search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 17 வயது சிறுமியின் திருமணத்தை சமூகநல அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் அவர் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவை சேர்ந்த வாலிபரை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் போலீசாருடன் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமிக்கு திருமண வயது எட்டாததை பெற்றோரிடம் விளக்கிக்கூறினர். இதனை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட ஆசிரியர் பயிற்சி மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவிழி (வயது 21).நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட்.2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25). டெய்லர். என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் குறித்து அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை கூறி காதல் ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    திருமணம் செய்து வைக்காத பெற்றோரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #VelloreCollectorOffice
    வேலூர்:

    வேலூர் அடுத்த அன்பூண்டியை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளையமகன் ஜானகிராமன் (வயது 28). இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க கோரி வற்புறுத்தி வந்து உள்ளார்.

    மேலும் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இதனால் பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் ஜனகிராமன் தனது பெற்றோர் மீது புகார் அளித்து உள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை மண்எண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஜானகிராமன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ குளிக்க முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜானகிராமன் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #VelloreCollectorOffice
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல் தனது காதலியை திருமணம் செய்கிறார். #HardikPatel #Kinjal
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் பட்டேல் (வயது 25). இவர் ‘பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

    ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர் தனது காதலி கிஞ்சாலை திருமணம் செய்து கொள்கிறார்.

    இவர்களது காதல் திருமணம் வைதீக முறைப்படி அங்குள்ள சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    எளிய முறையில் நடக்கிற மண விழாவில் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல்கள் கூறுகின்றன.  #HardikPatel #Kinjal
    27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். இன்று 27 நட்சத்திரங்களுக்கான தமிழ் அர்த்தங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அஸ்வினி - குதிரைத்தலை

    பரணி - தாங்கிப்பிடிப்பது

    கிருத்திகை - வெட்டுவது

    ரோகிணி - சிவப்பானது

    மிருகசீரிஷம் - மான் தலை

    திருவாதிரை - ஈரமானது

    புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி

    பூசம் - வளம் பெருக்குவது

    ஆயில்யம் - தழுவிக்கொள்வது

    மகம் - மகத்தானது

    பூரம் - பாராட்டத்தகுந்தது

    உத்திரம் - சிறப்பானது

    ஹஸ்தம் - கை

    சித்திரை - ஒளி வீசுவது

    சுவாதி - சுதந்திரமானது

    விசாகம் - பிளவுபட்டது

    அனுசம் - வெற்றி

    கேட்டை - மூத்தது

    மூலம் - வேர்

    பூராடம் - முந்தைய வெற்றி

    உத்திராடம் - பிந்தைய வெற்றி

    திருவோணம் - படிப்பறிவு உடையது

    அவிட்டம் - பணக்காரன்

    சதயம் - நூறு மருத்துவர்கள்

    பூரட்டாதி - முன் மங்கள பாதம்

    உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்

    ரேவதி - செல்வம் மிகுந்தது. 
    திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.
    திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. வாழையடி வாழையாக நாம் இந்த சடங்கை செய்து வருகிறோம். மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

    முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

    இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

    மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

    நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

    ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.

    ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

    ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
    “நாகரிகம் அழிந்ததைப்போல் காலப்போக்கில் திருமணமே இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கவிஞர் வைரமுத்து கூறினார். #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh
    ‘பொற்காலம்,’ ‘தவமாய் தவமிருந்து’ உள்பட பல தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர், சேரன். சில வருட இடைவெளிக்குப்பின் அவர் இயக்கியிருக்கும் படம், ‘திருமணம்.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

    விழா முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவுவாயில் போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். முகப்பில் இருந்து நுழைவு வாயில் வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி இருந்தார்கள். விழா அரங்கத்திற்குள் நுழைந்ததும் பாரம்பரியமான தவில்-நாதஸ்வர கச்சேரி பரவசப்படுத்தியது. படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

    விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    “இயக்குனர் சேரன் நுட்பமான பார்வை உடையவர். கதையை எழுதுகிறவர் அல்ல, செதுக்குகிறவர். சேரனுக்கு நான் எழுதிய பாட்டுக்கே ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை சிங்கப்பூர் விமான நிலையத்தின் வெளிவட்ட சாலையில் நானும், என் நண்பரும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஒரு பெரியவர், “நீங்கள்தானே வைரமுத்து” என்று கேட்டார். ‘ஆம் என்றேன்’. நீங்கள் எழுதிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன்.



    “நான் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழன். என் பூர்வீகம் எனக்கு தெரியாது. இந்த பாட்டுக்குள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் மண்ணெடுத்திருக்கிறீர்கள். பாட்டை கேட்கிறபோதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் பூர்வீகமாய் இருக்குமோ என்று அடிக்கடி விரும்பி கேட்கிறேன்” என்றார். அப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல. சிங்கப்பூரின் அன்றைய ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் தான். அவர் மறைந்தபோது, அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

    அப்போது, சிங்கப்பூரின் சீன அமைச்சர் ஒலிபெருக்கியின் முன்னால் வந்தார். “இப்போது, மறைந்த ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாட்டு ஒலிபரப்பப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படும்” என்றார். உடனே அந்த மேடையில், “தஞ்சாவூரு மண்ணெடுத்து” பாடல் ஒலிபரப்பானது. இப்படி ஒரு வரலாற்று சிறப்பு சேரன் உருவாக்கிய ‘பொற்காலம்’ படத்தில், தேவா இசையில் நான் எழுதிய பாடலுக்கு கிடைத்தது. இந்த ஒரு தடம் போதும். சேரன் இயக்குனராக வந்து சாதித்ததற்கு...

    ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார். மனிதகுல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனிதகுலம் தனது வசதிக்கு கட்டமைத்துக் கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்; காலப்போக்கில் மறைந்தே போகலாம். பல ஆயிரம் ஆண்டு கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.



    “திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் திருமணத்தை திருத்த பார்க்கிறதா? அல்லது திருமணத்தையே நிறுத்த பார்க்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

    இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

    டைரக்டர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.  #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh

    காரமடை அருகே திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை காரமடை அருகே உள்ள கண்ணார் பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ஏஞ்சல் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இவரும் வடவள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த 4 வருடமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். காதல் விவகாரம் குறித்து 2 பேரும் தங்களது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்கும்படி கூறினர். அவர்கள் திருமணம் செய்து வைக்க காலம் தாழ்த்தி வந்தனர்.

    இந்தநிலையில் காதலர்கள் 2 பேரும் நண்பர்கள் உதவியுடன் கணபதியில் உள்ள கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி காதலர்கள் கணபதி டெக்ஸ்டுல்ஸ் பாலம் அருகே உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் நேற்று முன்தினம் தங்கினர்.

    காலையில் திருமணம் செய்ய இருந்த நிலையில் நள்ளிரவு திடீரென ஏஞ்சல் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது காதலன் அவரை பல இடங்களில் தேடினார். ஆனால் ஏஞ்சல் கிடைக்க வில்லை. இந்த நிலையில் டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. உடனடியாக அந்த வாலிபர் அங்கு சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடந்தது ஏஞ்சல் என்பது தெரியவந்தது. அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஏசு வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொண்டாமுத்தூரில் கணவர் 10ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளதால் மனமுடைந்த பெண் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சுண்ட பாளையம் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா (23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த 14.11.2018 அன்று திருமணம் நடந்தது. தலை பொங்கலுக்காக சவுந்தர்யா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    நேற்று மாலை வீட்டில் சவுந்தர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. வேல்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    என்ஜினீயரான சவுந்தர்யாவுக்கு தனது கணவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது வேதனையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    இதேபோல் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் மாசாணம். டிரைவர். இவரது மனைவி தீபிகா(25). இவர்கள் காதலித்து கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சம்பவத்தன்று தீபிகா வீட்டில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணி விசாரணை நடத்தினார். குடும்ப பிரச்சினை காரமணாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி 1½ வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற காதல் ஜோடிகளுக்கு டாக்டர் உதவியால் ஆஸ்பத்திரியில் திருமணம் நடந்த வீடியோ வைரலாகியது. #Telanganalovers #MarriedinHospital
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், விகாராபாத் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்(21). தனது உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா(19) என்பவரை நவாஸ் உயிருக்குயிராக காதலித்து வந்தார். இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்த காதல் உறவுக்கு இருவரின் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஏற்கனவே, நவாசின் சகோதரருக்கு ரேஷ்மாவின் அக்காவை திருமணம் செய்து கொடுத்துள்ளதால் அதே குடும்பத்தில் மீண்டும் ஒரு சம்பந்தம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

    இதற்கிடையில், பெற்றோர் தனக்கு மாப்பிள்ளை தேடுவதை அறிந்த ரேஷ்மா சமீபத்தில் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விகாராபாத் நகரில் உள்ள கிராஃபோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    காதலிக்கு நேர்ந்த இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாத ரியாஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் தற்கொலைக்கு முயன்றார். ரேஷ்மா அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.



    இதற்கிடையில், ரேஷ்மாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவினாஷ், அவரது விபரீத முடிவுக்கான காரணம் தொடர்பாக அக்கறையுடன் விசாரித்தார். ரியாஸ் காதல் விவகாரம் பற்றி தெரியவந்த டாக்டர் இரு குடும்பத்தாரையும் அழைத்து சமரசம் பேசினார்.

    உங்களது பிடிவாதத்தால் இரு உயிர்கள் பலியாக வேண்டுமா? அவர்கள் மீண்டும் தற்கொலைக்கு முயன்றால் என்னவாகும்? என்று சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறிய அறிவுரை கைமேல் பலனைத் தந்தது. அதுவும் உடனடியாக.

    இதையடுத்து, அந்த மருத்துவமனையில் மூக்கில் சுவாசக் குழாயுடன் இருந்த ரேஷ்மாவுக்கு  மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. நடக்க முடியாமல் சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் மணமகன் கோலத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

    இருவீட்டார் முன்னிலையில் மதகுருவின் தலைமையில் மணமகளுக்கு ‘மஹர்’ பணம் மற்றும் தங்க நகைகளை தந்து நவாஸ் குடும்பத்தார் ரேஷ்மாவை மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பான செய்திகளும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Telanganalovers #MarriedinHospital




    வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
    ‘திருமணம் செய்துகொண்டால் அழகு போய்விடும். ஆற்றலும் குறைந்துவிடும். சுதந்திரம் பறிபோய், சாதிக்கும் துடிப்பும் மங்கிவிடும்’ என்று திருமணத்தை தள்ளிப்போடும் பெண்கள் சொல்வதுண்டு. அவர்களுக்கு சவால்விடும் விதத்தில் அழகைப் பேணி, ஆற்றலை மேம்படுத்தி, துடிப்போடு சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், திருமணமான பெண்கள். மேடைகளில் அரங்கேறும் அவர்களது திறமைகளை பார்த்து, திருமணமாகாத பெண்களே ஆச்சரியப்பட்டு அசந்து போகிறார்கள்.

    ‘திருமணம் ஒருபோதும் பெண்களின் திறமைக்கு தடையில்லை’ என்பதை நிரூபிக்க களம் அமைத்துத் தருகிறது, ‘மிஸஸ் சென்னை’ எனப்படும் திருமதி சென்னை திறன்மிகு போட்டி.

    வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. குழந்தையை வளர்ப்பது என்பது நமக்கு கடினமான வேலையில்லை. நமது குழந்தை எப்படி வளரவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே நாம் வாழ்ந்து காட்டவேண்டும்.

    திருமணமான பெண்கள் தாய்மையடைந்து பிரசவித்ததும் இயல்பாகவே அவர்களது உடல் எடை அதிகரித்து விடுகிறது. அதை சுட்டிக்காட்டிதான், திருமணத்திற்கு பின்பு பெண்களின் அழகு குலைந்துவிடுவதாக சொல்கிறார்கள். தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளை செய்துவந்தால், உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

    மணமான பெண்கள் இப்போது உடல்வலுவோடுதான் இருக்கிறார்கள். ஆனால் செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும் மனஅழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சியளி்க்கிறார்கள். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் சிந்தனை, செயல் எல்லாவற்றிலுமே மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உருவாகும். 40 வயதுகளில் நிற்கும் அம்மாக்கள் அனைவருமே உடல் நலத்தோடு, மனநலத்தையும் பாதுகாத்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதற்கான முயற்சிகளை பெண்கள் முழுமனதோடு மேற்கொள்ளவேண்டும்.

    மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் உயிரோட்டமான புன்னகை இருந்துகொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்கவேண்டும். மனநிறைவு பெறவேண்டுமானால் இருப்பதைக் கொண்டு திருப்தியடையவேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணால், அவளது குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். மகிழ்ச்சியும், மனதில் கருணையும் இருந்தால், நம்மால் பேரழகியாக வலம்வர முடியும்.

    சென்னை, தஞ்சாவூரில் பேட்ட படம் வெளியான தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் திருமணம் செய்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து மணமக்களை வாழ்த்தினர். #Petta #Viswasam
    சென்னை:

    ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படம் வெளியான நாளை தனது வாழ்நாள் முழுவதும் மறக்கக்கூடாது என்று தாம்பரத்தை அடுத்த படப்பையை சேர்ந்த தீவிர ரசிகர் அன்பரசு விரும்பினார். தனது திருமணத்தையும் படம் ரிலீஸ் ஆன தியேட்டரிலேயே நடத்த முடிவு செய்தார்.

    இன்று காலை சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் தனது திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக அன்பரசு உறவினர்களுடன் அதிகாலையிலேயே தியேட்டருக்கு வந்தார். மணமகள் காமாட்சியை உறவினர்கள் அழைத்து வந்தனர்.

    ‘பேட்ட’ படம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு மணமக்கள் திருமணத்துக்கு தயார் ஆனார்கள். தியேட்டரின் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் மணமக்கள் உட்கார்ந்தனர். புரோகிதர் மந்திரம் ஓத மணமகன் அன்பரசு, மணமகள் காமாட்சி கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது, அங்கு கூடி இருந்த மணமக்களின் உறவினர்கள், ரசிகர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். மணமக்கள் வாழ்க என்று வாழ்த்து முழக்கமிட்டனர்.

    இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. பேட்ட படம் பார்க்க வந்த ரசிகர்களும் விருந்து உண்டு மகிழ்ந்தனர்.

    உட்லண்ட் தியேட்டரில் பேட்ட படம் பார்க்க வந்தவர்களுக்கு கல்யாண சாப்பாடு வழங்கப்பட்டது.

    படம் தொடங்கியதும் புதுமண தம்பதியரும் ‘பேட்ட’ படத்தை பார்த்து மகிழ்ந்தனர். ரஜினி நடிப்பை ரசிகர்களுடன் சேர்ந்து ரசித்து ஆரவாரம் செய்தனர். மணமக்கள் வீட்டாரும், ரஜினி படத்தை பார்த்தனர்.

    ரஜினி படம் வெளியான அன்று அன்பரசு- காமாட்சி திருமணம் நடந்தது பெருமையாக இருக்கிறது. அவர்கள் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும். இதை எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாது” என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் ஜோதிராமன் (வயது 29). ரஜினி ரசிகரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்,

    இவருக்கும் ஒன்பத்துவேலியை சேர்ந்த உஷா ராணி(20) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ரஜினியின் பேட்ட படம் வெளியாகும் நாளில் தனது திருமணத்தை நடத்த ஜோதிராமன் விரும்பினார்.

    அதன்படி தஞ்சை சாந்தி தியேட்டரில் இன்று காலை 8 மணிக்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ரஜினி கணேசன் தலைமையில் மணமக்கள் ஜோதிராமன்- உஷாராணி திருமணம் நடந்தது. மங்கள வாத்தியம் முழங்க மணமகள் கழுத்தில் ஜோதிராமன் தாலி கட்டினார்.

    தஞ்சை சாந்தி தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் மணமக்கள் ஜோதிராமன்- உஷாராணி ஆகியோருக்கு திருமணம் நடந்த போது எடுத்த படம்.

    அப்போது ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திருமண விழாவில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களாக பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த திருமணத்துக்கு 4 கிராம் தாலி உள்பட மொத்தம் ரூ.1½ லட்சம் செலவு செய்யப்பட்டது.

    பேட்ட படம் வெளியான அதே தியேட்டரில் உள்ள மற்றொரு அரங்கில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியானது. இதனால் திருமண விழாவில் அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    பின்னர் மணமக்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து ஜூபிடர் தியேட்டர் முன்பு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தியேட்டரில் ‘பேட்ட’ படத்தை மணமக்கள், ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர். #Petta #Viswasam

    ×