search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா"

    தற்போது மகாராஷ்டிராவில் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். இதனால் நோய் தொற்று பாதிப்பு அளவும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கொரோனா முதல் மற்றும் 2-வது அலை நாட்டையே முடக்கிப்போட்டது. ஊரங்கிற்கு இணையான கொரோனா கட்டுப்பாடுகள் தொழில்களும் முடங்கின. அனைத்து வகையிலும் மாநிலத்தினை ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

    இதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளது.

    ஆனால் கொரோனா 3-வது அலை அச்சம் இன்னும் குறையவில்லை. எனவே நோய் பாதிப்பின் தாக்கத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    இந்தநிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் லேசாக ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் கொரோனா 3-வது அலை பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும் பாதிப்பு குறைவானதாகவே இருக்கும். மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகள் (ஐ.சி.யூ) தேவை ஏற்படாது. தற்போது மகாராஷ்டிராவில் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். இதனால் நோய் தொற்று பாதிப்பு அளவும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

    கொரோனாவை எதிர்த்து போராடிய சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய மூத்த குடிமக்கள் மற்றும் பாதிக்கப்பட கூடிய பிரிவினருக்கு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்குவது குறித்த கோரிக்கையுடன் கடந்த வாரம் மத்திய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்தேன். மேலும் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.

    ஆனால் அவர் ஐ.சி.எம்.ஆருடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்துவிட்டு பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    கொரோனா நோயின் முதல் அலை செப்டம்பர் 2020-ம் ஆண்டிலும், 2-வது அலை பாதிப்பு ஏப்ரல் 2021-லும் தீவிரமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரசு ஆஸ்பத்திரி தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவத்தில் பெண் டாக்டர், 3 செவிலியர்களை மராட்டிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    மும்பை :

    மராட்டிய மாநிலம் அகமதுநகரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான அனைவரும் 65 முதல் 83 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மாநில அரசு 7 நபர் கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி நடத்திய விசாரணையில் கிடைத்த முதல் கட்ட தகவலின் பேரில் டாக்டர்கள் சுனில் போகர்னா, சுரேஷ் தக்னே, விஷாகா ஷிண்டே, செவிலியர் சப்னா பதாரே ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் செவிலியர்கள் அஸ்மா சேக், சன்னா ஆனந்த் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் பெண் டாக்டரான விஷாகா ஷிண்டே மற்றும் செவிலியர்களான சப்னா பதாரே, அஸ்மா சேக், சன்னா ஆனந்த் ஆகியோரை அகமது நகர் கிராமப்புற போலீசார் நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது கொலை அல்லாத மரணத்தை விளைவித்தல், கவனகுறைவால் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது குறித்து அகமது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் பாட்டீல் கூறியதாவது:-

    சம்பவம் நடந்தபோது டாக்டர் விஷாகா ஷிண்டே பணியில் இருந்தார். ஆனால் சம்பவம் குறித்து அவர் அறிக்கை அளிக்க தவறிவிட்டார். கைதான 3 செவிலியர்களும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் இருந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு வெளியே இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நோயாளிகளை காப்பாற்ற வார்டுக்குள் சென்று உறவினர்கள் போராடிய போது, இந்த செவிலியர்கள் வெளியே தான் நின்று உள்ளனர். இதனால் பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டரும், செவிலியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 431 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ்  பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 3 ஆயிரத்து 431 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 13 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 427 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 6 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 71 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.
    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று சிவசேனாவில் இணைந்தார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தற்போது மகாராஷ்டிரா சட்டசபை உறுப்பினராக உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பொறுப்பாளர்களுக்கும் ஷிர்சாகருக்கும் சமீபகாலமாக கருத்து மோதல் இருந்து வந்தது.



    இந்நிலையில், மும்பையில் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று அவர் சிவசேனா கட்சியில் இணைந்தார். தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷிர்சாகர் குறிப்பிட்டார்.
    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோகாலி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
     
    அதிகாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். #PuneFire
    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உருளி தேவாச்சி கிராமத்தில் ஜவுளி குடோன் உள்ளது. இந்த குடோனின் ஒரு பகுதியில் இன்று அதிகாலை தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் குடோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    இதுபற்றி உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் சென்று கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.



    இந்த தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் கருகி சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuneFire 
    மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் பாதுகாப்பு படை இன்று நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #naxalkilled
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் பாம்ரகாட் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுனட்ரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    #naxalkilled
    பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தந்தை முகேஷ் அம்பானி ஆதரிக்கும்போது இன்று மும்பையில் மோடி பேச்சை அவரது மகன் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார். #ModiRally #MukeshAmbani #AnantAmbani
    மும்பை:

    ரபேல் போர் விமானம் கொள்முதலில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சலுகை செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

    அதேவேளையில், பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலின்ட் டியோரா-வை அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி சமீபத்தில் வெளிப்படையாக ஆதரித்தார். 

    அவரை ஆதரித்து வாக்களிக்குமாறு முகேஷ் அம்பானி கேட்டுக் கொள்ளும் வீடியோ பதிவை  மிலின்ட் டியோரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாக்கு சேகரிக்கிறார்.

    இந்நிலையில், மும்பை புறநகர் பகுதியான பன்ட்ரா குர்லா காம்பிளக்ஸ் என்ற இடத்தில் இன்றிரவு நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.



    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் அமர்ந்திருந்த முகேஷ் அம்பானியின் மகனான அனன்ட் அம்பானி மோடியின் பேச்சை மிகவும் ரசித்து கேட்டார். 

    பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தந்தை முகேஷ் அம்பானி ஆதரிக்கும்போது இன்று மும்பையில் மோடி பேச்சை அவரது மகன் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்த சம்பவத்தை சில ஊடகங்கள் கேலியாக குறிப்பிட்டுள்ளன. #ModiRally #MukeshAmbani #AnantAmbani
    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PMModi
    நந்தர்பார்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வடக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நந்தர்பார் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் ஆட்சிக்கு மீண்டும் வந்தபின், இட ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து விடுவேன் என எதிர்கட்சியினர் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால்,  மோடியாகிய நான் இங்கு இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க இயலாது. இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் நேராது. டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கார் எங்களுக்கு கொடுத்த இந்த இட ஒதுக்கீட்டை யாராலும் தொட இயலாது.

    வடக்கு மகாராஷ்டிராவில் எத்தனால் தயாரிப்பிற்காக கரும்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர இயலும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதனை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள்.

    மாற்றாக எரிபொருள்  இறக்குமதி செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் பெற முயல்கின்றனர். எத்தனால் இறக்குமதி செய்தால் எரிபொருளால் கிடைக்கும் வருமானத்தை இழக்க நேரிடும் என்பதனால் இவ்வாறு செய்ய மறுக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi 
    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நாங்கள் பயங்கரவாதிகளிடம் கோழையான அணுகுமுறையை கையாளும் காங்கிரஸ் அல்ல என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PMModi
    நாசிக்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்திற்குட்பட்ட பிம்பல்கலின் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவிற்கு அருகிலிருக்கும் இலங்கையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டுக்கு முன், இந்தியாவில் டெல்லி, மும்பை, அயோத்தியா ஆகிய இடங்களில்  இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. காங்கிரஸ்- தேசிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் என்ன செய்தனர்?



    இரங்கல் கூட்டங்களை தான் நடத்திக் கொண்டிருந்தனர். உலகம் முழுவதும் சென்று, பாகிஸ்தான் அதை செய்தது, இதை செய்தது என குறைக் கூறி அழுவதே அவர்கள் செயல். ஆனால், நாங்கள் என்ன செய்தோம்? பயங்கரவாதிகளை கோழைத்தனமாக கையாளும் காங்கிரஸின் அணுகுமுறையை மாற்றினோம்.

    மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 2 கட்ட தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை நினைத்து எதிர்க்கட்சியினர் தூக்கமின்றி இருக்கின்றனர்.  எனது தலைமையிலான அரசு வெங்காயத்தின் உற்பத்தி உயர்வு மற்றும் போக்குவரத்துக்கான வரிகளை குறைக்கவும் பாடுபடுகிறது.  பயிர் விலைகளை மாற்றி  இடைத்தரகர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தி தரும் வகையில்  காங்கிரஸ் செயல்பட்டது. இந்த இடைத்தரகர்களுக்கு எதிராக நான் போராடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi

    வடமாநிலங்களில் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #RainStrom
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தற்போது புயல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையில் சிக்கி மக்கள் பலியாகி வருகின்றனர்.

    ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியதுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    ராஜஸ்தானில் அதிகபட்சமாக 25 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும் பலியாகினர். மேலும் மகாராஷ்டிராவில் 3 பேர் மழைக்கு உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன்  மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #RainStrom
    மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    லத்தூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    முதன்முறையாக வாக்களிக்கப்போகும் வாக்காளர்களே, பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் மீது  பதிலடி தாக்குதல் நடத்தியவர்களுக்காக உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.  சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் எனும் நாடே உருவாகியிருக்காது. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதே எனது குறிக்கோளாகும்.  

    ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, பாகிஸ்தானின் குரலை பிரதிபலிப்பதாக உள்ளது.  ஆனால்,  நேற்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நாட்டின் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இத்தனை சாதனைகள் நிகழ்த்த காரணம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
    ×