search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95529"

    கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்களையும் ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் தந்தருள்வாள்.
    ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கக் கலசம் ஏந்தி இரு யானைகள் அபிஷேகம் செய்கின்றன. ஸ்ரீ தேவியின் இருபுறம் சாமரம் ஏந்திய பெண்களும் இருக்க, வெண்பட்டு அணிந்து ஸ்ரீ கஜலட்சுமி காட்சி தருகின்றாள்.

    தியான சுலோகம்:-

    சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
             வராபய கராந் விதாம்
    அப்ஜத்வய கராம்போஜாம்
             அம்புஜாசநஸமஸ்த்திதாம்
    ஸஸிவர்ண கடேபாப் யாம்
             ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
    சர்வாபரண சோபாட்யாம்
             சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்
    சாமரக்ரஹ நாரீபி :
             ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
    ஆபாதலம்பி வசநாம்
             கரண்ட மகுடாம் பஜே.

    பலன்கள்:-

    மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும் ( தனியார் நிறுவனத்திலும் கூட ) ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.
    தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு... அலுவலகம்...கல்லாப்பெட்டிஞ்பணப்பை... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
    * நமக்கு வரும் வருமானத்தை எப்போதும் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    * அடுத்தவர் பொருளாதாரத்தோடும், வருமானத்தோடும் நம் நிலையை ஒப்பிடக்கூடாது.

    * நமக்கு வரும் வருமானத்திலோ, லாபத்திலோ குறைந்த அளவு, ஏழைகளுக்கோ,ஆன்மிக பணிகளுக்கோ செலவிட வேண்டும்.

    * பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கவேண்டும்.

    * ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது.

    * தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு... அலுவலகம்...கல்லாப்பெட்டிஞ்பணப்பை... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.

    * வணிகத்தை... தொழிலை... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே மகாலட்சுமி வருவாள்.

    * மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன்ஆகிவிடுவீர்கள்.

    &ஜோதிடர் சுப்பிரமணியன்
    தீபாவளி அன்று மகாலட்சுமி பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம்  நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும்.
    மகாலட்சுமி தாயார் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள் தீபாவளி. அதனால் தீபாவளியின் போது மகாலட்சுமி பூஜை முக்கிய இடம் வகிக்கிறது, அன்றைய தினம் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பான பலனை தரும்.

    தீபாவளிக்கு முன்னதாகவே வீட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசல் கதவுகளில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

    பூஜையறையில் மாக்கோலமிட்டு ஒரு மனையில் மஞ்சள் அல்லது சிவப்புத்துணி போட்டு அதில் பிள்ளையார், மகாலட்சுமி படங்களை வைக்க வேண்டும். சிலை இருந்தால் சிலைகளை வைக்கலாம். பிள்ளையாரை மஞ்சளிலும் செய்து வைக்கலாம். இதில் குலதெய்வத்தையும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு படம் இருந்தால் அதை வைக்கலாம். இல்லை என்றால் ஒரு செம்பில் நீர் மலரிட்டு குலதெய்வமாக பாவித்து வைக்கலாம்.

    பிள்ளையார், மகாலட்சுமி, குலதெய்வம் மூவருக்கும் நல்ல மணமுள்ள மலர்களை சூட்ட வேண்டும். தாமரை மலர் கிடைத்தால் மகாலட்சுமிக்கு சூட்டுவது நல்லது. பிள்ளையாருக்கு மஞ்சள் துண்டு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, வாழை உள்ளிட்ட பழங்கள் படைக்க வேண்டும்.

    நெய்வேத்தியமாக வடமாநிலங்களில் நெய்யினால் பூரி சுட்டு, உருளைக்கிழங்கு, தக்காளி கூட்டு செய்து படைப்பார்கள். நெய்க்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு உண்டு. நெய்யில் நிவேதனம் செய்தால் அணுகிரகம் விரைவில் கிடைக்கும்.

    பால் பாயாசம் சேமியா அல்லது அரிசி சேர்த்து செய்து வைக்கலாம். தமிழ்நாட்டில் அரிசி உணவுதான் பிரதானமாக இருப்பதால் அரிசி பாயாசமே செய்து கொள்ளலாம். வெங்காயம், பூண்டு சேர்க்காமல் அன்னம் செய்து படைக்கலாம். முக்கியமாக நெல் பொரி படைக்க வேண்டும். அதில் வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.

    ஒரு பெரிய அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். அதனை தொடர்ந்து 3 தினங்கள் எரியுமாறு பார்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. மகாலட்சுமி தாயாருக்கு கும்ப கலசம் வைக்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக வைக்கலாம்.

    பின்னர் மகாலட்சுமியின் 108 போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும். அது தெரியவில்லை என்றால் மிக எளிமையாக ஓம் ஸ்ரீம் நமக என்று சொல்லி வழிபடலாம்.

    வாய்ப்பு உள்ளவர்கள் 108 தாமரை மலர்களை போட்டு அர்ச்சனை செய்யலாம். இல்லை என்றால் குங்கும அர்ச்சனை செய்யலாம். அல்லது 108 வெள்ளி காசுகளை வைத்து அர்ச்சனை செய்யலாம். 108 புது ரூபாய் தாள்களை கொண்டு அர்ச்சிக்கலாம். அல்லது ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

    மகாலட்சுமி தாயாருக்கு மணியடித்து ஆரத்தி காட்டும் போது ஒரு வெடியாவது வெடிக்க வேண்டும்.

    பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும். ஒரு சில நாணயம் நோட்டுகளை மணிபர்சிலும் வைக்கலாம்.

    அந்த பணத்தை உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஏழ்மையில் இருந்தால் வசதி பெறுவதற்காக அவர்களுக்கு கொடுக்கலாம். அவர்கள் விருத்தி அடைவார்கள். அவர்கள் வசதி அடைய அடைய உங்கள் வாழ்க்கையிலும் செல்வம் செழிக்கும்.

    நிவேதனம் செய்த பின்னர் பிரசாதத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும்.

    பொதுவாக பூஜையில் வைத்த மலர் மாலை, கலசம் உள்ளிட்டவற்றை 3-வது நாள் எடுப்பது தான் நல்லது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எடுக்கக்கூடாது. இந்த முறை 3-வது நாளாக சனிக்கிழமை வருவதால் அன்று எடுக்கலாம்.

    கலசத்தில் நீர் வைத்திருப்பதால் அதை வீடு முழுவதும் தெளிக்கலாம். அரிசி வைத்திருந்தால் அதனை சமைத்து சாப்பிட வேண்டும். அர்ச்சனை செய்த குங்குமத்தை பெண்கள் திலகமிட பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முறை தீபாவளியன்று மகாலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 6.10 மணி முதல் இரவு 8.10. மணி வரை. லட்சுமி வழிபாட்டுக்கு பிரதோஷ காலமே உகந்தது என்பதால் மாலை 5.30 மணியில் இருந்தும் இரவு 8.10 மணிக்குள் செய்யலாம்.

    தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, விரதம் இருந்து சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது.
    தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, விரதம் இருந்து சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது. தீபாவளித் திருநாளில் இல்லத்தில் செய்யப்பட வேண்டிய விரத பூஜைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    மகாலட்சுமி பூஜை

    திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து வழிபடுங்கள். இதனால் திருமணம் கைகூடும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் வந்துசேரும்.

    குபேர பூஜை

    செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றாலும், அவற்றைப் பிரித்து வழங்கும் நிதிகள் அனைத்தும் குபேரனின் வசம் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நிதிகளுக்கு அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற தினமாக தீபாவளி இருக்கிறது. எனவே அன்றைய தினம், குபேரன் படத்தை வீட்டில் வைத்து, அதன் இரண்டு பக்கமும் குத்துவிளக்கேற்றி வைத்து, குபேரனுக்கு இனிப்பு பலகாரங்களை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இதனால் செல்வ வளம் தேடிவரும்.

    கேதார கவுரி விரதம்

    சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி வழிபட்டு பலன் பெற்ற தினம், தீபாவளி. அந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்பார்கள். சிவ- பார்வதி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். சிவ- பார்வதி படத்திற்கு பதிலாக, அர்த்தநாரீஸ்வரர் படத்தை வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு சேர்க்கும்.

    சத்யபாமா பூஜை

    நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினம் தீபாவளி. நரகாசுரனின் தாய் பூமாதேவியாவார். நரகாசுரனுக்கு அவனது தாயால்தான் மரணம் என்பது வரமாக அளிக்கப்பட்டிருந்தது. எனவே பூமாதேவியின் அம்சமாக கிருஷ்ண அவதாரத்தின் போது தோன்றியவர், சத்யபாமா. அவர்தான் கிருஷ்ணருடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தார். எனவே தீபாவளி அன்று, சத்யபாமாவை வீர லட்சுமியாக பாவித்து பூஜித்து வணங்க வேண்டும்.

    முன்னோர் வழிபாடு

    துலா மாதமாக சொல்லப்படும் ஐப்பசி மாத அமாவாசை தினம், முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்தில் முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.

    குலதெய்வ பூஜை

    நாம் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும், அவை எதுவும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஈடாகாது. குலதெய்வத்தை வணங்கினாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்து விடும். ஒருவரின் குடும்பம் சீராகவும், நல்ல முறையிலும், சச்சரவுகள் இன்றியும் நடைபெற குலதெய்வத்தின் ஆசிர்வாதம் அவசியமானது. எனவே எந்த பண்டிகையாக இருந்தாலும், வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து, முதலில் அவரை வணங்கி விட்டு, பிறகு மற்ற தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள். எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

    ஸ்ரீ லட்சுமி என்று போற்றப்படும் மகா லட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. லட்சுமி தேவி எந்த இடத்தில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறாள் என்று அறிந்து கொள்ளலாம்.
    லட்சுமிதேவி வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகிறாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் பிரிதி லட்சுமியாகவும், வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

    திருமால் கோவில்களில் பகவத் சன்னதியில் உள்ள பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.

    ஸ்ரீ லட்சுமி என்று போற்றப்படும் மகா லட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. மாதுளங்கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மை என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகா ராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள் கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் அவள் போற்றப்படுகிறாள்.
    தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வச் செழிப்பை பெற நமது முன்னோர்கள் கூறிய ஒரு எளிய ஆன்மீக பரிகாரத்தை இங்கு அறிந்து கொள்ளலாம்.
    தங்கக் காசுகளையோ அல்லது நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாணயங்களையோ கொண்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது தான் சொர்ணாபிஷேகம் எனப்படுகிறது. முற்காலத்தில் தங்கத்தினால் செய்யப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. எனவே அந்த தங்கத்தை கொண்டு அக்காலத்தில் தெய்வங்களுக்கு சொர்ணாபிஷேகம் செய்தனர். இந்த சொர்ணாபிஷேக வழிபாடு நமது இல்லத்திலும், கோவிலிலும் செய்துகொள்ளலாம்.

    இல்லத்தில் இந்த சொர்ணாபிஷேகம் செய்ய விரும்பவர்கள் தினந்தோறும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கின்ற சிறிய அளவிலான லட்சுமி தேவியின் விக்கிரகத்திற்கு, 11 காசுகள் அல்லது 108 காசுகளை கை நிறைய அள்ளி, மெதுவாக லட்சுமி தேவன் விக்கிரத்தின் மீது விட்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    அபிஷேகத்தை முடித்ததும் அந்த நாணயங்கள் அனைத்தையும் எடுத்து, ஒரு தூய்மையான பாத்திரத்தில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி, அதில் போட்டு வைத்து மறுநாள் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கோவிலில் இந்த சொர்ணா அபிஷேகத்தை செய்ய விரும்புபவர்கள் கைநிறைய நாணயங்களை அர்ச்சகரிடம் கொடுத்து தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யலாம்.

    அல்லது 11 காசுகள் மட்டும் எடுத்து, அவற்றை தெய்வ சிலையின் பாதத்தில் வைத்து பூஜித்து, மீண்டும் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு பூஜிக்கப்பட்ட நாணயங்களில் இருந்து தினமும் ஒரு நாணயத்தை எடுத்து, உங்கள் வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்களிடம் கொடுத்து அவர்களின் கைகளால் வாங்கிக் கொண்டு, அதை உங்கள் பணப் பையிலோ அல்லது தொழில், வியாபாரம் நடக்கின்ற இடத்தில் இருக்கும் பணப் பெட்டியில் போட்டு வைக்க வேண்டும்.

    இவ்வாறு பூஜை செய்யப்பட்ட நாணயங்களை உங்கள் பணப்பையில் வைப்பதாலும், வியாபார தளங்களில் பயன்படுத்துவதாலும் உங்களுக்கு மிகுந்த செல்வச்செழிப்பு உண்டாகும். வீண் பொருள் விரயங்கள் ஏற்படுவதை தடுக்கும். தேவையற்ற கடன்கள் போன்றவை ஏற்படாது. வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வாழ்வில் வசதிகள் பெருகும்.
    பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள்.
    லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம், சுகம் போகம், அறிவு, அழகு, பெருமை, அறம், நற்குடி, உடல்நலமுள்ள நீண்ட வாழ்வு ஆகிய 16 பேறுகளை பெறலாம்.

    பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள்.



    தேவர்கள் ஸ்ரீதேவியை வணங்கி ''தாயே தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு லட்சுமி தேவி “எந்த வீட்டில் காலையில் எவரும் தூங்காமல் எழுந்திருந்து நாம ஸ்மரணம் செய்கின்றனரோ, எங்கு காலை வேலைகளில் வீட்டு வாயிலில் சாணி தெளித்து கோலம் போட்டுத் தீபம் ஏற்றி வைக்கின்றனரோ, எங்கு ஆசாரம் கடைபிடிக்கப்படுகிறதோ, எங்கு ஸ்வதர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும் தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு இருப்பேன்” என்றாள்.

    யாரிடம் லட்சுமி தங்கமாட்டாள்? கலகம் செய்பவர், குரோதமாகப் பேசுபவர், பொய் கூறுபவர், சந்தியா காலத்தில் உண்பவர், மயிர், கரி, எலும்பு இவைகளைக் காலால் மிதிப்பவர், கால் அலம்பாமல் வீட்டுக்குள் வருகிறவர், மாத்ரு, பித்ரு பணிவிடை செய்யாதவர், ஸ்வகர்மாவை விட்டவர், நகத்தைப் பல்லால் கடிப்பவர் ஆகியோர்களிடம் லட்சுமி தங்கமாட்டாள். 
    இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள்.
    லட்சுமி காயத்ரி மந்திரம்:

    ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
    ஸ்வஹ் காலகம் தீமஹி
    தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும். மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில் விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்.
    ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

    இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
    ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்டபயங்கரீ
    ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸித்திபுத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்த்ரமூர்த்தே ஸ்தாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஆத்யந்த்ரஹிதே தேவி ஆத்யஸக்தி மஹேஸ்வரி
    யோகஜே யோக ஸம்பூதே மகா லக்ஷ்மி நமோஸ்துதே

    கருத்து: மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

    கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரனுக்கு பயத்தை அளித்தவளும் சர்வ பாவங்களையும் போக்குபவளான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.எல்லோருக்கும் வரங்களை அளிப்பவளும், துஷ்டர்களுக்குப் பயத்தை அளிப்பவளும், சர்வ துக்கங்களைப் போக்குபவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

    ஸித்தி-புத்தியை அளிப்பவளும், போகம், மோட்சம் ஆகியவற்றைக் கொடுப்பவளும், மந்திர மூர்த்தியும், எப்போதும் பிரகாசிப்பவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம். ஆதியந்தம் இல்லாதவளும், தேவியும், முதல் சக்தியும், மகேஸ்வரியும், யோகத்தினால் உண்டானவளும், யோகத்துக்குப் பலமுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.
    சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கொரியன் பட ரீமேக்கான ‘ஓ பேபி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருக்கிறது. #Samantha #OhBaby
    2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

    இந்தியாவில் முதலில் தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள்.



    இதில் இளமையான தோற்றத்தில் சமந்தாவும், வயதான தோற்றத்தில் லட்சுமி நடித்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேரர் அஷ்டோத்திரத்தை சொல்லி குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு தேவியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.
    ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்றார் திருவள்ளுவர். திருப்பதி பெருமாளே பத்மாவதியை மணமுடிக்க பொருள் இல்லாமல் குபேரனிடம் கடன் பெற்றது  புராண வரலாறு. கடன்கள் அடைய, அருளும் பொருளும் நிறைய, குபேர வழிபாடு மிகச்சிறந்தது. அஷ்டதிக்பாலகர்களுள் தன்னை மட்டுமே மனிதர்கள் உருவப்படமாக வைத்து வழிபடும் பெருமை பெற்றவன் குபேரன். லலிதாம்பிகையின் ஸௌபாக்ய பஞ்சதசீ வித்யையை உபாசித்துதான் குபேரன் சகல செல்வங்களையும், சங்கநிதி பத்மநிதியோடு நவநிதிகளையும் பெற்றான். குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு தேவியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.

    ஓம் குபேராய நம:
    ஓம் தநதாய நம:
    ஓம் ஸ்ரீமதே நம:
    ஓம் யக்ஷேஸாய நம:
    ஓம் குஹ்யகேஸ்வராய நம:
    ஓம் நிதீஸாய நம:
    ஓம் ஸங்கரஸகாய நம:
    ஓம் மஹாலக்ஷ்மீநிவாஸபுவே நம:
    ஓம் மஹாபத்மநிதீஸாய நம:
    ஓம் பூர்ணாய நம:
    ஓம் பத்மநிதீஸ்வராய நம:
    ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம:
    ஓம் மகராக்யநிதிப்ரியாய நம:
    ஓம் ஸுகச்சபநிதீஸாய நம:
    ஓம் முகுந்தநிதிநாயகாய நம:
    ஓம் குந்தகாயநிதிநாயகாய நம:
    ஓம் நீலநித்யதிபாய நம:
    ஓம் தந்தாக்யநிதிநாயகாய நம:
    ஓம் மஹதே நம:
    ஓம் வரநித்யதிபாய நம:
    ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதாயகாய நம:
    ஓம் இலபிலாபத்யாய நம:
    ஓம் கோஸாதீஸாய நம:
    ஓம் குலோசிதாய நம:
    ஓம் அஸ்வாரூடாய நம:
    ஓம் விஸ்வவந்த்யாய நம:
    ஓம் வஸேஷஜ்ஞாய நம:
    ஓம் விஸாரதாய நம:
    ஓம் நளகூபரநாதாய நம:
    ஓம் மணிக்ரீவபித்ரே நம:
    ஓம் கூடமந்த்ராய நம:
    ஓம் வைஸ்ரவணாய நம:
    ஓம் சித்ரலேகா மந: ப்ரியாய நம:
    ஓம் ஏகபிங்காய நம:
    ஓம் அளகாதீஸாய நம:
    ஓம் பௌலஸ்த்யாய நம:
    ஓம் நரவாஹநாய நம:
    ஓம் கைலாஸஸைலநிலயாய நம:
    ஓம் ராஜ்யதாய நம:
    ஓம் ராவணாக்ரஜாய நம:
    ஓம் சித்ரசைத்ராதோத்யாந நம:
    ஓம் விஹாரஸுகுதூஹலாய நம:
    ஓம் மஹோத்ஸாஹாய நம:
    ஓம் மஹாப்ராஜ்ஞாய நம:
    ஓம் ஸதாபுஷ்பகவாஹநாய நம:
    ஓம் ஸார்வபௌமாய நம:
    ஓம் அங்கநாதாய நம:
    ஓம் ஸோமாய நம:
    ஓம் ஸௌம்யதிகீஸ்வராய நம:
    ஓம் புண்யாத்மநே நம:
    ஓம் புருஸுதஸ்ரியை நம:
    ஓம் ஸர்வபுண்யஜநேஸ்வராய நம:
    ஓம் நீதிவேத்ரே நம:
    ஓம் லங்காப்ராக்தநநாயகாய நம:
    ஓம் யக்ஷாய நம:
    ஓம் பரமாஸாந்தாத்மநே நம:
    ஓம் யக்ஷராஜே நம:
    ஓம் யக்ஷிணீவ்ருத்யாய நம:
    ஓம் கிந்நரேஸாய நம:
    ஓம் கிம்புருஷநாதாய நம:
    ஓம் கட்காயுதாய நம:
    ஓம் வஸிநே நம:
    ஓம் ஈஸாநதக்ஷபார்ஸ்வஸ்தாய நம:
    ஓம் வாயுவாமஸமாஸ்ரயாய நம:
    ஓம் தர்மார்க்கைகநிரதாய நம:
    ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நம:
    ஓம் நித்யேஸ்வராய நம:
    ஓம் தநாத்யக்ஷாய நம:
    ஓம் அஷ்டலக்ஷ்ம்யாஸ்ரிதாலயாய நம:
    ஓம் மநுஷ்யதர்மிணே நம:
    ஓம் ஸத்வ்ருத்தாய நம:
    ஓம் கோஸலக்ஷ்மீஸமாஸ்ரிதாய நம:
    ஓம் தநலக்ஷ்மீநித்யவாஸாய நம:
    ஓம் தாந்யலக்ஷ்மீநிவாஸபுவே நம:
    ஓம் ஜஸ்வர்யலக்ஷ்மீஸதாவாஸாய நம:
    ஓம் கஜலக்ஷ்மீஸ்திராலயாய நம:
    ஓம் ராஜ்யலக்ஷ்மீஜந்மகேஹாய நம:
    ஓம் தைர்யலக்ஷ்மீக்ருபாஸ்ரயாய நம:
    ஓம் பூஜ்யாய நம:
    ஓம் அகண்டைஸ்வர்யஸம்யுக்தாய நம:
    ஓம் நித்யாநந்தாய நம:
    ஓம் ஸுகாஸ்ரயாய நம:
    ஓம் நித்யத்ருப்தாய நம:
    ஓம் நிதித்ராத்ரே நம:
    ஓம் நிராஸாய நம:
    ஓம் நிருபத்வராய நம:
    ஓம் நித்யகாமாய நம:
    ஓம் நிராகாங்க்ஷவய நம:
    ஓம் நிருபாதிகவாஸபுவே நம:
    ஓம் ஸாந்தாய நம:
    ஓம் ஸர்வகுணோபேதாய நம:
    ஓம் ஸர்வஜ்ஞாய நம:
    ஓம் ஸர்வஸம்மதாய நம:
    ஓம் ஸர்வாணீகருணாபாத்ராய நம:
    ஓம் ஸதாந்தக்ருபாலயாய நம:
    ஓம் கந்தர்வகுலஸம்ஸேவ்யாய நம:
    ஓம் ஸௌகந்திகஸுமப்ரியாய நம:
    ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம:
    ஓம் நிதிபீடஸமாஸ்ரயாய நம:
    ஓம் மஹாமேரூத்தரஸ்தாயிதே நம:
    ஓம் மஹர்ஷிகணஸம்ஸ்துதாய நம:
    ஓம் துஷ்டாய நம:
    ஓம் ஸுர்ப்பணகாஜ்யேஷ்டாய நம:
    ஓம் ஸிவபூஜாதராய நம:
    ஓம் அநகாய நம:
    ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம:
    ஓம் ராஜஸேகரபூஜகாய நம:
    ஓம் ராஜராஜாய நம:

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் குபேர துதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது. சனிக்கிழமை மற்றும்  செவ்வாய்க்கிழமைகளில் இந்தத் துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (மூலவர் பழைய படத்திற்கு)க்கு துளசி தளங்களால் அர்ச்சனை செய்து  வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள். அந்த மகா மந்திரம் இதுதான்: “விஸ்தார ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம்  பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ மகாகோசோ மகாபோகோ மகாதந:’’ என்பதே அந்த மந்திரம்.

    ×