search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    தாமிரபரணி படித்துறை தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவுநாளான 24-ந்தேதி 5,004 திருவிளக்கு பூஜை நடக்கிறது.
    தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறக் கூடிய படித்துறைகள் அனைத்தும் தீர்த்தக்கட்டம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு முதல் புன்னக்காயல் வரை பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றில் படித்துறைகளில் பூஜைகள் நடக்கிறது. முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஏரல், முக்காணி, ஆத்தூர், சேர்ந்தப்பூமங்கலம் ஆகிய இடங்களில் புஷ்கர விழா பூஜைகள் நடக்கிறது.

    இந்த படித்துறைகளில் அந்தந்த ஊர் மக்கள் சார்பில் தினமும் புஷ்கர பூஜைகள், சிறிய அளவிலான ஹோமங்கள் நடத்தப்படுகிறது. தினமும் மாலையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நதி ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.

    முறப்பநாட்டில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அமிர்த மிருத்ஞ்சய ஹோமம் நடக்கிறது. பிரமாண்டமான அதிருத்ர பெருவேள்வி நடக்கிறது. மக்கள் தாமிரபரணிக்கு விளக்கு ஏற்றி ஆராதனை செய்யும் வகையில் தீபலட்சுமி பூஜை நடக்கிறது. இதில் மக்கள் தீபங்களை ஏற்றி ஆராதனை செய்யலாம். விழாவின் நிறைவுநாளான 24-ந்தேதி 5,004 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி வெள்ளி கலைமான் வானத்தில் பகவதி அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 10-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவில் 2-ம் நாளான நேற்று முன்தினம் வணிகத்துறை சார்பில் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வாகன பவனி நடைபெற்றது.

    3-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு சென்னை பி.கே.ஆர் குரூப்ஸ் நிறுவனத்தலைவர் டி.ஆர். பாலகிருஷ்ணன்ராஜா ஏற்பாட்டில் பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், கலபம், குங்குமம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் அன்னதானம், மாலை சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும், 9 மணிக்கு கலைமான் வாகனத்தில் அம்மன் வாகன பவனி ஆகியவை நடைபெற்றது.
    ‘மகா புஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு (12 x 12 = 144) ஒரு முறை கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும்.
    (12-10-2018 முதல் 23-10-2018 வரை)

    ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் புனித நதிகளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா, கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு (12 x 12 = 144) ஒரு முறை கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும்.

    விழா பிறந்த கதை

    படைப்புக்கடவுளான பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள நீருக்கு ‘புஷ்கரம்’ என்று பெயர். எப்பேர்ப்பட்ட கொடிய பாவத்தையும் போக்கும் சக்தி இந்த புனித நீருக்கு உண்டு. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை கொண்டவர் குரு பகவான். இவருக்கு ஈடான சுபத்தன்மை வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது.
    பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ண பகவான் “புரோகிதர்களுள் நான் பிருஹஸ்பதி” என்று குறிப்பிடுகிறார்.

    குரு பகவானுக்கு பிருஹஸ்பதி என்ற ஒரு பெயர் உண்டு. கிருஷ்ண பகவான் குரு பகவானைத் தம் ‘சொரூபம்’ என்கிறார். அதாவது ‘நானே குரு’ என்கிறார் கிருஷ்ணர். இத்தகைய சிறப்பு பெற்ற குருபகவானின் அதிதேவதை என்ற அந்தஸ்து பிரம்மாவுக்கு உண்டு.

    பிரம்மாவின் புத்திரர் ஆங்கிரச முனிவர். இந்த ஆங்கிரசரின் புத்திரர் குரு பகவான். ஆக பிரம்மாவின் பேரப்பிள்ளையே குரு பகவான்.

    குருபகவானின் தவம்

    பிரம்மாவின் கையில் உள்ள புஷ்கரத்தைப் பெற வேண்டி அவரை நோக்கி கடுந்தவம் செய்தார் குருபகவான். இந்த தவத்தை மெச்சிய பிரம்மன், அவரது விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு வரமாக அளிக்க ஒப்புக் கொண்டார். ஆனால், அந்த புஷ்கரமோ பிரம்மனைப் பிரிந்து குருவுடன் செல்ல விரும்பவில்லை.

    பிரம்மன் ஏற்படுத்திய சமாதான உடன்பாட்டின் படி குருபகவான் மேஷராசி முதல் மீனராசி வரை உள்ள 12 ராசிகளிலும் இருக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் உகந்த ஒவ்வொரு புண்ணிய நதியிலும் ‘புஷ்கரம்’ தங்கி இருப்பதென முடிவு ஏற்பட்டது. அதன்படி, பின்வரும் பன்னிரெண்டு ராசிகளுக்குரிய நதிகளில் குருபகவானின் சஞ்சார காலங்களில் புஷ்கரம் தங்கியிருக்கும்.

    ராசி    -  நதி
    மேஷம்    -  கங்கை
    ரிஷபம்    - நர்மதை
    மிதுனம்    -- சரஸ்வதி
    கடகம்    - யமுனை
    சிம்மம்    - கோதாவரி
    கன்னி    - கிருஷ்ணா
    துலாம்    - காவிரி
    விருச்சிகம் - தாமிரபரணி
    தனுசு    - சிந்து
    மகரம்    - துங்கபத்ரா
    கும்பம்    - பிரம்மநதி
    மீனம்    - பிரணீதா

    குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.
    தாமிரபரணி புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் புனித நீராடல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தானங்கள் செய்வதும் முக்கியமானதாகும்.
    தாமிரபரணி புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் புனித நீராடல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தானங்கள் செய்வதும் முக்கியமானதாகும். இந்த 12 நாட்களும் இயன்ற அளவு தானம் செய்வது மிகவும் நல்லது. இயலாதவர்கள் இந்த 12 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் தங்களால் முடிந்த தானத்தை செய்யலாம்.

    யாருக்கு தானம் வேண்டும்? எங்கு தானம் செய்ய வேண்டும்? என்ன தானம் செய்ய வேண்டும்? எப்போது தானம் செய்ய வேண்டும்? எத்தனைப் பேருக்கு தானம் செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் பெரும்பாலானவர்களுக்கு மனதில் எழக் கூடும்.

    கவலையே வேண்டாம்... ... உங்கள் சக்திக்கேற்ப, நீங்கள் என்ன பொருட்களை தானம் கொடுக்க முடியுமோ, அதை கொடுங்கள் போதும். உங்களால் 100 பேருக்கு அன்னதானம் செய்ய முடியுமா? செய்யுங்கள். நீங்கள் ஒரு முறை செய்யும் தானம், பல மடங்கு பெருகுவதாக ஐதீகம்.

    தாமிரபரணி புஷ்கரம் விழாவில் கலந்து கொள்ள தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பயன்பெறும் வகையில் உங்கள் தானம் இருக்கலாம்.

    செருப்பு, குடை போன்றவை கொடுக்கலாம். ஆடைகள் வாங்கிக் கொடுக்கலாம். பழம், பிஸ்கட், தண்ணீர் வாங்கிக் கொடுக்கலாம். புஷ்கரம் நாட்களில் பெரும்பாலானவர்கள் தாமிரபரணி கரையோரங்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உள்ளனர். தானம் கொடுப்பவர்கள், அதற்குரிய பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். பித்ருக்களின் ஆசி உங்களுக்கு நிரம்பக் கிடைக்கும்.

    12-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்னென்ன தானம் செய்யலாம் என்று பொதுவாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-12.10.18 (முதல் நாள்) தங்கம், வெள்ளி, தானியங்கள், பூமி ஆகியவற்றை தானமாக வழங்கலாம். 13.10.18 (2-ம் நாள்) வஸ்திரம் (துணி), உப்பு, மாடு, ரத்தினம். 14.10.18 (3-ம் நாள்) வெல்லம், காய்கறிகள், குதிரை, பழங்கள், வண்டி. 15.10.18 (4-ம் நாள்) நெய், எண்ணெய், தேன், பால். 16.10.18 (5-ம் நாள்) எருமை, காளை. 17.10.18 (6-ம் நாள்) கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசனை திரவியங்கள். 18.10.18 (7-ம் நாள்) வீடு, மனை, நாற்காலி, கிழங்கு, இஞ்சி. 19.10.18 (8-ம் நாள்) சந்தனக்கட்டை, பூக்கள். 20.10.18 (9-ம் நாள்) மஞ்சள். 21.10.18 (10-ம் நாள்) புத்தக தானம். 22.10.18 (11-ம் நாள்) யானை, குதிரை. 23.10.18 (12-ம் நாள்) எள், ஷோடசதானங்கள் ஆகியவற்றை வழங்கலாம்.

    புண்ணிய தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து முடித்த பிறகு ஏழைகளுக்கு உணவு படைத்து உபசாரம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
    பரம ஏழைகளுக்கு அளிக்கும் தானம் அசுவமேத யாகத்திற்குச் சமமான பலனைத் தரும். நாம் செய்யும் தானமே நமக்கு பரம நண்பனாம். இந்த உலகத்தில் அன்னத்தை விட அதிகமான மகிமை பொருந்திய பொருள் வேறு எதுவுமே கிடையாது.

    சகல லோகமும் அன்னத்தின் மேல் தான் நிலை நிற்கின்றன. அதனால் தான் உயிர் வாழ்கின்றன. அதன் மகிமைக்கு அளவே கிடையாது. அன்னத்தை விட சிறந்ததொரு தானமும் உலகத்தில் கிடையவே கிடையாது. அன்னதானம் செய்பவன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும், பக்தியுடையவனாக இருந்தாலும், பகவானைப் பற்றி நினைக்காதவனாகவே இருந்தாலும் அவன் சகல பாவங்களிலிருந்தும் விமோசனம் பெறுகின்றான். ஏழைகளுக்கு சேலை, வேஷ்டி, துண்டு, ஆயத்த ஆடைகள் என ஆடைகளைத்தானம் செய்வது உயர்ந்த பலனைத்தரும்.

    விளக்குதானம் செய்யலாம். இது பிரம் மஹத்தி தோஷம் முதலான தோஷங்களைப்போக்கும். குற்றங்குறைகள் இல்லாத நல்ல பசுவைத் தானம் செய்வது பரம புண்ணியத்தைத்தரும். வெண்ணிறம், பொன்னிறம், வெளுப்பும், மஞ்சளும் கலந்த நிறம் உள்ள பசுக்களைத் தானம் செய்ய வேண் டும். கறுப்பு நிற பசுக்களை தானம் செய்யக் கூடாது. கொம்பு வளைந்த பசுக்களையும் தானம் செய்யக் கூடாது.
    தாமிரபரணியில் எவ்விடத்தில் ஸ்நானம் செய்தாலும் பலன்கள் கிடைக்கும். என்றாலும் சில தீர்த்தங்களில் குறிப்பிட்ட மாதங்களில் ஸ்நானம் செய்ய சிறப்பு பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
    தாமிரபரணியில் எவ்விடத்தில் ஸ்நானம் செய்தாலும் பலன்கள் கிடைக்கும். என்றாலும் சில தீர்த்தங்களில் குறிப்பிட்ட மாதங்களில் ஸ்நானம் செய்ய சிறப்பு பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    சித்திரை மாதம் - பாபவிநாசம், அஷ்டாட்சரம் பஞ்சாட்சரம் ஜெபித்து ஸ்நானம் செய்தால், ராஜசூய யாகம் செய்த பலனை அடையலாம்.

    வைகாசி மாதம் - அத்தாழநல்லூர் - துவாதசி அல்லது சிரவண துவாதசி ஸ்நானம் செய்தால் குருத்துரோக தோஷம் நிவர்த்தி ஆகும்.

    ஆனி மாதம் - சோம தீர்த்தம் - சுக்கிலபட்ச துவாதசியில் ஸ்நானம் செய்தால் பரோபகாரம் செய்த பலனை அடையலம்.

    ஆடி மாதம் - பாண தீர்த்தம் - அமாவாசை ஸ்நானம். சோம யாகம் செய்த பலனை அடையலாம்.

    ஆவணி மாதம் - சிந்துபூந்துறை, பௌர்ணமி ஸ்நானம் செய்தால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.

    புரட்டாசி மாதம் - ஸ்ரீவைகுண்டம் - சுக்லபட்சம் அல்லது துவாதசியில் ஸ்நானம் செய்தால், ஆயிரம் வாஜபேய யாகம் செய்த பலன். இம்மாதத்திலேயே விஜயதசமியில் கௌரீ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய பூதானம் செய்த பலனைப் பெறலாம்.

    ஐப்பசி மாதம் - துர்க்கா தீர்த்தத்தில் சுக்ல பட்சம் அல்லது நவராத்திரியில் ஸ்நானம் செய்தால் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

    கார்த்திகை மாதம்:
    தாம்ரா சங்கமத்தில் பவுர்ணமி தினம் ஸ்நானம் செய்ய ஆயிரம் கோதானம் (பசுதானம்) செய்த பலனைப் பெறலாம்.

    மார்கழி மாதம்: வியாச தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேதங்கள் முழுவதையும் பாராயணம் செய்த பலனைப் பெறலாம். இம்மாதம் ஆழ்வார் திருநகரியில் சுக்லபட்ச துவாதசியில் ஸ்நானம் செய்தால் கோடி காராம்பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறலாம். இவ்விடத்தில் உள்ள அனைத்து தீர்த்தங்கள் சிறப்பு பெற்றவை.

    தை மாதம்: புடார்ச்சுனத்தில் பவுர்ணமியில் ஸ்நானம் செய்தால் பரமபதத்தை அடையலாம். இம்மாதத்தில் மகர தீர்த்தத்தில் சுக்லபட்சத்தில் ஸ்நானம் செய்ய நூறு கன்னிகாதானம் செய்த பலனைப் பெறலாம்.

    மாசி மாதம்: சோமாரண்யத்தில் சிவராத்திரி அல்லது பவுர்ணமி யில் ஸ்நானம் செய்தால் கோடி காராம்பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறலாம். இம்மாதத்தில் ஷ்ணுவனத்தில் (சீவலப்பேரி) சுக்கில ஏகாதசி, துவாதசியில் ஸ்நானம் செய்தால் மகாவிரதங்களை அனுசரித்த பலனைப் பெறலாம். இம்மாதத்தில் ஆழ்வார் திருநகரியில் துவாதசியில் ஸ்நானம் செய்தால் ஆயிரம் அந்தணக் குடும்பங்களைக் காப்பாற்றிய பலனைப் பெறலாம்.

    பங்குனி மாதம்: சியாமா நதியின் (பச்சையாறு) சங்கமத்தில் அமாவாசை அன்று ஸ்நானம் செய்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும். இம்மாதத்தில் மநங்திரதீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் ஆயிரம் அந்தணக் குடும்பங்களை காப்பாற்றிய பலனைப் பெறலாம். இம்மாதம் கலச தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ராமபாத தீர்த்தத்தில் ஸ்ரீராமநவமி அல்லது ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்நானம் செய்ய சகர பாவ தோஷங்களும் நீங்கும்.
    இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில் அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். .
    ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில் சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ‘ஆதி இரட்டை விநாயகர்’ என்று போற்றப்படுபவரும் இவரே.

    அது போலவே திருச்சி பாலக்கரைப் பக்கத்திலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.

    தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.

    திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

    பொதுவாக, செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும், சனிக்கிழமைகளில் கனி வகைகளில் ஏதாவது ஒன்றைச் சம்ர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

    தஞ்சை, திருவையாறு, ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.

    மேலும் ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோவில் திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது.

    இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும்.
    தாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    பல்வேறு ஆன்மீக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல்வரை தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா நடக்கிறது. நேற்று இந்த விழா பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

    பாபநாசம், நெல்லை அருகன்குளம், திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மகா புஷ்கர விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். அருகன்குளம் எட்டெழுத்துபெருமாள் கோவில் ஜடாயுத்துறையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மகா ஆரத்தியை தொடங்கி வைத்தார்.

    தாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக பாபநாசம் இந்திர கீல தீர்த்தத்தில் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. இதையொட்டி வேத பண்டிதர்கள், ஆதீனங்கள், சாதுக்கள் திரளானோர் கலந்துகொண்டு சதுர்வேதம், பஞ்சபுராணங்கள் பாடினர். தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாமிரபரணியில் புனித நீராடினார்கள்.



    காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடைமருதூர் புடார்ச்சன தீர்த்தத்தில் நடைபெற்ற மகா ஆரத்தியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, பழவூர், கோடகநல்லூர் தீர்த்தக் கட்டங்கள், படித்துறை களிலும் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடந்தது.

    நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயுவுக்கு ராமபிரான் மோட்சம் கொடுத்த சிறப்புடைய தீர்த்தக்கட்டத்தில் புஷ்கர விழா கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள கோசாலையில் 54 யாக குண்டங்கள் அமைத்து ஓமங்கள் நடந்து வருகின்றன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலையில் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் நடந்த புஷ்கர விழாவில் கலந்து கொண்டார்.

    முன்னதாக கோசாலைக்கு வந்த அவருக்கு மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோசாலையில் கோபாலகிருஷ்ணரை தரிசனம் செய்த கவர்னர் பின்னர், பசுக்களுக்கு பழங்கள் வழங்கி கோபூஜை செய்து அவரே ஆரத்தி காட்டினார். அவருக்கு கோசாலை சார்பில் 144 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மாலை 6.05 மணிக்கு கோசாலை ஜடாயு படித்துறைக்கு வந்த கவர்னர் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ள தாமிரபரணி, அகஸ்தியர் சிலைகளுக்கும், தாமிரபரணி நதிக்கும் புனிதநீர் ஊற்றி மலர்களை தூவினார். அங்கு பரணி தீப ஆரத்திக்காக வைக்கப்பட்டு இருந்த குத்துவிளக்கை ஏற்றினார். தொடர்ந்து, சப்தரிஷிகளான அகஸ்தியர், காசியப்பர், அத்ரி, பரத்வாஜயர், வியாசர், கவுதமர், வசிஷ்டர் ஆகியோர் கங்கையில் கங்கா ஆரத்தி செய்வது போல் இங்கு ஏழு பரணி தீப மகா ஆரத்தியும், நாகஆரத்தியும் நடந்தது.



    ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்பட்டது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்களும் வந்திருந்தார்கள். வேத மந்திரங்கள் முழங்க இந்த மகாபரணி ஆரத்தி நடந்தது. இதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

    அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக நெல்லை தைப்பூச படித்துறையில் நேற்று மாலை தாமிரபரணி நதிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, அலங்கார தீபாராதனை மற்றும் மகா ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாமிரபரணியில் தீபங்கள் ஏற்றி வணங்கினார்கள். தாமிரபரணி புஷ்கர குறுக்குத்துறை கமிட்டி சார்பில் வேணு வன தீர்த்தம் எனப்படும் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெற்ற விழாவில் தாமிரபரணிக்கு மங்கள ஆரத்தி நடந்தது.

    தெட்சண காசி எனப்படும் முறப்பநாட்டில் தாமிரபரணி வடக்கில் இருந்து தெற்காக தட்சண வாகினியாக பாய்கிறது. காசிக்கு நிகரான இந்த தலத்தில் புஷ்கர விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் நதி ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை தாமிரபரணி ஈஸ்வரம் அறநிலை செய்திருந்தது.

    இதேபோல் ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், உள்ளிட்ட இடங்களிலும் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. தாமிரபரணி படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் தாமிரபரணி நேற்று ஆரத்தியால் ஜொலித்தது. எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
    நவராத்திரி ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
    நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சொல்லப்போனால், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா

    மகேஸ்வரி - சிவன்

    கவுமாரி - குமரன் (முருகன்)

    வைஷ்ணவி - விஷ்ணு

    வராஹி - ஹரி (வராக அவதாரம்)

    நரசிம்மி - நரசிம்மர்

    இந்திராணி - இந்திரன்

    இதிலிருந்து நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா தொடங்கியது. மகா புஷ்கர விழாவையொட்டி, நெல்லை ஜடாயு படித்துறையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    நெல்லை பகுதியில் கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தக்கட்ட படித்துறை, மேலநத்தம் அழியாபதீசுவரர் கோவில் படித்துறை, ராஜவல்லிபுரம் செப்பறை கோவில் படித்துறை, பாலாமடை படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாமியார்கள் புனித நீராடி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர்.

    நெல்லை அருகன்குளத்தில் ஜடாயு துறையில் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் 144 அடி நீளத்துக்கும், 16 அடி அகலத்துக்கும் கருங்கற்களால் புதிய படித்துறை கட்டப்பட்டு உள்ளது. நேற்று காலை அந்த படித்துறைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேனி ஓம்காரனந்தா சுவாமி சிறப்பு பூஜை நடத்தி புனிதநீர் ஊற்றினார்.

    எட்டெழுத்து பெருமாள் தருமபதி அறக்கட்டளை நிர்வாகி ராமலட்சுமி தேவி புதிய படித்துறையை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் அங்கு வரதராஜ பெருமாள் சுவாமி தலைமையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அங்கு வெற்றிலையில் கற்பூர ஜோதி ஏற்றி பெண்கள் ஆற்றில் விட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் இந்த படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆரத்தி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கிருந்து மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க கொடிமரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தைப்பூச மண்டபத்தின் முன்பு சிறப்பு பூஜை நடத்தி கால் நாட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், லட்சுமணன் எம்.எல்.ஏ., அமைப்பாளர்கள் உஷா ராமன், நிர்மலா ராமரத்தினம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு அம்ச வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை அம்ச வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 10 மணியில் இருந்து 11 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நவராத்திரி கொலு ஆஸ்தானம் நடந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பறக்கும்படை அதிகாரி ரவீந்திராரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார். தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற குரு பகவான் அருள்பாலிக்கும் சிறப்பு தலங்களை பார்க்கலாம்.
    நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டுக்கான குருபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த வாரம் நடைபெற்றது. குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார்.

    குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கூட குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக் கிழமையில் விரதம் இருந்து, நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

    தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற குரு பகவான் அருள்பாலிக்கும் சிறப்பு தலங்களை பார்க்கலாம்.

    திருச்செந்தூர்

    குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர் களைக் காக்க முருகப்பெருமான் அசுரர் களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப் படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானை களுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தி யின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவ சியம் ஒரு முறையாவது சென்று வரவேண் டிய தலம் இது.

    பாடி திருவலிதாயம்

    சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

    தென்குடி திட்டை

    திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

    குருவித்துறை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னி தியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின் றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ மந்திரம் கற்றிருந்தார். இத னால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திர த்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியா ரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

    தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந் தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தை யிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

    ஆலங்குடி

    நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங் களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குரு தட்சிணாமூர்த்தி என்பதால், இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணா மூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர் களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ‘ஆலங்குடி’ என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் எவ்விதத் தீங்கும் உண் டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.

    பட்டமங்கலம்

    கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங் கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    அகரம் கோவிந்தவாடி

    காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரி கிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    தக்கோலம்

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.
    தினமும் காலையில் காகத்திற்கு சாதம் வைத்து வந்தால், வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்களை நெருங்கவே செய்யாது.
    அதிகாலையில் எழுந்து கரைதல், உணவை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல், பிறர் காணாத வகையில் ஜோடி சேருதல், மாலையிலும் குளித்தல், ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காகங்களும் ஒன்று கூடி கரைதல் என்பது காக்கை இனத்தில் பொதுவான குணங்கள். இவற்றுள் ஒரு காக்கை இறந்தால் அனைத்து காகங்களும் கூடி நின்று கரைதல் என்பது, அஞ்சலி செலுத்துவதற்கு சமமாகவே கருதப்படுகிறது.

    உங்களின் உள்ளுணர்வால் ஏற்படுவதா? அல்லது உண்மையிலேயே பித்ருக்களின் ஆசியா? என்பது அதிசயம் தான். ஆனால் தினமும் காலையில் காகத்திற்கு சாதம் வைத்து வந்தால், வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்களை நெருங்கவே செய்யாது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், தள்ளிப்போகும் புத்திர பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான கோரிக்கைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது, உங்கள் முன்னோர் வழிபாடுதான்.

    உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல, அற்புதமான ஜீவராசி காக்கை இனம். குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

    தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள். திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை “கா…கா…’ என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.

    அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும். உணவை சாப்பிட்டு விட்டு காக்கைகள் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

    மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

    காகம் சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காணமுடியாது. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவதாக சொல்லப்படுகிறது. அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். எனவே காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

    காகம் வீட்டின் முன்பு நின்று கரைந்தால், நல்ல செய்தி வரும் அல்லது விருந்தினர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்றும் கூறுவார்கள். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும். காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம். 
    ×