search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் இருந்து எப்.16 ரக போர் விமானங்களை வாங்குமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககன் தெரிவித்துள்ளார். #USAmbassador #India #US
    மும்பை:

    ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ரக ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு இந்தியா–ரஷியா இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நாட்டிடம் இருந்து எப்.16 ரக போர் விமானங்களையும் வாங்குவதற்கு இந்தியாவை வற்புறுத்துவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககனிடம், இது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘அமெரிக்காவிடம் இருந்து எப்.16 ரக போர் விமானங்களோ அல்லது வேறு எந்த தளவாடங்களோ வாங்க வேண்டும் என இந்தியாவை நாங்கள் வற்புறுத்தப்போவதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை.



    இந்தியாவோ அல்லது பிற நாடுகளோ வாங்கும் வகையில் மிகப்பெரிய திறமையை அமெரிக்க ராணுவ அமைப்பு பெற்றிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.

    உண்மை என்றவென்றால், இந்தியா 15 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) அதிக மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருக்கிறது என்று கூறிய ககன், இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ உறவுகள் விரிவடைந்திருப்பது குறித்து பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

    ஆயுத கொள்முதல் தொடர்பாக இந்தியா எடுக்கும் சொந்த முடிவுகளை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் அவர் கூறினார். #USAmbassador #India #US
    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #PittsburghShooting #US
    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட தொடங்கினான்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ராபர்ட் பவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது.



    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் வருகிற 31-ந்தேதி வெள்ளை மாளிகை, பொது மைதானங்கள், ராணுவ தளங்கள், கப்படற்படை நிலையங்கள் மற்றும் கப்பல்களில் அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
    ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருதை பெறுவதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #TamilisaiSoundararajan #BJP
    சென்னை:

    அமெரிக்க நாட்டின் பிரபல அமைப்பான பன்னாட்டு கலாசார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் இந்த ஆண்டிற்கான சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியல், மருத்துவம், சமூக சேவைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய பெண் தலைவர் என்ற பிரிவில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விருதை பெறுவதற்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பிறகு, சிகாகோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். நவம்பர் 3-ந்தேதி அவர் சென்னை திரும்புகிறார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிகாகோ நகரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறேன். அதனை தொடர்ந்து தமிழ் சங்கங்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கான கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.  #TamilisaiSoundararajan #BJP

    அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். #PittsburghShooting #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது.

    வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட துவங்கினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.



    காவல்துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் காயமடைந்த மர்ம நபர், போலீசாரிடம் சரணடைந்தார். 11 பேரை கொலை செய்தது, போலீசாரை துப்பாக்கியால் தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பிட்ஸ்பர்க் பகுதிக்கு சென்று பார்வையிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. #PittsburghShooting #US
    அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #PittsburghShooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அந்த வழிபாட்டு மையத்தில் நுழைந்தார். தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.



    இந்த  துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கலாம் எனவும், துப்பாக்கியால் சுட்டநபர் போலீசாரிடம் சரணடைந்துள்ளார் எனவும்
    முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.

    தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    பிட்ஸ்பர்க்கில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நடக்கும் சம்பவங்களை தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #PittsburghShooting
    ஈரான் மீதான எல்லா பொருளாதார தடைகளும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன் :

    அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகியது. அத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, விலக்கி கொள்ளப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

    மேலும், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் குறைத்துக்கொண்டு, நிறுத்தி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அந்த நாடுகளும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது வரும் எனவும் அவர் எச்சரித்தார். இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்ந்து, விலக்கிக்கொள்ளப்பட்ட ஈரான் மீதான எல்லா பொருளாதார தடைகளும் மீண்டும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும்” என அறிவித்தார்.

    உலகின் முன்னணி பயங்கரவாத நாடு, உலகிலேயே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற ஆயுதங்களை தயாரிக்க விட மாட்டோம் எனவும் டிரம்ப் உறுதிபட தெரிவித்தார். #DonaldTrump 
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிளாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.



    இவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகருக்கும் இதுபோன்ற தபால்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய போலீசார், 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.

    வெடிகுண்டு பார்சல் ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபால் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும், இவரை கைது செய்ததன்மூலம் இந்த விவகாரம் முடியவில்லை எனவும், தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
    இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. #ranilwickremesinghe #rajapaksa #Rajapaksa #SriLanka #US
    வாஷிங்டன்:

    இலங்கையின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசின் அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிபர் பிரதமரை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றும், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கை அரசு மனித உரிமைகள், நாட்டின் சீர்திருத்தம், நீதி, சமரசம் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. #ranilwickremesinghe #rajapaksa #Rajapaksa #SriLanka #US
    வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. #Facebook
    லண்டன்:

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

    இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 



    இதுதொடர்பாக இங்கிலாந்து தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில், வாடிக்கையாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் பயன்பாட்டுச் சட்ட விதிகளின் படி அதிகபட்ச அளவாக 4.70 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.

    பேஸ்புக் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்களின் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்களானது, பயனாளர்களின் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தபட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பிய பின்னரும் 2018-ஆம் ஆண்டுவரை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மூல நிறுவனமான எஸ்.சி.எல் நிறுவனம் பேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. #Facebook
    அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள குரோஜர் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #SuperMarketFiring
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தின் லூயிஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ளது குராகர் சூப்பர் மார்க்கெட்.

    நேற்று மதியம் 3 மணியளவில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்தான். கையில் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினான்.



    இந்த திடீர் தாக்குதலில் அங்கிருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.  மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #SuperMarketFiring
    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு வெடிபொருள் பார்சல்கள் அனுப்பியதற்கு அதிபர் டிரம்ப், மெலானியா ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.
     
    ஒபாமா, ஹிலாரிக்கு வெடிபொருள் பார்சல் அனுப்பப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக, டிரம்ப் கூறுகையில், இது அருவருக்கத்தக்க செயல். அமெரிக்காவில் எந்த வகையிலும் பயங்கரவாதம் நுழைவதை அனுமதிக்க முடியாது. அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எனது அரசின் முக்கிய குறிக்கோள் என்றார்.

    இதுகுறித்து மெலானியா டிரம்ப் கூறுகையில், இது கோழைத்தனமான செயல் என தெரிவித்தார். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம் என அமெரிக்க வெளியுறவு மந்திரி கூறியுள்ளார். #Pakistan # MikePompeo
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளை அந்த நாடு பாரபட்சமின்றி ஒடுக்குவதில்லை. இது குறித்து அமெரிக்கா, பல முறை சுட்டிக்காட்டியும், பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது.இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி     வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், “பாகிஸ்தான் தனது மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம். கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று, அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசியபோது, இதை தெளிவுபடுத்தினேன்” என்று குறிப்பிட்டார்.

    “தெற்கு ஆசியாவுக்கும், மத்திய ஆசியாவுக்குமான அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் பாகிஸ்தான் பிரதமரிடம் தெளிவுபடுத்தி விட்டேன். மேற்கு எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன்” என்றும் மைக் பாம்பியோ கூறினார்.

    மேலும், “எல்லா பயங்கரவாதிகளையும் பாரபட்சம் இல்லாத வகையில் ஒழித்துக்கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையில், அந்த நாட்டுக்கான நிதி உதவியை நிறுத்தி வைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவில் மாற்றம் இல்லை” எனவும் மைக் பாம்பியோ கூறினார். 
    ×