search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #PlaneCrash
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

    விமானத்தை அதன் உரிமையாளரும், விமானியுமான ஜெப்ரே வெயிஸ் (வயது 65) இயக்கினார். அவருடன் இந்த விமானத்தில் 5 பேர் பயணம் செய்தனர்.

    இந்த விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் அந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் ஜெப்ரே வெயிஸ் உள்பட விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.  #PlaneCrash 
    அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #USStorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் இந்த புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. 

    தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின.

    மிசிசிபி மாகாணத்தில் லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான ஆண் சிக்கினார். காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் புயல் காற்றுக்கு மத்தியில் வாகனங்கள் ஓட்டும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    அலபாமா மாகாணத்தில் பெல் நகரத்தில் 42 வயதான பெண் ஒருவர் வீட்டின் மீது மரம் விழுந்து பலி ஆனார். புயல் தாக்கி இதுவரை 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    புயல் பாதித்த மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். #USStorm
    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று வழிதெரியாமல் தவித்த 2 இந்தியர்களை ரோந்துப் படையினர் மீட்டு கைது செய்தனர். #IndianNationals
    நியூயார்க்:

    அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மீட்பு சிக்னல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து, தொலைபேசி மூலம் 911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது மீட்பு சிக்னலை ஆக்டிவேட் செய்தோ உதவி கேட்கலாம். இதன்மூலம் ஏராளமான அகதிகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவ்வகையில், கடந்த புதன்கிழமை அரிசோனா மாநிலத்தில் உள்ள மீட்பு சிக்னல் டவரில் இருந்து சிக்னல் வந்துள்ளது. இதையடுத்து எல்லை ரோந்துப் படை போலீசார் அங்கு சென்று, சிக்னல் டவர் அருகே வழிதெரியாமல் தனியாக நின்றிருந்த 2 நபர்களை மீட்டனர்.

    விசாரணையில் அவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது.

    இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவ உதவி எதுவும் தேவையில்லை என்றும் அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பின்னர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #IndianNationals
    நேபாள விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நேபாளிசாட்-1, அமெரிக்காவில் இருந்து நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. #Satellite

    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் முதன் முறையாக செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளது. நேபாள்சாட்-1 என பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைகோளை நேபாளத்தை சேர்ந்த ஆப்காஸ் மாஸ்கி மற்றும் ஹரிராம் ஸ்ரெத்தா ஆகியோர் தயாரித்தனர்.

    அந்த செயற்கைகோள் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருந்து நேற்று மதியம் 2.31 மனிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தகவலை நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி தெரிவித்துள்ளது.

    நேபாளம் முதன்முறையாக சொந்தமாக தயாரித்த செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இது நாட்டுக்கு பெருமை என நேபாள பிரதமர் கே.ஆர்.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். #Satellite

    கிடைத்தற்கரிய தொகுப்புகளாக சேமித்து வைத்திருந்த ஆபாசப் படங்களை அழித்து விட்டதாக அமெரிக்காவில் ஒருவர் தனது பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். #mansuesparents #Michigancourt #Michiganman #86KUSD #destroyingporn
    நியூயார்க்:

    அமெரிக்காவில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்ற நடுத்தர வயது நபர் பெட்டி, படுக்கைகளை மூட்டைக்கட்டி கொண்டு, மிச்சிகன் மாநிலம், கிரான்ட் ஹேவன் பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் தஞ்சம் அடைந்தார்.

    அவர்களின் ஆதரவில் தங்கி இருந்த அந்நபர், பின்னாளில் இன்டியானா மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். பெற்றோர் வீட்டில் அவர் விட்டுச் சென்ற பொருட்கள் எல்லாம் அவரது புதிய இருப்பிடத்துக்கு அனுப்பப்பட்டபோது 12 அட்டை பெட்டிகள் வந்து சேராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தனது வாலிபகாலத்தில் இருந்து சிறுகச்சிறுக சேகரித்து வைத்திருந்த கிடைத்தற்கரிய ஆபாசப் படங்களின் வி.சி.டி. மற்றும் சி.டி., டி.வி.டி. தொகுப்புகள் என்னவாயிற்று? என்று பெற்றோரிடம் ‘இமெயில்’ மூலம் அவர் விசாரிக்க, எதிர்முனையில் இருந்து வந்த பதில் அவரை ஆத்திரப்படுத்தியது.

    அந்த 12 பெட்டிகளில் இருந்தவற்றை எல்லாம் நானும் உன் அம்மாவும் சேர்ந்து அழித்து விட்டோம் என்று அவரது தந்தை பதில் அனுப்பி இருந்தார்.



    உனது உடல்ரீதியான, மனரீதியான ஆரோக்கியத்தின் மீது நாங்கள் அக்கறை வைத்துள்ளதால் உன்னிடம் இருந்த ’அருவெறுக்கத்தக்க குப்பையை’ அழித்துவிட நாங்கள் தீர்மானித்தோம் என மகனுக்கு அனுப்பிய பதிலில் தந்தை குறிப்பிட்டிருந்தார்.

    இதனால், தனது பிரியத்துக்குரிய 'ஆபாசப் பட நூலகம்' அழிக்கப்பட்டதை அறிந்து அவர் மேலும் ஆவேசம் அடைந்தார். தனக்கு சொந்தமான சுமார் 29 ஆயிரம் டாலர் மதிப்புள்ள சொத்துகளை பெற்றோர் அழித்து விட்டதாக ஒட்டாவா நகர ஷெரிப் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஷெரீப் அலுவலகம் முன்வரவில்லை.

    இதையடுத்து, கிடைத்தற்கரிய தொகுப்புகளாக சேமித்து வைத்திருந்த  ஆபாசப் படங்களை அழித்து விட்டதாக தனது பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு மிச்சிகன் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த செய்தியை சமீபத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள், வழக்கு தொடர்ந்த நபர் மற்றும் அவரது பெற்றோரின் பெயரை மட்டும் வெளிப்படுத்தவில்லை. #mansuesparents  #Michigancourt #Michiganman #86KUSD 
    #destroyingporn
    அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை தாக்கியதில் முத்தியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FlightlessBird #Emus
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்.

    அந்த வகையில் ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடைகொண்ட பறவை இனங்களில் ஒன்றாகும்.

    இந்த ரக பறவைகள் அதிகபட்சமாக 45 கிலோ எடையில் இருக்கும். பறக்கும் திறனற்ற இந்த பறவையின் கால் நகங்கள் மற்றும் அலகு மிகவும் கூர்மையானதாக இருக்கும்.



    இந்த நிலையில், சம்பவத்தன்று மார்வின் ஹஜோஸ், அந்த பறவைக்கு இரை வைப்பதற்காக சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த பறவை தனது நகங்களாலும், அலகாலும் பயங்கரமாக தாக்கியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார்.  #FlightlessBird #Emus
    அமெரிக்காவில் சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது. #RocknPlay #FisherPrice
    நியூயார்க்:

    அமெரிக்காவில் பொம்மைகள் தயாரிப்பில் பிரபலமான பி‌‌ஷர் பிரைஸ் நிறுவனம், குழந்தைகள் படுத்து உறங்குவதற்கான நவீன தொட்டில்களையும் தயாரித்து சந்தையிட்டு வருகிறது.

    ‘ராக் என் பிளே சிலீப்பர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த நவீன தொட்டில்களின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

    இதற்கு காரணம், 2009-ம் ஆண்டு இந்த நவீன தொட்டில்களை சந்தையில் அறிமுகம் செய்த நாள் முதல், அவற்றில் படுத்து உறங்கிய 30 சின்னஞ்சிறு குழந்தைகள் இதுவரையில் பலியாகி உள்ளனர்.

    இதுகுறித்து அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் (சிபிஎஸ்சி) விசாரணை நடத்தியது.

    பிறந்து 3 மாதங்களே ஆன 10 குழந்தைகள், அந்த நவீன தொட்டிலில் படுத்து உறங்கியபோது, திரும்பிப்படுக்க முயன்று இறந்து விட்டதை தாங்கள் அறிந்திருப்பதாக அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையமே ஒப்புக்கொண்டது.

    இதையடுத்து சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.

    இதை பி‌‌ஷர் பிரைஸ் நிறுவனத்தின் அதிபர் மேட்டல் உண்மைதான் என உறுதி செய்தார்.
    அமெரிக்க மருத்துவ இன்சூரன்ஸ் துறையில் நடந்த மாபெரும் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியால் ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. #America #InsuranceFraud
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொது மருத்துவ இன்சூரன்ஸ் வழங்குவதற்காக 1960-ல் மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் என 11 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் விரிவடைந்துள்ளது.

    எனினும் இந்த இன்சூரன்ஸ் முறையில் மறைமுகமாக மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்காகவே கடந்த 2007-ம் ஆண்டு மருத்துவ மோசடி தடுப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 4 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவ இன்சூரன்ஸ் துறையில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதை அந்நாட்டு நீதித்துறை கண்டுபிடித்துள்ளது.

    நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 ஆயிரத்து 309 கோடி) மோசடி செய்யப்பட்டதாகவும், இந்த மோசடி தொடர்பாக 24 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ பொதுக்காப்பீடு இன்சூரன்ஸ் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள உடலின் மற்ற பாகங்களை தருவதாக திட்டம் அறிவிக்கப்பட்டது.

    பிலிப்பைன்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயங்கும் ஒரு சர்வதேச டெலிமார்க்கெட்டிங் சந்தையின் மூலம் இத்திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டது. இதில் ஈர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான நோயாளிகள் இத்திட்டத்தில் இணைந்தனர்.

    இந்த மோசடிக்காரர்கள் பணத்திற்காக டாக்டர்கள், நோயாளிகளை நேரடியாக சந்திக்காமலே தேவையான உறுப்புகளைப் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இந்த மோசடியில் இருந்து கிடைத்த முழு வருமானமும் சர்வதேச அளவில் நடத்தப்படும் போலி நிறுவனங்களுக்கு சென்றன.

    இந்த மோசடியை அரங்கேற்றிய நபர்கள் தங்களுக்கு கிடைத்த பணத்தை கொண்டு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் ஏராளமான ஆடம்பர சொகுசு பங்களாக்கள், விலை மதிப்புமிக்க கார்கள், உல்லாச கப்பல்கள் உள்ளிட்டவற்றை வாங்கி குவித்தனர்.

    பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மருந்து நிறுவன நிர்வாகிகள், மருத்துவ உபகரண கருவிகளை தயாரிக்கும் பெருநிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் பல டாக்டர்கள் இந்த மோசடியில் அங்கம் வகித்துள்ளனர். இந்த மோசடியால் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8 ஆயிரத்து 309 கோடி) தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய புலனாய்வு போலீஸ்துறையின் உதவி இயக்குநர் ராபர்ட் ஜான்சன் கூறுகையில், “அமெரிக்க வரலாற்றில் ஒரு மாபெரும் மருத்துவ முறைகேடு இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது” என கூறினார்.

    தெற்கு கரோலினாவைச் சேர்ந்த அரசு வக்கீல் ஷெர்ரி லிடன், “இந்த மோசடியின் காரணமாக, மருத்துவக் காப்பீட்டின் தொகை மேலும் உயரும். இந்த சுமை வரிசெலுத்துவோரின் தலையில் தான் விழும்” என்றார்.  #America #InsuranceFraud 
    உலக பயங்கரவாதத்தின் தலைமையாக விளங்கும் அமெரிக்கா எங்கள் நாட்டு ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவதா? என ஈரான் அதிபர் ரவுஹானி சீறியுள்ளார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.
     
    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது.



    இதற்கிடையில், ஈரான் நாட்டின் ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படையை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஈரான் மக்களிடையே தொலைக்காட்சி மூலம் இன்று உரையாற்றிய ரவுஹானி, ‘எங்கள் நாட்டின் புரட்சிகர படைகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்த நீங்கள் (அமெரிக்கா) யார்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    எங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை கருவியாக பயன்படுத்தும் நீங்கள்தான் உலக பயங்கரவாதத்தின் தலைமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG
    ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் ஈரான் மீது மேலும் கூடுதல் தடைகளை விதிக்க உள்ளது. #IranianMilitaryForce #IRG #Trump
    வாஷிங்டன்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் ஈரான் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று கூறியிருந்தார்.

    ஆனால் ஈரான் அரசு சில இடங்களில் ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஈரானின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ‘ஈரான் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன், அதற்கு நிதியுதவி அளித்து, அதை அரசாங்கத்தின் செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்கிறது. ஈரான் மீதான அழுத்தத்தை கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். நீங்கள் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையோடு தொழில் செய்கிறீர்கள் எனில் அது பயங்கரவாததிற்கு நிதியுதவி செய்வதற்கு சமம்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை. டிரம்பின் இந்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் கூடுதல் தடைகளை விதிக்க முடியும்.

    ஆனால், இந்த நடவடிக்கைக்கு சற்றும் அஞ்சாத ஈரான் அரசு, பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #IranianMilitaryForce #IRG #Trump
    அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். #KirstjenNielsen #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென்.

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரிந்து தனிதனியாக காவல் மையங்களில் அடைப்பது உள்ளிட்ட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை இவர் அமல்படுத்தி உள்ளார்.

    இவர் டிரம்பின் விசுவாசியாக இருந்தபோதிலும், அகதிகள் விவகாரத்தில் போதியளவு கடுமை காட்டவில்லை என கிர்ஸ்ட்ஜென் நீல்சென் மீது டிரம்ப் அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில், கிர்ஸ்ட்ஜென் நீல்சென் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான காரணம் எதையும் குறிப்பிடாத கிர்ஸ்ட்ஜென் நீல்சென் ‘பதவியை துறக்க இதுதான் சரியான தருணம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

    கிர்ஸ்ட்ஜென் நீல்சென் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட டிரம்ப், தற்காலிக உள்துறை மந்திரியாக சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு கமிஷனர் கெவின் மெக்லீயன் பொறுப்பு வகிப்பார் என கூறினார்.   #KirstjenNielsen #DonaldTrump 
    அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐதராபாத் நகரை சேர்ந்த பல் மருத்துவர் உயிரிழந்தார். #Indiandentist #USroadaccident #ArshadMohammed #dentistArshadMohammed
    நியூயார்க்:

    ஐதராபாத் நகரின் விகாராபாத் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் பல் மருத்துவ கல்லூரியில் பயின்ற அர்ஷத் முஹம்மத் என்பவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். சிகாகோ நகரில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் தொடர்பான உயர்நிலை பட்டம் பெற்ற அர்ஷத், அங்கேயே பட்டமேல் படிப்பு சான்றிதழ் பெறுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில், சிகாகோ நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய அர்ஷத் முஹம்மத் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிகாகோ நகரில் உள்ள போர் வீரர்கள் நினைவுச்சினம் சாலையில் தவறான பாதையில் எதிரே வந்த ஒரு வேன் அர்ஷத் ஓட்டிவந்த காரின் மீது மோதிய விபத்தில் அர்ஷத் முஹம்மத்(32) மற்றும் வேனின் டிரைவர் ராபர்ட் வெலாஸ்க்கோ(36) இருவரும் உயிரிழந்தனர்.

    அர்ஷத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பயின்றுவந்த மருத்துவக் கல்லூரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  #Indiandentist #USroadaccident #ArshadMohammed #dentistArshadMohammed
    ×