search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகானே"

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பெறுவார் என, இந்திய அணி கேப்டன் ரகானே உறுதிப்படுத்தியுள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது.

    இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரகானே பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, பும்ரா, ரிஷாப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் காயத்தால் வெளியேறிவிட்டார்.

    இதனால் வழக்கமான டெஸ்ட் அணியில் இடம்பெறும் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லை. அவர்களுக்குப் பதிலாக புதிய நபர்களை ஆடும் லெவன் அணியில் சேர்க்க வேண்டும். இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என பொறுப்பு கேப்டன் ரகானே உறுதிப்படுத்தியுள்ளார். ஷுப்மான் கில், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    இதன்மூலம் மும்பையை சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆக ள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் முதல்தர கிரிக்கெட்டில் 4592 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 52.18 ஆகும். ஆனாலர், ரெட் பந்தில் கடைசியாக 2019-ம் அண்டு இரானி கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோகித் சர்மாவையே கேப்டனாக நியமித்து இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடியது.

    இந்த தொடருக்கான இந்திய அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரிலும் விளையாடவில்லை. மேலும் முதல் டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    2-வது டெஸ்டில் விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்து கேப்டனாக பணியாற்றுவார். முதல் டெஸ்ட் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் ரகானேவை கேப்டனாக நியமித்த தேர்வுக் குழுவின் முடிவு தொடர்பாக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

    ரகானேவை கேப்டனாக நியமித்தது தவறு. இது சரியான முடிவு அல்ல. இந்த தேர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அவரது சராசரி சிறப்பாக இல்லை.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இதனால் அவருக்கு நெருக்கடி இருக்கிறது. மேலும் கேப்டன் பதவியில் அவருக்கு கூடுதல் நெருக்கடிதான் ஏற்படும்.

    ரோகித் சர்மாவையே கேப்டனாக நியமித்து இருக்க வேண்டும். அவருக்கு ஓய்வு கொடுத்தது சரியல்ல.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி 7-வது வெற்றியை பெற்றது. #IPL2019 #RRvDC

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் சந்தீப் லாமிச்சன்னே நீக்கப்பட்டு கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரஹானே பவுண்டரி விளாசி ரன் கணக்கை தொடங்கினார். 2-வது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (0) ரபடாவால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டு வெளியேறினார்.

    இதனை அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து ரன் சேர்த்தனர். ரஹானே அடிக்கடி பவுண்டரி விளாசியதுடன், அவ்வப்போது சிக்சரும் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது. ரஹானே 32 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 10.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. 31 பந்துகளில் அரை சதத்தை தொட்ட ஸ்டீவன் சுமித் (50 ரன்கள், 32 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) அடுத்த பந்திலேயே கிறிஸ் மோரிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 13.1 ஓவர்களில் 135 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஸ்டீவன் சுமித் இணை 130 ரன்கள் திரட்டியது.



    அடுத்து களம் கண்ட பென் ஸ்டோக்ஸ் 8 ரன்னுடனும், ஆஷ்டன் டர்னர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். அதிரடியாக ஆடிய ரஹானே 17-வது ஓவரில் சதத்தை (58 பந்துகளில்) பூர்த்தி செய்தார். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இதுவாகும். ஐ.பி.எல். போட்டியில் ரஹானே அடித்த 2-வது சதம் இது. 2012-ம் ஆண்டு போட்டியில் அவர் முதல் சதத்தை (பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள்) அடித்து இருந்தார்.

    இதனை அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி (19 ரன்கள், 13 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ரியான் பராக் (4 ரன்) ஆகியோர் கடைசி ஓவரில் ரபடா பந்து வீச்சில் போல்டு ஆனார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. ரஹானே 63 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.





    பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 54 ரன்னும் (27 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 42 ரன்னும் (39 பந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரூதர்போர்டு 11 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.



    ரிஷாப் பான்ட் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்னும், காலின் இங்ராம் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 11-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். ரஹானே அடித்த சதம் ராஜஸ்தான் அணிக்கு பலன் அளிக்காமல் வீணானது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ள நிலையில், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார். #IPL2019 #RR
    ஐபிஎல் 2019 சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.

    ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி பெற போராடி வருகின்றன. இரு அணிகளும் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தன. நான்காவது போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில் ஒரு அணி வெற்றி பெற்றே தீரும் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் வெற்றியை பெற்றது.

    அதன்பின் கொல்கத்தாவுக்கு எதிராக சரணடைந்தது. ஐந்து போட்டியில் நான்கில் தோல்வியடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்த போதிலும், இன்னும் பயப்பட தேவையில்லை என்று அந்த அணியின் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறுகையில் ‘‘எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நாங்கள் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஒரு போட்டியில் மட்டுமே மோசமாக தோல்வியடைந்துள்ளோம். மற்ற நான்கு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அவற்றில் மூன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.



    தொரடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவது கடினமானதாகிவிடும். ஆனால் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அதிக அளவில் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் வீரர்கள் அவர்களுடைய சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தினால், மகிழ்ச்சியான முடிவு வந்து சேரும்’’ என்றார்.
    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களின் சிறிய தவறு தோல்வி காரணமாக அமைந்துள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே கூறியுள்ளார். #Rahane
    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 198 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-

    நாங்கள் 190 ரன்னுக்கு மேல் குவித்தோம். இது நல்ல ஸ்கோர். இந்த ஆடுகளத்தில் 150-க்கு மேல் எடுத்தாலே சிறப்பான ஸ்கோர் தான். ஆனால் நாங்கள் வார்னரின் அதிரடியை கட்டுப்படுத்த தவறவிட்டோம். எங்களது பந்துவீச்சாளர்கள் செய்த சிறிய தவறால் அவர் அபாரமாக ஆடிவிட்டார். இது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. சன்ரைசர்ஸ் வீரர்கள் பவர்பிளேயை நன்றாக ஆடி ஆட்டத்தை மாற்றிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, இது எளிதான வெற்றி அல்ல. இந்த ஆட்டம் மிகவும் சவாலாகவே இருந்தது. எங்களது இதே அதிரடி ஆட்டம் தொடரும் என்று நம்புகிறேன் என்றார். #Rahane
    சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், 55 பந்துகளில் 147 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    இந்தூர்:

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது.

    ஸ்ரேயாஸ் அய்யர் 55 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உள்ளூர் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.  இதற்கு முன் ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

    இதுதவிர டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் அய்யர் (15 சிக்சர்கள்) எட்டினார். இதற்கு முன் முரளி விஜய் ஒரு இன்னிங்சில் 11 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    வேலைப்பளுவை மனதில் கொண்டு ஆஸ்திரேலியா தொடரின்போது ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AUSvIND
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 24-ந்தேதி முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந்தேதி ஆகிய தேதிகளில் முறையே ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லியில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெறும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து விளையாடி வருவதால் ரோகித் சர்மா, தவான் ஆகியோருக்கு சில ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    அவர்களுக்கு பதிலாக தொடக்க வீரர் வரிசையில் ரகானே, கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து தொடரில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் வீராட்கோலி அணிக்கு மீண்டும் திரும்புகிறார். இதேபோல வேகப்பந்து வீரர் பும்ராவும் அணிக்கு மீண்டும் திரும்புவார். அவர் காயம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் விளையாடவில்லை.



    வேகப்பந்து வீரர்களும், சுழற்பந்து வீரர்களும் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மிடில் ஆர்டர் வரிசையிலும் அணி மாற்றம் இருக்கலாம். இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணத்தில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ரகானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாட வாய்ப்புள்ளது.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #WorldCup
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து நடக்கிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அணிகளை தேர்வு செய்ய ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்துள்ள கடைசி தேதியான ஏப்ரல் 23-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தேர்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதுதான் இதுவரை முடிவு செய்யவில்லை. மற்ற அனைத்து இடத்திற்கான வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர்.



    ரி‌ஷப் பந்தின் ஆட்டம் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். 3 நிலை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். விஜய் சங்கர் பேட்டிங் ஆல்ரவுன்டர் வரிசையில் இருக்கிறார்.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ரகானே உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த 3 பேரும் உலககோப்பை அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் வென்றுள்ளன.
    இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பாவை எதிர்த்து விளையாடும் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் இரானி கோப்பைக்கான ஆட்டத்தில் மோதும். இந்த ஆட்டம் வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நாக்பூரில் நடக்கிறது.

    இன்றுடன் முடிவடைந்த ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிராவை வீழ்த்தி விதர்பா தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் கீப்பராக இடம்பெறுகிறார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரகானே, 2. மயாங்க் அகர்வால், 3. அன்மோல்ப்ரீத் சிங், 4. ஹனுமா விஹாரி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. இஷான் கிஷன், 7. கிரிஷ்ணப்பா கவுதம், 8. தர்மேந்த்ரசின் ஜடேஜா, 9. ராகுல் சாஹர், 10. அங்கித் ராஜ்பூட், 11. தன்வீர் உல்-ஹக், 12. ரோனிட் மோர், 13. சந்தீப் வாரியர், 14. ரிங்கு சிங், 15. ஸ்னெல் பட்டேல்.
    ரகானே (91), விகாரி (92), ஷ்ரேயாஸ் அய்யர் (65) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து லயன்ஸை 138 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து லயன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் ரகானே, அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அன்மோல்ப்ரீத் சிங் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரகானே உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரகானே 91 ரன்களும், விஹாரி 92 ரன்களும் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 181 ரன்கள் குவித்தது.

    அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 47 பந்தில் 65 ரன்கள் சேர்க்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. பின்னர் 304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் டேவியஸ் 48 ரன்கள் சேர்த்தார். 7-வது வீரர் கிரேகோரி 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து லயன்ஸ் 37.4 ஓவரில் 165 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா ‘ஏ’ 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் மார்கண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
    மெல்போர்ன் டெஸ்டில் 6 ரன்களுக்குள் புஜாரா, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆட்டமிழந்து 72 வருடகால மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. 292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா (0), 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி (0), 5-வது வீரராக களம் இறங்கிய (1) ரகானே, 6-வது வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா (5) ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ரோகித் சர்மாவைத் தவிர மற்ற மூன்று பேரையும் கம்மின் 6 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீழ்த்தினால். இதில் விராட் கோலி, ரகானேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.



    கடந்த 25 வருடங்களாக இப்படி 3 முதல் 6-ம் நிலை வரை களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது கிடையாது. நான்கு பேரும் சேர்ந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் குறைவாக பெற்ற ரன்கள் என்று கடந்த 72 ஆண்டு காலமாக இருக்கும் மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

    இதற்கு முன் 1946-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் (3 முதல் 6 வரை) 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். அதன்பின் தற்போதுதான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.



    1969-ல் ஐதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிராக 9 ரன்களும், 1983-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி, புஜாரா, ரகானேவை சாய்த்தார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

    292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஜோடியான ஹனுமா விஹாரி - மயாங்க் அகர்வால் 12-வது ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

    கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த புஜாரா கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ரகானே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரகானே ஆகியோரை ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வெறும் 6 பந்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 28 ரன்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காத இந்தியா 32 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து வந்த ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
    ×