search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    தேனி அருகே பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே காட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி 5 வயது குழந்தை உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த வி‌ஷயம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் சண்டை போட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் கார்த்திக் அடிக்கடி இளம்பெண் வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்த பெண் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கணவர் பிரிந்து சென்று விட்டார். நான் கர்ப்பமாக உள்ளேன். எனவே என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் தன்னை சந்தித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் ஆட்டோ டிரைவர் ‘பிரேக் ஆயில்’ குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மேலூர் அருகேயுள்ள கொட்டக்குடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் சரவணன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் அந்தப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் சரவணன் தனது பெற்றோரிடம் ‘நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கேட்டார்.

    அதற்கு தெய்வேந்திரன் ‘அண்ணனுக்கே இன்னும் திருமணமாகவில்லை, உன் தங்கையும் திருமண வயதில் உள்ளார். எனவே 3 ஆண்டு காத்திரு’ என்று அறிவுரை கூறினார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவணன் ‘பிரேக் ஆயில்’ குடித்து மயங்கி விழுந்தார்.

    உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தெய்வேந்திரன் மேலூர் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். மளிகைக்கடைக்காரர். இவரது மகன் தனசேகரன் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பருடைய மகள் ஜனனி (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஜனனி அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இன்ஸ் பெக்டர் ரவிச் சந்திரன், சப்-இன்ஸ் பெக்டர்கள் சின்னசாமி, ஆனந்தன் ஆகியோர் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு போலீசார், ஜனனியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம். #Thirumanam #Cheran #Umapathi
    பிரெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `திருமணம்'.

    இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் சேரன். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், இசை - சித்தார்த் விபின், படத்தொகுப்பு - பொன்னுவேல் தாமோதரன், பாடல்கள் - சேரன், லலித் ஆனந், யுகபாரதி, நடனம் - சஜ்னா நஜம், ஆடை வடிவமைப்பு - கவிதா சச்சி, தயாரிப்பு - பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சேரன்.



    சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்கும் சேரன் படம் பற்றி பேசும் போது,

    திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும் என்று நம்புகிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. இவ்வாறு கூறினார்.

    படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh #Sukanya #ThirumanamFrom1stMarch

    திருமணம் டிரைலர்:

    நெகமத்தில் வாலிபரை தாக்கி விட்டு காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை கடத்தி சென்ற அண்ணன், பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெகமம்:

    ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 22). அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ.இறுதி ஆண்டு படித்து வருகிறார். செஞ்சேரிபுத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோபியில் உள்ள தனியார் கம்பனியில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

    அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பணிமாறுதல் ஆகி சதீஷ்குமார் உடுமலைக்கு வந்து விட்டார். அங்கு வந்தபிறகும் இருவருக்கும் காதல் நீடித்து வந்தது. இந்நிலையில் இருவரும் கடந்த 17-ந்தேதி உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டு இருவரும் செஞ்சேரிப்புத்தூரில் உள்ள சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுகன்யாவின் அண்ணன் ரகுபதி (27), அவரது தந்தை சென்னிமலை (55) தாயார் விஜயகுமாரி (49) ஆகிய 3 பேரும் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று சதீஷ்குமாரை தாக்கிவிட்டு சுகன்யாவை கடத்தி சென்று விட்டனர்.

    இதில் சதீஷ்குமார் காயம் அடைந்த நிலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு சுகன்யாவை கடத்தி சென்ற ரகுபதி மற்றும் அவரது தந்தை சென்னிமலை, தாயார் விஜயகுமாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தனர். அப்போது இவர்களிடையே காதல் ஏற்பட்டது.

    இந்த விசயம் பெற்றோருக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் வடகாடு மலைப்பகுதியில் எல்லைக்கருப்பணசாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

    எனினும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு 2 பேரும் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபிகா மேஜர் என்பதால் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

    திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    கடமலைக்குண்டு:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பொன்னார் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 25). இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அதே கல்லூரியில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரும் படித்தார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்து 2 பேரும் அவரவர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் குமணன்தொழு கிராமத்தில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு நந்தினி வந்தார். ரஞ்சித்தை சந்தித்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அப்போது, தனது தங்கை திருமணம் நடைபெற இருப்பதாகவும் அது முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். ஆனால் இதனை நந்தினி ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை திருமணம் செய்ய ரஞ்சித் மறுப்பதாக நந்தினி நினைத்தார். இதனையடுத்து, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை (விஷம்) ரஞ்சித் வீட்டின் முன்பு வைத்து நந்தினி குடித்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து நந்தினி மீது தற்கொலைக்கு முயன்றதாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நரசிம்மநாயக்கன்பாளையத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் டேங் வீதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 31). வெல்டர். இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்தார். அவரது தாய் விசாலாட்சி மகனுக்கு ஆறுதல் கூறி நம்பிகை வார்த்தை பேசி வந்தார்.

    இந்நிலையில் அவரது தாய் தவறி விழுந்து காயம் அடைந்தார். இனிமேல் தனக்கு திருமணம் செய்து வைக்க யாரும் இல்லை என்று விரக்தியடைந்த செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போன்று பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கனூர் விஷ்ணு நகரை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன் (45). இவர் குடும்ப பிரச்சினையால் வி‌ஷம் குடித்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    எல்லா பெண்களுமே தங்களுக்கு வெளிப்படையாக பேசும் கணவரை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்களைப்போல பழகவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
    எல்லா பெண்களுமே தங்களுக்கு வெளிப்படையாக பேசும் கணவரை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்களைப்போல பழகவேண்டும் என்றும் கருதுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் எத்தனை சதவீதம் தெரியுமா? 91 சதவீதம்!

    ஆண்கள் மீதான பற்று பெண்களுக்கு குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் கடைசி காலம் வரை தங்களை பாதுகாக்கவேண்டும், பராமரிக்கவேண்டும் என்ற ஆசை பெண்களிடம் இல்லை. ஏன்என்றால் தங்கள் எதிர்கால கணவரிடம் அவைகளை எல்லாம் எதிர்பார்க்கும் பெண்கள் 15 சதவீதம்தான்.

    தங்கள் மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தரவேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம்பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் அளவு 94 சதவீதம்.

    கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 35 சதவீதம் மட்டுமே!

    குறைந்தது 6 மாதமாவதுபழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தரவேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். பார்த்ததும் திருமணம், பின்பு அவசர அவசரமாக தேனிலவு போன்றவைகளில் பெண்களுக்கு விருப்பம் இல்லை.

    பழைய காலத்து மாடல் பெண் பார்க்கும் சடங்கில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், ‘இவர்தான் உன் வருங்கால கணவர்’ என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் பெரும்பாலான இளம் பெண்கள் சொல்கிறார்கள்.

    தனக்கான வரனை பெற்றோரே முடிவு செய்துவிடக்கூடாது என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அவர்கள் வரனின் வேலை, சம்பளம், குடும்பம், சொத்து இவைகளைத்தான் பார்க்கிறார்கள். அவைகள் திருப்திபட்டால், அந்த மாப்பிள்ளைக்கு ஓ.கே சொல்லி விடுகிறார்கள். அவர் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சரிப்பட்டு வருவார் என்பது தங்களுக்குத்தான் தெரியும் என்று இளம் பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம். நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று, 78 சதவீத பெண்கள் அதிரடியாக சொல்கிறார்கள்.

    18 சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் போய் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.



    திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அவர்கள் விளக்கமாக பதில்சொல்ல முன்வரவில்லை.

    கணவருக்கு வேறு பெண்களோடு இருந்த தொடர்பு பற்றி கேள்வி எழுப்பமாட்டோம் என்று 22 சதவீத பெண்கள் சொல்வது அதிர்ச்சிகலந்த உண்மை.

    பெரும்பாலான பெண்கள் 25 முதல் 30 வயதுக்குள் திரு மணம் செய்துகொண்டால் போதும் என்று கருத்து தெரிவி்க்கிறார்கள்.

    திருமணத்தில் ஆர்வம் இல்லாத பெண்கள்கூட, ‘திரு மணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம்’ என்கிறார்கள். காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    ‘அதுக்கு எதுக்கு ஆடம்பரம்’ என்று என்று சொல்லும் 40 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

    திருமணம் முடிந்த மறுநாளே தூக்கிவீசப்படும் அழைப்பிதழுக்காக நிறைய பணத்தை செலவிடவேண்டியதில்லை. அது ரொம்ப சிம்பிளாக இருந்தால் போதும் என்று 81 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    ‘நீ கன்னித்தன்மை கொண்டவள்தானா?’ என்று வருங்கால கணவர் கேட்டால், பதிலுக்கு அவரிடம் அதே கேள்வியை திரும்பகேட்போம் என்று 14 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். ‘அப்படிப்பட்ட பழமைவாதியை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று 65 சதவீத பெண்கள் சொல்கிறார்கள்.

    தங்கள் கணவர் சினிமா கதாநாயகன்போல் அழகாக இருக்கவேண்டியதில்லை என்று 64 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

    மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்றுதான் பெரும்பாலான பெண்கள் கூறியிருக்கிறார்கள். அளவோடு மது அருந்துபவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று 3 சதவீத பெண்களே சொல்கிறார்கள். இது அருந்துபவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள் என்ற பயம், 93 சதவீத பெண்களிடம் இருக்கிறது.

    (தனியார் நிறுவனம் ஒன்று எடுத்திருக்கும் கருத்துக்கணிப்பு இது)

    காலம் மட்டுமல்ல, காலத்திற்கு ஏற்ப பெண்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களிடம் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றங்களை சமூகம்தான் சரியாக புரிந்துகொள்வதில்லை. திருமணம் இன்னும் பழைய பாணியிலே இருந்துகொண்டிருந்தாலும், திருமணத்தின் கதாநாயகிகளான பெண்களின் மனோநிலை புதிதாக இருக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு, அவர்களது வித்தியாசமான ஆசைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
    வெளிநாடு வாழ் இந்திய நபர்கள் திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமசோதா நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. #RegisterMarriage #NRI
    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மோசடி திருமணத்தில் சிக்குவதை தவிர்ப்பதற்காக, வெளிநாடு வாழ் இந்திய நபர்கள் திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமசோதா நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படி 30 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் அவரது பாஸ்போர்ட் அல்லது விசாவை பறிமுதல் செய்யவோ, திரும்பப்பெறவோ அதிகாரம் வழங்கப்படுகிறது. வாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியும்.

    திருமணம் இந்தியாவில் நடந்தாலும், அல்லது வெளிநாட்டில் நடந்தாலும் இது பொருந்தும். இந்த நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இது என்பதாலும், நாளை (புதன் கிழமை) கூட்டத்தொடர் முடிவடைய இருப்பதாலும் இந்த சட்டமசோதா நிறைவேற்றுவதற்கு சாத்தியம் இல்லை. ஆனாலும் இது நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RegisterMarriage #NRI
    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவரை திருமணம் செய்த வாலிபர் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந் தேதி இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்துக்காக சேர்ந்தார்.

    மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் தாயின் வயதை ஆய்வு செய்த போது அவர் 14 வயதே ஆன சிறுமி என்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் டாக்டர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக குழந்தைகள் நல அமைப்பினர் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தாய் அவரது தந்தைக்கு தெரியாமல் 22 வயதான இளைஞர் ஒருவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தை பிறந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமி, குழந்தை மற்றும் அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோரை மாவட்ட சமூக நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் சமூக நல கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.

    நீதிபதி விசாரணை நடத்திய பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    ஆத்தூர் அருகே மணப்பெண்ணின் அண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து அவரது மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியாம்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவருக்கு செல்வராஜ் (28) என்ற மகனும், வனிதா, ராஜேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர்.

    செல்வராஜ் ரிக் வண்டி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது.

    செல்வராஜியின் தங்கை வனிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் செல்வராஜ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி மல்லியகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது செல்வராஜ் உடல் அருகே ஈர துணி ஒன்று கயிறாக திரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

    இந்த ஈரதுணியால் அவரது கழுத்தை இறுக்கி யாராவது கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார், அந்த ஈரதுணியை கைப்பற்றி, கைரேகை குறித்து கண்டுபிடிக்க தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்

    இதையடுத்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஊரில் உள்ள கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை பார்ப்பதற்காக தீபா வந்திருந்தார்.

    அப்போது செல்வராஜூம் அந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது தீபாவை பார்த்தவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. தீபாவின் அழகில் மயங்கிய அவர், திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

    தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். தான் உன்னை காதலிப்பதாகவும், என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா? என செல்வராஜ் கேட்டார். அதற்கு தீபா சம்மதித்தார்.

    தேர் திருவிழாவின் போது சந்தித்த இருவரும் தொடர்ந்து இரண்டு நாட்கள் காதலித்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து இருவரும் பெற்றோர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபா பிரசவத்திற்காக கீரிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

    இதையடுத்து செல்வராஜ் நேற்று காலை கீரிப்பட்டிக்கு சென்று தனது தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. ஆகவே திருமணத்தை முன்னின்று நாம் நடத்த வேண்டும். எனவே குழந்தையுடன் வருமாறு கூறி தீபாவை அழைத்து வந்தார்.

    வீட்டிற்கு வந்ததும் செல்வராஜின் பெற்றோர் மகனின் 5 மாத குழந்தையை பார்க்க வேண்டி ஆசையுடன் எடுத்தனர். அப்போது கணவரிடம் தீபா நான் உங்கள் அப்பா, அம்மாவுடன் வீட்டில் வசிக்க மாட்டேன். தனியாக குடும்பம் நடத்துவோம் என்று கூறினார். குழந்தையையும் அவர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்தார்.

    மனைவி தகராறு செய்ததை தொடர்ந்து செல்வராஜ், தனி குடித்தனம் நடத்துவதற்காக அதே ஊரில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து நேற்று பால் காய்ச்சி அந்த வீட்டில் குடியேறினார்.

    இந்த நிலையில் இரவு அவர்களுக்கு வீட்டில் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவில் தீபா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இன்று காலையில் கதவு திறந்து கிடந்ததை பார்த்ததும் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு செல்வராஜ் பிணமாக கிடந்தார் என்பது தெரியவந்தது.

    இன்று காலை சகோதரிக்கு நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அண்ணன் இறந்ததால் நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி சோகமாக மாறியது.

    போலீசார், தலைமறைவான தீபாவை தேடி வருகிறார்கள். #tamilnews
    ×