என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95693"
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெஷாவரில் உள்ள கவர்னர் இல்லத்தில் பழங்குடி மாவட்டங்களின் பிரதிநிதிகளை பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “நாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன். நாட்டை வழிநடத்துவதற்கான பணத்தை நாட்டிடம் இருந்தே வசூலிப்பேன்” என சூளுரைத்தார்.
ஓராண்டு காலத்துக்கு மேலாக பழங்குடியினர் மாவட்டங்களில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் செயல்பாட்டில் இல்லாதபோதும், அங்கெல்லாம் அமைதியை பராமரித்து வந்ததற்கு அந்த மக்களுக்கு பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், பழங்குடியினர் மாவட்டங்களில் பழங்குடி இன மக்களின் கலாசாரம், பாரம்பரியம் அடிப்படையில் புதிய சட்டங்களும், நிர்வாக முறையும் அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு, சர்வதேச நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், சர்வதேச நிதியத்துக்கும் இடையே பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
இந்த நிலையில், வெளிநாட்டு கடன் சுமைகளை குறைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி) வழங்க சர்வதேச நிதியம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேச நிதியத்தின் இயக்குநர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பிரதமர் இம்ரான்கானின் நிதி ஆலோசகரான அப்துல் ஹபிஸ் ஷேக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன்கள் 90 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. ஏற்றுமதியின் அளவு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து சுருங்கி வருகிறது.
ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 20 பில்லியன் டாலர்களை எட்டியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் அன்னிய செலாவணி கையிருப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.
எனவே, வெளிநாட்டு கடன் பொறுப்பு தொடர்பாக ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய தொகையின் அளவில் 12 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த சூழலை சமாளிக்க அடுத்த 3 ஆண்டுகளில் சர்வதேச நிதியத்திடம் இருந்து 6 பில்லியன் டாலர்களை பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியத்தின் தலைமைக்குழு ஒப்புதல் அளிக்கும் என நம்பிக்கை உள்ளது.
அத்துடன் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தும் 2 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை நிதியுதவியாக பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி. அவர் ‘கேம் சேஜ்சர்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மியான்டட், வாக்கர் யூனூஸ் மற்றும் இந்திய முன்னாள் வீரர் காம்பீர் ஆகியோரை விமர்சித்து இருந்தார்.
வயது தொடர்பான விவரத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார். தனது சாதனை சதத்தை தெண்டுல்கர் பேட்டை பயன்படுத்தி அடித்ததாகவும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் அப்ரிடியை அந்நாட்டு வீரர் இம்ரான் பர்கத் கடுமையாக சாடி உள்ளார். அப்ரிடி பல வீரர்களின் வாழ்க்கையை சுயநலத்துக்காக அழித்தவர் என்று குற்றம் சாட்டி உள்ளார். அவர் 20 வயது என்று பொய் கூறியது மிகவும் அவமானம். இப்படி சொல்பவர் எப்படி சிறப்பான வீரர்களை குறை சொல்ல முடியும் என்று இம்ரான் பர்கத் தெரிவித்து உள்ளார். #ShahidAfridi #ImranFarhat
சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே கார்டிப்பில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.
உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில் தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் இந்த போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல வேண்டியது அவசியமானதாகும்.
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 82 ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 49 முறையும், பாகிஸ்தான் அணி 31 முறையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #EngvsPak
பாகிஸ்தான் நாட்டின் சில பகுதிகளில் 12, 13 வயதான சிறுமிகளை பெற்றோர்கள் பலவந்தப்படுத்தி திருமணம் செய்து வைக்கும் பழக்கவழக்கம் நடைமுறையில் உள்ளது. இதை தடுப்பதற்காக பாகிஸ்தான் குழந்தை திருமணச் சட்டத்தில் மாற்றம்செய்யும் புதிய மசோதாவை பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த எம்.பி. ஷெர்ரி ரஹ்மான் என்பவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பெண்களின் பொதுவான பூப்பெய்தும் வயது மற்றும் திருமணத்துக்கான உடல்ரீதியான தகுதிக்குரிய வயதை 18 ஆக நிர்ணயிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவின் மீது பாராளுமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் நடந்தது.
பெண்களின் பூப்பெய்தும் வயது அவரவர் உடல்கூறுகளுக்கேற்ப மாறுபடலாம். இதை நாம் ஒரு பொது வயதாக நிர்ணயம் செய்ய முடியாது என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவை இஸ்லாமிய சித்தாந்த குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கபூர் ஹைதரி என்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
பின்னர், இந்த மசோதாவின் மீது விரிவாக பேசிய ஷெர்ரி ரஹ்மான், அல்ஜீரியாவில் பெண்களின் திருமண வயது 19 என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. வங்காளதேசம், எகிப்து, துருக்கி, மொராக்கோ, ஓமன், ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் 18 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
வாக்குரிமை, தேசிய குடியுரிமை அட்டை போன்றவற்றை பெறுவதற்கு வயதுவரம்பு 18 ஆக இருக்கும் நிலையில் பெண்களின் திருமண வயதும் 18 ஆக மாற்றுவதில் தவறில்லை என்று வாதாடினார்.
மேலும், நமது நாட்டில் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களில் 21 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பதால் இங்கு இளம்வயது திருமணத்தால் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழக்கும் அவலத்தை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டியுள்ளது என வலியுறுத்தினார்.
இந்த மசோதா மீது நடந்த வாக்கெடுப்பில் 5 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.
இந்த சட்டத்தை மீறி சிறுமியரை திருமணம் செய்துகொண்டால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanSenate #18yearsgirls
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (75). இவர் மீது 2014-ம் ஆண்டு தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். ஒருவிதமான அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனவே அவர் பாகிஸ்தான் திரும்பாமல் துபாயிலேயே தங்கியுள்ளார். இதற்கிடையே அவர் மீதான தேசதுரோக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
கடந்த 1-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஆசிப் சயித் கோசா தலைமையிலான பெஞ்ச் முஷரப்புக்கு எச்சரிக்கை விடுத்தது.
அவர் கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் தகுதியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
எனவே அவர் வருகிற மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். 2-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி தனது வாக்கு மூலத்தை பதிவு செய்கிறார்.
இந்த தகவலை முஷரப்பின் வக்கீல் சல்மான் சப்தார் நிருபர்களிடம் தெரிவித்தார். முஷரப் தனது டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். #PervezMusharraf
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வாரம் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. முதல் போட்டி மே 3-ம் தேதி தொடங்கவிருந்தது. இதற்காக கடந்த 5 நாட்களாக கராச்சி முகாமில் தீவிர பயிற்சி பெற்ற பாகிஸ்தான் அணி, வரும் 30-ம் தேதி இலங்கைக்கு புறப்படுவதாக இருந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில், போட்டியை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், இந்த போட்டித் தொடர்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்து ஜூன்- ஜூலை மாதங்களில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. #SrilankaAttacks #PakistanU19Tour #SLC
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிரம்ப் அதிபரான பிறகு கட்டாயமாக கடை பிடிக்கப்படுகிறது.
அந்த பட்டியலில் கினியா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, சியாரா, லியோக், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய 8 நாடுகள் உள்ளன. தற்போது அந்த பட்டியலில் பாகிஸ்தானும், கானாவும் இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில் ‘விசா’ காலத்துக்கும் அதிகமாக அமெரிக்காவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை திரும்ப அனுப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் தங்களது குடிமக்களை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
எனவே பாகிஸ்தானியர்கள் அமெரிக்கா வருவதற்கான ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 22-ந்தேதி அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. அது வழக்கம்போல் நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை பாகிஸ்தானியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானியர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று தங்களது குடிமக்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்க சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
‘விசா’ காலம் முடிந்து அமெரிக்காவில் தங்கி இருக்கும் தனது குடிமக்களை சில ஆண்டுகளாக தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. #USVisa
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்