என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 95579
நீங்கள் தேடியது "slug 95579"
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இரும்புத்தாது சுரங்கத்தில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பீஜிங்:
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான இரும்புத்தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் இயங்கி வருகிறது.
பென்க்ஸி நகராட்சிக்குட்பட்ட இந்த சுரங்கத்தில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள சுமார் 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
போதிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் சீனாவில் உள்ள பல்வேறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் உயிர்கள் பலியாவதும் தொடர்கதை ஆகிவிட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் ஹுனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
இன்றைய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை என்ன? என்பது சரியாக தெரியாததாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக தான் பயன்படுத்திய காரை மரணத்திற்கு பின்னரும் தான் பிரியக்கூடாது என விருப்பப்பட்ட நபரின் ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
பீஜிங்:
சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்தவர் குய். பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த காரை தன்னுடைய உயிருக்கும் மேலாக நேசித்த இவர், மரணத்திற்கு பின்னரும் தன்னுடைய கார் பிரியவே கூடாது என தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை குய் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
குய்-யின் விருப்பத்தின் படி, அவரது குடும்பத்தினர் சடலத்தை காரில் வைத்து பெரிய குழியில் புதைத்துள்ளனர். ஹுண்டாய் தயாரிப்பான சோனாட்டா காரை குய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்துள்ளார். மிகவும் காதலித்த காருடனேயே குய்யின் உடல் புதைக்கப்பட்டது.
இந்த வீடியோவானது பல மில்லியன் பேரால் யூடியூப்பில் பார்க்கப்பட்டு பரபரப்பாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பலர கிண்டலான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை கீழே பார்க்க..
மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீன அதிபர் கூறியதாக வெளியான தகவலை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பீஜிங்:
மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்தவா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருகிறார். அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட இவர் அரசியல் கட்சி ஒன்று தொடங்கியுள்ளார்.
இவரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது, பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாக கூறி அமெரிக்கா அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை நிறுத்தி வைத்தது. இதனால், ஹபீஸ் சயீது பாகிஸ்தானுக்கு தலைவலியாக இருந்து வருகிறார்.
கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஹபீஸ் சயீதை மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், மேற்கண்ட செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற செய்தி என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீன ஆராய்ச்சியாளர்கள் சந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்யும் வகையில் செயற்கை கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. #Queqiao #Chinasatellite
பீஜிங்:
குயூகியா என்ற இந்த செயற்கை கோள் சந்திரனின் இருண்ட பக்கத்தை ஆராய்ச்சி செய்வதால் பூமியிலிருந்து 4.5 லட்சம் தொலைவில் உள்ள சந்திரனின் இரண்டாவது படலத்திற்கு செல்ல உள்ளது. அப்பகுதிக்கு அனுப்பப்படும் முதல் செயற்கை கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது சீனா அனுப்பும் 275 வது செயற்கை கோளாகும். #Queqiao #Chinasatellite
சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இன்று அதிகாலை புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 400 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள் சந்திரனின் இருண்ட பக்கத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ராக்கெட்டிலிருந்து செலுத்தப்பட்ட 25 நிமிடத்தில் செயற்கை கோள் பூமி-சந்திரன் வட்டப்பாதையை சென்றடைந்தது. அதன் பின் தகவல் தொழில்நுட்பம் செயல்பட தொடங்கியது.
×

X