search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95531"

    • செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும்.
    • கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

    காங்கேயம் :

    சந்திர கிரகணத்தையொ ட்டி, காங்கயம் சிவன்மலை முருகன் கோயிலில் செவ்வா ய்க்கிழமை (நவம்பா் 8) நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணம் இன்று நடைபெறுவதையொட்டி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வா ய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை காலை வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

     காங்கேயம் :

    காங்கேயம் நாட்டான்வலசு அருகே உள்ளது என். காஞ்சிபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35) , விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிச்சென்ற போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விவசாயி பிரகாஷ் குளிக்க வரும் போது குடிபோதையில் இருந்துள்ளார்.

    தண்ணீர் தொட்டி நிறைய தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் குளிக்கும்போது மூச்சு திணறி உயிர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட சலங்கையாட்டமும் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் ஒயிலாட்டம் மற்றும் சலங்கையாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டமும், 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட சலங்கையாட்டமும் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம்மருதாசல அடிகளார்,ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பனர் விடியல் சேகர்,சலங்கையாட்ட பயிற்சி வழங்கிய ஜெ.கே கலை குழுவின் தலைவரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமானஜெயக்குமார், வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, ஒயிலாட்டம் பயிற்சி வழங்கிய சங்கமம் கலை குழுவின் ஆசிரியர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் காங்கேயம் ஒன்றிய சேர்மன் மகேஷ் குமார் ஆகியோர் கலைஞர்களோடு சேர்ந்து சலங்கைகட்டி மேடையில் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.இந்த நிகழ்ச்சியை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
    காங்கேயம்:

    நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. எனவே பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992ம் ஆண்டு ரூ.13.51 கோடி செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. 

    இதிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் குளத்துக்கும், ஊட்டுக்கால்வாய் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பயன்பெறும் வகையில் உள்ளது.

    கடந்த 2000ம் ஆண்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    தற்போது நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 3-வது ஆண்டாக, கடந்த 7-ந் தேதி ஊட்டுக்கால்வாய் வழியாக 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து கார்வழி அருகே உள்ள அணைப்பாளையம் அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சி, க.பரமத்தி, கரூர் தாலுகாவில் உள்ள பாசன நிலங்களுக்கு கடந்த 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் வந்து கொண்டிருப்பதால் 2ம் முறையாக, முத்தூர் தடுப்பணையில் 16 அடிக்கு தேக்கப்பட்டு, ஊட்டுக்கால்வாய் வழியாக 200 கன அடி வீதமும், நொய்யல் ஆற்றுக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு செல்கிறது. நொய்யல் ஆற்று வெள்ளநீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அறுவடை செய்த சோளத்தட்டுகளை போர் அமைத்து சேமித்து வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் கறவை மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.
    காங்கேயம்:

    சோளத்தட்டுகள் கால்நடைகளுக்கு மழை பெய்யாத வறட்சியான காலங்களில் அளிக்கப்படும் முக்கிய தீவனம் ஆகும். விவசாயிகள் மழை பெய்யும் காலங்களில் தங்கள் விவசாய நிலங்களில் பயிறு வகைகள் பயிரிடாத போது, விவசாய நிலங்களை வெறுமனே விடாமல் மழை பெய்யும் காலங்களில் ஈரப்பதம் மிக்க நிலங்களை உளவு செய்து, அதில் கால்நடைகளின் முக்கிய தீவனமான சோளம் விதைக்கப்படுகிறது.

    பின்பு நன்கு வளர்ந்த பின்பு அதை அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்த சோளத்தட்டுகளை போர் அமைத்து சேமித்து வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் கறவை மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. 

    இந்த நிலையில் காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் தங்கள் ஈரப்பதமான நிலங்களில் உழவு செய்து சோளங்களை பயிரிட்டனர். 

    தற்போது இந்த சோளங்கள் நன்கு செழித்து சோளத்தட்டுகளாக வளரத் தொடங்கியுள்ளது. இதனால் சோளங்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கேயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், பி.ஏ.பி.வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பி.ஏ.பி. நிர்வாகம் முறைகேடாக பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சமச்சீர் பாசனம் என்று வைத்துக்கொண்டு வெள்ளகோவில் கிளைக்கு தேவையான தண்ணீரை பி.ஏ.பி. நிர்வாகம் கொடுப்பதில்லை எனவும் பாசன விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். 

    இந்த நிலையில் விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கேயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    இந்த கோரிக்கை தொடர்பாக பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதம், கடையடைப்பு, சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். 

    இந்த நிலையில் இந்தப்பிரச்சினை தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்எஸ்.பி., சசாங் சாய், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, போலீஸ் அதிகாரிகள் தனராசு, கிருஷ்ணசாமி, குமரேசன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் 3 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

    இந்தநிலையில் நேற்று காங்கேயத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனர். இதற்காக பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் இருந்தனர். 

    இதைத் தொடர்ந்து நேற்று  போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். 

    மேலும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் திரண்டு வந்த 100 பெண்கள் உள்பட 430 பேரை காங்கேயம் - கரூர் சாலையில் உள்ள பகவதிபாளையம் பிரிவு அருகே போலீசார் கைது செய்தனர். 

    அவர்கள் அனைவரும் காங்கேயம் நகரம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள்  அறிவித்தனர். அதன்படி இன்று பகவதிபாளையம் பிரிவு திடலில் இன்று விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
    சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
    காங்கேயம்:

    திருப்பூர் சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என கோவில் உதவி கமிஷனர் முல்லை தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தாண்டு தளர்வுகளுடனான சில கட்டுப்பாடுகள் தொடர்கிறது.

    வரும் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் மலை மீது நடக்கும். அரசின் வழிகாட்டுதல்படி வரும் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு விழாவில் பங்கேற்க அனுமதி உண்டு. 

    முக்கிய நிகழ்ச்சியான 9-ந்தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 10-ந்தேதி திருக்கல்யாணம் ஆகிய நாட்களில் பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×