search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் பயிற்சி விமானம் விபத்துக்கு உள்ளானதில் இந்திய பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AircraftCrash
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. நேற்று பயிற்சி விமானங்களில் சிலர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பயிற்சியில் ஈடுபட்ட விமானங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இந்திய பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விசாரணையில் பலியான மூவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா செஜ்வால் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜோர்ஜ் சன்ஜேஸ், ரால்ப் நைட் ஆகியோர் என தெரியவந்தது. #AircraftCrash
    அமெரிக்காவில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் ஆபாசம் இல்லாத வகையில் தன்னை தொடுவதற்கு அனுமதி அளித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். இவர், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் 2006-ம் ஆண்டு செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக பரபரப்பு குற்றம் சாட்டியவர் ஆவார்.

    மேலும் ஜனாதிபதி தேர்தலின்போது இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக தனக்கு டிரம்ப் வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) தந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் ஓஹியோ மாகாணம், கொலம்பஸ் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    அங்கு அவர் வயது வந்தவர்களுக்கு கவர்ச்சியான நடனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தி உற்சாகம் ஏற்படுத்துகிற ‘ஸ்ட்ரிப் கிளப்’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மேடைக்கு வந்து தன்னை ஒரு ரசிகர் ஆபாசம் இல்லாத வகையில் தொடுவதற்கு அனுமதி அளித்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பான தகவலை அவரது வக்கீல் மைக்கேல் அவினாட்டி வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “இது திட்டமிட்ட நாடகம். அரசியல் ரீதியில் வஞ்சம் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். இது பெரும் ஏமாற்றத்தை தந்து உள்ளது. நாங்கள் அனைத்து போலி குற்றச்சாட்டுகளையும் சந்திப்போம்” என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    மேலும் ஸ்டார்மி டேனியல்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ் ஏற்கனவே 2 வழக்குகள் தாக்கல் செய்து இருப்பது நினைவுகூரத்தக்கது. 
    அமெரிக்காவில் விற்பனையாகும் ரூ.13 லட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    சீனாவில் உற்பத்தியாகும் ஏராளமான பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதே போல் அமெரிக்க பொருட்களும் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

    சமீபத்தில் அமெரிக்க பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சீனா, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்தது.

    சுமார் ரூ.2 லட்சம் கோடி பொருட்களுக்கு இவ்வாறு வரி உயர்த்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் ரூ.2 லட்சம் கோடி பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.

    இதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் வர்த்தக ரீதியிலான மோதல் போக்கு உருவானது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் விற்பனையாகும் ரூ.13 லட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசர் வெளியிட்டுள்ளார்.

    இது சம்பந்தமாக ராபர்ட் லைத்தீசர் மேலும் கூறியதாவது:-


    அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவை அடுத்து சீனாவில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

    வருகிற செப்டம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வரும். இதன் மூலம் அமெரிக்க பொருட்கள் விற்பனையை சந்தையில் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக சீன வர்த்தக மந்திரி லீ செங்காங் கூறும் போது, சீனா- அமெரிக்கா இரு நாடுகளுமே பொருளாதார வல்லரசுகளாக உள்ளன.

    அமெரிக்கா பழிக்குப் பழியாக வரி விதிப்பை மேற்கொண்டால் இரு நாடுகளுமே வர்த்தக பாதிப்பை சந்திக்க நேரிடும்.

    இது மட்டும் அல்லாமல், அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச பொருளாதார கொள்கைக்கு எதிரானது. மேலும் சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறினார். #DonaldTrump #US
    அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர் சரத் கோப்புவின் உடல் நேற்று ஐதராபாத் வந்தடைந்தது. #IndianStudent #SharathKoppu
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோப்பு (26). அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வந்தார்.  கடந்த 6-ம் தேதி இரவு அந்த பகுதியில் ஓட்டலுக்கு சென்ற சரத்தை சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரத்தை சுட்டு கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் நேற்று ஐதராபாத் வந்தடைந்தது.

    அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு சரத் கோப்புவின்  உடல் வந்தடைந்தது. அங்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா சரத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #IndianStudent #SharathKoppu
    அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் குடும்பத்தாருக்கு அனைத்து உதவிகளையும் செய்துக் கொடுப்போம் என சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார். #KansasShootting #SharathKoppula #SushmaSwaraj
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் கனாஸ் சிட்டியில் உள்ள மிசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சரத் கொப்பு (25) அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமையில் ஹோட்டலில் நடந்த கொள்ளை சம்பவத்தில்  அடையாளம் தெரியாத நபரால் சரத் கொப்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

    துப்பாக்கி சூடு நடத்தியவரை பிடிக்க வலை வீசிவரும் அந்நாட்டு காவல்துறை, குற்றவாளியை பிடிக்க உதவி செய்பவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி, அம்மாநில அரசின் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை மந்திரி கே.டி. ராமா ராவ் மற்றும்  ஆகியோர் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.



    இதையடுத்து, இந்திய மாணவர் சரத் கொப்புவின் தந்தையிடம் தொலைபேசியில் உரையாடிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்தார்.  

    இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தார் அமெரிக்கா செல்ல விரும்பினால் அதற்கான விசா ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், மேலும், மாணவரின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். #KansasShootting #SharathKoppula #SushmaSwaraj
    அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் ஓட்டல் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IndianStudent #SharathKoppu #GunShooting
    வாஷிங்டன்:

    தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோபு (26). இவர் அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சரத் அந்த பகுதியில் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.

    இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சரத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரத்தை சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.



    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சரத்தை சுட்டு கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக அமெரிக்காவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. #IndianStudent #SharathKoppu #GunShooting
    அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு நிர்பந்திக்க வந்திருந்த அமெரிக்க மந்திரியின் அணுகுமுறை வருத்தமளிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. #PompeoinNKorea #USKoreahighleveltalks '#extremelyregrettable
    சியோல்:

    டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி நேற்று பியாங்யாங் வந்திருந்தார்.

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது.

    வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்தது.

    வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ நேற்று பியாங்யாங் வந்தார்.

    வடகொரியா அதிபரின் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ ஆகியோர் அவரை வரவேற்றனர்.

    முன்னதாக, அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட மைக் பாம்ப்பியோ, வரும் வழியில் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர். உலகத்துக்கு அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடகொரியா அதிபரை இந்த பயணத்தின்போது நான் வலியுறுத்துவேன்.

    இதற்கு வடகொரியாவும் தயாராக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதிகமாக சந்திப்பதன் மூலம் நட்புறவும், நம்பிக்கையும் பலப்படும் என்பதால் வடகொரியா தரப்பில் இருந்து உரிய எதிர்வினையை எதிர்பார்க்கிறேன் என பேட்டியின்போது மைக் பாம்ப்பியோ குறிப்பிட்டிருந்தார்.

    பியாங்யாங் நகரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் வலதுகரமாக விளங்கிவரும் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் அந்நாடின் உயரதிகாரிகளுடன் நேற்றும் இன்றும் பேச்சுவார்த்தை நடத்திய மைக் பாம்ப்பியோ, அங்கிருந்து இன்று ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.



    அவர் புறப்பட்டு சென்ற பின்னர் வடகொரியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ’இருநாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் சார்பில் முன்வைக்கப்பட்ட நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், கடைபிடித்த பாணியும் மிகவும் வருத்தம் அளிக்கும் மனப்போக்குடன் அமைந்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்ற வேண்டுமானால் அதற்கான திட்டமிட்ட அணுகுமுறைகளை இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கையாள்வதுதான் வேகமான வழியாக அமையும்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். #PompeoinNKorea  #USKoreahighleveltalks '#extremelyregrettable 
    அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை மேல் ஏறிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். #LibertyStatue
    நியூயார்க்:

    அமெரிக்காவில் லிபர்டி தீவில் உள்ளது, சுதந்திர தேவி சிலை. பிரசித்தி பெற்ற இந்த சிலை, 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டால் வழங்கப்பட்டதாகும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சிலையை காண்பதற்காக செல்வது வழக்கமான ஒன்று.



    இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் ஒரு பெண் அந்த சிலை பீடத்தின் மீது திடீரென ஏறத் தொடங்கினார்.

    போலீசார் அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வரச்செய்து காவலில் வைத்து விசாரித்தனர்.

    இதில் அந்தப் பெண்ணின் பெயர் தெரேஸ் பேட்ரிசியா ஒகூமு (வயது 44) எனவும், அமெரிக்க எல்லையில் சட்ட விரோதமாக நுழைகிற தம்பதியரையும், அவர்களது குழந்தைகளையும் டிரம்ப் நிர்வாகம் பிரித்ததால் மன உளைச்சலில் சிக்கித் தவித்து வந்தவர் எனவும் தெரியவந்து உள்ளது.

    தனது செயலுக்காக அந்தப் பெண், போலீஸ் அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த விவகாரம் குறித்து நியூயார்க் மேயர் பில் டி பிளேசியோவின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “நியூயார்க் அழகான நகரம். இந்த நகர போலீசார், எந்த விஷயத்தையும் சரியாக கையாளுவார்கள்” என்றார். இந்த சம்பவத்தின்போது, அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இருப்பினும் பலரும் அந்தப் பெண், சுதந்திர தேவி சிலை பீடத்தின் மீது ஏறியதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட அது ‘வைரல்’ ஆக பரவியது.  #LibertyStatue
    அமெரிக்காவின் அடையாள சின்னமாக அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை மீது ஏறிய நபரால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. #LibertyStatue
    நியூயார்க்:

    அமெரிக்காவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது நியூயார்க் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை.

    இந்தச் சிலை மீது நேற்று மனித உருவம் ஒன்று ஏறிச்சென்று உட்கார்ந்து கொண்டிருப்பதாக நியூயார்க் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். சிலையின் மேலே உள்ள ஒரு பீடத்தில் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டனர்.

    அவரை கீழே இறங்குமாறு கேட்டும் அவர் மறுத்துவிட்டார். நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த நபரை கைது செய்தனர். அவரை கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றது தெரிய வந்தது.

    சுதந்திர தேவி சிலை மீது மர்ம நபர் ஏறியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #LibertyStatue
    முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற 72 வயது மகனை 92 வயதான தாய் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 92 வயது அன்னா மே ப்லஸிங், அவருடைய 72 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ப்லஸிங் தெரிவித்ததெல்லாம் அதிர்ச்சி ரகம்.

    வயது முதிர்ச்சி காரணமாக ப்லஸிங்-கை பார்த்துக்கொள்வதில் சிரமம் இருப்பதாக அவரது மகன் அடிக்கடி அவரிடம் தெரிவித்துள்ளார். ஒரு நாள் மனைவியின் பேச்சை கேட்டு அவரது மகன் அன்னா மே ப்லஸிங்-கை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட முடிவு செய்துள்ளார்.

    இந்த தகவலை ப்லஸிங்கிடம் தெரிவித்தபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து மிகவும் வருந்தியுள்ளார். இருப்பினும் அவரது மகன் அவரது முடிவில் இருந்து பின் வாங்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ப்லஸிங், மகனின் அறைக்கு அவரது கணவர் பயன்படுத்திய இரண்டு கை துப்பாக்கிகளை நேற்று மறைத்து எடுத்து சென்றுள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த மகனை நோக்கி சுட்டு கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, மருமகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

    தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் ப்லஸிங்-கை கைது செய்ய முயன்றனர், ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார். இறுதியாக அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    92 வயதாகும் தாய், பெற்ற மகனையே துப்பாக்கியால் சுட்டுகொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார். #DonaldTrump #AmulThapar
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந்தோணி கென்னடி. 81 வயதான இவர் வரும் 31-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இது குறித்து ஜனாதிபதி டிரம்பை கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

    இதையடுத்து காலியாகிற ஒரு நீதிபதி பதவிக்காக 25 பேரது பெயர்களை ஜனாதிபதி டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார் என தகவல்கள் கசிந்தன. அந்த 25 பேரில் ஒருவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் (49) ஆவார்.



    இந்த நிலையில், அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

    மற்றவர்கள் பிரெட் கவனாக், எமி கோனி பேரட், ரேமண்ட் கேத்லெட்ஜ் ஆவர்.

    அமுல் தாபருக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இந்த நேர்முக தேர்வு குறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, “இன்னும் 2 அல்லது 3 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்துவேன். அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இது குறித்த அறிவிப்பு 9-ந் தேதி வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிற நபர், மிகச் சிறந்த நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    கடந்த ஆண்டு அமுல் தாபரை 6-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் நியமனம் செய்தது நினைவுகூரத்தக்கது.   #DonaldTrump #AmulThapar #tamilnews
    அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இந்திய பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #ElkRiverFalls # IndianEngineer #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவி அதன் அழகுடன் சேர்த்து ஆபத்துக்கும் பெயர் போனது. இந்த  அருவியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கோகினேனி நாகார்ஜூனா என்ற இந்திய பொறியாளர் அங்கிருந்த பாறையின் மீது ஏறி நீரில் குதித்துள்ளார்.



    அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் பலியானார். இதுகுறித்து மீட்புப்படை அதிகாரி பால் புசனான் கூறுகையில், பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளர் மீள முடியவில்லை எனவும், 2 மணி நேர தேடலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த இந்தியர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. #ElkRiverFalls # IndianEngineer #US
    ×