search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். #MikePompeo
    வாஷிங்டன்:

    பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

    இந்த சந்திப்பின் போது, அணு ஆயுதங்கள் கைவிடல், பொருளாதார பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

    இதைத்தொடர்ந்து, வடகொரியா தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூடுவதாக அறிவித்தது. ஆனால் அதில் மெத்தனம் காட்டியது வடகொரியா.

    இந்நிலையில், வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்து ஆறு வார காலமாகியும் வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழிக்கவில்லை.

    வடகொரியா அரசு இன்னும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்தவில்லை. கிம் ஜாங் அன் கொடுத்த வாக்குறுதியால் அந்த பகுதியில் நிலவிய பதட்டம் பெருமளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். #MikePompeo
    பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #PakistanElection
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

    அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையிலும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. 

    இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தல் ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த தேர்தலில் பாகிஸ்தானியர்கள் அனைவரும் அமைதியை கடைப்பிடித்து தங்களின் வாக்குகளை பதிவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #PakistanElection
    அமெரிக்கா - ஈரான் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்தை நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார். #DonaldTrump #Siddharth
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சித்தார்த், சமூக வலைதளங்களில் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என பிசியாக இருக்கும் சித்தார்த் அவ்வப்போது பொதுவான கருத்துக்களை பகிர்ந்தும், கிண்டல் செய்தும் வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபருக்கு விடுத்த எச்சரிக்கையை குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப்பை, சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

    ஈரான் அதிபர் ரவுகானிக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், ‘அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும். வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும் இருக்காது. எச்சரிக்கையாக இருங்கள்’ என்று ஆங்கிலத்தின் பெரிய (கேப்பிட்டல்) எழுத்துகளில் பதிவிட்டிருந்தார். 

    டிரம்ப்பின் அந்த ட்விட்டை குறிப்பிட்டு கருத்து பதிவு செய்த சித்தார்த், ‘உங்களுடைய கேப்ஸ் லாக் பட்டன் ஆன் ஆகியிருக்கிறது’ என்று கிண்டல் செய்தார். #DonaldTrump #Siddharth

    அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் அதிபரை டிரம்ப் எச்சரித்துள்ளார். #Trump #Rouhani
    வாஷிங்டன்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யாவிட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய கிழக்காசிய துணைக்கண்டத்தில் உள்ள இதர 15 நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை ஈரான் தடுத்து நிறுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    உலக நாடுகளில் உள்ள ஈரான் நாட்டு தூதர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுகானி, ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது அனைத்து போர்களுக்கும் தாய்ப்போராக (மிக பிரமாண்டமானதாக) இருக்கும் என்று எச்சரித்தார்.

    சிங்கத்தின் வாலை பிடித்து விளையாடாதீர்கள், மிஸ்டர் டிரம்ப். இதன் விளைவு வருத்தத்தில்தான் போய் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



    இந்நிலையில், அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று எச்சரித்துள்ளார்.

    தனது டுவிட்டர் பக்கத்தில் ஈரான் அதிபர் ரவுகானிக்கு நேரடியாக பதில் அளித்துள்ள டிரம்ப், ‘வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும் இருக்காது. எச்சரிக்கையாக இருங்கள்’ என்று ஆங்கிலத்தின் பெரிய (கேப்பிட்டல்) எழுத்துகளில் பதிவிட்டுள்ளார். #Trump #Rouhani 
    அமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #USCourt #CallCentreScam
    நியூயார்க்:

    இந்திய வம்சாவளியினர் 21 பேர், அமெரிக்காவில் உள்ள மூத்த குடிமக்கள், சட்டப்பூர்வ குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட பலரைப் பற்றிய தகவல்களை தகவல் தரகர்கள் மூலம் பெற்றனர்.

    பின்னர் அந்த தகவல்களை கொண்டு இந்தியாவில் ஆமதாபாத்தில் உள்ள ‘கால்சென்டர்’கள் மூலம் அமெரிக்கர்களை தொடர்பு கொண்டு உள்நாட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றப்பணிகள் துறை அதிகாரிகள் என்ற பெயரில் மிரட்டி பல லட்சம் டாலர்களை சட்ட விரோதமாக கறந்து விட்டனர்.

    இந்த ஊழல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதில் தொடர்பு உடைய இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு தலா 4 ஆண்டு முதல் 20 ஆண்டு வரையில் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

    இவர்களில் பலரும் தண்டனைகாலம் முடிந்ததும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் கூறினார்.  #USCourt #CallCentreScam #tamilnews

    அமெரிக்காவில் 4 வயது சிறுவன் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடும் போது கைதவறி தவறுதலாக சுட்டதில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தாள்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது. அங்கு துப்பாக்கிச்சூடுகளில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்து 971 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 381 பேர் குழந்தைகள்.

    இந்த நிலையில் அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பதற வைப்பதாக அமைந்து உள்ளது.

    அங்கு உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன் ஒருவனிடம் கைத்துப்பாக்கி கிடைத்தது. அதை வைத்து அவன் விளையாடிக்கொண்டு இருந்தபோது தவறுதலாக விசையை அழுத்தி சுட்டு விட்டான். அதில் குண்டு பாய்ந்து 2 வயதே ஆன ஒரு பெண் குழந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்தது. அந்தக் குழந்தை, அவனது நெருங்கிய உறவுக்குழந்தை.

    குண்டுபாய்ந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்தது.

    அந்த வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்து அந்த நகர ஷெரீப் விசாரணை நடத்தினார்.

    அத்துடன் 4 வயது சிறுவன் கையில் கிடைக்கிற அளவுக்கு துப்பாக்கியை கவனக்குறைவாக கைக்கு எட்டும் இடத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அவனது தாத்தா சீசர் லோபெஸ் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் குறைவான வருமானமாக கருதப்படுகிறது. #America #SanFrancisco
    நியூயார்க்:

    இந்தியாவில் 5 இலக்க எண்களில் சம்பளம் வாங்குவதுதான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இலட்சியமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆண்டு வருமானம் 80 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் ஏழைகளாக கருதப்படுவதாக வெளியிடப்பட்ட அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரம் அந்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு வாழ்வதற்கான இயற்கை சூழலும், பாதுகாப்புடன் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையும் உள்ளது.

    அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நபர்கள் வசிக்கும் பகுதியும் சான் பிரான்சிஸ்கோதான். இங்கு ஆண்டு வருவாய் 80 லட்சத்துக்கும் மேலாக இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது. 80 லட்ச ரூபாய் வருமானம் பெருபவர்களை ஏழைகள் என்றும், அதற்கு குறைவாக 60 லட்ச ரூபாய் அளவில் வருமானம் பெருபவர்கள் மிக ஏழைகள் எனவும் அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

    குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 17.19 லட்சம் ரூபாய் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பண்ணை தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் 12 லட்ச ரூபாயாகவும், குழந்தை பராமரிப்பு வேலை பார்ப்பவர்களுக்கு சுமார் 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் பிற பகுதிகளை காட்டிலும், இங்கு வருமான வரையறையில் வேறுபாடு காணப்படுகிறது. ஏனெனில், சான் பிரான்சிஸ்கோ பகுதியில் 2 அறைகள் கொண்ட வீட்டின் வாடகையே சுமார் 2.13 லட்ச ரூபாயாம்!

    இங்கு கோடிகளில் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே நடுத்தர வசதி படைத்தோராக கருதப்படுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்றாகும். #America #SanFrancisco
    அமெரிக்காவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பிரான்சன் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #US #BoatAccident
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மிசவ்ரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் பிரான்சன். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் குடும்பத்துடன் செல்லும் அழகிய இடங்களில் இதுவும் ஒன்று.

    இங்குள்ள ஏரியில் டக் படகு எனப்படும் தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய படகு மூலம் சவாரி செய்வது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்நிலையில், டக் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு ஏரியில் மூழ்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேலும், 4 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14 பேர் விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    படகு சவாரியின் போது திடீரென அதிகப்படியான காற்று வீசியதால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும், மீட்கப்பட்டவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த டக் படகு சவாரியில் இதற்கு முன்னதாக 2 முறை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #US #BoatAccident
    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சண்டை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபரான ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரியை உயர்த்தினார்.

    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்தது.  இதன்மூலம், சீனாவுக்கு 50 முதல் 60 பில்லியன் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும், அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சுமார் 25 சதவிகிதம் வரை வரி விதித்து அறிவித்தது.

    இந்த நிலையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வரி விதிக்கப்படும் எனவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை எனவும், நாட்டுக்கு தேவையான விஷயத்தையே செய்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #Trumph
    அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி அணிவகுப்பில் கமலும் சுருதியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் மேற்கு இந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்டும் பங்கேற்க இருக்கிறார். #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடித்துவருகிறார். இருவரும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி அணிவகுப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 ந்தேதி இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு நடைபெறும். இதில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.



    இந்த ஆண்டு இந்தியா சார்பில் கமலும் சுருதியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் மேற்கு இந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்டும் பங்கேற்க இருக்கிறார். #KamalHaasan #Shruti #VivianRichards
    அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஏரியில் மூழ்கிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #BoatAccident
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் ஏரி சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. இந்த ஏரியில் படகில் சென்று பயணிப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். ஏரியின் மையத்தில் சென்றபோது, படகு திடீரென கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் படகில் இருந்தவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கியதால் அலறி துடித்தனர். அவர்களது அலறலை கேட்ட அங்கிருந்த மீட்பு படையினர் உடனே அவர்களை காப்பாற்ற விரைந்தனர்.

    ஏரியில் மூழ்கிய 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூழ்கியுள்ள மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமெரிக்காவில் சுற்றுலா சென்ற படகு மூழ்கிய விபத்தில் 8 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BoatAccident
    சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற நிலையில், அடுத்த சந்திப்புக்காக காத்திருப்பதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    உலக நாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இரு துருவங்களாக இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிகழ்வுகளில் பகை இருந்துவந்தது. இந்த பகையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரது சந்திப்பு நடைபெற்றது.

    வெற்றிகரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாட்டு அதிபர்களும் தங்கள் பகை மறந்து, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.



    இந்நிலையில், ரஷ்ய அதிபருடனான அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில்,  ரஷ்யாவுடனான சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், அடுத்த சந்திப்பில், இருநாடுகளும் ஆலோசித்த பயங்கரவாத தடுப்பு, இஸ்ரேல் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கெனவே தாம் அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் ட்ரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். #Trumph
    ×