search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றி கொள்ளாவிட்டால் வெளியேறுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். #WorldTradeOrganization #DonaldTrump
    வாஷிங்டன்:

    உலக நாடுகள் இடையேயான வர்த்தக சட்டதிட்டங்களை வகுக்கவும், பல்வேறு நாடுகள் இடையே ஏற்படுகிற வர்த்தக பிரச்சினைகளை தீர்க்கவும் டபிள்யு.டி.ஓ. என்னும் உலக வர்த்தக அமைப்பு. 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த அமைப்பானது, அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் புகார் எழுப்பி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் ‘புளூம்பெர்க் நியூஸ்’ ஊடகத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், “உலக வர்த்தக அமைப்பு, அடிக்கடி அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி விடும்” என்று கூறினார்.

    ஏற்கனவே டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘பாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, அனைவருக்கும் பலன் அளிக்கத்தக்கதாக உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும், நாம் அங்கு அனைத்து வழக்கிலும் தோல்வியையே சந்தித்து வருகிறோம்” என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

    அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசரும் அமெரிக்காவின் இறையாண்மையில் உலக வர்த்தக அமைப்பு தலையிடுகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. #WorldTradeOrganization #DonaldTrump #Trump
    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. #Accident
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அதில் 49 பேர் பயணம் செய்தனர். 

    நியூ மெக்சிகோ நகர் அருகில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வந்த டிராக்டர் டிரெயிலர் லாரியின் டயர் திடீரென வெடித்தது இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.  மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சென்ற மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் சிசிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, மெக்சிகோ பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். #Accident
    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் பயணிகள் சென்ற பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #Accident
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அதில் 49 பேர் பயணம் செய்தனர். 

    நியூ மெக்சிகோ நகர் அருகில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வந்த டிராக்டர் டிரெயிலர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. பேருந்தில் உடல் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
     #Accident
    ரஷியாவிடம் இருந்து ஆயுத கொள்முதல் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்பதற்கு அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ளும் சாதனங்களை ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த சாதனங்களின் மதிப்பு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ஆகும்.

    ஆனால், பல்வேறு விவகாரங்களுக்காக, ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷியாவிடம் ஆயுத கொள்முதல் செய்யும் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என்ற யூகம் எழுந்துள்ளது.

    அதே சமயத்தில், நட்பு நாடாக இருப்பதால், பொருளாதார தடை விதிக்கப்படுவதில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா தானாகவே விலக்கு அளிக்கும் என்றும் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இதுபற்றி அமெரிக்க உதவி ராணுவ மந்திரி ரண்டல் ஸ்ச்ரிவரிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.


    இந்தியா-ரஷியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், எதிர்காலம் குறித்து இந்தியாவுடன் நாங்கள் பேச வேண்டி உள்ளது.

    பொருளாதார தடை விதிக்கப்படுவதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கலாம் என்று அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மட்டிஸ் கூறியுள்ளார். ஆனால், எதிர்காலத்தில் செய்யப்படும் கொள்முதல்களுக்காக, இத்தகைய விலக்கு அளிக்கப்படும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது.

    இதுபற்றி மேல்மட்ட அளவில் ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க ராணுவ மந்திரி மட்டிஸ், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆகியோர் டெல்லியில் இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன் செப்டம்பர் 6-ந் தேதி பேச்சுவார்த்தையை தொடங்குகிறார்கள்.

    இந்த நேரத்தில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.
    அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். #MikePompeo
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது.

    ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது என சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
      
    இந்நிலையில், அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்புடனான சந்திப்பில் கிம் ஜாங் அன் தெரிவித்ததை போல் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும். அப்படி அழிக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, மைக் பாம்பியோ வடகொரியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MikePompeo
    அமெரிக்காவில் உள்ள மரியானா தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என் அமெரிக்க புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. #Earthquake
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்த தீவின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரத்தில் நிலைமை சீரானது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. #Earthquake
    மெக்சிகோவில் இருந்து படகு வழியே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 2 இந்தியர்கள் உட்பட 19 பேரை அமெரிக்க கடலோர காவல்படை கைது செய்தது. #America
    நியூயார்க்:

    மெக்சிகோவில் இருந்து பங்கா வகை படகு ஒன்று பலரை ஏற்றி கொண்டு அமெரிக்க கடற்பகுதிக்குள் நுழைந்தது. இதனை வான் மற்றும் கடல்வழி நடவடிக்கைகளுக்கான விமானம் ஒன்று கண்டறிந்தது.  இதுபற்றி அமெரிக்க கடலோர காவல் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த படகு அமெரிக்க கடலோர காவல் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அந்த படகில் 2 இந்தியர்கள் உட்பட மொத்தம் 19 பேர் இருந்துள்ளனர்.  சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற அவர்கள் அனைவரையும் கைது செய்த கடலோர காவல்படை, அதில் இருவர் கடத்தல்காரர்கள் என்பதையும் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #America
    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #IS #US #Afganistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவம் இணைந்து ஐ.எஸ் அமைப்பு பதுங்கி இருந்ததாக கருதிய இடங்கள் மீது பல்வேறு வித தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை தளபதி அபு சயீத் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷா உசைன் தெரிவித்துள்ளார்.

    இதே தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IS #US #Afganistan
    அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #ChicagoFireAccident
    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் புறநகர் பகுதியான லிட்டில் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  இன்று அதிகாலை திடீரென தீ பற்றியது. இதில் இரண்டு வீடுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChicagoFireAccident
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. #USD #ChineseGoods #ImportTariff
    வாஷிங்டன்:

    சீனாவால் ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்து வருகிறது. இவ்விரு வல்லரசு நாடுகள் இடையே ஏற்பட்டு உள்ள வர்த்தக போர் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 50 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா முதலில் அறிவித்தது. அதன்படி ஏற்கனவே 34 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து விட்டது. மீதி 16 பில்லியன் டாலர் பொருட்களுக்குத்தான் இப்போது கூடுதல் வரி விதித்து உள்ளது.

    அமெரிக்கா சீனப்பொருட்கள்மீது எந்த அளவுக்கு கூடுதல் வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்கள் மீது நாங்கள் வரி விதிப்போம் என்று சீனா ஏற்கனவே கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது. இது பற்றி அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுக்கு பதிலடி தருகிற விதத்தில் அதே அளவுக்கு சீனாவால் கூடுதல் வரி விதிக்க முடியாது. அவர்கள் சிறிதளவு வரி விதிப்பார்கள். முடிவில், அவர்களை விட நாங்கள் தான் கூடுதல் வரி விதிக்க முடியும். இது அவர்களுக்கும் தெரியும்” என குறிப்பிட்டார்.  #USD #ChineseGoods #ImportTariff  
    அமெரிக்காவில் சீக்கியர் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். #SikhMan #Murder
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் எசெக்ஸ் நகரில் பெரிய அளவில் கடை வைத்து நடத்தி வந்தவர் சீக்கியரான டெர்லோக் சிங் (வயது 55). இவர் கடந்த 16-ந் தேதி தனது கடையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், அங்கு வாழ்ந்து வருகிற சீக்கிய மக்கள் இடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக எசெக்ஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை தேடி வந்தனர்.



    இந்த நிலையில் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா (55) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அந்தக் கடையில் சின்னச்சின்ன வேலைகள் செய்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அதன் முடிவில் அவர் டெர்லோக் சிங்கை கொலை செய்ததின் பின்னணி என்ன என்பது தெரிய வரும். 
    ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தலீபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghanistan #Taliban
    காபூல்:

    அமெரிக்காவில் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்தனர்.

    உடனே தலீபான்களுக்கு புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து, தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 18-வது ஆண்டாக அது நீடிக்கிறது.

    சமீபத்தில் கஜினி நகரை பிடிப்பதற்காக தலீபான்கள் கடுமையாக சண்டையிட்டனர். இந்த சண்டையில் ஆப்கானிஸ்தான் படையினர் 100 பேரும், அப்பாவி பொதுமக்கள் 35 பேரும் பலியாகினர்.

    இந்த நிலையில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி தலீபான்கள் தலைவர் மவுலவி ஹைபதுல்லா அகுன்ஜதா வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இருக்கிற வரையில் அமைதிக்கு வழி இல்லை. அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என கூறி உள்ளார்.  #Afghanistan #Taliban
    ×