search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    கோவை போத்தனூர் அருகே திருமணம் செய்வதற்கு பெண் கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை போத்தனூர் அருகே உள்ள சுந்தராபுரம் கே.வி.கே. நகரை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகன் மோகன் குமார் (வயத 27). இவர் கடந்த 2 வருடங்களாக வளைகுடா நாடான சார்ஜாவில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகன்குமார் விடுமுறையில் ஊருக்கு திரும்பினார்.

    இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மணப்பெண்ணை தேடினர். ஆனால் எந்த பெண்ணும் அமையவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மோகன் குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திருமணம் செய்வதற்கு பெண் கிடைக்காத விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மோகன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    திருமங்கலம் அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் அய்யனார் (வயது 26). விழாக்களுக்கு ரேடியோ செட் போடும் தொழிலாளி.

    இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். அப்போது திருமண ஆசை காட்டி சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அய்யனார் நடவடிக்கையில் சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தன்னை திருமணம் செய்யும்படி சிறுமி கூறினார். ஆனால் அய்யனார் அதற்கு உடன் படவில்லை.

    எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் சிறுமி புகார் செய்தார். திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தற்போது ஏமாற்றுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யனாரை கைது செய்தனர். #tamilnews
    காரமடையில் 2-வது திருமணம் செய்த இளம்பெண் கழுத்தில் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கணு வாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 35).

    இவர்களுக்கு மணிகண்டன்(7), சிவா(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். சின்னராஜ் கடந்த சில வருடங்களுக்கு இறந்து விட்டார். அதன் பிறகு மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது அங்கு வேலை பார்த்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாரியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1 வருடத்துக்கு முன்பு மாரியம்மாள் அந்த வாலிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்

    இந்நிலையில் மாரியம்மாள் காரமடையை அடுத்த தோலம்பாளையம் புதூர் பகுதியில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து அவரது தாய் செல்வி அங்கு விரைந்து சென்றார். மாரியம்மாளின் கழுத்தில் ரத்தக் காயங்கள் இருந்தது.

    உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரியம்மாள் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மாரியம்மாளின் கழுத்தில் ரத்தக்காயங்கள் இருந்ததால் அவரை யாரோ மர்மநபர்கள் கழுத்தை நெரித்தோ அல்லது ஆயுதங்களால் தாக்கியோ கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமான போலீஸ் தலைமையக ஊழியர் திருமணம் ஆகாத விரக்தியில் தான் மாயமாகி இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது மகன் சூரியசந்திரகுமார் (30), அரசு ஊழியரான இவர், போலீஸ் தலைமையகத்தில் முதுநிலை எழுத்தராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணிபுரிந்த இடத்தில் இருந்து கடந்த 4-ந் தேதி சூரியசந்திரகுமார் வேலைக்கு சென்றார். ஆனால், மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் சூரிய சந்திரகுமார் தனது அப்பா ராமசாமிக்கு சிதம்பரத்தில் இருந்து போன் செய்தார். அப்போது தனக்கு வேலை பார்க்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதுகுறித்து ராமமூர்த்தி பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் சிதம்பரம், திருக்கடையூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு சென்று தேடி வந்தனர். அங்கும் இல்லை. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் சூர்யசந்திரகுமார் வீட்டினர் 50-க்கும் மேற்பட்ட இடத்தில் பெண் பார்த்துள்ளனர். ஆனால், ஒன்றுமே அமையவில்லை. மேலும் அவரது நண்பர்கள் உனக்கு எப்போது திருமணம் ஆகும்? என அடிக்கடி கேட்டுள்ளனர்.

    இதனால் தனக்கு திருமணம் ஆகவில்லையே? என்ற விரக்தியில் இருந்துள்ளார்.

    இதன் காரணமாகதான் அவர் மாயமாகி இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    தண்டராம்பட்டு அருகே சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், செங்கம் புதுப்பாளையத்தை சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளர் மகேஷ் (24) என்பவருக்கும் இன்று காலை, புதுப்பாளையத்தில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    நேற்றிரவு மணக்கோலத்தில் சிறுமியை அலங்கரித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து செல்ல தடபுடலாக ஏற்பாடு செய்தனர். இதுப்பற்றி, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவுக்கு புகார் சென்றது. அவர் வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து, வருவாய்த் துறையினர் சிறுமி வீட்டிற்கு விரைந்து சென்று திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். ‘‘குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம், போலீசார் மூலம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    பின்னர், திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை சந்திப்பில் பிரசித்திபெற்ற சாலைக் குமாரசாமி கோவிலில் ஒரே நாளில் நடந்த 45 திருமணங்கல் நடைபெற்றது. இதற்கு வந்த உறவினர்கள் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பில் பிரசித்திபெற்ற சாலைக் குமாரசாமி கோவில் உள்ளது. குறுக்குத்துறையில் இருந்து திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு சாமி சிலைகள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கோவில் வரலாறு கூறுகிறது. தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருவது வழக்கம்.

    முகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகிறது. சில சமயங்களில் ஒரே நாளில் அதிக ஜோடிகளுக்கு திருமணம் நடை பெறும். இன்று முகூர்த்த நாள் என்பதால் சாலைக்குமார சுவாமி கோவிலில் ஒரே நாளில் 43 திருமணங்கள் நடைபெற்றது.

    அதிகாலையில் இருந்தே புதுமண ஜோடிகள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். அவர்களது உறவினர்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர். காலையில் இருந்தே திருமணங்கள் நடைபெற தொடங்கியது. அடுத்தடுத்து ஒவ்வொரு ஜோடியாக திருமணம் முடிந்து சென்றனர். மணமக்களின் உறவினர்கள் கோவில் முன்பாக ஆங்காங்கே கூடி நின்றனர். கோவிலுக்குள்ளேயும் ஏராளமானோர் நின்றார்கள். இதனால் அந்த பகுதி முழுவதுமே பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.

    கோவில் முன்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. இதனால் கோவிலுக்கு வந்த மணமக்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமல்லாமல் அந்த பகுதி வழியே சென்ற பொதுமக்களும் அவதிப்பட்டனர்.



    வெகுநேரத்திற்கு பிறகே போக்குவரத்து சீரானது. இதுபோன்ற முகூர்த்த நாட்களில் போக்குவரத்தை சரி செய்யவும், திருமண ஜோடிகளை முறையாக கோவிலுக்குள் அனுமதிக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசாரை நிறுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பார்வதிநாதன். இவரது மகள் ஜான்சி (வயது 22). இவர் தென்காசி அருகேயுள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும் கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி மயிலானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இன்று கடையத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் அவர்களது திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.

    திருமணத்திற்கு மணமகன் வீட்டார் இன்று காலை கடையத்துக்கு புறப்பட்டு நின்றனர். மணமகளை அலங்காரம் செய்வதற்காக உறவினர்கள் மணப்பெண்ணை கூப்பிட சென்றனர். அப்போது மணப்பெண் ஜான்சியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் திருமண வீட்டாரும், அங்கு வந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வீடு களை இழந்தது. இது குறித்து கடையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜான்சி எங்கு சென்றார்? திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமிக்கு மிமிக்ரி கலைஞர் அனூப்புக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. #VaikomVijayalakshmi
    கண் பார்வை இல்லாவிட்டாலும், தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் சிறந்த வீணை இசைக்கலைஞரும் ஆவார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு வயது 35 ஆகிறது. 

    பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும் போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’, ‘வீரசிவாஜி’, ‘என்னமோ ஏதோ’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

    இவருக்கும், மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்கள் நிச்சயதார்த்தம் வைக்கத்தில் உள்ள விஜயலெட்சுமி வீட்டில் எளிமையாக நடைபெற்றது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். வைக்கம் விஜயலெட்சுமி - அனூப் திருமணம் அடுத்த மாதம் அக்டோபர் 22-ந் தேதி வைக்கம் மகாதேவர் கோவிலில் நடக்கிறது.



    வைக்கம் விஜயலெட்சுமியின் வாழ்க்கை கதை மலையாளத்தில் சினிமாவாக தயாராகிறது. இந்த படத்தில் கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் நடிக்கிறார். #VaikomVijayalakshmi

    திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண் கடத்தப்பட்டதாக உசிலம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன் இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 27). எம்.சி.ஏ. பட்டதாரி.

    சம்பவத்தன்று காலை தேர்வு எழுதுவதற்காக சிவரஞ்சனி மதுரை சென்று உள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் குபேந் திரன் உசிலம்பட்டி டவுன் போலீசில், மகள் மாயமானது குறித்து புகார் கொடுத்தார். அதில், திருமங்கலம் மறவன்குளத்தை சேர்ந்த வீரபாண்டி (29) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, சிவரஞ்சனியை கடத்தி சென்று உள்ளார்.

    இதற்கு அவரின் தந்தை கணேசன், தாய் பழனியம்மாள் மற்றும் நல்லபெருமாள் பட்டியை சேர்ந்த உறவினர்கள் மகாலிங்கம், தாய் பாப்பு ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்று குறிப் பிட்டு உள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் வாலிபரை வலை வீசி தேடி வருகிறார். #tamilnews
    வடமதுரை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை திருமணம் செய்த காதலன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.வெள்ளோடு நொச்சிபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 25). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நதியா (23). எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோருக்கு பயந்து நண்பர் வீட்டில் தங்கி இருந்த காதல் ஜோடி இன்று வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்ச மடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பெண்ணிற்குப் பொருத்தமான நாளாகவும், மாதவிலக்கு இல்லாத நாளாகவும் தேர்ந்தெடுத்து, அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம் அனைத்தும் பார்த்துத் திருமண ஓலை எழுத வேண்டும்.
    தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர்கள் திருமணப் பேச்சு நடத்துகின்ற பொழுது, முதலில் ஜாதகத்தைக் கொடுத்து பொருந்துகின்றதா? என்று பார்க்க வேண்டும். நல்ல பொருத்தமாக இருந்தால், பிறகு மணமகளுக்கு மணமகனைப் பிடித்திருக்கிறதா?, மணமகனுக்கு மணமகளைப் பிடித்திருக்கிறதா? என்றும் கேட்டு முடிவு செய்து, அதன்பிறகு நிச்சயதார்த்தம் செய்ய முடிவெடுப்பர்.

    நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முகூர்த்த ஓலை எழுதுவர். மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறித்தால், குறித்து முடிந்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்கள். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகின்ற பொழுது, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய பிறகே திருமண ஓலை எழுத வேண்டும்.

    பெண்ணிற்குப் பொருத்தமான நாளாகவும், மாதவிலக்கு இல்லாத நாளாகவும் தேர்ந்தெடுத்து, அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம் அனைத்தும் பார்த்துத் திருமண ஓலை எழுத வேண்டும். அதை வெற்றிலைப் பாக்கு தட்டில் வைத்து, விநாயகர் படத்தின் முன்னால் நின்று, சம்பந்தம் செய்து கொள்பவர்கள் தட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னார் மகனுக்கு இன்னார் மகளைத் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப் பெற்றிருக்கிறது என்று, பூஜை அறையிலுள்ள தெய்வப் படத்தின் முன்னால் வாசித்துவிட்டு சம்பந்திகள் தட்டு மாற்றிக் கொள்வது உகந்தது. 
    தர்மபுரி அருகே திருமணம் ஆன 1 வருடத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவதிப்பட்டு வந்த இளம்பெண் மரணமடைந்தார்.
    கொண்டலாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம், மொரப்பூர், சென்னாம்பட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி மீனா (வயது 22). இவர்களுக்கு திருமணம் நடந்து 1 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவரும் சேலம் உடையாப்பட்டி அருகே தங்கியிருந்து கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 6-ந்தேதி அன்று மாலை மீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே மீனா அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். 

    திருமணம் நடந்து 1 வருடங்களே ஆவதால் சேலம் தெற்கு உதவி கமிஷனர் கணேசன் மற்றும் உதவி கலெக்டர் குமரேசன் ஆகியோர் இளம்பெண் மீனா சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    ×