search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வெண்ணிலா, கார்த்திக், சிவகாமி, சின்னதுரை ஆகி யோர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் சேவகனுர் பகுதியை சேர்ந்த வர் குருமூர்த்தி. இவருக்கும் இவரது தம்பி கார்த்திக் குடும்பத்தாருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் குரு மூர்த்தி மனைவி சவுமியா (27) தன்னை கார்த்திக் குடும்பத்தினர் தாக்கியதாக தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெண்ணிலா, கார்த்திக், சிவகாமி, சின்னதுரை ஆகி யோர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
    • இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்த மணம் தவழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் ஏன் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராமதாசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மோதலில் ஈடுபட்டு பகத்சிங்கை தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான நிலை அங்கு உருவானது. இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • தலைமறைவானவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
    • நாகங்கள் வந்து தங்களுக்கு நாக கற்களை தந்து செல்வதாகவும் நம்பும் படி கூறினர்.

    கன்னியாகுமரி ;

    நாகர்கோவில் தம்மாத்து க்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சனத். இவரது மனைவி லாவண்யா. இவர், ஆன்லைன் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

    அதில், சுங்கான்கடை பகுதியில் ஒரு வீட்டில் சாமி சிலைகள் வைத்து சுரேஷ்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் பூஜை செய்வதோடு அருள் வாக்கு கூறி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நான் அங்கு சென்றேன். அப்போது அருள்வாக்கு கூறிய சாமியார்கள், தங்க ளுக்கு தெய்வீக சக்தி உள்ளதாகவும், நாகங்கள் வந்து தங்களுக்கு நாக கற்களை தந்து செல்வதாகவும் நம்பும் படி கூறினர்.

    விலைமதிப்பற்ற இந்த நாககற்களை வாங்கிச் சென்று வீட்டில் வைத்தால், நினைத்த காரியம் நடக்கும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்றெல்லாம் கூறினர். இதை நம்பி அவர்களிடம் நாக கற்களை வாங்கினேன். சுமார் ரூ.7 லட்சம் வரைக்கும் கொடுத்து அவர்களிடம் நாக கற்கள் வாங்கினேன். அவற்றை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருந்தும் எந்த காரியமும் நடக்கவில்லை. எனவே அந்த கற்களை, நகைக்கடைக்கு சென்று காண்பித்த போது, அவை சாதாரண கற்கள் என்பதும், விலை குறைவானவை என்பதும் நான் மோசடி செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இது பற்றி விசாரித்த போது ஏராளமானோர் இது போன்று ஏமாந்து இருப்பது தெரிய வந்தது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர். புகாரின் பேரில் சாமியார்கள் சுரேஷ்குமார் மற்றும் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை தேடி சுங்கான் கடை சென்றபோது, 2 பேரும் அங்கு இல்லை.

    அவர்கள் வெளியூர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 2 சாமியார்களும் புகாருக்கு பயந்து தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு
    • அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு மற்றும் கிரகோரி பொன்னுசாமி திருவண்ணாமலை சாலை மற்றும் கிருஷ்ணகிரி முருகன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவர்
    • கண்டித்ததால் கல்லால் தாக்கிய கொடூரம்

    திருச்சி,

    துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி ஹரிஜன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.இவரது மனைவி வள்ளி (வயது 45). இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் செங்காட்டுப்பட்டி சரசு என்பவரின் தோட்டத்தில் தனது ஆடுகளை மேய விட்டு கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது செங்காட்டுப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜு (60) என்பவர் வள்ளியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அந்த முதியவரை கண்டித்தார். பின்னர் வீடு திரும்பினார். அப்போது அந்த முதியவர் வள்ளியை கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட வள்ளி துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் முதியவர் ராஜு மீது துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்க்க சென்ற பெண்ணிடம் முதியவர் தவறாக நடக்கும் என்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறப்பு ரோந்து பணியின் போது நடவடிக்கை
    • கரூர் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில், போலீசார் நடத்திய சிறப்பு ரோந்து பணியில், 2,044 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டம் போலீசார் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனையில் 2,044 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக, 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், வேலாயுதம்பாளையம் அருகே தவிட்டுப்பாளையம் பகுதியில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட, 103 மது பாக்கெட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன. அதேபோல், குட்கா பொருட்கள் தொடர்பாக நடந்த சோதனையில், 27 பேர் கைது செய் யப்பட்டு, ஆறு கிலோ, 682 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோ தமாக மதுபாட்டில்கள் விற்ற வகையில், 18 பேர் கைது செய்யப் பட்டு, 233 மதுபாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சத்தியமூர்த்தி சனிக்கிழமை பரமத்தியிலிருந்து வெள்ளகோவிலுக்கு கோவை செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார்.
    • வாழைப்பழத்தை பஸ் டிரைவர் சீட் அருகே எடுத்துச் சென்று வைத்து விட்டார்.

    வெள்ளகோவில் :

    கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்த நாச்சி முத்து மகன் சத்தியமூ ர்த்தி (வயது 42). இவர் திருப்பூர் மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருகின்றார். சத்தியமூர்த்தி சனிக்கிழமை பரமத்தியிலிருந்து வெள்ளகோவிலுக்கு கோவை செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார்.அப்போது வாழைப்பழம்கொண்டு வந்துள்ளார். வாழைப்பழத்தை பரமத்தியில் ஏறும்போது பின் சீட்டு வழியாக ஏறி பஸ்சில் வைத்துவிட்டு சத்தியமூர்த்தி முன்னாள் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது பஸ் கண்டக்டர் மணி மாறன் இந்த வாழைப்பழம் யாருடையது ,லக்கேஜ் வாங்க வேண்டும் என்று கேட்டு ள்ளார். இது தொடர்பாக சத்தியமூ ர்த்திக்கும், கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சத்தியமூர்த்தி என்னுடையது தான் என்று கூறவில்லை.

    உடனே கண்டக்டர்மணிமாறன் வாழைப்பழத்தை பஸ் டிரைவர் சீட் அருகே எடுத்துச் சென்று வைத்து விட்டார். பின்னர் சத்தி யமூர்த்தி வெள்ளகோவிலில் இறங்கும் போது வாழை ப்பழத்தை காணவில்லை என கண்டக்டர் மணிமா றனிடம் கேட்டபோது, சத்தியமூர்த்திக்கும் மற்றும் கண்டக்டர் மணிமாறன், பஸ்சில் பயணம் செய்த கோவை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் பஸ்சில் தகராறு செய்ததாக கூறப்படும் பஸ் பயணிகள் கோவை சதீஷ்குமார் ,கிணத்துக்கடவு வெங்கடாஜலபதி , கோவை ராமச்சந்திரன், கிணத்துக்கடவு கோபால், கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை ராஜேஷ் ,கோவை மாணிக்கம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.
    • 6 பேர் காயமடைந்தனர் மற்றும் 28 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பிசிண்டி கிராமத்தில் நேற்று குறிப்பிட்ட சமுதாயத்தின் ஊர் கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதலாக வெடித்தது.

    இருதரப்பை சேர்ந்தவர்க ளும் ஒருவரை யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் அந்த ஊரைச்சேர்ந்த காமராஜ் மனைவி ஜெயக்கொடி, அவரது மகன் சிவா மற்றும் ராஜா(வயது41), மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராஜ சுலோக்சனா உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் காரியாபட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ரகுபதி, ராஜ்குமார், செல்வராஜ், ராமச்சந்திரன், பாலமுருகன், எம்.ஜி.ஆர். என்ற சீனி வாசன் உள்பட 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இரு தரப்பினர் மோதலால் பிசிண்டி கிரா மத்தில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் அந்தப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்ட னர்.

    • போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு

    அரவேணு,

    கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    இதனால் கோத்தகிரி போலீசார் விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆனாலும் சிலர் மலைப்பாதைகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது என போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் அதிகப்படியான பாரம் ஏற்றி வந்து விதி மீறலில் ஈடுபடுகின்றன.

    இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் துணை ஆய்வாளர் ஜான், ராஜேந்திரன் மற்றும் போலீசார் அரவேனு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதன்படி கடந்த 22-ந் தேதி அதிகபாரம் ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் உள்பட மொத்தம் ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 23-ந் தேதி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.45 ஆயிரமும், 24-ந் தேதி ரூ.41 ஆயிரத்து 500-ம் அபராதம் விதிக்கப்பட்டது

    நேற்று நடத்திய சோதனையில் போக்குவரத்து வீதிகளை மீறியதாக 53 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.51 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மொத்தம் 181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு ப்பதிவு செய்ய ப்பட்டு, ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • பணம் தேவைப்பட்டதால் 4 சென்டில் ஒரு சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்தனர்.
    • இருவர் மீதும் மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பரமார்த்திலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசலவன் (வயது 62). இவரது சகோதரர் ராஜகோபால். இவர்களுக்கு சொந்தமான 4 சென்ட் நிலம் அதே பகுதியில் உள்ளது.ராஜகோபாலுக்கு மருத்துவச் செலவுக்காக பணம் தேவைப்பட்டதால் 4 சென்டில் ஒரு சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்தனர்.

    இதை அறிய அதே பகுதியை சேர்ந்த தந்தை, மகன் இரு வரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஒரு சென்ட் நிலத்திற்கு பதிலாக 4 சென்ட் நிலத்தையும் எழுதி வாங்கியதாக தெரிகிறது. மேலும் பேசிய பணத்தையும் கொடுக்கவில்லை.இதையடுத்து அசலவன் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்து நீதிபதி இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மணிகண்ட பிரதீஸ்குமார் அவரது தந்தை ராஜேந்திரன் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மணிகண்ட பிரதீஸ் குமார் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் போலீசாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போலீஸ் அனுமதி இன்றி நடைபெற்ற ஆடல், பாடல்
    • ஆடியோ உரிமையாளர் உள்பட 13 பேர் மீது வழக்கு

    கரூர்,

    வேலாயுதம்பாளையம் அருகே, அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக, 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, மூலிமங்கலத்தில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கோவிலுக்கு அருகில், போலீஸ் அனுமதி பெறாமல்,ஆடல், பாடல் நிகழ்ச்சி நடப் பதாக புகார் எழுந்தது.இதையடுத்து போலீஸ் எஸ்.ஐ., சரவணன் கொடுத்த புகார்படி, கரூரை சேர்ந்த நடன ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் (வயது 35), சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த ஆடியோ உரிமையாளர் விஜயகுமார், (40), உள்பட, 13 பேர் மீது, வேலாயுதம்பா ளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திக் என்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருகிறார்.
    • பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி விசாரணை நடத்தி வருகிறார்

    பீளமேடு,

    கோவையை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை விமான நிலையம்- காளப்பட்டி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். இந்த நிறுவனத்தின் உரிமையாளராக கார்த்திக் (45) என்பவர் உள்ளார்.

    கடந்த 3 மாதமாக இங்கு வேலை பார்த்து வருகிறேன். நான் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது கார்த்திக் என்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    அத்துடன் இரட்டை அர்த்தங்களிலும் தன்னிடம் பேசுகிறார். பலமுறை கண்டித்தும் அவர் கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து என்னிடம் இது போன்று அவர் நடந்து வருவது மனவேதனையாக உள்ளது.மேலும் அவர் சொல்வதை கேட்கவில்லை என்றால் மிரட்டலும் விடுக்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

    இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் மாட சாமி, கட்டுமான நிறுவன உரிமையாளர் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    ×