search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    இந்தியாவில் மேலும் 6 அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #NuclearPowerPlants #VijayGokhale
    வாஷிங்டன்:

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத்துறையின் கீழ்நிலைச்செயலாளர் ஆண்ட்ரியா தாம்ப்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

    அதைத் தொடர்ந்து இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    இந்த அறிக்கையில், இந்தியாவில் 6 அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், “இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை பலப்படுத்தவும் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி தெரிவித்துள்ளன” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விஜய் கோகலே

    அதே நேரத்தில் இந்தியாவில் அந்த 6 அணு மின்நிலையங்கள் எங்கே, எப்போது அமைக்கப்படும் என்பது பற்றிய கூடுதலான எந்த தகவலும் அறிக்கையில் இடம் பெறவில்லை.

    இந்தியாவில் தற்போது சென்னை கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களில் அணு மின்நிலையங்கள் உள்ளன. இவற்றுடன் அமெரிக்காவின் 6 புதிய அணுமின்நிலையங்களும் சேரும்.

    இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த 2008-ம் ஆண்டு, சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா 12 நாடுகளுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.

    அந்த ஒப்பந்தத்தை அடுத்துத்தான் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, கனடா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம், கஜகஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தங்களை செய்தது.

    அமெரிக்க ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத்துறை கீழ்நிலைச் செயலாளர் ஆண்ட்ரியா தாம்ப்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே சந்திப்பின்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறுவதற்கு தனது ஆதரவை அமெரிக்கா மறு உறுதி செய்துள்ளது.#NuclearPowerPlants #VijayGokhale
    எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து, அழுத்தம் அதிகரித்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை தரையிறக்க அமெரிக்காவும் உத்தரவிட்டுள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    வாஷிங்டன்:

    எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
     
    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது.

    ஆனால், உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதற்கட்ட ஆய்வில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும், விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்தரமும் இல்லை என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தது.

    ஆனால், பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சந்தேகங்களும், அச்சமும் விமான நிறுவனங்களிடம் எழுந்தது. எனவே கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போயிங்737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவையும் அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

    அமெரிக்காவில் மொத்தம் 74 ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    தொடர் விமான விபத்து காரணமாக இந்தோனேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    சிகாகோ:

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனம் தயாரித்த ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 189 பேரும் பலியாகினர்.

    இதே ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததை தொடர்ந்து சீனா மற்றும் எத்தியோப்பியா உடனடியாக அந்த ரக விமானங்களை இயக்க தடை விதித்தது.

    அதனை தொடர்ந்து சிங்கப்பூர், நியூசிலாந்து, நார்வே, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மேலும் பல நாடுகளும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடைவிதித்துள்ளன.

    இந்த நிலையில், இந்தோனேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகர கோர்ட்டில் 35 வழக்குகளும், சியாட் நகர கோர்ட்டில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என அமெரிக்க விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    வாஷிங்டன்:

    எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
     
    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது. 



    ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது.

    ஆனால், இதுவரை நடத்திய ஆய்வில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும், விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்தரமும் இல்லை என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து கழக தலைவர் டேனியல் எல்வெல் கூறியுள்ளார்.

    பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மற்ற விமான போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இருந்தும் இதுவரை தகவல் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் மொத்தம் 74 ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
     
    இந்தியாவுடனான பதட்டத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது. #Militantsattack

    வாஷிங்டன்:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டத்தை தணிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷியையும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலேயையும் அழைத்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் பேசினார்.

    அப்போது பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கடுமையான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்தியாவுடனான பதட்டத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரிடம் குரேஷி உறுதி அளித்தார். இந்த தகவலை ஜான் பால்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பி யோவுடன் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய்கோகலே சந்தித்தார். அப்போது புல்வாமா தாக்குதல் குறித்தும், பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். #Militantsattack

    உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அடைந்தார். சைக்கிள் பந்தய சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #CyclistKellyCatlin
    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின்(வயது 23). இவர் 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவர்.

    இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டார்.

    சைக்கிள் பந்தயத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வந்த கேட்லினுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் சோதனையாக அமைந்தது. லேசான மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாத இறுதியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். இதனால் அவரது நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் பந்தயத்தில் இருந்து விலகினார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் வியாழக்கிழமை மரணம் அடைந்துள்ளார். இத்தகவலை அவரது சகோதரர் கொலின் வெளியிட்டுள்ளார்.

    கெல்லி கேட்லின் மரணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க சைக்கிள் சங்கம் உறுதி செய்தது. கெல்லி கேட்லின் மறைவுக்கு அமெரிக்க சைக்கிள் பந்தய சங்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். #CyclistKellyCatlin
    இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. #JammuKashmir #USCitizen
    வாஷிங்டன்:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு தலைவர் ஸ்டீவ் ஹெர்மன் கூறியதாவது:-

    பயங்கரவாதமும், பதற்றமும் நிலவுவதால், காஷ்மீருக்கு செல்ல வேண்டாம். பயங்கரவாதிகள் எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல் சுற்றுலா தலங்கள், பஸ், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கக்கூடும். ஆயுத மோதல் நடக்க வாய்ப்பு இருப்பதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் எங்கும் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.  #JammuKashmir #USCitizen 
    சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளதாகவும், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன் என டிரம்ப் கூறினார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் கூடுதல் வரி விதித்து பதிலடி தந்தது.

    ஆனாலும், அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இரு தரப்பு வர்த்தகப் போரை நிறுத்தி வைக்கவும், ஜனவரி 1-ந்தேதி முதல் 90 நாட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கு, அமெரிக்கா மற்றும் சீன வர்த்தக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக வாஷிங்டனில் நேற்று முன்தினம் டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன். ஆனால், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன்” என திட்டவட்டமாக கூறினார்.

    சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.
    பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு அதிரடியாக கொன்றது. நம்மாலும் இதைப்போன்று செய்ய முடியாதா என்றால் முடியும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #BinLaden #Pakistan
    புதுடெல்லி:

    புலவாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் சென்று பதிலடி தந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் இயக்க நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கையை நினைவு கூர்ந்தார்.

    அப்போது அவர், “பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு அதிரடியாக கொன்றது. நம்மாலும் இதைப்போன்று செய்ய முடியாதா என்றால் முடியும். இதுவரை நினைத்து பார்த்திராத வகையில், இந்தியா எதையும் செய்ய முடியும் என்பதை விமானப்படை தாக்குதல் நிரூபித்துக்காட்டி உள்ளது” என குறிப்பிட்டார்.

    இதே கருத்தை ராம் மாதவ் போன்ற பாரதீய ஜனதா தலைவர்களும் ஆமோதித்தனர்.
    அமெரிக்காவின் கடும் பனிப்பொழிவில் சிக்கிய ரெயில் ஒன்று, 2 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. #Americasnowfall #Trainstuckinsnow
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் சியாட்டில்- லாஸ் ஏஞ்சல்ஸ் வழித்தடத்தில் பயணிகள் ரெயில் கடந்த ஞாயிறு அன்று  சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பனிப்பொழிவு மிக அதிகமாக காணப்பட்டது. ரெயில் பாதையில் மரக்கிளைகள் விழுந்து கிடந்துள்ளன. இதனையடுத்து ரெயில் சட்டென நின்றது. இதில் ரெயிலின் எஞ்சின் முற்றிலும் பழுதானது.

    பயணிகள் அனைவரும் ரெயில் திடீரென நின்றதை  உணர்ந்து பதற்றம் அடைந்தனர். ரெயில்வே துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சிக்கிய ரெயில் எஞ்சின், ரெயில்வே ஊழியர்களால் அன்று இரவு பழுது பார்க்கப்பட்டது. ரெயிலை உடனடியாக இயக்க முடியவில்லை.



    இருப்பினும் ஊழியர்கள் விடாது 36 மணி நேரம் நிதானத்துடனும், மிகுந்த கடமை உணர்வுடனும்  போராடி எஞ்சின் கோளாறை சரி செய்தனர்.  இதன் மூலம் ரெயில் நேற்று காலை மீண்டும் இயங்க துவங்கியது.

    ரெயில் தண்டவாளத்தை விட்டு நகர முடியாமல் நின்றபோது, தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டதால் ரெயிலில் பயணம் செய்த 182 பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வினை பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  #Americasnowfall  #Trainstuckinsnow 
    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அந்நாட்டிற்கு வலியுறுத்தி உள்ளது. #AmericaAdjoursPakistan #PulwamaAttack
    வாஷிங்டன்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று  இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

    இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நேற்று நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடன் பேசினேன். அப்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தேன்.

    இதேபோல் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி குரேஷியிடம் பேசினேன். அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து  பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.



    இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்துவிட்டு, நேரடியாக கலந்துரையாடி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும் என இரு நாடுகளின் மந்திரிகளிடமும் வலியுறுத்தி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #AmericaAdjoursPakistan #PulwamaAttack

    அமெரிக்காவில் குற்றம் செய்யாமலே 39 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவருக்கு ரூ.150 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. #CraigColey
    கலிபோர்னியா:

    அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிரைக் கோலே (71). கடந்த 1978-ம் ஆண்டு தனது காதலி ரோன்டா விச்ட். அவரது 4 வயது மகன் டொனால்டு ஆகிய 2 பேரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் குற்றவாளி இல்லை என அவர் வாதிட்டார்.

    இருந்தும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பரோல் எதுவுமின்றி தண்டனை அனுபவித்தார். இந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு அவரை கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் கருணை அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டில் விடுதலை செய்தார்.

    அதன்பின்னர் அவர்தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வாதாடினார். அதில் அவர் குற்றமற்றவர் என்றும், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.150 கோடி (21 மில்லியன் டாலர்) இழப்பீடு வழங்க நஷ்டஈடு வாரியம் உத்தரவிட்டது. எனவே அவருக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. #CraigColey   
    ×