்ற நாட்களிலும் தாமிரபரணியில் நீராட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    தாமிரபரணியை தாயாகவும், தெய்வமாகவும் நெல்லை, தூத்துக்குடி மக்கள் போற்றி வருகிறார்கள். தாமிரபரணியில் எச்சில் உமிழ்வதையே பாவச்செயலாக இங்குள்ள மக்கள் கருதுகிறார்கள். புஷ்கரத்தின் போது மட்டுமல்ல மற்ற நாட்களிலும் தாமிரபரணியில் நீராட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.

    சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது. புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. நதியில் உள்ளம்குளிர குடைந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘‘ஹரி, ஹரி’’ என்று சொல்ல வேண்டும். ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வேஷ்டி இல்லாததற்குச் சமம்.

    பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும். நீரிலிருந்து வெளியே வந்து தலைமுடிகளை உதறக் கூடாது. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும்.

    மேலாக எடுத்துப் போடக் கூடாது. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாம். திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம். சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.
    தாமிரபரணியில் கடந்த 8 நாட்களில் நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை மட்டுமே 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது பக்தர்கள் அதிகளவில் வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    தமிழகத்தில் உள்ள நதிகளில் வற்றாத ஜீவநதியாக திகழ்வது தாமிரபரணி. பாபநாசம் மலையில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் இந்த நதி கடலில் கலக்கிறது. ஆன்மீக சிறப்பு மிக்க இந்த நதியின் இருகரைகளிலும் பிரசித்திபெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன.

    சிவனால் தருவிக்கப்பட்டு அகஸ்தியரால் பூமியில் விடப்பட்ட சிறப்பு மிக்க தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களையும் வளமாக்குகிறது. இந்த மாவட்டங்களோடு விருதுநகர் மாவட்டம் வரை குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி விளங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சியின்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    புஷ்கரம் என்பது புனித தீர்த்தமாகும். புஷ்கர விழாவின்போது அனைத்து தெய்வங்கள், தேவுக்கள், ரிஷிகள் மற்றும் அனைத்து நதிகள் நதியில் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் புஷ்கர விழாவில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இதையடுத்து தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தொடக்கத்தில் இதுபற்றி விழிப்புணர்வு மக்களுக்கு போதிய அளவு இல்லை.

    பின்னர் ஆன்மீக அமைப்புகளின் முயற்சியால் புஷ்கரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புஷ்கர விழாவுக்கு கடும் எதிர்பார்ப்பு உண்டானது. புஷ்கர விழாவுக்காக தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகள் சரிசெய்யப்பட்டன. குறிப்பாக பாபநாசம், அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், நெல்லை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    படித்துறைகளுக்கு செல்லும் பாதைகள் சரிசெய்யப்பட்டது. ஆற்றில் மணல் மூட்டைகள் போடப்பட்டு பக்தர்கள் நீராட வசதி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி பாபநாசத்திலும், நெல்லையில் மகா புஷ்கர விழாவினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.

    அன்று முதல் தொடர்ந்து தாமிரபரணி படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் காலையில் சிறப்பு வேள்விகள், யாகங்கள், வழிபாடுகளும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெற்று வருகிறது. மகா ஆரத்தியை காணவும், ஆற்றில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்துள்ளார்கள். காசியில் இருந்து வேத பண்டிதர்கள் மற்றும் சாமியார்கள், சாதுக்கள் நெல்லையில் முகாமிட்டுள்ளார்கள்.

    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் தீப ஆரத்தி நடந்த போது எடுத்தபடம்

    உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளின் பார்வை நெல்லை தாமிரபரணியின் மீதே உள்ளது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பலரும் தாமிரபரணியை நோக்கி படையெடுத்து வந்துள்ளார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், புதுவை, ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். 12 நாட்களும் நீராடுவதற்காக நெல்லையில் தங்கும் விடுதிகள் அறை எடுத்தும், தனி வீடுகள் வாடகைக்கு எடுத்தும் தங்கியுள்ளார்கள். அனைவரும் இந்த சிறப்பு வழிபாட்டிற்காக தேவைப்படும் பூஜை பொருட்கள் மற்றும் மாலை, பூ என அனைத்தையும் கொடுத்து வழிப்பட்டு வருகின்றனர்.

    பாபநாசம் தொடங்கி புன்னாக்காயல் வரை அனைத்து தீர்த்தங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தொடக்க நாட்களில் ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்பட்டது. பின்னர் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 8 நாட்களில் நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை மட்டுமே 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது பக்தர்கள் அதிகளவில் வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் தாமிரபரணி கரையில் ஆன்மீக அமைப்புகளால் நடத்தப்படும் யாகங்கள், வேள்விகளில் பங்கேற்று சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து வருகிறார்கள். மொத்தத்தில் புஷ்கர விழா தொடங்கிய நாளில் இருந்தே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் விழா கோலமாக காட்சியளிக்கின்றன. அன்னதானம் உள்ளிட்ட தான தர்மங்களும் நடைபெற்று வருகின்றன.

    தாமிரபரணியின் புகழுக்கு மகுடம் சூட்டும் அற்புத விழாவாக இது அமைந்துள்ளது. தாமிரபரணி மகா புஷ்கரம் இந்த ஆண்டில் வழிபாட்டோடு நின்றுவிடாமல், இயற்கை வனப்பினை கொண்டாடுவதற்கும், பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்வதற்கும், கலையை ரசிப்பதற்கும் இந்த புஷ்கரத்தினை ஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

    அதன்படி ஆற்றின் கரையோர ஆலயங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திர கீல தீர்த்ததில் நீராடும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதேபோல் நெல்லை அருகன்குளம் தாமிரபரணி நதிக்கரையில் ராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த ஜடாயு தீர்த்தத்திலும், சீவலப்பேரியில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணையும் முக்கூடல் தீர்த்தம் முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் உள்ள குரு ஸ்தலமான கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    நீராட வரும் பக்தர்களுக்காக மாவட்ட, உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர், சுகாதார வசதிகளை செய்துள்ளன. இரு மாவட்ட போலீசார் 12 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். புஷ்கரணி எனப்படும் பக்தர்கள் நீராடும் இடங்களில் ஆற்றில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

    இனி இப்படி ஒரு விழாவை காண இன்னும் 12 ஆண்டுகளும், மகா புஷ்கரத்தை காண 144 ஆண்டுகளும் காத்திருக்க வேண்டும். அடுத்த 12-வது ஆண்டில் புஷ்கரத்தை காண நமக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் மகா புஷ்கரம் என்பது காணக்கிடைக்காத அரிய வாய்ப்பு. இதை உணர்ந்து பலரும் ஆற்றில் புனித நீராடி , வழிபாட்டில் பங்கேற்று வருகிறார்கள்.
    வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.
    வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், ‘சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.

    * வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியை கண்டு வழிபடலாம்.

    * சிருங்கேரியில் சரஸ்வதி கோவிலில் ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.

    * கர்நாடக மாநிலம் பேலூர் என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நடனமாடும் கோலத்தில் காட்சி தரும் சரஸ்வதியை கண்ணார கண்டு மகிழலாம்.

    * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள்.

    * ஜப்பானியர்கள் ‘பென்டென்’ என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார்.

    * இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்துப் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர்.

    * விஜயதசமி நாளில் பாலித்தீவில் ‘தம்பாத் ஸரிம்’ என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் விரதம் இருந்து கொண்டாடுகிறார்கள்.
    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மனை பல்வேறு ரூபங்களில் வழிபடுவார்கள். தொடர்ந்து 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

    மகிஷன் என்ற அசுரன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய பிரம்மன், மகிஷன் முன்பாக போய் நின்றார். பிரம்மனைக் கண்டதும் மகிஷன் மனம் மகிழ்ந்தான். தனக்கு அழிவில்லா வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் அசுரன் கேட்டான்.

    ‘பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேள்’ என்றார் பிரம்மன்.

    இதையடுத்து, ‘எனக்கு அழிவு வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை மகிஷன் கேட்டான்.

    பிரம்மதேவரும் அப்படியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர் களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது அவனது எண்ணமாக இருந்தது. அந்த தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான்.

    மகிஷனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள்’ என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு.

    தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள். ‘மகாலட்சுமி’ என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் என்பது பொருளாகும். அவளிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தம் ஆனாள்.

    சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

    போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10-ம் நாளில் மகிஷாசூரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.

    கொடியவனான மகிஷாசூரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசூரன் அழிந்த தினத்தை, அன்னை வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடிவருகிறோம். இந்தியாவில் ‘தசரா’ என்ற பெயரில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது அனைவரது நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

    பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    நவராத்திரி என்பது பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழா என்பது ஒன்பது விதமான முறைகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    நவராத்திரி என்பது பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் கொண்டாட்ட முறைகள் என்பது சற்று மாறுபட்டு வருகின்றது. நவராத்திரி திருவிழா என்பது ஒன்பது விதமான முறைகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை ஒன்றுக்கொன்று சற்று மாறுபட்டு இருப்பினும் ஒன்பது இரவுகளில் மட்டுமே கொண்டாட்டம் என்பது மட்டும் ஒரே மாதிரியாகவே உள்ளது.

    தாண்டியா ஆட்டத்துடன் கூடிய குஜராத் நவராத்திரி

    நவராத்திரியின் ஒன்பது நாளும் மாலைநேர வழிபாடு என்பது தாண்டியா ஆட்டத்துடன் தான் மேற்கொள்ளப்படும். மாலை நேரங்களில் மகா சக்தியை வழிபடுவதற்கான புதிய பானை கொண்டு வருவர். அதில் சிறு சிறு ஓட்டை இடப்பட்டு இருக்கும். அதன் உள் ஓர் விளக்கு ஏற்றி மகா சக்தியை வழிபாடு செய்வர். இந்த பானைக்கு பெயர் கர்டி. இந்த தீப நிகழ்வுக்கு பின் ஆண்,பெண் இருபாலரும் கையில் தாண்டியா குச்சிகளுடன் கூடிய தாண்டியா நடனத்தை ஆடுவர்.

    மேற்கு வங்காளத்தின் துர்க்கா பூஜை


    நாட்டின் கிழக்கத்திய பகுதிகளில் அதிகமாகவே துர்க்கா பூஜை என்றவாறு கொண்டாடப்படுகிறது. மகிஷனை கொன்ற துர்க்கைதான் பிரதான தெய்வமாக கொண்டாடப்படுகிறது. இங்கு வீடுகள் மட்டுமின்றி மக்கள் கூடும் இடங்களில், பொது பூங்காக்களில் பெரிய உயரமான துர்க்கா உருவங்கள் இடம் பெற செய்து ஒன்பது நாட்களும் வழிபட்டு பின்னர் துர்க்கா பூஜை முடிந்து அச்சிலைகளை கங்கை ஆற்றிலும் கடல் பகுதிகளிலும் கரைத்து விடுவர். வெகு விமர்சையாக கொண்டாடப்படும் துர்க்கா பூஜை காலங்களில் மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் துர்க்கையின் அருள் வேண்டி பூஜைகள் நடத்தப்படும்.

    பஞ்சாப்பின் நவராத்திரி

    பங்சாப் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் ஏழு நாட்கள் மகா சக்தியின் வடிவங்கள் வணங்கப்படும் அந்த நாட்களில் மாலை நேரங்களில் பூஜை மேற்கொள்ளப்பட்டு இறைபாடல்கள் பாடப்பட்டு கொண்டாடப்படும். பிறகு அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் விரதம் மேற்கொள்ளப்பட்டு அவரவர் வீட்டிற்கும் ஒன்பது கன்னி பெண்களை அழைத்து வந்து பூஜை செய்து பரிசளித்து அனுப்பி வைப்பர். இந்த பெண்களை “கன்ஜக்” என்றவாறு தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றி வணங்குகின்றனர்.

    மலர் பதாகைகளுடன் ஆந்திர நவராத்திரி

    ஆந்திராவில் நவராத்திரி விழா என்பது “பத்தகம்மா பண்டூக” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். நவராத்திரி நாட்களில் பெண்கள் பாரம்பரியமான உள்ளூர் பூக்களை கொண்டு மலர் பதாகைகளை தினமும் பூஜைக்கு செய்து வழிபடுவர் நவராத்திரியின் கடைசி நாளன்று அனைத்து மலர் பதாகைகளையும் ஒன்றாக ஆற்றிலோ, கடலிலோ கொண்டு சென்று போட்டுவிடுவர்.

    செல்வ வளங்களை பெருக்கும் மஹாராஷ்டிரா நவராத்திரி

    மஹாராஷ்டிராவில் நவராத்திரி விழா என்பது ஓர் புதிய தொடக்கத்தை ஆரம்பிக்கும் விழாவாகவே அமைகிறது. இந்நாட்களில் சொத்துக்கள் வாங்குவது, புதிய வியாபார திட்டங்களை மேற்கொள்வது போன்ற செல்வ வளங்களை பெருக்கும் செயல்களை செய்கின்றனர். பெண்கள் திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து நெற்றியில் திலகமிட்டு புதிய பரிசுகளை வழங்கி கவுரவிப்பர். அபோல் குஜராத்தில் நடைபெறும் தாண்டியா நடன நிகழ்வு அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் நடைபெறும்.

    ஹிமாசல பிரதேச நவராத்திரி

    அங்கு நவராத்திரி என்பது மற்ற பகுதிகளில் நவராத்திரி முடியும் காலகட்டத்தில் தான் இங்கு தொடங்கும் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி வந்த நாள் என்பதை “குல்லு துஸ்ரா” என்றவாறு கொண்டாடப்படுகின்றனர். துர்க்கா தேவியையும் பூஜை செய்வர். குடும்பத்தினருடன் விருந்து மேற்கொள்வர். 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவில் கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற விதம், விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், ‘முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு’ என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை. சில விஷயங்களில் மட்டும் மாற்றங்கள் வந்து விட்டன.
    முன்பெல்லாம் 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள்.

    அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள்.

    ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தசரா குழுக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தசரா குழு இருக்கிறது என்றால் 10 முதல் 50 பேர் வரைதான் இருப்பார்கள். ஆனால் இன்று 50 முதல் 150 பேர் வரை இருக்கிறார்கள்.

    இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தசரா குழுவினர் நடந்தே ஊர், ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது வாகன வசதி வந்து விட்டது. முன்பு 5 ரூபாய் முன்பணம் கொடுக்க கஷ்டப்படுவார்கள். ஆனால் இப்போது வேடமிடுபவர்களிடம் பணம் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.

    முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள். முன்பு ஆடை அலங்காரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்போது அலங்காரங்கள் கன கச்சிதமாக போடப்படுகின்றன. முன்பு விரத முறைகளில் கடுமை இருக்கும். சிலர் விரத நாட்களில் வீட்டுக்கே வர மாட்டார்கள். உணவு, தூக்கம் மற்றும் தினசரி பழக்க வழக்கங்களில் கடும் கட்டுப்பாடுகள் உண்டு. குலசையில் கொடி இறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வர முடியும். தற்போது அது மாறி விட்டது.

    முன்பெல்லாம் ஒரு குழுவில் 4 அல்லது 5 பேர்தான் காப்பு கட்டுவார்கள். இப்போது வேடமிடும் எல்லாரும் காப்பு கட்டுகிறார்கள். அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருஷங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது.

    ‘அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்’ என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்பார்கள். வறுமை காரணமாக காதில் கம்மலுக்கு பதில் வத்தலை கட்டி அணிந்திருப்பார்கள். இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள்.

    குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள்.

    இப்போது காணிக்கை கேட்டால் ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் வறுமையால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் அத்தியாவசிய தேவையை கூட பெற வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று வசதி வாய்ப்புகளுடன் செல்வ செழிப்பான நிலையில் இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான். 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. அந்த கதை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குலசையில் தசரா விழா தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். அவர் தவத்தில் சிறந்தவர். ஒரு நாள் அவரது இருப்பிடம் வழியாக மகா முனிவரான அகத்தியர் வந்தார். அவரை பார்த்தும், பார்க்காதது போல் இருந்த வரமுனி ஆணவ செருக்கால் மதிக்கவில்லை. மாறாக அகத்தியரை அவமதிக்கவும் செய்தார். இதை கண்டு கோபம் அடைந்த அகத்தியர் வரமுனிக்கு கடும் சாபம் கொடுத்தார். ‘வரமுனியே! நீ உன் உருவம் இழந்து எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாய்!’ என்றார். அக்கணமே வரமுனி எருமை தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். முனிவர்களை கொடுமைப்படுத்தினார்.

    மகிஷாசுரனின் கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தினர். அவர்கள் வேள்வியில் தோன்றிய அன்னை ஆதிபராசக்தி மகிஷாசுரனை அழிக்க, விரதம் இருந்து அவனோடு போர் புரிய புறப்பட்டாள். மகிஷாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் விதத்தில் தசரா விழாவின்போது பக்தர்கள் அம்மன், கடவுள் வேடங்களை தரித்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    காளிவேட மகிமை

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. அம்மன், சூரனை சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள்.

    காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். கொடியேற்றத்திற்கு பின் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.

    தலையின் பின்புறம் தொங்கும்படி கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும், அட்டையாலும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்க தக்கவாறு சிறு துளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகி கொள்ளக்கூடிய வீர பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்பு நிற பூச்சு, மரப்பட்டையாலும், இரும்பு தகடாலும், அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் 8 கைகள், சிவப்பு புடவை, மனித தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, ருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சலங்கைகள், கையில் இரும்பு வாள் இவையே காளியின் அவதாரமாக அணிவதற்கு உரிய பொருட்கள். இப்பொருட்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கும். சமீபகாலமாக முத்தாரம்மன் அருள்பெற இளம்பெண்களும் காளி வேடம் போட தொடங்கி உள்ளனர்.
    அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது. அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

    பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.

    முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல அம்மனும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிவது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் வியப்புடன் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார்.

    ‘ஞானம்’ என்றால் ‘பேரறிவு’. ‘மூர்த்தி’ என்றால் ‘வடிவம்’ என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ‘ஈகை சுரப்பவர்’ என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால், பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.

    பாண்டி நாடு முத்துடைத்து என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாக கொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகை முத்தாரம்மன் என அழைக்கின்றனர். அம்மை போட்டவர்களுக்கு முத்து போட்டதாக கூறுவர். முத்துக்கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் வழிந்தோட செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

    கனவில் தோன்றிய அம்மன்

    அகிலம் போற்றும் நாயகி, அன்னை முத்தாரம்மனை திருமேனியாக கண்குளிரக் கண்டு தரிசிக்க மக்கள் விரும்பினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னை திரு உளம் கொண்டார்.

    கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாகுமரி அருகே மைலாடி என்ற ஊருக்கு செல்லும்படி கட்டளையிட்டார். அதேபோல மைலாடியில் உள்ள ஒரு சிற்பியின் கனவில் தோன்றி தனது உருவம் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் சிற்பிக்கு காட்சி அளித்து அங்குள்ள ஆண், பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திரு உருவ சிலையை வடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அந்த சிலையை தாங்கள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் வைக்க உத்தரவிட்டார். சிற்பி மெய்சிலிர்த்து போனார். உடனே அவர் அம்மன் கனவில் கூறியவாறு அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை வடித்தார். இறையருள் ஆட்விக்க குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார். சிற்பி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலையை செய்து வைத்து இருந்தார். அதை அர்ச்சகர் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினார். அன்னையின் விருப்ப படியே அந்த சிலை சுயம்புவாக அம்மன் எழுந்தருளி உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் தல மரம் ேவம்பு.

    தசரா விழா

    தசரா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மைசூர் தான். தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினத்தில் மைசூரை மிஞ்சுகிற அளவிற்கு ஆண்டுதோறும் பிரமாண்ட தசரா விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் முதல் 15 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவன், கிருஷ்ணன், காளி உள்ளிட்ட வித, விதமான வேடத்தில் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேள வாத்தியங்கள் முழங்க ஒவ்வொரு குழுவினரும் ஆடி, பாடி ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைப்பர்.

    அம்பிகை 9 இரவுகள் பல்வேறு ஆயுதங்களை வைத்து பூஜை செய்தாள். இது நவராத்திரி என அழைக்கப்படுகிறது. 10-ம் நாள் விஜயதசமி அன்று மகிஷனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினாள். இதை நினைவுகூரும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-ம் நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். அன்று மக்கள் கூட்டம் கடல்போல காட்சி அளிக்கும்.

    இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலை கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்


    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து குலசை செல்பவர்கள் திருச்செந்தூர் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். திருநெல்வேலி வரை ரெயிலில் வந்து அங்கிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை பஸ், கார் மூலம் சென்றடையலாம். தூத்துக்குடி வரை வர முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளது. விமானத்தில் செல்ல விரும்புபவர்கள் திருவனந்தபுரம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் இத்தலத்தை அடையலாம்.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் போடுபவர்கள் பெற முடியும்.

    வேடம் போடும் பக்தர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பிறகே வேடம் அணிதல் வேண்டும்.

    சமீபகாலமாக சில ஊர்களில் பக்தர்கள் குலசேகரன் பட்டிணத்தில் கொடி ஏறும் முன்பே மூக்குத்தி, கம்மல், வளையல், கொலுசு போன்ற அலங்காரங்களை செய்யத் தொடங்கி விடுவார்கள். இது ஆலய ஐதீக வழிபாட்டு முறைகளுக்கு எதிரானது.

    ‘‘காப்பு கட்டும் முன்பு ஏன் இப்படி வேடம் போடுகிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘காப்பு கட்டிய தினத்தன்று காது குத்தினால் கம்மல் போடும் போது வலிக்கும். இப்போதே காது குத்தி கம்மல் போட்டு விட்டால் காப்பு கட்டி வேடமணிந்து ஆடும் போது வலிக்காது. கம்மல் போட்டிருப்பதும் பழகி விடும்’’ என்கிறார்கள்.
    வலியோடு ஆட முடியாது என்பதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே கம்மல் அணிந்து, சிவப்பு கலரில் வேட்டி உடுத்துவதாக சொல்கிறார்கள். அம்மனுக்காக நம்மையே நாம் தாழ்த்திக் கொண்டு வேடம் அணியும் போது, வலியை காரணம் காட்டி விதிகளை மீறுவது எந்த வகையில் தர்மமாகும்?

    வேடம் அணிபவர்கள் அது எந்த வேடமாக இருந்தாலும் அது புனிதமானது என்பதை முதலில் உணர வேண்டும். அந்த வேடத்துக்குரிய புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும். சமீப காலமாக பல பக்தர்கள் அந்த புனிதத்தை காப்பாற்றுவதில்லை என்ற வேதனை தசரா குழுக்களில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் காணப்படுகிறது.

    விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்கள் வெளி இடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்ற கடுமையான விதிமுறை முன்பொரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக ஓட்டல்களில் டீ குடிக்கிறார்கள்.

    சிலர் புகை பிடிக்கும் தவறை செய்கிறார்கள். தற்காலிகமாக மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, புகை பிடிக்கிறார்கள். பிறகு மாலையை மீண்டும் போட்டுக் கொள்வார்களாம். இது மிகப்பெரிய பாவமாகி விடும் என்று ஆன்மிக பெரியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வேடம் போடுபவர்கள் எப்போதும் அன்னையின் திருநாமங்களை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். அன்னைக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்தல் வேண்டும். அதுதான் முத்தாரம்மனின் பேரருளைப் பெற்றுத் தரும்.

    மகா புஷ்கர விழாவின் 7-வது நாளான இன்று தாமிரபரணியின் படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த புஷ்கர விழா 144 ஆண்டுக்கு ஒருமுறை வந்துள்ளதால் மகா புஷ்கரமாகும்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    மகா புஷ்கர விழாவின் 7-வது நாளான இன்று தாமிரபரணியின் படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீர்த்தக்கட்டங்களில் ஆன்மீக அமைப்புகள் சார்பாக சிறப்பு வேள்விகள் நடைபெற்றன. மாலையில் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. மாலையில் பஞ்சபூத மேடையில் 16 வகையான தீபங்கள், 5 வகை உபச்சாரங்களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆராத்தி நடத்தப்படுகிறது.

    அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்துவரும் புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் கைவல்ய நவநீத சிறப்பு மாநாடு நடைபெற்றது.



    காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடந்துவரும் புஷ்கர விழாவில் இன்று காலை துர்கா ஹோமம் நடந்தது. நெல்லை குறுக்குத்துறையில் புஷ்கரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் இன்று காலை நிருசிம்ஹ ஹோமம் நடந்தது.

    அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்றும் பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. வண்ணார்பேட்டை குட்டத்துறை படித்துறையில் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு வழிபாடுகள் நடந்தன.

    முறப்பநாடு கைலாசநாதர் கோவில் முன்புள்ள தாமிரபரணிக்கு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் ஆற்றில் நீராடி வழிபட்டார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தில் உடலில் ஏற்பட்டுள்ள சகல வியாதிகளை குணப்படுத்தவும், மனநிம்மதிக்கான ஸ்ரீதன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

    மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி கரையோர கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாபநாசம் கோவில், அம்பை கோவில்கள், சேரன்மகாதேவி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், கரிசூழ்ந்தமங்கலம், நெல்லையப்பர் கோவில், நவ கைலாய கோவில்கள், நவ திருப்பதி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து இடங்களிலும் வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் குவிந்துள்ளார்கள். அவர்கள் சாமி தரிசனம் செய்து சிறிய கேன்களில் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.
    ×