search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை 30,000 மாக குறைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. #US #RefugeeAdmission
    வாஷிங்டன்:

    ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அகதிகள் எண்ணிக்கையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். முஸ்லிம் நாடுகள் உட்பட 8 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேற ஏற்கனவே தடை விதித்துள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் குடியேற்ற அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, கடந்த ஆண்டு அமெரிக்காவில் 45,000 அகதிகள் குடியேற்ற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது 2016-ம் ஆண்டு வந்த அகதிகளின் எண்ணிக்கையில் சரிபாதியாகும்.

    அதேபோல், அடுத்த ஆண்டு (2019) அமெரிக்காவில் குடியேறவுள்ள அகதிகள் எண்ணிக்கை 45 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 ஆயிரம் எண்ணிக்கை குறைவு ஆகும். #US #RefugeeAdmission
    அமெரிக்காவில் உள்ள கரோலினாவில் புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. #HurricaneFlorence
    வாஷிங்டன்:

    அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான புளோரன்ஸ் என பெயரிடப்பட்ட புயல் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.
     
    வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடும் மழை பெய்ததால் வடக்கு கரோலினாவில் உள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.



    இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியானதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் வடக்கு கரோலினாவில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் தெற்கு கரோலினாவில் புயல் பாதிப்பில் சிக்கி 6 பேர் பலியாகினர். மீட்பு பணிகள் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #HurricaneFlorence
    அமெரிக்காவின் கரோலினாவில் புளோரன்ஸ் புயல் தாக்கியதால் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. #HurricaneFlorence
    வாஷிங்டன்:

    அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.
     
    வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வடக்கு கரோலினா நகரம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கின.



    புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு கரோலினாவின் டப்ளின் கவுண்டி பகுதியில் 3 பேர் மழையில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், வடக்கு கரோலினாவில் 5 பேர் பலியாகினர்.
    இதேபோல் தெற்கு கரோலினாவில் புயல் பாதிப்பில் சிக்கி ஒருவர் பலியானார்.

    புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் பல ஆயிரம் பேர் அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 17 லட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 8 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #HurricaneFlorence
    அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.



    கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார்.

    இந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறினார்.

    இதற்கு இடையே வடகொரியா மீது ஏற்கனவே விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள நாடுகள் பற்றி விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை நாளை (திங்கட்கிழமை) கூட்டவேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது.  #NorthKorea #MikePompeo
    அமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.5 லட்சம் மக்கள் இருளில் தவிக்கின்றனர். #HurricaneFlorence
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.



    இந்த பதற்றமான சூழ்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியது. கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது. ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் மற்றும் அலைகளின் தாக்கத்தினால் படகு குழாம்கள் சேதமடைந்துள்ளன.

    இந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி மாநில கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

    கடந்த ஆண்டு ஹூஸ்டனில் ஹார்வே புயல் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று இந்த புயலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. #HurricaneFlorence
    அமெரிக்காவை 48 மணி நேரத்தில் அதிசக்தி வாய்ந்த புயல் தாக்கும் என்றும் இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலை இலாகா கணித்துள்ளது. #Florence
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மழை காலம் தொடங்கி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை தாக்குவது உண்டு.

    சில புயல்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அதே போல் ஒரு புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

    அடுத்த 48 மணி நேரத்தில் புயல் அமெரிக்காவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு புளோரன்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

    புயல் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது, அதிசக்தி வாய்ந்த புயலின் வரிசையில் 3-வது இடத்தை வகிப்பது ஆகும். எனவே, இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலை இலாகா கணித்துள்ளது.

    கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    எனவே, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தர விடப்பட்டுள்ளது.

    இதன்படி 17 லட்சம் பேரை வெளியேறும்படி கூறி உள்ளனர். அவர்கள் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.



    தெற்கு கரோலினாவில் ஒரு ஜெயிலில் இருந்த ஆயிரம் கைதிகளையும் வெளியேற்றி இருக்கிறார்கள். மீட்பு படையினர் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக தெற்கு கரோலினா கவர்னர் ராய்கூப்பர் கூறும் போது, மிகப்பெரிய ஆபத்து வீட்டின் வாசலில் வந்து நிற்கிறது. மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவைப்படுபவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டு கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இந்த புயலால் 193 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடையும். கடல் கொந்தளிப்பால் தண்ணீர் ஊருக்குள் புகும். மேலும் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் கூறி உள்ளனர்.

    இதே பகுதியில் டயானா, மேத்யூ ஆகிய சக்திவாய்ந்த புயல்கள் தாக்கின. அப்போது ஏற்பட்ட பாதிப்பை விட இப்போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். பலருடைய வாழ்க்கையில் சந்திக்காத மிகப்பெரிய புயலை இப்போது சந்திக்க போகிறார்கள் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.

    இதே போல் தெற்கு சீன கடல் பகுதியில் ஓம்போங் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கும் என்றும். இதில் அங்குள்ள லூசான் தீவு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் அந்த புயல் சீனாவின் தெற்கு பகுதி, ஹாங்காங், மகாவ் ஆகிய இடங்களையும் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 252 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசும் என்றும் கூறி உள்ளனர்.

    இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று கூறி இருக்கிறார்கள். சுமார் 4 கோடி மக்கள் இந்த புயலால் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #Florence
    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஆண் ஒருவர் 6 பேரை சுட்டுக்கொன்றது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #California #shotdead
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பேக்கர்ஸ் பீல்டு என்ற இடம் உள்ளது.

    இந்த ஊரை சேர்ந்த கணவன்- மனைவி வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்.

    ஒருவரிடம் வாகனம் விற்பது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஆண் திடீரென எதிரே இருந்த 2 பேரை சுட்டு கொன்றார். பின்னர் தனது மனைவியையும் கொன்றார்.

    பிறகு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருந்த 2 பேரை சுட்டு கொன்றார்.

    அப்போது அங்கே ஒரு கார் வந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் இருந்தனர். அந்த காரை அவர் கடத்தி சென்றார்.

    சிறிது தூரம் சென்றதும் ரோட்டில் வந்த ஒருவரை சுட்டு கொன்றார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார். இதோடு அந்த நபருடன் சேர்த்து 6 பேர் உயிர் இழந்தனர்.

    இந்த சம்பவம் ஏன் நடந்தது? ஏன் அவர் இத்தனை பேரை சுட்டு கொன்றார் என்று தெரியவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

    6 பேர் கொலையும் சில வினாடிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது. #California #shotdead
    உலகின் மிகச்சிறிய தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேக்கி ஹெரால்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
    நியூயார்க்:

    உலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.



    இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப்புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, தனது 44-வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

    இவர், உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்கா டெலவர் மாகாணத்தில் உள்ள டெலவர் தமிழ் நண்பர்கள் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
    வாஷிங்டன்:

    அமெரிக்கா டெலவர் மாகாணத்தில் உள்ள டெலவர் தமிழ் நண்பர்கள் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் முதன்முதலாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில், அவரை மையப்படுத்தி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி வினா போட்டி, பெரியோர்களுக்கான பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

    விழாவுக்கு வந்தவர்களை தங்கம் வையாபுரி வரவேற்றார். உலகத் தமிழ் கழகத்தின் கிளைத் தலைவர் கோ.அரங்கநாதன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வாஷிங்டனில் இயங்கி வரும் எனர்ஜில் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் மகேந்திரன் பெரியசாமி கலந்துகொண்டு பேசினார்.

    விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக, ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் நன்றி கூறினார். 
    அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த வாலிபர் ஒருவர் விடுதலையாக நாய் ஒன்று காரணமாக இருந்தது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதற்கு ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு உதவி புரிந்தது. இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய வீட்டுக்குள் புகுந்த ஜோசுவா ஹார்னர். வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

    ஜோசுவா ஹார்னர்

    ஆனால் அந்த நாய் சாகவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.

    வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் 50 ஆண்டுகால ஜெயில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். #tamilnews
    அமெரிக்காவில் மதுரை மாணவி ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. #YoungScholarAward #RajalakshmiNandakumar
    வாஷிங்டன்:

    தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். அவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

    இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார். (சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்)

    ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை கண்டறிய முடியும், அதுவும் ஒருவரின் உடலை ‘சோனார்’ சாதனம் தொடாமலேயே கண்டுபிடிக்க முடியுமாம்.



    இவரது கண்டுபிடிப்பு, உயிராபத்தான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. இந்த விருது 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டது.

    இவர் சென்னையில் படித்து கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்.

    தனது கண்டுபிடிப்புபற்றி ராஜலட்சுமி நந்தகுமார் கூறும்போது, “நான் எப்போதுமே சுவாசம், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் ரீதியிலான சமிக்ஞைகளை கண்டறிவதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க விரும்பினேன். ஏனென்றால் அவைதான், உடல் நலம் சார்ந்த கருவிகளுக்கு சாதாரணமாக பயன்படும் சமிக்ஞைகளாக உள்ளன” என்று குறிப்பிட்டார். #YoungScholarAward #RajalakshmiNandakumar
    ப்ளோரென்ஸ் புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் எமர்ஜென்சி நிலையை வாஷிங்டன் டிசி நகர மாகாண மேயர் அறிவித்துள்ளார். #HurricaneFlorence
    வாஷிங்டன்:

    பசிபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. அதையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    இதையடுத்து, அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் ப்ளோரென்ஸ் புயலை முன்னிட்டு எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக வாஷிங்டன் டி.சி. மேயர் மூரியல் இ பவுசர் கூறுகையில், போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணி துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 



    இன்னும் சில தினங்களில் எந்த நேரத்திலும் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அம்மாகாண கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பேரிடரின் போது அனைத்து வகையிலும் பாதுகாப்பு மற்றும் பெடரல் எமர்ஜென்சி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #HurricaneFlorence
    ×