search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

    * நெற்றியில் திருநீறு அணிய வேண்டும்.

    * தேவாரத் திருமுறைகளை பக்தியுடன் படிக்க வேண்டும்.

    * அந்தி, சந்தி, அர்த்தசாமம் ஆகிய வேளைகளில் ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும்.

    * பெற்றோர்களையும், சான்றோர்களையும், குருவையும் வணங்கி மகிழ வேண்டும்.

    * சிவாலய வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.

    * சிவபூஜை செய்து கொள்வது நல்லது.

    * பெரிய புராணம், சிவபுராணம் ஆகியவற்றைப் படிக்கவும், கேட்கவும் வேண்டும்.

    * அமைதியாகப் பேச வேண்டும்.

    * கோபத்தை அகற்ற வேண்டும்.

    * பயணத்தின் போது, இறை நாமத்தை இடையிடையே உச்சரிக்க வேண்டும். 
    நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம்.
    நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். அதன்படி...

    முதல் நாள் - கற்கண்டு பாயசம்

    இரண்டாம் நாள் - புளியோதரை சாதம்

    மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

    நான்காம் நாள் - கதம்ப சாதம்

    ஐந்தாம் நாள் - தயிர்சாதம்

    ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

    ஏழாம் நாள் - எலுமிச்சம்பழச் சாதம்

    எட்டாம் நாள் - பாசிப்பருப்பு, பால், வெல்லம்,

    ஏலக்காய் கலந்த பாயசம்

    ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல்
    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    நாக வழிபாட்டுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு நாகராஜர் குடியிருக்கும் மூலஸ்தானம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். கோவிலில் பிரசாதமாக மண் வழங்கப்படுகிறது. இந்த பிரசாத மண் 6 மாதம் கருப்பாகவும், 6 மாதம் வெள்ளையாகவும் இருக்கிறது. இவ்வளவு சிறப்புகள் இருப்பதால் நாகராஜரை தரிசனம் செய்ய குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்றால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை அன்று நாகராஜரை தரிசித்தால் சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில் ஆவணி மாத 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவிலில் குவிந்த பக்தர்கள் முதலில் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு வரிசையாக நின்று பால் ஊற்றி அபிஷேகம் செய்தும், மஞ்சள் வைத்தும் வழிபட்டனர். அதோடு அங்கு அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நாகராஜரை தரிசனம் செய்ய ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை நேற்று கோவிலின் நுழைவு வாயிலையும் தாண்டி வெளியே உள்ள ரத வீதி வரை நீண்டு இருந்தது. வெகு நேரம் காத்திருந்து நாகராஜரை வழிபட்ட பின் சிவன், துர்க்கை அம்மன், முருகன் ஆகிய தெய்வங்களையும் பக்தர்கள் வழிபட்டார்கள்.

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி யாரேனும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    புதிய வீட்டிற்கு குடித்தனம் போகக்கூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த மாதத்தை பற்றியும், அந்த மாதத்தில் ஏன் குடியேறக்கூடாது? என்பதற்கான காரணத்தையும் பார்க்கலாம்.
    புதிய வீட்டிற்கு குடித்தனம் போகக்கூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த மாதத்தை பற்றியும், அந்த மாதத்தில் ஏன் குடியேறக்கூடாது? என்பதற்கான காரணத்தையும் பார்க்கலாம்.

    புதிய வீட்டிற்கு குடித்தனம் போகக் கூடாத மாதங்கள்: ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி.

    ஏனெனில் ராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது.
    பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது.

    இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது.

    பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம்.

    மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது.

    மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.

    ஆகையால் இந்த மாதங்களில் புது வீடு அல்லது வாடகை வீட்டுக்கு குடியேறினால் அந்த குடும்பம் துன்பமும், துயரமும் அடையும் என்பது நம்பிக்கை.
    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.
    பொதுவாக கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், நைவேத்தியப் பொருட்களைத் தான் வழங்குவார்கள். ஆனால் ஒரு கோவிலில் தங்கம் வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

    ஆம்.. அத்தகைய பெருமைக்குரிய ஆலயம் மத்திய பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த ஊரின் பெயர் ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயரைக் கொண்ட திருத்தலம். இங்குள்ள மகாலட்சுமி ஆலயத்தில் தான் தங்கத்தை பிரசாதமாக வழங்குகிறார்கள்.

    ஏழை எளியவர்களின் வறுமையை அகற்றுவதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் யாரும் காணிக்கையாக பணம் செலுத்துவது இல்லை. வேண்டுதல் நிறைவேறி நேர்த்திக் கடன் செலுத்தும் அனைவரும், தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    அப்படி வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக அனைத்து கோவில்களிலும் சேரும் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை கோவில் திருப்பணிக்காக பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் கோவிலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

    இது இறைவனால் தரப்படும் பிரசாதமாக பக்தர்கள் பார்க்கின்றனர். எனவே இந்த ஆலயத்தில் வழங்கப்படும் தங்கத்தை பக்தர்கள் யாரும் விற்பனை செய்வது கிடையாது என்கிறார்கள். 
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நாகர்கோவிலில் இன்று கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு நடந்தது. #vijayakanthbirthday
    நாகர்கோவில்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இன்று காலை மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் மும்மத வழிபாடு நடந்து. புத்தேரி யோகீஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதைதொடர்ந்து வடசேரி தர்கா, கோட்டார் சவேரியார் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கிருஷ்ணராஜ், பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் ராஜன், வக்கீல் அணி செயலாளர் பொன் செல்வராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஷ், இந்தியன் சரேஷ், இளைஞரணி துணைச் செயலாளர் மதிமுருகன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரிச்மோகன்ராஜ், மாவட்ட இளைஞரணி கவுதம். மகளிரணியை சேர்ந்த பாக்கியரதி, சுபா, தொண்டரணி ரபீக் பாய், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் வைகுண்ட கண்ணன், பொதுக் குழு உறுப்பினர்கள் வைகுண்ட மணி, ஸ்டீபன், ஒன்றிய அவைத்தலைவர் தங்க கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கவுதம், தர்மபுரம் ஊராட்சி செயலாளர் கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்வேறு இடங்களில் கொடி யேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. #vijayakanthbirthday
    பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.
    பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், பாண்டிச்சேரியிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், கடலூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. மூலமூர்த்தி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவருடைய தேவி அமிர்தவல்லி தாயார் இவர்கள் இக்கோவில் உள்ள பிரதான மூர்த்திகளாவார்கள்.

    தலபுராணத்தின்படி வடக்கு கடற்கரையிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வசித்து வந்த சப்தரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர். அவர்களால் பகவானுடைய கடும் கோபத்தீயை தாங்க முடியாமல் போகவே அவரை சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர். அதனால் இங்கு அமிர்தவல்லி தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்து ஒரக்கண்ணால் பகவானையும், மற்ற கண்ணால் முனிவர்களையும் அருள்பாலித்தார்.

    பகவானுடைய கோபத்தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். தாயார் லட்சுமியின் கருணாகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சி அளிக்கிறார்.

    பூவசரங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா?

    பல்லவ அரசர்கள் ஜைன மதத்தை தழுவி விஷ்ணு கோவில் களையும் சிவன் கோவில்களையும் இடித்து தகர்த்து நாசமாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் திருக்கோவில்களை தகர்ப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடுபட்டனர்.  ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான். நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார்.

    அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தான். முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார். இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின. முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான்.

    இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் அரசன் நரஹரி முனிவரைத் தேடி அலைந்தான். கடைசியாக ஒரு பூவரச மரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அரசனுடைய கனவில் தோன்றிய பெருமாள் “நீ உன்னுடைய சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாய் முனிவர் இங்கு வந்து உன்னை ஆசீர்வதிப்பார்” என்று கூறினார்.

    அரசன் உறங்கி விழித்தவுடன் பெருமாளைக் காண முடியவில்லை. அப்போது அந்த பூவசர மரத்திலிருந்து ஒரு இலை அரசன் மேல் விழுந்தது. அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது.

    அவனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தபோது, நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார் அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான்.
    அந்த முனிவரின் விருப்பத் தின்படி அரசனும் பூவரசங்குப்பத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு ஒரு திருக்கோவில் எழுப்பினான். அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.

    நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.

    நடுநாயகமான தலம்

    நரசிம்மர் அவதரித்த இடம் தற்போது அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது, இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சப்தரிஷிகள் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்கள் இரண்யவதத்தை காண விரும்பி இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம்.

    தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம் ஆகும். அதாவது பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அணைத்துக் கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வேண்டினால் கடன்கள் தீரும், செல்வம் குவியும், சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் உண்டு. இக்கோவிலில் பக்தர்கள் அனைவரும் சட்டை பனியன் கழற்றி தான் உள்ளே செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த ஆலயம் சென்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெருகுவதை நீங்களே உணர்வீர்கள்.
    1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.
    நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது. பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.

    இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

    விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
    விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.
    கெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது.

    1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

    காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.

    இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் துர்ச்சனை செய்யலாம். இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். எனவே தெலுங்கு வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    முதல்-அமைச்சரின் அன்னதானத்திட்டம் இத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது. தினமும் 50 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் விரும்பினால் ரூ.1000 செலுத்தி ஒரு நாள் அன்னதானம் வழங்கலாம். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.

    திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.

    இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது குறிப்பிடத்தக்கது. வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.
    இத்தலத்தின் புராண கால பெயர் ‘‘பரகலா’’ என்பதாகும்.

    ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
    எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கிறது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.

    எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கிறது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.

    நடராஜர் படமும், குரு தட்சிணாமூர்த்தியின் படமும் தெற்கில் பார்க்கும் விதத்தில் வைத்து வழிபட்டால் தான் சிறப்பான பலன்களை நீங்கள் காண முடியும்.

    நடராஜர் படத்தை திருவாதிரையன்று பூஜையறையில் வைத்து சிவபுராணம் படித்தால் கலைகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்புக் கிட்டும். தட்சிணாமூர்த்தி படத்தை உத்ரம் நட்சத்திரன்று வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டால் ஞானம் சித்திக்கும்.

    துளசி மாடம் மட்டும் கிழக்குப் பக்கம் நின்று மேற்குப் பார்த்தபடி பூஜை செய்யும்படி அமைக்க வேண்டும். துளசியை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.
    ஆண்டவனே வந்தாலும் உன்னைத் திருப்திப்படுத்த இயலாது’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். நாம் திருப்தியாக வாழ, யார் - யாரை, எப்படித் திருப்திப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
    ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆசைப்பட்ட பொருட்களைக் கொடுத்தால் திருப்திப்படுத்தி விடலாம். ஆனால் ஒரு சிலருக்கு எதைக் கொடுத்தாலும் திருப்தியே ஏற்படாது. அப்படிப்பட்டவர்களைப் பார்த்து, ‘ஆண்டவனே வந்தாலும் உன்னைத் திருப்திப்படுத்த இயலாது’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். நாம் திருப்தியாக வாழ, யார் - யாரை, எப்படித் திருப்திப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

    தேவர்களை - ஹோமத்தினாலும்

    முன்னோர்களை - சிரார்த்தத்தினாலும்

    தெய்வங்களை - தரிசனத்தாலும்

    பெற்றோர்களை - பிரியத்தினாலும்

    பிள்ளைகளை - பாசத்தினாலும்

    மனைவியை - நேசிக்கும் அன்பாலும்

    முதலாளியை - உழைப்பின் மூலமும் திருப்திப்படுத்தலாம்.

    பறந்து செல்லும் அனுமன் படத்தை வாங்கி, விரதம் இருந்து அதன் வால்பகுதியில் ஒரு மண்டல காலம் பொட்டு வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.
    விரதம் இருந்து அனுமன் வாலில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் சந்தனமும், அதன்மேல் குங்குமமும் வைத்து ஒரு மண்டலம் வழிபாடு செய்து வரவேண்டும். பறந்து செல்லும் அனுமன் படத்தை வாங்கி, விரதம் இருந்து அதன் வால்பகுதியில் ஒரு மண்டல காலம் பொட்டு வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.

    தடைகள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் அகலும். அனுமனுக்கு வாலில் பலம். முருகனுக்கு வேலில் பலம். யோகபலம் பெற்ற நாளில் பொட்டு வைக்கத் தொடங்க வேண்டும். வாலில் பொட்டு வைத்தால், நம் வாழ்க்கைப் பிரச்சினை தீரும் என்பதை அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள். வாலின் சக்தியை இலங்கையில் காண்பித்தவர் அனுமன். அவரது வாலில் கீழிருந்து மேலாக பொட்டு வைத்தால் தான் வெற்றிகிட்டும்.

    ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும். 
    ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபாடு செய்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் செவ்வாய் தோஷ தடைகள் நீங்கும்.
    ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம்,

    மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள்,

    பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்.

    ×