search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் 2 டாலருக்கு ஒரு அதிர்ஷடசாலி வாங்கிய ஸ்பெஷல் மெகாபால் லாட்டரி சீட்டுக்கு 160 கோடி டாலர் பரிசு கிடைத்துள்ளது. #USlottojackpot
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள மெகா மில்லியன்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் மெகா பால் லாட்டரி சீட்டுகளை இந்த மாதம் விற்பனை செய்தது. இன்றிரவு அங்கு நடந்த குலுக்கலில் 5, 28, 62, 65, 70, 5 என்ற எண்ணுக்கு இந்த ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.

    தெற்கு கரோலினாவில் விற்பனையான இந்த பரிசு சீட்டுக்கான உரிமையாளர் யார்? என்று இன்னும் தெரியவில்லை. 

    பரிசுக்குரிய நபருக்கு முதல் தவணையாக 91 கோடியே 30 லட்சம் டாலர்கள் முதல் தவணையாக அளிக்கப்படும். மீதியுள்ள தொகை 29 ஆண்டுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

    கடந்த ஜூலை மாதத்தில் இருந்து யாரும் பரிசுக்குரிய சரியான எண்ணை குறிப்பிட்டு லாட்டரி சீட்டு வாங்காததால் சிறுகச்சிறுக சேர்ந்திருந்த ஜாக்பாட் பரிசுத்தொகை தற்போது 160 கோடி டாலர்கள் அளவுக்கு குவிந்துள்ளது. அமெரிக்க லாட்டரி உலகில் இதுதான் மிகப்பெரிய பரிசு குலுக்கலாக கருதப்படுகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டில் 150 கோடியே 86 லட்சம் டாலர்கள் கொண்ட பவர்பால் ஜாக்பாட் தொகையை இதுவரை மூன்று அதிர்ஷ்டசாலிகள் சரிசமமாக பகிர்ந்து கொண்டதுதான் அமெரிக்க வரலாறில் மிகப்பெரிய பரிசாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. #$1.6blnjackpot #USlottojackpot
    அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #UNChief #AntonioGuterres
    நியூயார்க்:

    ரஷியாவுடன் 1987-ம் ஆண்டு செய்து கொண்ட ஐ.என்.எப். ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிற நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 20-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

    இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்படுவதாக குற்றம் சாட்டி, இந்த முடிவை டிரம்ப் அறிவித்தது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இது ஆயுதப்போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஆனால் இந்தப் பிரச்சினையை அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவரது செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “ ஐ.என்.எப். ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா கூறி உள்ள கருத்தை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிந்துள்ளார். அதே நேரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை வைத்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

    இதற்கிடையே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோ போய்ச் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  #UNChief #AntonioGuterres 
    முதலாம் உலக போர் நினைவு நாளில் பங்கேற்க ரஷியா செல்லும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கு அதிபர் புதினை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    வாஷிங்டன்:

    1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முதலாம் உலக போர் நடைபெற்றது. இந்த போரின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த மாதம் ரஷியாவில் அனுசரிக்கப்பட உள்ளது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் மாஸ்கோ செல்கிறார்.



    இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பால்டன் கூறுகையில், ரஷியாவில் நடைபெறும் முதலாம் உலக போர் நூற்றாண்டு நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் செல்கிறார். அவர் பாரிசில் நவம்பர் 11-ம் தேதி ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசவுள்ளார் என தெரிவித்தார். #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    அமெரிக்கா தனக்கான அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். #DonaldTrump #Nuclear
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டுள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுவோம். அமெரிக்கா தனக்கான அணு ஆயுதங்களைத் தயாரிக்கும். அணு ஆயுதங்களை கொண்டு விளையாட விரும்புகிற சீனா, ரஷியா உள்ளிட்ட எவருக்கும் விடப்படுகிற அச்சுறுத்தலாக இது அமைகிறது” என்று கூறினார்.

    நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுடன் கையெழுத்து போட்ட ரஷிய அதிபர் மிக்கேல் கார்பச்சேவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

    அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவு, அணு ஆயுதங்களை கை விட வேண்டும் என்ற முடிவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்று எச்சரித்தார்.

    டிரம்பின் முடிவு வருந்தத்தக்கது என்று ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, ரஷியாவை தனது சொந்த பாதுகாப்பை பார்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வைத்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.  #DonaldTrump #Nuclear
    அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறிவரும் ரஷியாவுடன் இனியும் இணைந்திருப்பதில் அர்த்தமில்லை. அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #nucleardeal #nucleardealwithRussia
    வாஷிங்டன்:

    அணு ஆயுத பரவலை குறைக்கும் வகையில் அதிபயங்கர பேரழிவை ஏற்படுத்தும் போர் ஆயுதங்களை இனி தயாரிப்பதில்லை என ரஷியாவும் - அமெரிக்காவும் முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.

    1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷியாவும் அந்நாள் அதிபர் மிக்கயில் கார்பச்சேவ் - அமெரிக்க அந்நாள் அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியோர் ஏற்றிகொண்டு கையொப்பமிட்ட இந்த ஒப்பந்தம் அதன் பின்னர் பதவிக்கு வந்த இருநாட்டு அதிபர்களால் அடுத்தடுத்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்தது.

    தரையில் இருந்தோ, கடலில் இருந்தோ 300 முதல் 3400 மைல் தூரம்வரை பாய்ந்து சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணைகளை இருநாடுகளும் ஒழிக்க வேண்டும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.



    1980-களில் அமெரிக்கா - ரஷியா இடையே ஆயுதப் போட்டிக்கான பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த வேளையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷியாவின் அருகாமையில் இருந்தவாறு அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் சில நேச நாடுகளுக்கு ஓரளவு பாதுகாப்பு கிடைத்தது. இந்த ஒப்பந்தத்தை ரஷியா மீறி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள நிவேடா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், எல்க்கோ நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு ரஷியா கட்டுப்படவில்லை. அவர்கள் பல ஆண்டுகளாக மீறி வந்துள்ளனர். இதுதொடர்பாக, முன்னாள் அதிபர் ஒபாமா ஏன் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேறவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

    எங்களுக்கு அனுமதி இல்லாத ஆயுதங்களை அவர்கள் தயாரிப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, அந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்யப் போகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Trump #nucleardeal #nucleardealwithRussia

    சவுதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Trump #JamalKhashoggi
    வாஷிங்டன்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.



    அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளதாக துருக்கி அரசு நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது மிகவும் துயரமானது. சவுதி அரேபியா அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். #Trump #JamalKhashoggi
    அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் குஜராத்தியர்கள் ஆடிய நவராத்திரி நடனத்தை கவனித்த அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. #NewJersy #Garba
    வாஷிங்டன்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.  

    அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு, அங்கு வசிக்கும் குஜராத்தியர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வார்கள்.

    இந்நிலையில், நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த அமெரிக்க போலீஸ்காரர் குஜராத்தியர்கள் நடனமாடுவதை கண்டார். உடனே  அவருக்கும் ஆர்வம் வந்துவிட்டது.

    பணியை மறந்து, அவர்கள் ஆடும் அழகை ரசித்தார். அவர்களது ஆட்டத்தை கூர்ந்து கவனித்தபடி உற்சாகமாக ஆடி மகிழ்ந்தார் அந்த போலீஸ்காரர்.

    குஜராத்தி இளைஞர் பட்டாளத்துடன் அமெரிக்கா போலீஸ்காரர் உற்சாகமாக ஆடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #NewJersy #Garba
    அமெரிக்காவில் வழங்கப்படும் எச் 1 பி விசாவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளோம் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Trump #H1Bvisa
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.
     
    2007-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரையில், இந்தியாவில் இருந்து 22 லட்சம் பேர் இந்த விசாவுக்கு விண்ணப்பித்தனர் என்றால், அந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.



    அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி டிரம்ப் ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

    இதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன்எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்படுகின்றன என கடந்த ஜூலையில் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

    இந்நிலையில், எச்1 பி விசா பெறுவதற்கான வரையறைகளை, அமெரிக்க குடிபெயர்வுத்துறை  மாற்றியமைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த மற்றும் மிகத்திறமையான வெளிநாட்டவர்கள் எச்1 பி விசா பெறும் வகையிலும், அமெரிக்க பணியாளர்கள் மற்றும் ஊதிய விகிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. #Trump #H1Bvisa
    அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Trump #CurrencyMonitoringList
    வாஷிங்டன்:

    ஒரு நாடு கரன்சி சந்தையில் தொடர்ந்து தலையிட்டாலோ, அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு உபரியாக இருந்தாலோ, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். அதன்படி அமெரிக்க கருவூலத்தின் கண்காணிப்பு வளையத்தில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் இருந்தன. 

    இந்த பட்டியலில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவையும் முதல் முறையாக சேர்த்தது. இந்தியா அதிக அளவில் டாலரை வாங்கியதாலும், அமெரிக்காவுடனான வர்த்தக உபரி குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததாலும் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இந்தியாவின் பெயர், இந்த கண்காணிப்பு பட்டியலில் நீடித்தது. 

    ஆனால், 6 மாதம் கழித்து வெளியிடப்படும் அடுத்த அறிக்கையில், கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியா கடந்த 6 மாதங்களாக மேற்கொண்டு வரும் அன்னிய செலாவணி நடைமுறைகளை தொடர்ந்து மேற்கொண்டால், கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படும் என அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. #CurrencyMonitoringList
    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப். இவரது மனைவி மெலனியா டிரம்ப், அதிபர் மாளிகையில் வசிப்பவர்களுக்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மெலனியா டிரம்ப் நேற்று பிலடெல்பியா மாகாணம் புறப்பட்டு செல்வதற்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானத்தில் ஏறினார்.

    சிறிது நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமான தளத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து மெலனியா பத்திரமாக கீழே இறங்கினார்.

    இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.

    மெலினியா டிரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்த டொனால்ட் டிரம்ப், அவருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #MelaniaTrump
    துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Boycott #SaudiConference #Journalist
    லண்டன்:

    துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விசுவரூபம் எடுக்கிறது. அவர் சவுதி அரேபியாவால் கொல்லப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், அங்கு நடக்க உள்ள சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார்.



    இந்த நிலையில் இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு சென்றபோது, மாயமாகி விட்டார். அவர் அந்த துணைத்தூதரக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததைப் பலரும் பார்த்துள்ளனர்.

    அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.

    அதே நேரத்தில் அவர் அந்த தூதரக கட்டிடத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொலை செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.

    ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.

    அவர் அந்த தூதரக கட்டிடத்தின் பின்புற வாயில் வழியாக உயிருடன் வெளியேறி விட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வெளியேறியதற்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்று துருக்கி சொல்கிறது.

    இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ஜமால் கசோக்கி கொல்லப்பட்டிருந்து, அதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்றால், அந்த நாட்டினை கடுமையாக தண்டிப்பேன்” என எச்சரித்துள்ளார்.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக, இந்த மாநாடு நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அப்படிப்பட்ட இந்த மாநாட்டை சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தினால், ஆதரவாளர்கள் (ஸ்பான்சர்கள்) பலரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன் ஊடகங்கள் பலவும் புறக்கணிக்க உள்ளன.

    இப்போது இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூட இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    அமெரிக்க கருவூல மந்திரி ஸ்டீவ் மனுசின், இங்கிலாந்து சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் பாக்ஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பி.பி.சி.க்கு தகவல்கள் கிடைத்துள்ளன.  #Boycott #SaudiConference #Journalist 
    அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் 20-வது மாநிலமாக வாஷிங்டனிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. #DeathPenalty
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வாஷிங்டனிலும் அந்த தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மரண தண்டனைக்கு எதிராக பிரசார இயக்கம் மேற்கொண்டவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இந்த தண்டனை ஒழிக்கப்பட்டதன் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 23 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் வாஷிங்டன் மாகாணத்தில் 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை யாருக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

    அமெரிக்காவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டதில் வாஷிங்டன் 20-வது மாநிலம் ஆகும். #DeathPenalty
    ×