search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முதல் பெண் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நேற்று பொறுப்பேற்று கொண்டார். #GinaHaspel #CIAdirector

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறி மந்திரியாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் நியமித்தார். 

    அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் டிரம்ப் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை கடந்த 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. இதையடுத்து சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹஸ்பெல் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ஜினா ஹேஸ்பெல் சி.ஐ.ஏ. இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் ஆவார். #GinaHaspel #CIAdirector
    அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer
    நியூயார்க்:

    அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வாரம் தான் நியூயார்க் போலீஸ் அகாடமியில் படித்து முடித்தார்.

    இந் நிலையில் அவர் நியூயார்க் நகர துணை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது அங்கு உள்ள சீக்கிய மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்து உள்ளது.



    இதுபற்றி சீக்கிய அதிகாரிகள் சங்கம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவில், “நியூயார்க் நகரில் தலைப்பாகை அணிந்த முதல் பெண் துணை போலீஸ் அதிகாரியை வரவேற்கிறோம். அவரை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். நீங்கள் இந்தப் பதவியில் அமர்வது, இதே போன்று சட்ட அமலாக்கல் துறையில் நாமும் அமர வேண்டும் என்ற உந்துதலை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது” என கூறப்பட்டு உள்ளது.  #GursoachKaur #TurbanedPoliceOfficer

    இருநாடுகளுக்கு இடையே வர்த்தக தகராறு இருந்து வந்த நிலையில், பல தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது. #TradeWar #US #China
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் காப்புரிமையை தவறான முறையில் பயன்படுத்தி அதே பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு நாடுகளுக்கும் வர்த்தக தகராறு தொடங்கியது. இதன் காரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களின் மீது பல்வேறு வரிகளை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவில் இருந்து  சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 128 அமெரிக்க பொருட்களின் மீது அதிக வரிகளை அந்நாடு விதித்தது. இதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் மூலம் அபாயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப்போரை தவிர்க்கும் நோக்கில் வாஷிங்டன் நகரில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் மீதான வரி விதிப்பை குறைத்துகொள்வதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இதைத்தொடர்ந்து, அதிகரித்துவரும் சீன நுகர்வோர்களின் தேவைகள் மற்றும் அதை ஈடு செய்ய தேவைப்படும் உயர்தர பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவிலிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்யப்படும் என சீனா தரப்பில் பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்டுள்ளது.

    அறிவுசார் பொருட்களின் காப்புரிமைகளை தவறாக பயன்படுத்தாமல் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் வர்த்தகத்தை அதிகரிப்பது, இறக்குமதி பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியை இரண்டு நாடுகளும் குறைத்துக்கொள்வது, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற முக்கிய முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா சார்பில், வணிகத்துறை செயலாளர் வில்புர் எல்.ரோஸ் மற்றும் அமெரிக்க வணிக பிரதிநிதி ராபர்ட் இ.லைத்திசர் ஆகியோரும், சீனாவின் தரப்பில் அதிபரின் சிறப்பு அதிகாரி லியூ ஹீவும் இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிபர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சீன தொலைதொடர்ப்பு நிறுவனங்கள் மீண்டும் தங்களது தொழிலை அமெரிகாவில் தொடங்க உதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். #TradeWar #US #China
    11 நாடுகள் வழியே பயணித்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பின்னர் அங்கு 15 மாதங்கள் கடை ஒன்றில் வேலை செய்த இந்தியர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    வெளிநாட்டு மோகம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்கா மோகம் என்பது நவீன காலம் முதலே இந்தியர்களிடையே இருந்துவருகிறது.

    அதன்படி அமெரிக்கா குடியுரிமை பெற விரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்பவர், ஒன்றரை வருடங்களாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவை இலக்காக கொண்டு 2016-ம் ஆண்டு பிரேசில் சென்ற ஹர்பிரீத் சிங், அங்கிருந்து பொலீவியா சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பெரு நாட்டை அடைந்துள்ளார். பின் கொலம்பியா, பனாமா, கவுதமமாலா உள்ளிட்ட 11 நாடுகளை கடந்து இறுதியாக அமெரிக்க அண்டை நாடான மெக்ஸிகோவை எட்டியுள்ளார்.

    பின்னர், அங்கிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஹர்பிரீத் சிங் நுழைந்துள்ளார். அங்கு 15 மாதங்கள் கடை ஒன்றில் வேலை பார்த்த அவர் போலீசாரிடம் சிக்கி மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    அமெரிக்காவை நோக்கிய ஹர்பிரீத் சிங்கின் பயணத்தின் போது அவரது பாஸ்போர்ட் திருடு போயுள்ளது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள ஒரு ஏஜென்சி மூலமாக போலி பாஸ்போர்ட் பெற முயன்றுள்ளார். இது தெரிய வந்த பின்னர் அந்த ஏஜெண்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    “சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், ‘எச்-4’ விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித் கூறியுள்ளார். #H4Visa
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்கிறவர்களுக்கு ‘எச்-1’ பி விசா வழங்கப்படுகிறது. அந்த விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து, அங்கேயே வேலை பார்க்கும் திட்டத்தை ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டு வந்தார்.

    அதை நீக்கிவிட தற்போதைய டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பெருமளவில் இந்தியர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்று இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால் தலைமையில் 130 எம்.பி.க்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ஜென் நீல்சனிடம் மனு அளித்தனர்.

    இந்தநிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், ‘எச்-4’ விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது. அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவை அமல்படுத்தும் விதத்தில், நிறைய கொள்கைகள், ஒழுங்குமுறைகள் மாற்றப்பட உள்ளன. அதில் வேலை வாய்ப்பு அடிப்படையில் விசா வழங்கும் திட்டமும் அடங்கும்” என்று குறிப்பிட்டார்.

    எனவே அமெரிக்க வாழ் இந்தியர்கள் தற்காலிகமாக நிம்மதி அடையலாம்.  #H4Visa  #tamilnews
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாளை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். அவருடன் மனைவி பிரேமலதா உடன் செல்கிறார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பால் அவதிப்பட்டார். இதற்காக அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் விஜயகாந்த் நாளை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். அவருடன் மனைவி பிரேமலதா உடன் செல்கிறார்.
    வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிடில் அழிவை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.#Trump #Kim
    வாஷிங்டன்:

    இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி சந்தித்துப் பேசுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டு உள்ளது. அணு ஆயுதங்களை கைவிடும் பிரச்சினையில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தனக்கு மென்மேலும் அழுத்தம் தருவதாக வடகொரியா கருதுகிறது.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென வட கொரியா, டிரம்புடனான கிம் ஜாங் அன்னின் பேச்சுவார்த்தையை ரத்து செய்து விடப்போவதாக மிரட்டியது.



    ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார். இதுபற்றி நேற்று முன்தினம் அவர் கூறும்போது, “திட்டமிட்டபடி அடுத்த மாதம் 12-ந் தேதி (சிங்கப்பூரில்) நடக்க உள்ள உச்சி மாநாட்டுக்கு வேண்டிய வேலைகளை அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை கைவிட்டால், அவர் ஆட்சி அதிகாரத்தில் தொடர்வார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாவிடில் வடகொரியா அழிவை சந்திக்க வேண்டியது வரும்” என்று குறிப்பிட்டார்.

    மேலும், “சந்திப்பு நடந்தால், நடக்கட்டும். அப்படி நடக்காவிட்டால் நாம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்று எச்சரித்தார். #Trump #Kim 
    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். #TexasSchoolShooting

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா பே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.

    இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 9 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் அந்த பள்ளியில் பயின்றுவரும் மாணவர் எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார். #TexasSchoolShooting
    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் இ-சிகரெட் வெடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    புளோரிடா:

    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்தவர் டால்மேட்ச் எலியா (38). இவருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு இவர் தனது படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் 80 சதவீதம் கருகிய நிலையில் இருந்தது.

    படுக்கை அறையில் உடல் கருகி இறந்தது எப்படி, என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இ-சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி அவரது மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    எனவே, அவர் இ-சிகரெட் புகைக்கும் போது அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் 2009 முதல் 2016-ம் ஆண்டுவரை 195 இ-சிகரெட் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 133 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்த சம்பவம் தற்போது தான் முதன் முறையாக நடந்துள்ளது. #Tamilnews
    அமெரிக்காவில் டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் பெண்களுக்கு மிக்சிகன் பல்கலைக்கழகம் ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டது.#LarryNassar #MichiganStateUniversity
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக லார்ரி நஸ்சார் (54). பணிபுரிந்தார்.

    இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்டதாக 332 பெண்கள் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர மிக்சிகன் பல்கலைக்கழகம் விரும்பியது.

    பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் ஜேட் கபூயா, அய்ல்ஸ்டீபன்ஸ், காலசிஸ்மூரே

    அதை தொடர்ந்து டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன் வந்தது. அதன்படி ரூ.3250 கோடி வழங்க ஒப்புக்கொண்டது.

    இத் தகவலை பல்கலைக் கழக குழு தலைவர் பிரையன் பிரஸ்லின் தெரிவித்துள்ளார்.#LarryNassar #MichiganStateUniversity
    அணு ஆயுத சோதனைகளை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.
    பீஜிங்:

    சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதன் மூலம் வடகொரியா அமைதியை விரும்புவதாக தெரிவித்தார்.



    அதற்கு இதர நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #koreanpeninsula #opportunityforpeace #wangyi
    சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #MelaniaTrump 
    ×