search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    சீனாவில் 1994-ம் ஆண்டு தவறவிட்ட தன் மகனை நாடு முழுவதும் தேடி அலைந்த தந்தை, 24 வருடங்களுக்கு பிறகு டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டு பிடித்துள்ளார்.
    பீஜிங்:

    சீனாவைச் சேர்ந்த லி சன்ஜி என்பவர் 1994-ம் ஆண்டு தனது 3 வயது மகனை தவறவிட்டார். இதனையடுத்து தனது தொழிலை கைவிட்டுவிட்டு, நாடு முழுவதும் பயணித்த லி சன்ஜி, சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் காணவில்லை போஸ்டர்களை உபயோகித்தபடி, தன் மகனை தேடி அலைந்துள்ளார்.

    24 வருடங்களாக தனது முயற்சியில் தளராத அந்த தந்தை, தற்போது தனது 27 வயதான மகன் லி லேவை கண்டறிந்துள்ளார். இறுதியில் டி.என்.ஏ பரிசோதனை மூலம் லி சன்ஜியின் மகன் என உறுதியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பான விசாரணையில், 3 வயதில் லி லே தனியாக இருந்தபோது அவனை கண்ட தம்பதியினர் அவனது பெற்றோரை தேடி அலைந்ததாகவும், பெற்றோர் கிடைக்காததால், லி லேவை அவர்களுடன் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 வயதில் தவறவிட்ட தனது மகனை, தொழில் உட்பட அனைத்தையும் இழந்துவிட்டு, தேடி அலைந்து 24 வருடங்களுக்கு பிறகு கண்டறிந்த தந்தையின் பாசம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. #trumpkimsummit
    பீஜிங்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ம் தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என நம்புவதாகவும், இதற்காக ஆவலாக காத்திருப்பதாகவும் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumpkimsummit
    பொதுவெளிகளில் பெரிய அளவிலான மத சம்பந்தப்பட்ட சிலைகள் அமைப்பதை கட்டுப்படுத்துமாறு மாகாண அரசுகளுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. #Chinaorders #crackdownreligiousstatues
    பீஜிங்:

    சீனாவில் பிரசித்தி பெற்ற புத்த மதம் இந்தியாவை தாயகமாக கொண்டதாகும். அதே போல், தாவோயிசம் சீனாவை பூர்வீகமாக கொண்ட மதம் ஆகும். சீனாவில் மிகப்பெரிய மதமாக திகழும் புத்த மதத்தை தோற்றுவித்தவரான புத்தரின் சிலைகள் நாடு முழுவதும் மிகப்பெரிய எண்ணிக்கையில் காணப்படும்.

    சீனாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தேசிய அளவிலான 7 மத குழுக்கள் உட்பட 1 லட்சத்து 44 ஆயிரம் மத ரீதியான சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவில் 33 ஆயிரத்து 500 புத்த கோவில்களும், 9 ஆயிரம் தாவோயிசம் கோவில்களும் உள்ளன.

    சீனாவின் தற்போதைய பிரதமரான ஜின்பிங் பதவியேற்றபின், சீனாவின் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். நாத்திக அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில், சீனாவில் பொதுவெளிகளில் மத சம்பந்தப்பட்ட சிலைகள் அமைப்பதற்கு சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து பிரபல நாளிதழில் பேசிய மின்சு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சியாங் குன்சின், மத சிலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் மூலம் அரசு மதத்துக்கு எதிரானது அல்ல, மத ரீதியான வணிகமயமாக்கலை கட்டுப்படுத்தவே இந்த வழிமுறை கையாளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், வணிகமயமாக்கலின் மூலம் மதத்தின் புனிதம் கெடுவதோடு, சமூகத்தின் சமநிலை பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். #Chinaorders #crackdownreligiousstatues
    பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணியை, சீனா அணி 5-0 என வீழ்த்தியது. #UberCup #INDvCHN

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 5-0 என வென்றது.

    இந்நிலையில் நேற்றைய 3-வது ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-0 என சீனாவிடம் தோல்வியடைந்தது. முதலில் எச்.எஸ்.பிரனோய், லாங் சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-9, 21-9 என்ற நேர் செட்களில் சீன வீரர் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஒற்றையர் பிரிவில் சாய் பிரனீத் - யூகி ஷி ஆகியோர் மோதினர். இதில் யூகி ஷி, 21-9, 15-21, 21-12 என்ற செட்களில் வென்றார். 

    கடைசி ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷியா சென், ஆஸ்திரேலியாவின் டான் லெனிடம், 21-16, 9-21, 8-21 என தோல்வியடைந்தார். இதனால் சீனா 3-0 என போட்டியை கைப்பற்றியது.

    இரட்டையர் பிரிவு போட்டிகளிலும் சீன வீரர்களே வெற்றி பெற்றனர். இதனால் இந்தியா 5-0 என சீனாவிடம் தோல்வியடைந்தது.  இதனால் இந்தியா தொடரை விட்டு வெளியேறியது. #UberCup #INDvCHN
    தென் சீனக்கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சோதனை செய்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிலிப்பைன்சிஸ் தெரிவித்துள்ளது.
    மணிலா:

    சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

    அதே சமயம் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக உரிமை கோரும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘எச்-6கே’ ரக குண்டு வீச்சு விமானம் உள்பட பல்வேறு போர் விமானங்களை தென் சீனக்கடல் பகுதியில் தரை இறக்கி சோதனையில் ஈடுபட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ள பிலிப்பைன்ஸ், இதற்காக சீனா மீது தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது. பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்சின் நிலைப்பட்டை உறுதி செய்யும் விதமாக சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், நாட்டின் இறையாண்மைக்கு சொந்தமான பிரதேசங்கள் மற்றும் பகுதிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பிலிப்பைன்ஸ் பாதுகாக்கும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமான இடத்தில் தங்கச் சுரங்கம் தோண்ட எங்களுக்கு முழு உரிமை உள்ளது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் தெரிவித்துள்ளார். #China #GoldMine
    பீஜிங்:

    இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.



    இந்தநிலையில் அருணாசலபிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு(சுமார் ரூ.4 லட்சம் கோடி) தங்கம், வெள்ளி மற்றும் இதர விலையுயர்ந்த உலோக தாதுக்கள் பூமிக்குள் இருப்பதாக ஹாங்காங்கில் வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் அண்மையில் தகவல் வெளியிட்டது.

    இந்திய எல்லைப் பகுதி அருகே பெரும் அளவில் சுரங்கம் தோண்டு பணிகளில் சீனா ஈடுபட்டு வருவது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் எல்லைப் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில், “சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது” என்றார்.  #China #GoldMine
    அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. #India #China #GoldMine
    பீஜிங்:

    இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.

    இதுதொடர்பாக அத்துமீறி இந்தியா மீது சீன படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அருணாசலபிரதேச எல்லையில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரை சந்தித்து பேசியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி உள்ளது.

    இந்த சுரங்கத்தில் தங்கம் தவிர வெள்ளி மற்றும் பல விலைமதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று சீன பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் பணிக்காக அங்கு சாலை வசதிகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    ஏற்கனவே இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டுவது பிரச்சினையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. 
    சீனாவில் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டப்பட்ட இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது சோதனை ஓட்டத்தை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. #China #Aircraft
    பீஜிங்:

    சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இதையடுத்து, இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டி உள்ளது.

    இந்த கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது.

    இந்நிலையில், சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது ஐந்து நாள் கடல் சோதனை ஓட்டத்தை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

    கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #China #Aircraft
    அணு ஆயுத சோதனைகளை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.
    பீஜிங்:

    சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதன் மூலம் வடகொரியா அமைதியை விரும்புவதாக தெரிவித்தார்.



    அதற்கு இதர நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #koreanpeninsula #opportunityforpeace #wangyi
    பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது. #IndianWomensHockey #AsianChampionsTrophy
    டோங்கா சிட்டி:

    தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இருந்தது.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.#IndianWomensHockey #AsianChampionsTrophy
    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்த சீனாவைச் சேர்ந்த சியா போயு என்ற 70 வயது முதியவர் தற்போது அதே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
    காத்மாண்டு:

    சீனாவைச் சேர்ந்த சியா போயு மலையேறும் வீரராவார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்தார்.

    இந்நிலையில், 70 வயதான சியா போயு தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். இதன் மூலம் 2 கால்கள் இல்லாமல் உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை சியா போயு பெற்றுள்ளதாக நேபாளத்தின் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


    உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சியா போயுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. #mounteverest #Xiaboyu
    ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இன்று சீனா நாட்டுக்கு சென்றடைந்தார். #IranNuclearDeal #IranFM #ChinaVisit

    பீஜிங்: 

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. 

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும். 

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன. எனவே பொருளாதார நெருக்கடிகளை சரிசெய்யும் முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து சீனாவுடன் ஆலோசனை செய்ய ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மொகமது ஜாவித் சாரிப் இன்று சீனா சென்றார். அதைத்தொடர்ந்து சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். 



    அங்கு சென்றடைந்த அவர் பேசுகையில், ஈரான் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து விவாதிப்போம். ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னரும், பின்னும் சீனாவுடன் நட்புறவில் இருந்து வருகிறோம். சீனாதான் ஈரானின் முதன்மை பொருளாதார பங்குதாரர். சீனா இப்போழுதும் எங்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறது, என அவர் கூறினார். #IranNuclearDeal #IranFM #ChinaVisit
    ×