search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் சமீப காலமாக ஆன்லைன் மூலம் பரவி வரும் இந்த தெரபியில், சிறுநீர் குடித்தால் உடல் எடை குறையும் என கூறப்படுகிறது. #US
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள இடாகோ என்ற பகுதியைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோ டெப்ராக்கியோ என்பவரே இந்த தெரபியை பரப்பி வருபவர். இவர் உடல் எடை அதிகரிப்பால் கஷ்டப்பட்டு வந்த நிலையில், ஆன்லைனில் ஒரு செய்தியை பார்த்து இருக்கிறார். அதில் சிறுநீர் குடித்தால் உடல் எடை குறையும் என போடப்பட்டு இருந்திருக்கிறது.

    உடனே அந்த முயற்சியில் அவர் ஈடுபடவே நல்ல பலன்கள் கிடைத்துள்ளது. வெகு சில நாட்களில் சுமார் 13 கிலோ எடையை குறைத்துள்ளார். மேலும், சிறுநீர் குடிப்பதால் தாம் ஒரு சூப்பர் மேன் போல் உணர்வதாகவும் அவர் பெருமையுடன் கூறுகிறார். இதுமட்டுமின்றி, அவர் சிறுநீரை அவரது முகத்தில் மசாஜ் செய்யவும், முகம், கண்களை கழுவவும் உபயோகிக்கிறார் இதனால், தோல் சுருக்கம் குறைந்து இளமை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.



    இதையடுத்து, இந்த புதிய சிறுநீர் தெரப்பி முறையை, முகப்பருக்களால் கஷ்டப்பட்டு வந்த தனது தோழிக்கு அவர் அறிமுகப்படுத்தவே, அவரும் அதனை முயற்சி செய்து நல்ல பலன் பெற்றுள்ளாராம். இதைத்தொடர்ந்து, தினமும் தனது சிறுநீரால் முகத்தை மசாஜ் செய்து கொடுத்து, மீண்டும் முகப்பரு பிரச்சனை வராமல் பாதுகாப்பதுடன், மிகப்பொலிவான சருமத்தை பெற்று வருகிறாராம்.

    இந்த தெரபி முறை தற்போது ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், இதுவெறும் கேலிக்கூத்து என்றும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், இந்த சிறுநீர் தெரபி மூலம் பலனடைந்ததாக முயற்சி செய்துபார்த்த பலரும் ஆன்லைனில் பதிவிட்டு வருவதால், இந்த தெரபி பலராலும் தற்போது முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்த சிறுநீர் தெரபியை தாமும் செய்து, பிறருக்கும் அறிவுறுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  #US
    அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA

    அமெரிக்காவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அந்நாட்டில் உள்ள தெலுங்கு அமைப்புகள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். சிகாகோவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.



    அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய பலர் முன்வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை அனைத்து நாடுகளும் உற்று நோக்கி வருவதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, கடந்த 4 வருட கால மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், உலக பொருளாதாரம் மெதுவாக சரிந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மட்டுமே மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
     
    இந்த நிகழ்ச்சி முழுவதுமே தெலுங்கு மொழியில் அவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. #VenkaiahNaidu #USA
    பிரேசில் - அமெரிக்கா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டியில், பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. #BrazilvsUSA #InternationalFriendly
    நியூஜெர்சி:

    பிரேசில் - அமெரிக்கா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு நியூஜெர்சி நகரில் நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. அமெரிக்காவுக்கு எதிராக பிரேசில் தொடர்ச்சியாக பதிவு செய்த 11-வது வெற்றி இதுவாகும். பிரேசில் அணியில் 11-வது நிமிடத்தில் ராபர்ட்டோ பிர்மினோவும், 43-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரும் கோல் அடித்தனர்.

    சர்வதேச போட்டியில் நெய்மாரின் 58-வது கோல் இதுவாகும். உலக கோப்பை போட்டியில் கால்இறுதியுடன் வெளியேறிய பிரேசில் அணி அதன் பிறகு ஆடிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். 
    இந்தியாவில் இருந்து திருடப்பட்டு, அமெரிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருந்த 2 பழங்கால சிலைகளை, அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. #India #US #AntiqueStatues
    நியூயார்க்:

    இந்தியாவில் அரசர்களின் சிலைகளும், தெய்வங்களின் சிலைகளும் மிகவும் புனிதமானதாகவும், விலை மதிப்பற்றத்தாகவும் பாதுகாக்கப்படுவது வழக்கம். இதனால், இந்த சிலைகள் மீது ஆர்வம் கொண்ட கொள்ளை கும்பல் சிலைகளை திருடி, வெளிநாடுகளில் விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட லிங்கோத்பவமூர்த்தி என்ற சிலையும், பீகார் மாநிலத்தின் போத் கயா ஆலையத்துக்கு அருகில் இருந்து திருடப்பட்ட மஞ்சூஸ்ரி என்ற சிலையும் திருப்பி அளிக்கப்பட்டது.

    இந்த 2 சிலைகளும், அமெரிக்காவின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட லிங்கோத்பவமூர்த்தி சிலை, சிவபெருமானை பிரதிபலிப்பதாக வடிக்கப்பட்டது என்றும் சோழர் காலத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. இந்த சிலையின் தற்போதைய விலை 2 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல், வாள் ஏந்திய நிலையில் இருக்கும் மஞ்சூஸ்ரி சிலையின் மதிப்போ 2 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிலை 12-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என ஆய்வுகள் கூறுகின்றன.

    இந்த சிலைகளை அமெரிக்காவுக்கான இந்தியாவின் உயர்தூதரான சந்தீப் சக்ரவர்த்தியிடம் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் சைரஸ் வழங்கினார். #India #US #AntiqueStatues
    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜேம்ஸ் மேடிஸ் ஆகியோர் பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்தனர். #PMModi #MikePompeo #JamesMattis
    புதுடெல்லி:

    இந்தியா, அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது.

    இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     
    பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன்பின்னர், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜேம்ஸ் மேடிஸ் மற்றும் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #PMModi #MikePompeo #JamesMattis
    இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது. #SushmaSwaraj #NirmalaSitharaman #MikePompeo #JamesMattis
    புதுடெல்லி:

    இந்தியா, அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது.

    இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     
    பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கை முடிவை வரவேற்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயலபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.
     
    இதேபோல், பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #NirmalaSitharaman #MikePompeo #JamesMattis
    இந்தியாவுடனான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகங்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இன்று டெல்லி வந்தடைந்தார். #MikePompeo #SushmaSwaraj
    புதுடெல்லி:

    இந்தியா, அமெரிக்க நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 6-ம் தேதி (நாளை) டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்தியாவுடனான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகங்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இன்று டெல்லி வந்தடைந்தார்.

    டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய மைக் பாம்பியோவை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #MikePompeo #SushmaSwaraj
    அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிதி ராணுவத்துக்கானது அல்ல என பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மொகமது குரேஷி தெரிவித்துள்ளார். #US #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இந்நிலையில், அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிதி ராணுவத்துக்கானது அல்ல என பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மொகமது குரேஷி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிது ராணுவ நலத்திட்டங்களுக்கானது அல்ல. அந்த நிதி பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கானது என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ செப்டம்பர் 5-ம் தேதி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #US #Pakistan
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மூன்று வார காலம் சிகிச்சை பெறுவதற்காக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #pinarayivijayan
    திருவனந்தபுரம்:

    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் உடல் பரிசோதனைக்கு வந்து சென்றார். அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக சென்னை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

    இதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல இருந்தார். அப்போது கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் பினராயி விஜயனின் அமெரிக்கா பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து அவர், இம்மாதம் 3-ம் தேதி  அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கேரள கவர்னரை நேற்று சந்தித்த பினராயி விஜயன், மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இன்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 3 வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். முதல்-மந்திரி பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PinarayiVijayan #KeralaCMUStreatment
    அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய இந்தியர், ‘எச்1-பி’ விசா மோசடியில் கைது செய்யப்பட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ‘எச்1-பி’ விசா வழங்கப்படுகிறது. அதை பெறுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.

    அதில் முறைகேடு செய்து ஊழியர்களை பணியில் நியமித்ததாக பிரதியும்னா குமார் காமல் (49) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க குடியுரிமை துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    இந்த நிலையில் அவர் சீட்டில் விமானநிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவை விட்டு வெளியேறவிடாமல் இவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியரான இவர் அமெரிக்காவில் 2 தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ‘எச்பி-1’ விசா மோசடி மூலம் அமெரிக்காவில் பணிபுரிவதாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க தவறவிட்டதாக கூறி பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்த அமெரிக்க ராணுவம் இறுதி முடிவு எடுத்துள்ளது. #US #Pakistan
    வாஷிங்டன்:

    பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    மிகச்சமீபத்தில் பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ‘எச்-1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து டெல்லியில் 6-ந்தேதி நடக்க உள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்தியா பிரச்சினை எழுப்புகிறது. இதற்கு பதில் அளிக்க அமெரிக்கா தயார் ஆகிறது. #H1B #India #US
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.

    2007-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரையில், இந்தியாவில் இருந்து 22 லட்சம் பேர் இந்த விசாவுக்கு விண்ணப்பித்தனர் என்றால், அந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.

    ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்குவது வழக்கம். இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது. லாட்டரி குலுக்கல் நடத்தித்தான் விசாதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இது தவிர அமெரிக்காவில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள், உயர் கல்வி பெற்றவர்களுக்கு என தனியாக 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன. 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு வசதியாக இந்த விசா தரப்படுகிறது. மேலும் 2 ஆண்டுகள் இந்த விசா நீட்டிக்கத்தகுந்தது ஆகும்.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி டிரம்ப் ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

    இதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன்எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்படுகின்றன என கடந்த ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

    இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை மறுக்கிற விதத்தில், ‘எச்-1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக அமெரிக்கா கருதுகிறது.


    எனவே இந்த விசாக்களை முறைகேடாக பயன்படுத்தாத அளவுக்கு அதன் விதிமுறைகளை கடுமையாக்கும் விதத்தில் விசா சீர்திருத்தங்கள் என்ற பெயரில் டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.

    சமீபத்தில் கூட இந்த விசாக்களுக்கான சிறப்பு பரிசீலனை நடைமுறையை (பிரிமியம் பிரசாசிங்) மேலும் 5 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தது.

    இப்படிப்பட்ட நடவடிக்கைகளால், இந்தியர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    இதுபற்றி கடந்த மாதம் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசுகையில் குறிப்பிட்டார்.

    அப்போது அவர், “‘எச்-1 பி’ விசா விவகாரத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையிடமும், நாடாளுமன்றத்திடமும் இந்தியா எடுத்துச்செல்லும். டெல்லியில் செப்டம்பர் 6-ந் தேதி நடக்கிற அமெரிக்க, இந்திய பேச்சுவார்த்தையின்போதும் இந்த விவகாரம் எழுப்பப்படும்” என்று கூறினார்.

    இந்த நிலையில், ‘எச்-1 பி’ விசா கொள்கையில் இப்போதைக்கு மாற்றம் இருக்காது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “டெல்லியில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையின்போது இந்தியா ‘எச்-1 பி’ விசா பற்றி பிரச்சினை எழுப்புகிறபோது அதற்கு பதில் அளிக்க அமெரிக்காவும் தயார் ஆகி வருகிறது. டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்து உள்ள உத்தரவானது, அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ‘எச்-1 பி’ விசா வழங்குவது நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. எனவே அதை உறுதிப்படுத்துகிற விதத்தில் பரிசீலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விசா பரிசீலனையில் மாற்றம் இல்லை. எனவே இதில் என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை கணிக்க இயலாது” என குறிப்பிட்டார்.  #H1B #India #US
    ×