search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95579"

    இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக சீன ஊடகத்தில் வெளியான செய்தியை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
    புதுடெல்லி:

    சீனாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில், ‘இந்தியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங் பேட்டியளித்திருந்தார். 

    இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், சீன ஊடகத்தில் வெளியான செய்தி தவறானது என நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

    இந்திய ரூபாய்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அச்சகங்கள் மூலமே அச்சடிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
    புதுடெல்லி:

    பட்டுசாலை பொருளாதார திட்டத்தின் கீழ் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை சீனாவில் உள்ள அரசு நிறுவனம் தற்போது தொடங்க உள்ளது. சீனாவின் ரூபாயான யுவானை அதிகளவில் அச்சடிப்பதற்காக நாடு முழுவதும் பல புதிய அச்சகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங், “அண்டை நாடுகள் மற்றும் மிக நெருக்கமான நட்புறவில் உள்ள நாடுகளுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்” என அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்தியா, வங்காளதேசம், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா, பிரசில், போலந்து ஆகிய நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

    இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட செய்தியை கொண்டு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தாக்கியுள்ளது. ‘இந்திய ரூபாய் நோட்டையே வெளிநாட்டில் அச்சடிப்பதுதான் மேக் இன் இந்தியாவா’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிராந்திய நாடுகளில் சீனாவின் கரம் வலுவாக இறங்குவதை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை எனவும் அவர் தனது கேள்வியில் குறிப்பிட்டுள்ளார். 
    ‘நீங்களும் வெல்லாம் ஒரு கோடி’ பாணியிலான கேம் ஷோவில் சீனப்பெருஞ்சுவர் எந்த நாட்டில் உள்ளது? என்ற கேள்விக்கு மற்றவர்களின் உதவியை நாடிய பொருளாதார பட்டதாரி பெண் இணையத்தில் வைரலாகியுள்ளார்.
    அங்காரா:

    இந்தியாவின் அனைத்து பகுதியிலும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ பாணியிலான நிகழ்ச்சிகள் பிரபலமானவை. தமிழில் இந்த நிகழ்ச்சியை சூர்யா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர். இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் மற்ற மாநிலங்களில் சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்துள்ளனர்.

    உலகம் முழுவதும் இதே பானியிலான போட்டிகள் டி.வி.களில் நடந்து வருகிறது. துருக்கி நாட்டைச் சேர்ந்த சேனல் ஒன்றும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட சு அய்ஹான் என்ற பெண் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சி விதிப்படி போட்டியாளருக்கு பதில் தெரியவில்லை என்றால் அவர் மூன்று முறை உதவியை நாடலாம். போன் மூலம் ஒருவரை தொடர்பு கொள்வது, சுற்றியுள்ள பார்வையாளர்கள் உதவியை கேட்பது, நான்கு பதில்களில் தவறான இரண்டை நீக்க கோருவது ஆகிய மூன்று உதவிகள் போட்டியாளருக்கு வழங்கப்படும்.

    இந்நிலையில், சு அய்ஹானுக்கு ‘சீனப்பெருஞ்சுவர் எந்த நாட்டில் உள்ளது?’ என்ற மிக எளிதான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா என நான்கு பதிகளும் கொடுக்கப்பட்டது.

    இந்த கேள்விக்கு திருதிருவென முழித்த அவர், ‘எனக்கு பதில் கொஞ்சம் தெரியும். ஆனால், சந்தேகம் இருப்பதால் பார்வையாளர்களின் உதவியை கேட்கிறேன்’ என கூறி அதிர வைத்துள்ளார். கேள்வியிலேயே பதில் இருப்பதை அறியாமல் அவர் மற்றவர்களின் உதவியை நாடியுள்ளார்.

    சுற்றியிருந்த பார்வையாளர்கள் 51 சதவிகிதம் பேர் சீனாவை பதிலாக தேர்வு செய்தனர். மீதமுள்ளவர்களில் பலர் இந்தியா எனவும் சிலர் ஜப்பான் எனவும் பதில்களை தேர்வு செய்தனர். இதனால், மேலும் குழப்பமடைந்த அய்ஹான், இரண்டாவது லைப்லைனையும் தேர்வு செய்தார்.

    தனது நண்பரை போன் மூலம் தொடர்பு கொண்டு சீனா என்ற பதிலை அய்ஹான் தேர்வு செய்தார். கேள்வியிலேயே பதிலை கொண்டுள்ள மிகவும் எளிதான கேள்விக்கே பிறரின் உதவியை கேட்ட அய்ஹான் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.

    இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எளிதான கேள்விக்கு ஒரு வழியாக பதில் கூறிய அய்ஹான் அடுத்த கேள்விக்கு தவறாக பதில் கூறி போட்டியை விட்டு வெளியேறினார்.
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் முடிவை ட்ரம்ப் அரசு அமல்படுத்தினால் அதற்கு தக்க பதிலடி தருவோம் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    பெய்ஜிங் :

    டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் பொருட்களுக்கான வரியை பன்மடங்காக உயர்த்தியது.  இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்தனர்.  

    மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் ட்ரம்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் இருந்து ட்ரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையில்,  அமெரிக்க அரசு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான சுமார் 800 பொருட்களுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதித்திருந்தது.  

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது.  

    இதற்கிடையே, சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கெங் ஷுவாங் கூறுகையில், சீனாவின் சட்ட அடிப்படையிலான உரிமைகள் மற்றும் பலன்களை காக்க நிச்சயம் அமெரிக்காவிற்கு பதிலடி தரப்படும் என கூறினார்.  எனினும், பதிலடி என்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷியா, சீனா, அங்கோலா, அர்ஜெண்டினா ஆகிய நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். #PMModi #BRICS #IndiaatBRICS
    ஜோகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    மேலும், மாநாட்டில் பார்வையாளராக அங்கோலா, அர்ஜெண்டினா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களிடம் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.



    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அங்கோலா ஜாவோ, அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்னாப்பிரிக்க அதிபர் உடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


    சீனாவின் குய்ஷுவ் மாகானத்தில் உள்ள குயாங் நகரத்தில் வானுயர்ந்த கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
    பீஜிங்:

    சீனாவின் குய்ஷுவ் மாகானத்தில் உள்ள குயாங் நகரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டிடத்தில் இருந்து நீர் கீழே கொட்டும் அந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    350 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை நீர்வீழ்ச்சி முழுவதும் மின்சார உதவியுடன் இயங்குகிறது. ஒரு மணி நேரம் இந்த நீர் வீழ்ச்சி இயங்க இந்திய மதிப்பில் ரூ.8000 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கியமான நாட்களில் மட்டுமே இது இயக்கப்படும் என கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
    வடகொரியா உடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் தங்களால் வர்த்தக தடைக்கு உள்ளான சீனா குறுக்கே நிற்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். #Trump #NorthKorea #China
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது. வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்தது. வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    சமீபத்தில், பியாங்யாங் நகரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் வலதுகரமாக விளங்கிவரும் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் அந்நாடின் உயரதிகாரிகளுடன் தொடர்ந்து இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ, அங்கிருந்து இன்று ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    அவர் புறப்பட்டு சென்ற பின்னர் வடகொரியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ’இருநாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் சார்பில் முன்வைக்கப்பட்ட நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், கடைபிடித்த பாணியும் மிகவும் வருத்தம் அளிக்கும் மனப்போக்குடன் அமைந்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்ற வேண்டுமானால் அதற்கான திட்டமிட்ட அணுகுமுறைகளை இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கையாள்வதுதான் வேகமான வழியாக அமையும்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.



    இருப்பினும், அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை வடகொரியா மதித்து நடந்து கொள்ளும் அதிலுள்ள ஷரத்துகளை நிறைவேற்றும் என இன்னும் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை மதித்து கவுரவிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், குறிப்பாக எங்கள் கைக்குலுக்கலை அவர் மறக்க மாட்டார். அதே வேளையில், இந்த ஒப்பந்தத்தின் மீது அமெரிக்காவால் வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ள சீனா ஆதிக்கம் செலுத்தும் என கருதுகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
    சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை அப்பகுதியைச் சேர்ந்தவர் மீட்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    பீஜிங்:

    சீனாவின் சியாங் மாகாணத்தில் உள்ள ஹூனன் நகரில் 2 வயது குழந்தை வீட்டில் தனியாக இருந்தது.மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்து விட்டது. அவனது தலை கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொள்ள அபாயகரமான நிலையில் குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் படிக்கட்டுகள் வழியே சென்றால் கால தாமதமாகி விடலாம் என்று எண்ணி கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல்கள் வழியே படபடவென ஏறி சென்று குழந்தையை மீட்டார்.

    முன்னாள் ராணுவ வீரரான அவர் மிகவும் தாழ்மையுடன், நான் ஒரு ராணுவ வீரன், இந்த நிலைமையில் எந்த ராணுவ வீரரானாலும் நான் செய்ததைத்தான் செய்திருப்பார் என்கிறார்.

    ஷாங்கையும் சீன இணையதளம் ஒரு ஹீரோ என பாராட்டி, நீங்கள் எங்கள் சீன ஸ்பைடர்மேன் உங்களுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதேபோல் பிரான்ஸில் கசாமா என்ற வாலிபர் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை மீட்டதற்காக பிரான்ஸ் குடியுரிமை பெற்றது நினைவிருக்கலாம்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டு அரங்கில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைனிடம் சிரித்தபடி கையை குலுக்கி பேசினார். #SCOSummit2018 #PMModi #SCO
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இடைக்கால அரசு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் மம்னூன் உசைன் மாநாட்டில் கலந்து கொண்டார்.

    மாநாடு முடிந்த பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சமையத்தில் மம்னூன் உசைன் - மோடி இருவரும் சிரித்தபடி கையை குலுக்கினர். பின்னர், இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். இதனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் அருகில் நின்று சிரித்துக்கொண்டு பார்த்தார். 

    பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இரு தரப்பில் இருந்தும் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    பயங்கரவாதத்தின் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு துரதிர்ஷ்டவசமான உதாரணம் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். #SCOSummit2018 #PMModi
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பயங்கரவாதத்தின் விளைவு என்ன? என்பதற்கு ஆப்கானிஸ்தான் துரதிர்ஷ்டவசமான உதாரணம். அங்கு அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அதிபர் அஷ்ரப் ஞானி எடுத்து வரும் துணிச்சலான முடிவுக்கு பிராந்திய நாடுகள் மதிப்பளிக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் இருந்து வெறும் 6 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். இதனை எளிதாக இரட்டிப்பாக மாற்ற இயலும்.

    ஷாங்காய் அமைப்பின் உணவு மற்றும் புத்த கலாச்சார மாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது. பிராந்திய நாடுகளுடன் தொடர்பு எல்லா வழியிலும் நடந்து வருகிறது. பிராந்திய நாடுகளை ஒன்றாக இணைப்பது இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 9 நாள் பயணமாக வரும் 22-ம் தேதி சீனா செல்கிறார். #WestBengalCM #MamataBanerjee #China
    கொல்கத்தா:

    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 9 நாள் பயணமாக வரும் 22-ம் தேதி சீனா செல்கிறார். பீஜிங், ஷாங்காய் மற்றும் ஜினான் நகரங்களில் சென்று பார்வையிடுகிறார். அதனை தொடர்ந்து அந்நாடு அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார்.

    மேற்கு வங்க மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக சீனாவுடன் இணைந்து செயல்படும் வகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில், இந்த சந்திப்பினிடையே கையெழுத்திட உள்ளார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சீனா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக மேற்கு வங்காளம் உள்ளதால் மம்தா பானர்ஜியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது என அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #WestBengalCM #MamataBanerjee #China
    சீனாவில் சாலையை கடக்க தடுமாறிய முதியவரை போக்குவரத்து காவலர் தனது முதுகில் ஏற்றிக்கொண்டு சாலையை கடந்து சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #piggyback
    பீஜிங்:

    சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் உள்ள ஆறு வழிச்சாலையில் வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். இரண்டு ஊன்றுகோல்களின் உதவியால் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னல் போடப்பட்டதால் வாகனங்கள் வர தொடங்கின.

    அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் முதியவரை தனது முதுகில் ஏற்றி சாலையை கடக்க உதவினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை பார்த்த அனைவரும் போலீஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர். பரபரப்பான சாலையில் முதியவருக்கு உதவி முன்வந்த போலீசாரின் செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் போக்குவரத்து துறை அந்த வீடியோவை இணையதளங்களில் பதிவு செய்துள்ளது. #piggyback

    ×