search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவை அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ள நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #HurricaneMichael
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடர்ந்து புயல் தாக்கி வருகிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ளன.

    இந்த நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. மைக்கேல் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இது புளோரிடாவை நோக்கி நெருங்கி வருகிறது.

    மைக்கேல் புயல் 3-வது வகையை சேர்ந்தது என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் கரோலினா புயல் கியூபாவை தாக்கி விட்டு அமெரிக்காவுக்குள் புகுந்தது. வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினாவை துவம்சம் செய்தது.

    2 முதல் 7 செ.மீட்டர் வரை மழை பெய்தது. தற்போது உருவாகியுள்ள மைக்கேல் புயல் காரணமாக மணிக்கு 12 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. பலத்த மழை கொட்டுகிறது. 28 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    புளோரிடாவில் உள்ள 26 கவுண்டி பகுதிகளுக்கும் அம்மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் அவசர நிலை அறிவித்துள்ளார். தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

    இது அபாயகரமான புயல் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது.



    டல்லாகாசே நகரில் வெள்ளம் புகுந்து விடாமல் தடுக்க 2 தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புளோரிடா பல்கலைக்கழகம் ஒருவாரம் மூடப்பட்டது. #HurricaneMichael
    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் (DRDO) எஞ்சினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். #BrahMos #DRDO
    மும்பை:

    ரஷியா மற்றும் இந்தியா இணைந்து கூட்டு தொழில்நுட்பத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஏவுகணையை தயாரிக்கும் மையம் உள்ளது. 

    இந்நிலையில், ஏவுகணை தொழில்நுட்பட்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பில் பணியாற்றும் (DRDO) எஞ்சினீயர் நிஷாந்த் அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நிஷாந்த் அகர்வால் தற்போது விசாரணையில் உள்ளதாகவும், எந்த அளவு தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை விசாரித்து வருவதாக ராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    அமெரிக்காவில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டியில் வென்றவர் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசளிக்கப்பட்டது. #wifecarryingcontest
    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடத்தப்பட்டது. 834 அடி தூரம் மனைவியை தூக்கி சுமந்து முதலில் வரும் கணவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று இப்போட்டி நடந்தது. அதில் 30 ஜோடி கணவன்-மனைவி பங்கேற்றனர். அதில் ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர் செனால்ட் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    வெற்றிபெற்ற இந்த ஜோடிக்கு பரிசாக ‘பீர்’ வழங்கப்பட்டது. அதுவும் ஜெசிவாலின் மனைவி கிறிஸ்டின் ஆர்செனால்ட் டின் எடைக்கு நிகரான ‘பீர்’ பரிசளிக்கப்பட்டது. மேலும் ஆர்செனால்டின் எடையை போன்று 5 மடங்கு தொகை பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர்செனால்ட் தம்பதி 2-வது முறையாக வெற்றிபெற்றுள்ளனர். பின்லாந்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். #wifecarryingcontest
    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றதை அடுத்து, ட்ரம்ப் உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MikePompeo #KimJongUn #NorthKorea #US
    பியாங்யோங்:

    ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய நோக்கமாக உள்ளது.

    இதையடுத்து இன்று காலை வடகொரிய தலைநகர் பியாங்யோங்கில் அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ இடையேயான சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.



    இந்த சந்திப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை எனினும், இந்த சந்திப்பு இனிமையான ஒன்றாக அமைந்ததாக மைக் பாம்ப்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது போடப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்பதே தனது லட்சியம் என குறிப்பிட்டுள்ள மைக் பாம்ப்பியோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது அடுத்த சந்திப்பு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். #MikePompeo #KimJongUn #NorthKorea #US
    சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த 10 கிலோ எடை கொண்ட விண்கல், வீட்டின் கதவு அசையாமல் இருக்க முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. #space #NASA #Meteorite
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகனை சேர்ந்த நபர் ஒருவர் சந்தித்தார். அவர் தன்னிடம் 30 ஆண்டுகளாக இருக்கும் ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மை குறித்து ஆராயும் படி கூறினார்.

    சுமார் 10 கிலோ எடையுள்ள அந்த கல்லை மோனா சிர்பெஸ் ஆய்வு மேற்கொண்டார். அதில் அந்த நபர் கொடுத்தது வினோதமான விண்கல் என தெரியவந்தது.

    1930-ம் ஆண்டுகளில் அதாவது சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மிச்சிகனில் உள்ள எட்மோர் என்ற இடத்தில் விளைநிலத்தில் விழுந்தது. அதன் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்(ரூ.75 லட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    தனது ஆய்வு முடிவை உறுதி செய்ய மோனா அந்த கல்லை வாஷிங்டனில் உள்ள ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் என்ற புகழ் பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைத்தார். அது விண்கல் என அந்த மையம் உறுதி செய்தது. மேலும் அதை விலை கொடுத்து வாங்கவும் முன்வந்துள்ளது.



    பெரும்பாலான விண்கற்களில் 90 சதவீத முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால் இதில் 88 சதவீதம் இரும்பும், 12 சதவீதம் நிக்கலும் இருப்பது சிறப்பு அம்சமாகும்.

    இந்த வினோதமான விண்கல்லை அந்த நபர் தனது வீட்டின் கதவு அசையாமல் இருக்க கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக் கொடுக்க பயன்படுத்தி வந்தார்.

    தற்போது விண்கல் என்று தெரிந்த நிலையில் அதை விற்க பெயர் வெளியிடப்படாத உரிமையாளர் விரும்புகிறார். விண்கல் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மிக்சிகன் மத்திய பல்கலைக் கழகத்துக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார். #space #NASA #Meteorite
    அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தினமும் ஒரு கிளாஸ் மது குடிக்கும் பழக்கம் உடையவர்களின் வாழ்நாளில் 20% குறைவதாக தெரியவந்துள்ளது. #LiquorDrinkingCauseDeath
    நியூயார்க்:

    சியர்ஸ்..... இந்த சப்தம் எத்தனை முறை ஒரு நாளைக்கு கேட்கிறதோ அத்தனை நெருக்கத்துக்கு எமன் வந்துகொண்டிருக்கிறான். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 18 வயது முதல் 85 வயது வரை உள்ள 4 லட்சம் மக்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த உண்மை இது.

    ஆம். வெளிநாடுகளில் பொதுவாகவே சாதரணமாக தண்ணீர் குடிப்பதுபோல ஒரு கிளாஸ் மதுவை ஆயாசமாக குடித்து செல்வதை நாம் படங்களில் பார்த்து இருக்கிறோம். அதை நம்ம ஊரிலும் பின்பற்றவும் துவங்கிவிட்டோம். சில ஆய்வு அறிக்கைகளின்படி, தினமும் ஒரு கிளாஸ் மது அருந்துவது இதயநோயை தடுக்கும்.

    ஆனால், தற்போது சாரா எம் ஹார்ட்ஸ் என்பவர் நடத்திய இந்த ஆய்வில், ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் மது அருந்துவதன் மூலம் உங்கள் வாழ்நாளில் 20 சதவிகிதத்தை இழக்கிறீர்களாம். அதாவது 100 வயது வாழ வேண்டியவர் 80 வயதிலேயே மரணிப்பார் அப்படியானால் 50 வயதில் இயற்கை மரணம் நிகழ வேண்டிய ஒருவருக்கு 30 வயதிலேயே எமன் தன் வாகனத்தில் ஏற்றிச்சென்றுவிடுவான்.



    இந்த ஆய்வின் மூலம், தினமும் ஒரு கிளாஸ் மது என்பது இதய நோயை தடுப்பது போலவே, புற்றுநோய்க்கு வழிவகை செய்கிறதாம். இதயநோய் தவிர அனைத்து நோய்களுக்கும் இந்த ரெகுலர் மதுப்பழக்கம் வழிவகை செய்யும். தினமும் ஒரு கிளாஸ் மது என்ற விகிதத்துக்கே வாழ்நாளில் 20% இழக்கிறோம் என்றால் உச்சிக்கு ஏறும்வரை குடிக்கும் குடிமகன்களுக்கு?

    ஒருவேளை உங்கள் கைகளில் இப்போது மது இருந்தால் குடிக்காதீர்கள்.. அது உங்கள் வாழ்நாளை கரைக்கும் திறன்கொண்ட திரவம். #LiquorDrinkingCauseDeath
    அமெரிக்க செனட் சபை பிரெட் கவனாக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பதை நேற்று உறுதி செய்துள்ளது. #DonaldTrump #BrettKavanaugh #SupremeCourt
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

    இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.

    இதற்கிடையே, அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பிரெட் கவனாக்குக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 49 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் அவர் மயிரிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

    இந்நிலையில், நேற்று கூடிய அமெரிக்காவின் செனட் சபையில் பிரெட் கவனாக்க்கு ஆதரவாக 50 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் செனட் சபை அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பதை உறுதி செய்துள்ளது. #DonaldTrump #BrettKavanaugh #SupremeCourt
    அமெரிக்காவில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை வெளியிட்ட அதிபர் டிரம்ப், அமெரிக்க அரசாங்கம் தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும் என திட்டவட்டமாக கூறினார். #USPresident #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்போருக்கும் கடும் எச்சரிக்கை விடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொள்கையை டிரம்ப் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், ‘பயங்கரவாத எதிர்ப்பு தேசிய கொள்கை வழிகாட்டுதலின்படி, எங்கள் பெரிய தேசத்தை பாதுகாப்பதற்கு அமெரிக்க வல்லரசின் அனைத்து கருவிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். அந்தவகையில் அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும்’ என்று தெரிவித்தார்.

    தேசத்துக்கு எதிராக அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையும், 2011-ம் ஆண்டு முதல் நாடு மேற்கொண்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை கோடிட்டு காட்டுவதாக கூறிய டிரம்ப், அனைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்தும் அமெரிக்காவை பாதுகாக்கவும், அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கவும் இந்த கொள்கை வழிகாட்டும் என்றும் குறிப்பிட்டார்.

    டிரம்ப் நிர்வாகத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை வரவேற்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன், இது முந்தைய ஒபாமா நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட கொள்கையை விட முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இந்த புதிய கொள்கை ஒரு பயங்கரவாத எதிர்ப்பு அணுகலை திறம்பட உருவாக்கி உள்ளது. இது நிலையானது மற்றும் அதிக திறமையானது. ஏனெனில் முன்னெப்போதையும் விட உலக அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகவும் சிக்கலாகவும், பரவியும் காணப்படுகிறது.

    இத்தகைய சூழலில் இந்த பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையானது, எங்களை அச்சுறுத்தும் அனைத்து பயங்கரவாதிகளிடம் இருந்தும் நாட்டை காப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க வழிவகுத்துள்ளது.

    இந்த கொள்கைப்படி வெறும் ஒரு அமைப்பை மட்டும் அமெரிக்கா முன்னிறுத்தாது. மாறாக அமெரிக்காவின் குடிமக்கள் மற்றும் அதன் நலன்களை தாக்கும் திறன் மற்றும் நோக்கம் கொண்ட அனைத்து பயங்கரவாதிகளையும் அமெரிக்கா எதிர்க்கும்.

    அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதிகளை எதிர்ப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பயங்கரவாதிகளுக்கு, பயணம் மற்றும் சர்வதேச எல்லைகள் வழியாக தொடர்புகளை மேற்கொள்ளும் சுதந்திரத்தை நாங்கள் மறுப்போம். அத்துடன் ஆன்லைன் வழியாக ஆள்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் கட்டுப்படுத்துவோம்.

    இதைப்போல தேசப்பாதுகாப்பு, தாக்குதல்களை தடுத்தல், தாக்குதல்களின் தாக்கத்தை தணித்தல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், எல்லைகளை பலப்படுத்துதல், துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு, தயார்நிலை கலாசாரத்தை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கும் இந்த புதிய கொள்கை ஊக்கமாக அமையும்.

    இவ்வாறு ஜான் பால்டன் கூறினார்.

    டிரம்ப் நிர்வாகத்தின் புதிய பொருளாதார எதிர்ப்பு கொள்கையை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மற்றும் ராணுவம், உளவுத்துறை நிறுவனங்களும் வரவேற்றுள்ளன. #USPresident #DonaldTrump #Terrorism #CounterTerrorismStrategy
    அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். #DonaldTrump #RitaBaranwal #NuclearEnergyOffice
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்து போட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் தேர்வு நடக்கிறது.

    இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.



    இதில் அவரது நியமனம் உறுதியானால், அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு, மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீட்டாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    அமெரிக்காவின் எம்.ஐ.டி.யில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டமும் பெற்று உள்ளார். பின்னர் நாட்டின் அணுசக்தி துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #RitaBaranwal #NuclearEnergyOffice
    ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். #DonaldTrump
    துபாய்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது.

    மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விலை ஏறும்பட்சத்தில் சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஓபேக்‘ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் எண்ணெய் விலை குறையும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு சவுதி அரேபியா ஒத்துக் கொள்ளவில்லை.

    இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மிசிசிப்பியில் ‘சவுத்அவ்ன்’ நகரில் நடந்த விழாவில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.


    அப்போது தனது நட்பு நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா குறித்து பேசினார். மேலும் மற்றொரு நட்பு நாடான சவுதி அரேபியா குறித்து குறிப்பிடும்போது மன்னரை கடுமையாக தாக்கினார்.

    மக்களின் கரகோ‌ஷத்துக்கு இடையே பேசிய அவர், “பணக்கார நாடாக இருந்தாலும் சவுதி அரேபியாவை நாம்தான் பாதுகாக்கிறோம். நான் அந்நாட்டு மன்னர் சல்மான் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன்.

    மன்னரே உங்களை நாங்கள் (அமெரிக்கா)தான் பாதுகாக்கிறோம். எங்களது ராணுவத்தின் தயவு இன்றி உங்களால் அங்கு 2 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாது” என்று எதைப்பற்றியும் பகிரங்கமாக குறிப்பிடாமல் மிரட்டல் விடுத்தார். #USPresident #DonaldTrump #SaudiArabiaKing
    அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்த மூர்த்தி என்பவர் பலியானார். #AndhraPradesh #MLC #MVVSMurthy
    அமராவதி:

    ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்தவர் மூர்த்தி (வயது 80). விசாகப்பட்டணம் தொகுதியில் இருந்து 2 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும், கிதம் பல்கலைக்கழக தலைவருமான மூர்த்தி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 6-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

    இதற்காக அங்கு தங்கியிருந்த மூர்த்தி கலிபோர்னியாவில் இருந்து அலாஸ்காவுக்கு ஒரு காரில் சென்றார். செல்லும் வழியில் இந்த கார், லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் சென்ற பசவ புன்னையா, சவுத்ரி ஆகியோரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு கூட்டமைப்பு தலைவர் சதிஷ் வெமனா செய்து வருகிறார்.

    அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் மூர்த்தி பலியான சம்பவம் அறிந்து தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு மிகுந்த அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார். அத்துடன் மூர்த்தியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து உள்ளார். சமீப காலமாக தெலுங்குதேசம் கட்சித்தலைவர்கள் பலர் விபத்தில் உயிரிழந்து வருவது குறித்து அவர் வருத்தமும் தெரிவித்து உள்ளார். 
    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். #MikePompeo #KimJongUn
    வாஷிங்டன் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    இதையடுத்து, தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகவே அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். 

    அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பின், வடகொரியா அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை. ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.



    சமீபத்தில் 3 நாள் பயணமாக வடகொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த பயணத்தின் போது டொனால்டு டிரம்ப்புக்கு, கிம் ஜாங் அன் எழுதிய ரகசிய கடிதம் மூன் ஜே இன் வாயிலாக வெள்ளை மாளிகைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதில், கிம் ஜான் அன் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டது. 

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர்ர் மைக் பாம்பியோ வரும் ஞாயிற்றுக்கிழ்மை அன்று வட கொரியா செல்கிறார். அங்கு அவர் அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #MikePompeo #KimJongUn
    ×