search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    குலசேகரப்பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். முத்தாரம்மன் தன் உருவத்தை காட்டி சிலை செய்ய சொன்ன வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குலசேகரப்பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர்.

    அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள். ‘எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிறிய ஊர் உள்ளது. அங்கு செல். அனைத்தும் நிறைவேறும்’ என்று கூறினாள்.

    மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர்.
    இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார். அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள்.

    அதுமட்டுமல்லாமல், தன் உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள். பின்னர், தனது மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள்.

    தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள் சுயம்புவாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்தக் கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்தக் கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி. கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார்.

    அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார். முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர், அவ்வூரைச் சேர்ந்தச் சிலருடன் மைலாடி சென்றார். சுப்பையா ஆசாரி யார் என்று விசாரித்து அறிந்து அவரைச் சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர்.

    முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்திஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இதுபோல் அம்பாளும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.

    இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது. மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும்.

    இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது. 
    விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது. தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம்.
    விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது.

    கோதாவரி நதிக்கரையில் போகவதி என்னும் பட்டணத்தை நற்சோமதிமகராஜா என்பவன் ஆண்டு வந்தான். அவனது சபைக்கு நாரத மகரிஷி ஒரு சமயம் வந்தார். அப்போது, இந்தப் பூவுலகில் எந்த தலம் மிகவும் சிறந்த புண்ணியஸ்தலம்?...’ என மன்னன் கேட்டான்.

    அதற்கு நாரதர், ‘‘எந்தப் புண்ணியத் திருத்தலத்தில் பித்ருக்கள் திலநீர் பிண்டதானத்தை எதிரே தோன்றி ஏற்பார்களோ, அதுவே உத்தமமான புண்ணியஸ்தலம்!... ’ என்று பதில் அளித்தார். தலத்தின் பெருமையை மன்னவனே அறியட்டும் என ஊர்ப் பெயரைக் கூடச் சொல்லாமல் விடை பெற்றார் நாரதர். நாரதர் சொன்னபடி நற்சோதி மன்னன் இந்தியாவில் உள்ள அனைத்து தலங்களிலும் தில் (எள்) தர்ப்பணமும், பிண்டதானமும் செய்து கொண்டு வந்தான். கும்பகோணம் வந்து காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணமும் செய்தான்.

    ‘எவ்வளவோ புண்ணிய நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து விட்டேன். இன்னமும் பித்ருக்கள் யாரும் நேரில் காட்சி தந்து பிண்டங்களை வாங்க வில்லையே நம் நாட்டுக்கே திரும்பிச் சென்று விடலாமா?....’ என்று மனம் உடைந்து வருந்தினான் மன்னன். அப்போது நாரதர், மன்னன் முன் தோன்றினார். ‘‘கலங்காதே மன்னா! நான் கூறிய புண்ணியத்தலத்தின் அருகில் நீ வந்து விட்டாய் இங்கிருந்து கிழக்கே திருநாகேஸ்வரம் தலம். அதையடுத்து திருவீழிழலை... அதற்கு அப்பால் சிலகாததூரம் சென்றால் ‘திலதைப்பதி’ என்ற புண்ணியதலம் உள்ளது.

    அங்கு ஓடும் ‘அரசி’ லாற்றில் நீராடி, தென்புலத் தாராகிய உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும், பிண்டதானமும் செய்தால் அவர்கள் உன் முன் தோன்றி அதை வாங்கி உண்பார்கள்...’ என்று அருளாசி வழங்கினார். திலதைப்பதி வந்த நற்சோதிமன்னன் அங்கே தவம் செய்து கொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசி பெற்றான்.

    மன்னன் வந்த நோக்கம் அறிந்த முனிவர், சிவாலயத்துக்குள் அழைத்துச் சென்று பொற்கொடி அன்னையையும், மந்தாரவனேஸ்வரர் பெருமானையும் தரிசனம் செய்வித்தார்! அமாவாசை தினத்தன்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம், பிண்டம் (அன்னம்) இவற்றை படைத்தான் மன்னன் பித்ருக்கள் அவன் முன் தோன்றி தங்கள் கரங்களால் பிண்டத்தை ஏந்தி சாப்பிட்டு மகிழ்ந்து நல்லாசி அளித்து மறைந்தனர்!

    ‘திலம்’ என்றால் ‘எள்’ என்று பொருள். ‘தர்ப்பணம்’ என்றால் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பித்ரு கடன்கள் ‘புரி’ என்றால் தலம். எனவே ‘திலதர்ப்பணபுரி’ என்றால் எள் தர்பணம் செய்ய சிறந்த தலம் என்று பொருள். இந்த ஆதி விநாயகர் கோவிலின் வழியாகச் சென்ற ஸ்ரீராமன் இங்கு தான் தன் தந்தை தசரத மகாராஜாவுக்கு பித்ருகடன் செய்துள்ளார்.

    பித்ரு சாபம், பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இங்கு நேரில் வந்து தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். தவிர, தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் இந்த ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம். ஆதி விநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக கணபதி மனித உருவத்தோடு ஜடாமுடி ஆயுதங்களை இரு கைகளிலும், வலக்கையை இடக்காலின் மீது வைத்த படியும் காட்சி கொடுக்கிறார்.

    ஆதியில் பார்வதி தேவி பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் தான் இப்படி நரமுக விநாயகராகக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.
    இந்த கோவிலின் ஈசன் பெயர் முக்தீஸ்வரர். இறைவி பெயர் சொர்ணவல்லி.

    திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்க வேண்டும். பின்பு அங்கிருந்து எரவாஞ்சேரி வழித்தடத்தில் இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஆதி விநாயகர் கோவிலை அடையலாம்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், வி‌ஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிரு‌ஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.

    ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 6-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் சிம்ம வாகனத்தில் மகி‌ஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ம் நாளான நேற்று இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    10-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதைக் குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. தசரா வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதைக் குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம். காளிவேடம் போட்டு இருப்பவர்கள் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வார்கள். காளி இல்லாத தசராக் குழுக்கள் இருக்காது.

    வரும் 19-ந் தேதியன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு நடத்தப்படும் சூரசம்ஹாரத்தன்று காளி வேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர் மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள்.

    அம்மன் மகிசனைக் கொல்ல புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருவார்கள். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துவார்கள். இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் அணிந்து இருப்பவர்கள் அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள், இது தமிழ்நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

    காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள்.

    அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து காலை, மாலை இரு நேரமும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாள்கணக்கில் காளிவேடம் ஏற்று ஊர், ஊராக சென்று வருவார்கள்.

    தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் - இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும்.

    இப்பொருட்களின் மொத்த எடை அளவு இருபது முதல் முப்பது கிலோ வரை இருக்கும். கடும் விரதம் மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தை போடுபவர்களை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.  காளிவேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே வந்ததாகப் பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கை அளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி உள்ளது. இதனால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை நிலவுகிறது. எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாகி விட்டது.

    காளி வேடத்தை முதன் முதலில் போட்டவர் யார் என்று பல்வேறு தசரா குழுவினரிடமும் கேட்டு ஆய்வு செய்தபோது, குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் என்பவர்தான் முதன் முதலாக முத்தாரம்மன் ஆலயத்தில் விரதம் இருந்து காளி வேடம் போட்டதாக தெரிய வந்தது. அவரைத் தொடர்ந்து சேது பிள்ளை என்பவர் காளி வேடம் அணிந்ததாக கூறப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம், சிறு நாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, உடன்குடி சந்தையடியூர், சுண்டங்கோட்டை ஊர்களைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல ஆண்டுகள் காளி வேடமிட்டு சாதனை படைத்துள்ளனர்.
    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 7-ந் திருநாளன இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவில் 7-ந் திருநாளன இன்று (16-ந் தேதி) மாலை 4 மணிக்கு மகிசாசூரன்,வீதியுலா, இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    திருவிழா தொடங்கி யதையொட்டி தினசரி காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகங்களும், பகல் 1 மணிக்கு ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணி முதல் சமய சொற்பொழிவு பட்டி மன்றம், இன்னிசை கச்சேரி போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    10-ந் திருநாளான வருகிற வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.திருவிழாவிற் கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.
    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் தொடக்க காலங்களில் கொடி மரம் எதுவும் நிறுவப்படவில்லை. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடி மரம் வைக்கப்பட்டது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் பிரமாண்டமான விளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. விளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    11. குலசையில் சித்திரை மாதம் 1-ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    12. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1-ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    13. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    14. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    15. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    16. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடை பெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    17. அம்மை போட் டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    18. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    19. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குலதெய்வமாக கருதுகிறார்கள்.

    20. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    21. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக் கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    22. குலசை கோவிலுக்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    23. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    24. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    25. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.



    26. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    27. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    28. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    29. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    30. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    31. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு 15 லட்சம் பக் தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    32. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    33. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2-வது இடத்தில் உள்ளது.

    34. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    35. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம் மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்றவற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    36. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    37. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    38. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    39. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    40. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    41. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    42. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    43. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    44. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    45. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    46. குலசையில் தீயில் இறங்கும் பூக்குழி விழா நடத்தலாமா என்று ஆலோசித்தனர். பக்தர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்றாலும் ஆறுமுகநேரியில் தசரா குழுவினர் பூக்குழி விழாவை நடத்துகிறார்கள்.

    47. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    48. காளி வேடம் அணிந்து வருபவர்களை மதியம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு கொடுத்து, புடவை எடுத்து கொடுப்பதை மிகச் சிறந்த நேர்ச்சையாக கருதுகிறார்கள்.

    49. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    50. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கைநிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.
    விநாயகருக்கு உகந்த சில வழிபாட்டு முறைகளை பின்பற்றி வழிபாடு செய்தால் திருமண தடை, நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
    செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.

    சுக்ல சதுர்த்தசி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும்.

    வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.

    மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.

    நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.

    வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.

    சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

    குழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும்.

    நாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது.
    வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடம், மேற்குத் தொடர்ச்சி மலை மீது முண்டந்துறை காட்டுப்பகுதியில் உள்ள பூங்குளம் என்ற இடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,725 மீட்டர் உயரத்தில் பிறந்து, வங்கக்கடலை நோக்கி ஓடி வரும் தாமிரபரணி, வழியில் பல நதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வந்து, புன்னக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது.

    அடர்ந்த காட்டுப் பகுதியான முண்டந்துறையில் பல ஆயிரம் ஆண்டுகளாக படிந்து இருக்கும் செடி, கொடிகளின் எச்சங்களும், மண்ணும் பஞ்சு மெத்தை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால், தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அங்கு பெய்யும் மழை நீர் முழுவதையும் அந்த இடம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, மழை அல்லாத காலங்களில் சிறுகச் சிறுக வெளிவிடும் போது அது, தாமிரபரணி ஆறாக உருவாகி, ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி வருகிறது. தமிழ் நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிறது என்ற பெருமை பெற்ற ஒரே நதி தாமிரபரணி.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் இந்த நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் 60 சதவீதம் அளவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீதம் அளவிலுமாக மொத்தம் 125 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தனது ஓட்டத்தை அந்த இரு மாவட்டங்களுக்குள் அடக்கிக் கொள்கிறது. தாமிரபரணியின் புகழ் வரலாறு, பல பக்கங்களைக் கொண்டது. ‘தாமிரபரணி மகாத்மியம்’ என்று தனியாக ஒரு நூல் உருவாகும் அளவுக்கு அதன் பெருமைகள் ஏராளமாக நிரம்பிக் கிடக்கின்றன. தாமிரபரணியின் பிறப்பிடம், அமைந்துள்ள மலை மீது அமர்ந்துதான் அகஸ்திய முனிவர் தமிழ் மொழியை உருவாக்கினார் என்று புராணங் கள் கூறுகின்றன.

    இப்போது உள்ளது போன்ற தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது. மகாபாரத இதிகாசம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த மகாபாரதத்திலேயே தாமிரபரணியின் புகழ் பாடப்பட்டு இருக்கிறது. அந்தக் காலத்திலேயே தாமிரபரணி நதியின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதைத்தெரிந்து கொள்ளலாம்.

    மகாபாரத இதிகாசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதிலும், அந்தக் காலத்திலேயே தாமிரபரணி ஆறு புகழ் பெற்று விளங்கியதால் தான் மகாபாரதத்தில் அது பற்றி பேசப்பட்டு இருக்கிறது என்பதிலும் சிறிதும் சந்தேகம் இல்லை. பழங்கால தமிழ் இலக்கியங்களில் ‘பொருநை’ என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றின் புகழ் பல இடங்களில் பாடப்பட்டு இருக்கிறது. மாமன்னர் அசோகரின் பாறைக் கல்வெட்டுக் களிலும் தாமிரபரணி ஆறு இடம்பிடித்து இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டினர் பலர், இந்தியாவின் புகழ் மிக்க வரலாறு பற்றிக் கேள்விப்பட்டு, அதனை நேரில் பார்க்க இங்கே வந்து சுற்றுப்பயணம் செய்து, தாங்கள் கண்டவற்றை ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

    அவ்வாறு வந்தவர்களில் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொரோட்டஸ், பிளினி ஆகியோரின் குறிப்புகளிலும் தாமிரபரணி கூறப்படுகிறது. கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிளாடியஸ் தாலமி, தனது ‘ஜியாக்ரபி’ என்ற புத்தகத்தின் 7-ம் பாகம் முதல் அத்தியாயத்தில் தாமிரபரணி ஆறு பற்றியும், கொற்கை நகர் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். தாமிரபரணி ஆறும், அந்த நதிக்கரையில் இருந்த புகழ்மிக்க நாகரிகமும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இவைபோல ஏராளம் இருக்கின்றன.

    பாண தீர்த்த மகிமை

    சிவபெருமான் திரி புராசுரர்களை சம்ஹாரம் செய்தபோது, விஷ்ணு பாணமாக இருந்தார். அசுரர்களை சம்ஹாரம் செய்தபிறகும் பாணத் தின் வெம்மை தணியாமல் தகித்தபடியே இருந்தது. எனவே, சிவமூர்த்தி அந்த பாணத்தை கலம்பகர்த்த தடாகத்தில் வைத்துவிட்டார். அகத்தியர் திருவுள்ளமுவந்து விடையளிக்கத் தோன்றிய தாமிரபரணி கலம்பகர்த்த தடாகத்தில் வெள்ளமெனப் பாய்ந்து பாணத்தின் வெம் மையைத் தணிவித்தாள். எனவே, இந்த பாணதீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு விஷ்ணு மூர்த்தியின் அனுக்கிரஹம் கிடைக்கும் என்று ஹயக்கிரீவர் திருவாய்மொழியாக தாமிரபரணி மஹாத்மியத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
    ராமர் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார். அந்த தீர்த்தம் “ஜடாயு தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் அழிந்து விடும் என்பது ஐதீகம்.
    தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் ராமருக்கு வழிப்பாட்டு தலங்கள் அமைந்துள்ளன. ராவணன், சீதையை சிறையெடுத்து சென்ற போது பட்சிகளின் அரசன் ஜடாயு போர் செய்து இறந்த இடம் நெல்லை அருகே அருகன் குளத்தில் உள்ளது.

    சீதா தேவியை ராவணன் சூழ்ச்சியால் சிறை பிடித்து கடத்திச் சென்ற போது ஜடாயுணும் பறவை ராவணனை வழி மறித்து போரிட்டது. ராவணன் சிவபெருமானிடம் தவம் செய்து பெற்ற தெய்வ வாளால் ஜடாயுவின் இறக்கையை வெட்டி வீழ்த்தினார்.

    ஜடாயு தரையில் விழுந்து குற்றுயிரும் குலை உயிருமாய் நடந்த கதையை கூறினார். பின் தனக்கு மகன் ஸ்தானத்தில் இருந்து ராமர்தான் திதி செய்ய வேண்டும் என்று கேட்டு உயிர் விட்டார்.

    உடனே ராமர் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார். அந்த தீர்த்தம் “ஜடாயு தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. அந்த தீர்த்தத்தை கொண்டு ஜடாயுவுக்கு ராமர் தர்ப்பணம் செய்தார்.

    இதன் அருகே ராமன் பெயரை கொண்ட ராம தீர்த்தம், சிவபெருமான் பெயரை கொண்ட சிவதீர்த்தம் உள்ளது. இந்த மூன்று தீர்த்தத்தில் யார் நீராடல் செய்கிறார்களோ, அவர்களுக்கு நூறு பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து விடுகிறது என்பது ஐதீகம்.

    இங்கு ஒரு மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் ராமர் ஜடாயுவின் பிண்டத்தினை கரைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீர்த்தத்தினை எடுத்து சென்று வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தியும், தங்கள் தொழில் நிறுவனத்தில் தெளித்தும் மக்கள் நற்கதி பெற்று வருகின்றனர். நோய், சூனியம், தீராத வலி மற்றும் பித்ரு கடன் கழிக்க இந்த ஆலயம் வந்து வழிபடுவது பலன்களைத் தரும்.

    இந்த ஆலயம் நெல்லை சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாழையூத்து பைபாசில் தாமிரபரணியை கடக்கும் பாலம் அருகே உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து மினி பஸ், சேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.

    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.
    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவர் தவலிமை மிக்கவராக இருந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமதியாதையும் செய்தார்.

    மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக குலசேகரன் பட்டினத் தில் எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினார். தனது விடா முயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார்.

    மகிசாசுரனின் இடையுறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி, மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.

    தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதம், விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம்.
    தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதம், விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவர். இதற்கு காரண காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.

    திருமஞ்சணை பிரசாத மகிமை

    குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும். நலமெல்லாம் வந்து சேரும்.

    அன்னதானம்

    குலசை முத்தாரம்மன் கோவிலில் மதியம் தினமும் 1000 பேருக்கு அன்னதான திட்டத்தின்கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    குலசை கோவிலுக்கு வருபவர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு உடனே ஊர் திரும்பி விடலாம். பால்குடம் எடுப்பதாக வேண்டி கொண்டவர்கள் முதல் நாள் இரவு கண்டிப்பாக கோவிலில் தங்க வேண்டும்.

    நோய் தீர்க்கும் வேப்பிலை

    குலசை சன்னிதியில் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மாவிளக்கு பூஜை

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை நடைபெறும். இந்த பூஜையின்போது தரும் மாவை சாப்பிட்டால் தீராத நோயும், குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் குணமாகி நலம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடினர். சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
    குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையொட்டி விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் பக்தர்கள் தினமும் தாமிரபரணி ஆற்றில் கூட்டம், கூட்டமாக வந்து புனித நீராடி செல்கின்றனர்.

    நேற்று 5-வது நாளிலும் ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் புனித நீராடி, ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    இந்த நிலையில் பாபநாசத்தில் தமிழ்நாடு ஐயப்ப சேவா சமாஜத்தை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் ஐயப்ப சுவாமி சிலைக்கு பூஜைகள் நடத்தி தாமிரபரணி ஆற்றில் நீராட்டு நடத்தினர். ஐயப்ப சுவாமி சிலையுடன் ஏராளமான ஐயப்ப பக்தர் கள் அங்கு புனித நீராடினர்.

    பின்னர் பாபநாசத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். இதேபோல் பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேற்று பாபநாசம் ஆற்றில் புனித நீராடி விளக்கு ஏற்றியும், ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர்.

    நெல்லை அருகே சீவலப்பேரியில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்ததையும், இதில் பங்கேற்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் ஏராளமான பக்தர்கள் வரிசையாக வந்து நீராடினர். அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் மறைந்த காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சுவாமி ஆசி வழங்குவது போல் மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. அதனை பக்தர் கள் வணங்கி சென்றனர்.

    குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மேலும் அவர்கள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, குறுக்குத்துறை மேட்டில் நடைபெற்ற யாகசாலை பூஜையிலும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகில் உள்ள ஜடாயு துறை மற்றும் மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் முன்பும் பக்தர்கள் புனித நீராடினர். சிந்துபூந்துறை சிப்தபுஷ்ப தீர்த்த கட்டத்திலும் ஏராளமானோர் புனித நீராடி தாமிரபரணி அன்னையை வணங்கினார்கள்.

    பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி துர்க்காம்பிகை கோவிலில் நேற்று காலை வைரவ ஹோமமும், வடுகு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து ஊர்வலமாக பக்தர் கள் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 7 சிவாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு தீப ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் ஆற்றில் தீபம் ஏற்றி விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
    ×