search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். #UStownpopulationofone
    வாஷிங்டன்:

    உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும் குடியேறியுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரம் உள்ளது. இப்பகுதியில் எல்சி எய்லர்(84) எனும் மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இது குறித்து எல்சி எய்லர் கூறியதாவது:-

    இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். எனது பெற்றோர் இந்த நகரத்தை தாண்டி உள்ள விவசாய நிலப்பகுதியில் பணிகளை மேற்கொள்ள சென்றனர். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இருவரும் நான் இங்கு இருப்பதையே விரும்புகிறேன் என்பதை உணர்ந்தனர். மேலும் 1971 முதல் காபி, டீ போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த கடையை திறந்த போது , இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகை கடையும் மூடப்பட்டது. இந்தப்பகுதியில் உள்ள சாலையின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், தற்போது வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர்.

    மேலும் இப்பகுதி இயற்கையுடன் கூடிய அமைதியுடன் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் இது தற்போது ஹப் போலாகி விட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    இதுமட்டுமின்றி கூடுதல் பொறுப்பாக எந்தவித போட்டியுமின்றி இந்த பகுதியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு 84 வயதாகிறது. இந்நிலையில் என்னை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். தனிமையில் இருந்தாலும், நான் எவ்வித மன வருத்தமும் இன்றி இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என கூறினார்.  

    இவ்வாறு அவர் கூறினார். #UStownpopulationofone  

    மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாயகம் திரும்பினார். #ArunJaitley #ArunJaitleyreturns
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால் கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனயில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

    அப்போது ரெயில்வேத்துறை மந்திரி பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின்னர், உடல்நிலை சீரானதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதி மந்திரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

    கடந்த மாதம் 15-ம் தேதி மருத்துவ மேல்சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார். அவர் எப்போது இந்தியா திரும்புவார்? என்பது பற்றிய விபரம் வெளியிடப்படாத நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை அவருக்கு பதிலாக இடைக்கால நிதி மந்திரி புயுஷ் கோயல் சமீபத்தில் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், அருண் ஜெட்லி இன்று விமானம் மூலம் டெல்லி திரும்பினார். இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். #ArunJaitley #ArunJaitleyreturns 
    அமெரிக்காவில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். #JohnDingellDies #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் டிங்கெல். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் 1955ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து 59 ஆண்டுகள் எம்பியாக பணியாற்றினார். குறிப்பிடத்தக்க  சுகாதார திட்டங்கள் மற்றும் பல முக்கிய தாராளவாத சட்டங்கள் கொண்டு வருவதற்கு உந்துசக்தியாக இருந்தார்.

    2015ம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகும், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.



    இந்நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் டிங்கெல் (வயது 92), நேற்று முன்தினம் காலமானார். மிச்சிகனின் டியர்பார்ன் நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

    அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசுத்துறை கட்டிடங்கள், ராணுவ கட்டிடங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

    ஜான் டிங்கெல் அரசியலில் இருந்து ஓய்வு  பெற்ற பிறகு, அவரது மனைவி டெப்பி டிங்கெல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் டிங்கெல் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், சமீபத்தில் பாராளுமன்ற கூட்டு அமர்வில் டிரம்ப் உரையாற்றியபோது, டெப்பி டிங்கெல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #JohnDingellDies #Trump
    அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றியபோது, அவரை கேலி செய்யும் வகையில் பெண் சபாநாயகர் கை தட்டும் வீடியோ உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #DonaldTrump

    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று பேசினார். அப்போது அமெரிக்காவில் கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும். இங்கு நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் யாரிடமும் வெறுப்பு அரசியலை கடைபிடிக்க கூடாது. வெறுப்பு அரசியல் தவறானது என்று கூறினார்.

    இதைக் கேட்டதும் பெண் சபாநாயகர் நான்சி பெலோச்சி ஆச்சரியம் அடைந்தார். இவர் எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். இவர் டிரம்பின் பேச்சை கேட்டு கையை டிரம்பின் முகத்திற்கு பக்கத்தில் வைத்து கை தட்டினார்.

    டிரம்பை கிண்டல் செய்யும் விதமாக அவர் கை தட்டியது சமூக வலை தளங்களில் வைரலாகியது. டிரம்பை கோபத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர் கைதட்டினார் என கூறப்படுகிறது. இந்த வீடியோ உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    ஆசிய நாடுகளில் ஒரு அதிபருக்கோ, பிரதமருக்கோ எதிராக பேசினால் கடுமை யான நடவடிக்கை எடுக் கப்படும்.

    ஆனால் அமெரிக்காவில் அப்படி கிடையாது. அதிபர் டிரம்பை தரக்குறைவாக கார்ட்டூன் போல வரைந்து செய்திகள் வெளியிட்டாலும் நடவடிக்கை எதுவும் எடுப்ப தில்லை.

    அவர் டூவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்களை பிரிண்ட் செய்த செருப்பு கூட சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் உலக மக்களை கவர்ந்துள்ளது.

    இதே கூட்டத்தில் டிரம்ப் உரையை கேட்க வந்து பள்ளி சிறுவன் ஜோஷ்வா டிரம்ப் (11) தூங்கிய போட்டோக்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. #DonaldTrump

    விசா முறைகேட்டால் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 30 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘எப் 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி ‘எப் 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு. அந்த வகையில் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

    ஆனால் இந்த பார்மிங்டன் பல்கலைக்கழகம், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல்களையும் கண்டறிவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகசிய நடவடிக்கை குறித்து அறியாமல், இந்தியர்கள் 8 பேர், வெளிநாட்டு மாணவர்கள் 600 பேரை அமெரிக்காவிலேயே தங்கவைப்பதற்காக பார்மிங்டன் பல்கலைக்கழகத்தை அணுகினர்.

    இதையடுத்து, அவர்கள் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். மற்ற 129 பேரும் இந்தியர்கள் ஆவார்கள்.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய மாணவர்கள் 129 பேரையும் உடனடியாக விடுவிக்கும்படி கோரிக்கை விடுவித்தனர். இதற்கிடையே இந்த விசா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களும், தெரிந்தே தவறு செய்ததாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால், மாணவர்கள் தரப்பில் வாதாடும் வக்கீல்களோ, போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் மாணவர்கள் சேர்ந்துவிட்டதாகவும், தவறுகளை கண்டறிவது என்ற பெயரில் அதிகாரிகள் மோசமான ஒரு முறையை பின்பற்றியிருப்பதாகவும் கூறி வந்தனர்.

    இந்நிலையில் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த  30 மாணவர்கள் எவ்வித நடவடிக்கையும் இன்றி அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy

    அமெரிக்காவில் வீட்டில் வளர்ந்த பூனை, பனிப்பொழிவினால் முழுவதும் உறைந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. #USSnowstorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.

    குளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், பனிப்பொழிவின் தாக்கத்தால் உறைந்துபோன பூனை, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஃபிளஃபி எனும் பெயருடைய பெண் பூனை ஒன்று வளர்ந்து வந்துள்ளது. இது கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. இதனை அந்த வீட்டார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

    பின்னர், அந்த பூனை வீட்டின் அருகில் இருந்த சாலையின் ஓரம் பனியினால் முழுவதுமாக மூடப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு பூனையின் உடலில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு, உடல் உஷ்ணத்தை அதிகரித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் பூனையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    பொதுவாக பூனையின் சாதாரண உடல் வெப்பநிலை 101 டிகிரி ஆகும். ஆனால் இந்த பூனை -90 டிகிரி அளவிலான வெப்பநிலையில் உயிருடன் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. #USSnowstorm
    அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். #ECigarette #Exploded
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பிரவுன் (வயது 24). இவர் போர்ட் வொர்த் நகரில் உள்ள எலக்ட்ரானிக் சிகரெட் கடைக்கு சென்றார். அங்கு எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கிய அவர் கடைக்கு வெளியே தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியது. இதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கடை உரிமையாளர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

    மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.

    அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து நிகழ்ந்த 2 மரணம் இதுவாகும். கடந்த ஆண்டு மே மாதம் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 38 வயது ஆண் ஒருவர் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து பலியானது குறிப்பிடத்தக்கது. 
    அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கிக்கொண்டதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். #HouseFire #Dog #ManDies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தார். அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

    இதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்ட சாம் கிராபோர்ட், தனது பாசத்துக்குரிய நாய் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போனார்.

    உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை. நாயின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
    வெளிநாடுகளில் இருந்து பணியாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு வரும் மக்களை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர்கள் சட்டரீதியான அனுமதியை பெற வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டார். #Trumppraises #legalimmigrants
    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்ற மரபுகளின்படி ஆண்டின் ஆரம்பத்தில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர்கள் பேசுவது வழக்கம். ஆனால், மெக்சிகோ எல்லைப்பகுதியில் மதில் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்க எம்.பி.க்கள் அனுமதி அளிக்காததால் இந்த ஆண்டின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற மாட்டேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பிடிவாதம் செய்தார்.

    தற்போது இவ்விவகாரத்தில் சற்று சமரசம் ஏற்பட்டு சுமுகநிலை திரும்பியுள்ளதால் பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்று உரையாற்றினார்.



    உள்நாட்டு பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, வர்த்தக முதலீடு, வெளிநாடுகளுடனான நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி தனது உரையினிடையே குறிப்பிட்ட அவர், அமெரிக்காவில் குடியேறுவதற்காக வெளிநாடுகளில் இருந்துவரும் மக்களைப் பற்றியும் பேசினார்.

    ‘நமது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாத ஒரு குடியுரிமைத்துறை கொள்கையை நாம் வகுத்தாக வேண்டும். வெளிநாடுகளில் இருந்து முறையான அனுமதியுடன் இங்குவந்து வேலை செய்து, வாழ்ந்து கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கானவர்களையும் சேர்த்துத்தான் நான் நமது நாட்டு மக்கள் என்று குறிப்பிடுகிறேன்.

    சட்டப்பூர்வமாக இங்கு வந்து குடியேறி வாழ்பவர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பல்வேறு வகைகளில் உதவிகரமாக இருந்து வருகின்றனர். நம் நாட்டுக்கு மேலும் மக்கள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அவர்கள் சட்டப்பூர்வமான அனுமதியுடன்தான் அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்’ என டிரம்ப் தெரிவித்தார். #Trumppraises #legalimmigrants 
    பிரியங்கா காந்தி அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார். நாளை மறுநாள் நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கிறார். #PriyankaGandhi #Congress
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு மிகவும் முக்கிய பங்களிப்பாக உள்ளன.

    ஆனால் அந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து பரிதவித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அந்த மாநிலத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது.

    இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல்களிலும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அமையவில்லை. இதனால் அந்த கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விகுறிகள் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக அவர் தனது சகோதரி பிரியங்கா உதவியை நாடி உள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு பிரியங்காவை அவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக அறிவித்தார்.

    பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் கிழக்கு மண்டலத்தில் உள்ள 40 தொகுதிகளின் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3-வது, 4-வது இடங்களில்தான் வந்தது. எனவே இந்த 40 தொகுதிகளும் பிரியங்காவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பிரியங்கா காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டபோது குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்று இருந்தார். கடந்த 2 வாரமாக அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பிரியங்கா டெல்லி திரும்பினார். உடனடியாக அவர் சோனியாவையும், ராகுலையும் சந்தித்து பேசினார். இன்று அவர் தனது உறவினர்கள் வீட்டுக்கு சென்று வந்தார்.

    நாளை முதல் பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட தொடங்குவார் என்று தெரிய வந்தது. அவரது பிரசார பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த பிரியங்கா அதிரடியில் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் முக்கிய கொள்கை முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் முதல் முறையாக பிரியங்காவும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரியங்கா பங்கேற்கும் முதல் கட்சி நிர்வாக கூட்டம் என்பதால் வியாழக்கிழமை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. கூட்டத்தில் பிரியங்கா தனது புதிய கருத்துக்களை வெளியிடுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    பிரியங்கா வழிகாட்டுதலின் பேரில் புதிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பிரியங்கா தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரபிரதேச மாநில கிழக்கு மண்டல பொறுப்பாளர் பதவியை இந்த வாரமே ஏற்க உள்ளார். அதற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதன் பிறகு அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பேச உள்ளார்.

    வருகிற 9-ந்தேதி காங்கிரஸ் மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் பிரியங்கா பங்கேற்பார் என்று தெரிகிறது. தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பிரியங்கா பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.

    பிரியங்காவுக்கு மிக முக்கியமான வேலை ஒதுக்கி கொடுத்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதன்படி பிரியங்கா புதுவிதமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதா தலைவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்காவின் பிரசாரம் இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்துவது தொடர்பாக இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது. அப்போது காங்கிரசுக்கு பிரியங்கா செய்ய வேண்டிய பணிகள் பற்றிய பொறுப்புகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

    ராகுல் தனியாக நின்று பிரசாரம் செய்ய முடியாமல் நெருக்கடியில் தவித்து வருகிறார். அவரது நெருக்கடியை தீர்க்கும் வகையில் பிரியங்காவின் பணிகள் அமையும் என்று கருதப்படுகிறது.

    குறிப்பாக கூட்டணி அமைக்கும் வி‌ஷயங்களில் பிரியங்காவின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் காங்கிரசை தவிர்த்து விட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர்.

    அந்த கூட்டணியில் காங்கிரசையும் இணைக்க பிரியங்கா இப்போதே முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இரு கட்சிகளையும் காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால் நாடு தழுவிய மெகா கூட்டணிக்கு அடித்தளம் அமைத்து விடலாம் என்று பிரியங்கா கூறி வருகிறார். எனவே அவர் விரைவில் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    பிரியங்கா இத்தகைய பணிகளில் இறங்குவார் என்பதால்தான் அவரை காங்கிரசின் பிரம்மாஸ்திரம் என்று சொல்கிறார்கள். ஆனால் உத்தரபிரதேசத்தில் எடுத்த உடன் அவருக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் காங்கிரசாருக்கே சந்தேகம் எழுந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் 1989-ம் ஆண்டுடன் காங்கிரஸ் ஆதிக்கம் முடிந்து போனது. பிரியங்கா பிரம்மாஸ்திரத்தை வீசுவதை பொறுத்தே உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு எத்தகைய வெற்றி கிடைக்கும் என்பது தெரிய வரும். #PriyankaGandhi #Congress
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #Aircraftcrashes #Aircraftcrashesintohouse
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆரஞ்சு கவுண்டியில் இருக்கும் புல்லர்டென் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார்.



    யோப்ர லிண்டா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் விமானி மற்றும் வீட்டில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியதோடு, அவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் கேண்டிஸ் பெய்ன். #Chicago #CandicePayne #HomelessPeople
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீடுகள் இல்லாமல் பொதுஇடங்களில் வசித்து வரும் மக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. கடும் குளிர்காற்றை தாங்கிக்கொண்டு பனித்துகள்களின் மீது படுத்து உறங்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.



    இந்த நிலையில் சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியதோடு, அவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் ஒரு பெண். கேண்டிஸ் பெய்ன் என்கிற அந்த பெண் அங்குள்ள ஒரு ஓட்டலில் ஒரு அறைக்கு, ஒருநாள் 70 டாலர் வீதம் கட்டணமாக கொடுத்து 30 அறைகளை எடுத்து வீடு இல்லாதவர்களை தங்கவைத்துள்ளார்.

    அவர் இந்த திட்டம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததும் அவருக்கு அனைத்து வகையிலும் உதவ தன்னார்வலர்கள் குவிந்தனர். அத்துடன் அவரது வங்கி கணக்கில் பணத்தையும் கொட்டி வருகிறார்கள்.   #Chicago #CandicePayne #HomelessPeople
    ×