search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    சீனாவில் பாலின சமநிலையின்மை காரணமாக மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வியட்நாமில் இருந்து சிறுமிகள் கடத்தி வரப்பட்டு திருமணத்திற்காக விற்கப்படுகின்றனர்.
    பெய்ஜிங்:

    சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக சீன அரசு கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

    இதற்கு பலன் கிடைத்தது. மக்கள்தொகை குறையாவிட்டாலும் கடந்த சில வருடங்களாக பிறப்பு விகிதம் சீராக இருப்பதால் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. ஆனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

    பெண்கள் பிறப்பு விகிதம் குறைந்து ஆண்கள் பிறப்பு அதிகரித்துள்ளது. பாலின விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 110 ஆண்கள், 120 ஆண்கள் என்று இருக்கிறது. இதனால் இளம் பெண்கள் பற்றாக்குறையில் சீனா தத்தளிக்கிறது. 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இவர்களுக்கு சீனாவில் மணப்பெண்கள் கிடையாது. இதனால் இளைஞர்கள் பலர் வயது அதிகரித்து முதுமை அடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் பெண் சிசுக்கொலை தான் என்று தெரிய வந்துள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த அரசு சிசுக்கொலையை கண்டு கொள்ளாமல் ஆதரித்தது.

    மேலும் சீனப்பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு, திருமணத்தை தள்ளி போடுதல் போன்றவையும் ஒரு காரணம்.

    சீனாவில் மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இதனை கவனித்த ஆட்கடத்தல் கும்பல், பிரச்சினையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள வியட்நாமில் இருந்து சிறுமிகளையும், இளம்பெண்களையும் ஆசைவார்த்தை கூறி கடத்தி வந்து, சீனாவில் மணப்பெண்களாக நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.

    கம்போடியா, மியான்மர், லாவோ, நாடுகளில் இருந்தும் இளம்பெண்கள் சீனாவுக்கு கடத்தப்படுகிறார்கள். வியட்நாம்- சீன எல்லையில் பெண்கள் கடத்தல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இது சீன அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #ChinaMaleFemaleRatio #VietnameseGirlsTrafficked
    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றார். #NorthKorea #KimJongUn #China
    பீஜிங்:

    வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய கூட்டாளியாக சீனா மட்டுமே விளங்கி வருகிறது. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனா வழங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு சென்றார். ரெயில் மார்க்கமாக ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பயணத்துக்கு பின்னர் தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கிம் ஜாங் அன் 2 முறை சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார்.

    இந்த நிலையில் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எந்த நேரத்திலும் சந்திக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி 2-வது உச்சி மாநாட்டுக்கான தேதி மற்றும் இடம் குறித்து இருநாட்டு அதிகாரிகளிடையே தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக நேற்று சீனா சென்றார். சீன அதிபர் ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக அவர் சீனா சென்றிருப்பதாக வடகொரிய அரசு ஊடகமான கே.என்.சி.ஏ. தெரிவித்துள்ளது.

    கிம் ஜாங் அன் தனது மனைவி ரீ சோல்-ஜூ, அவரது வலதுகரமாக விளங்கும் யோங்-ஜோல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ரெயிலில் சீனாவுக்கு புறப்பட்டார். அந்த ரெயில் நேற்று சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்தது.

    இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாகவும், ரெயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    3 நாட்கள் சீனாவில் தங்கி இருக்கும் கிம் ஜாங் அன், அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

    கிம் ஜாங் அன்னின் திடீர் சீன பயணம் டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

    வர்த்தக பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பிரதிநிதிகள் சீனாவில் முகாமிட்டு இருக்கும் நிலையில், கிம் ஜாங் அன் அங்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  #NorthKorea #KimJongUn #China 
    சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. #China #US
    பீஜிங்:

    உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டில் வர்த்தகப்போர் மூண்டது.

    கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இரு தரப்பு வர்த்தக போரை 2019 மார்ச்-1 வரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில், சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. இதற்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சீனாவுக்கு செல்கிறார்கள்.

    இரு நாட்டு துணை நிதி மந்திரிகளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.#China #US
    சீனாவில் 11 பெண்களை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. #DeathPenalty

    பெய்ஜிங்:

    சீனாவின் காங்சூ பகுதியை சேர்ந்தவர் கயோ செங் யாங் (54). இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தார். இவர் 11 பெண்களை கற்பழித்து கொலை செய்தார்.

    அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக சிதைத்தார். கொலை செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுமியும் அடங்குவார். இக்கொலை சம்பவங்கள் கடந்த 1988 முதல் 2002-ம் ஆண்டு வரை நடந்தது.

    சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்களை பின் தொடர்ந்து இப்படுகொலையை அவர் நிகழ்த்தினார். இவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. #DeathPenalty

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #Sichuan #EarthQuake
    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

    சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். டோங்கே என்கிற கிராமத்தில் நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்தன.

    அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை.  #Sichuan #EarthQuake 
    சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.#ChinaCoalmineAccident
    பெய்ஜிங்:

    சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டத்தில் உள்ள லோங்யான் பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்று 9 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

    இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். மண் குவியலில் சிக்கியுள்ள மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக சுரங்க உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #ChinaCoalmineAccident
    சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது என சீன அதிபர் ஜின்பிங் ஆவேசமாக கூறினார். #XiJinping #President #China
    பீஜிங்:

    உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினர் இடையே வர்த்தகப்போர் மூண்டது.

    இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். அதில் இரு தரப்பு வர்த்தகப்போரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உடன்பாடு எட்டப்பட்டது.

    ஜனவரி 1-ந் தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டன. இது 90 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் வர்த்தக பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளன.



    இந்த நிலையில், சீன சீர் திருத்த கொள்கையின் 40-வது ஆண்டு விழா பீஜிங் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடந்தது.

    இதில் அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு 80 நிமிடங்கள் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் தனது நாட்டின் கடின உழைப்பு, விவேகம், துணிச்சல் ஆகியவற்றை புகழ்ந்தார்.

    சீனாவின் முன்னாள் தலைவர் டெங் ஸியாவோபிங் 40 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்த சீர்திருத்தக்கொள்கைகளை அமல்படுத்திய பின்னர் நடத்தப்பட்டுள்ள சாதனைகளை பட்டியலிட்டார். அந்த வகையில், “கடந்த 40 ஆண்டுகளில் 74 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வந்த மக்களின் பட்டினி போன்ற பிரச்சினைகளுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது” என்றார்.

    அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடவும் அவர் தவறவில்லை. இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ சீன மக்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது” என கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “நாட்டின் பொருளாதார தாராளமயமாக்கம் தொடரும், தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும், அதே நேரத்தில் அரசு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும்” என கூறினார்.

    மேலும், “சோசலிசத்தின் (பொது உடைமை கோட்பாடு) மிகப்பெரிய பதாகை, எப்போதுமே சீன நிலப்பகுதிக்கு மேல் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும்” எனவும் சூளுரைத்தார். பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    அதே நேரத்தில் ஜின்பிங் பேச்சு சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது. குறிப்பாக மந்த நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தன்னிடம் என்ன திட்டம் உள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. #XiJinping #President #China 
    ஐபோன் விற்பனைக்கான தடையை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் சீன ஐபோன் மாடல்களுக்கு அப்டேட் வழங்க முடிவு செய்துள்ளது. #Apple



    சீனாவில் உள்ள ஐபோன்களுக்கு அப்டேட் வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவில் ஐபோன்களின் விற்பனைக்கு குவால்காம் நிறுவனம் தடைக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தது. இதைத் தொடர்ந்து சீன நீதிமன்றம் ஐபோன் விற்பனைக்கு தடை விதித்தது.

    அந்த வகையில் சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குகிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும் போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க ஒவ்வொருத்தரை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.



    பல கோடி டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு இருதரப்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருதரப்புக்கும் வெற்றி, தோல்விகள் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் குவால்காமின் சமீபத்திய வழக்கில் சீன நீதிமன்றம் தேர்வு செய்யப்பட்ட சில ஐபோன் மாடல்களின் விற்பனைக்கு தடை விதித்தது.

    எனினும், ஆப்பிள் தொடர்ந்து தனது ஐபோன் மாடல்களை சீனாவில் தொடர்ந்து விற்பனை செய்கிறது.

    “ஆப்பிள் நீதிமன்ற உத்தரவை மீறுகிறது. சட்ட ரீதியாக ஐபோன்களின் விற்பனையை நிறுத்த வேண்டும், விற்பனைக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கக் கூடாது, உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களை இறக்குமதி செய்யக் கூடாது,” என குவால்காம் நிறுவனத்தின் துணை தலைவர் டான் ரோசென்பர்க் தெரிவித்தார். 

    சீன நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து, ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் குவால்காம் நிறுவனம் ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்ட காப்புரிமைகளுக்கு உரிமை கொண்டாட முயற்சிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    சாம்சங் நிறுவனம் சீனாவில் இயங்கி வரும் தனது மொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது. #SAMSUNG



    சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சீனாவில் இயங்கி வரும் தனது மொபைல் போன் உற்பத்தி செய்யும் ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது. 

    சீனாவில் இயங்கி வரும் தியாஞ்சின் சாம்சங் எலக்டிரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் தயாரிப்பு ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக சாம்சங் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் வடக்கில் அமைந்திருக்கும் தியாஞ்சின் நகரத்தில் சாம்சங் மொபைல் தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது.

    இந்த ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் தியாஞ்சின் சாம்சங் தயாரிப்பு ஆலை மூடப்படுவதாக சாம்சங் அறிவித்துள்ளது. இந்த ஆலையில் பணியாற்றி வருவோருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படும்.



    மேலும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சாம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருவோருக்கு வேறு தயாரிப்பு ஆலைகளில் பணியமர்த்துவோம் என சாம்சங் தெரிவித்துள்ளது.

    இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சாம்சங் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், சீனாவின் ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் தொடர்ந்து இயங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

    சாம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் ஆண்டு முழுக்க 3.6 கோடி மொபைல் போன்களையும், ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் மொத்தம் 7.2 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்கிறது. இத்துடன் வியட்நாமில் உள்ள இரண்டு தயாரிப்பு ஆலைகளில் ஆண்டு முழுக்க 24 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. #SAMSUNG
    ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் பதிவு செய்த வழக்கில் அந்நிறுவனத்தின் சில ஐபோன்கள் சீனாவில் விற்பனை செய்யக் கூடாது என சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Apple #iPhone



    ஐபோன் மாடல்களில் குவால்காம் காப்புரிமைகளை அவற்றுக்கான கட்டணம் செலுத்தாமல் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியதாக குவால்காம் நிறுவனம் சீனாவில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்தின் சில ஐபோன் மாடல்களை விற்பனை செய்ய தடை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சீன நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன் மாடல்களை சீனாவில் தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

    குவால்காம் பதிவு செய்திருக்கும் வழக்கில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் 6எஸ் உள்ளிட்ட மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. குவால்காம் வழக்கு பதிவு செய்த பின் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவை வழக்கில் சேர்க்கப்படவில்லை.



    குவால்காம் வழக்கில் தொடர்புடைய ஐபோன்கள் சீனாவில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களில் 15% பங்குகளை கொண்டிருக்கிறது. ஆப்பிள் தனது ஐபோன்களில் பயன்படுத்தும் சில தொழில்நுட்பங்களை எவ்வித கட்டணங்களையும் செலுத்தாமல் பயன்படுத்தியிருப்பதாக குவால்காம் குற்றஞ்சாட்டி இருக்கிறது.

    இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் கூறும் போது, குவால்காம் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் உலகம் முழுக்க பல்வேறு ஒழுங்கமுறை ஆணையங்களில் விசாரிக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளது.

    குவால்காம் வழக்கு ஒருபுறம் இருக்க, ஆப்பிள் நிறுவன சாதனங்களின் சீன விற்பனை சரிந்து வருகிறது. ஹூவாய் மற்றும் ஒப்போ போன்ற உள்ளூர் நிறுவன சாதனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதே ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விற்பனை குறைய காரணமாக கூறப்படுகிறது. #Apple #iPhone
    ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது. #BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
    குவாங்சோவ்:

    ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் கடினமான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீன தைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனால் அரைஇறுதிக்கு முன்னேறுவதற்கு சிந்து கடும் சவால்களை சந்திக்க நேரிடும்.

    இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து, நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை சந்திக்கிறார். இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் சமீர் வர்மா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சமீர் வர்மா, ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டோவை சந்திக்கிறார்.#BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
    சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar
    பெய்ஜிங்:

    சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது.

    இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார்.  கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar
    ×