search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலைக்கனி. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மலைக்கனி வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மலைக்கனி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற மகன் மீது போலீசார் வழக்கு

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 44), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரிய கொரட்டி பிறீடா (40). இவர்களுக்கு ஜான் பிஜோ (17), ஜான் பினோ (7) என 2 மகன்கள் உள்ளனர்.

    ஜான் போஸ்கோ தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருவதால், தற்போது அப்பகு தியிலுள்ள வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மேக்காமண்ட பத்தில் தனது தாய் இறந்த தால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மரிய கொரட்டி பிறீடா மகன்களுடன் அங்கு தங்கி இருந்தார்.

    நேற்று அவர், கணவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தனது மகன் ஜான் பிஜோவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்ததால், ஜான் பிஜோ திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இந்த விபத்தில் மரிய கொரட்டி பிறீடா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய கொரட்டி பிறீடா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஜான் பிஜோ லேசான காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கடையாலுமூடு குழிக்கால விளையை சேர்ந்த தபசிமுத்துவிடம் (55) விசாரணை நடத்தினர்.

    குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று மரிய கொரட்டி பிறீடாவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பி றகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற ஜான் பிஜோ மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவில் வாலிபர்-பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் உள்ள முனியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்தது. இதில் நாதன்(வயது25) என்பவரின் குடும்பத்தினர் காவடி, முளைப்பாரி எடுத்து வந்தனர். அவர்களுக்கு முன்பு நாதன் கூச்சலிட்டபடி ஆடி பாடிக்கொண்டு வந்த தாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சகோத ரர்களான பாலசுப்பிர மணியன்(48), தர்மர்(49) ஆகியோர் நாதனை கூச்சலி டாமல் செல்லும்படி கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை பிரித்து அழைத்துச் சென்றனர்.

    இந்தநிலையில் சிறிது நேரத்தில் முளைப்பாரி வேறு தெருவில் வந்தபோது பாலசுப்பிரமணியன் மற்றும் தர்மர், நாதனை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாதன் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சகோதரர்களை தேடி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே உள்ள சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள்(50). இவர் தந்தை தனக்கு அளித்த பூர்விக சொத்தை சகோதரர் மாரிமுத்துவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த சொத்தை மற்றொரு சகோதரி ஜான கிக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த சொத்து தொடர்பாக காளியம்மாள் வட்டாட்சியர் அலுவல கத்தில் வில்லங்க புகார் பதிவு செய்தார்.

    இந்த நிலையில் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக காளியம் மாள் வந்தார். அப்போது ஜானகி, தனது கணவர் முப்பிடாதியுடன் சேர்ந்து காளியம்மாளை தாக்கினர். இதில் காயமடைந்த காளி யம்மாள், ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதுகுறித்து காளியம் மாள் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 2 மகள்களை தவிக்க விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் பாபா (வயது 48). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் 2 மகள்களை சந்திரசேகர் பாபா வளர்த்து வந்தார். மனைவியை பிரிந்து மகள்களை வளர்ப்பதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்ததால் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி விடுமுறையில் மகள்களை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சந்திரசேகர் பாபாவின் சகோதரி சந்தனமேரி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது
    • ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்கிறது. இதனால் கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் போலீசார் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர் சாலையில் வாகன தணிக்கை மேற்க்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மொத்தம் ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    • ராஜேஸ்வரனை வழிமறித்து பணம்கேட்டு மிரட்டி தாக்கி தப்பி சென்று விட்டார்.
    • கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை கைது செய்தனர்.

    தேனாம்பேட்டை, ஆலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். ஆன்லைன் நிறுவன ஊழியர். இவர் இன்று காலை கோடம்பாக்கம் அஜீஸ் நகர் பகுதியில் வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம வாலிபர் ஒருவர், ராஜேஸ்வரனை வழிமறித்து பணம்கேட்டு மிரட்டி தாக்கி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவரை கைது செய்தனர்.

    • வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தை சீரியசாகவே பார்த்தனர்.
    • ஜெர்மன் வாலிபர் பிரட்ரிச் வின்செண்ட் மீது 182 ஐ.பி.சி சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சென்னை:

    ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரட்ரிச் வின்சென்ட். இவர் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக இலங்கையில் இருந்து கடந்த 24-ந்தேதி விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பின்னர் அன்று நள்ளிரவு 1 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து வாடகை காரில் வளசரவாக்கத்துக்கு சென்றார். அங்கு விடுதி ஓன்றில் தங்குவதற்காக அறை எடுத்திருந்த பிரட்ரிச் வின்செண்ட் சாப்பிடுவதற்காக ஓட்டல் அருகில் இறங்கினார். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு விடுதி அறைக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பிரட்ரிச் வின்செண்ட் வைத்திருந்த லேப்டாப் , மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை பறித்து சென்று விட்டதாக தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக ஜெர்மன் பயணி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தை சீரியசாகவே பார்த்தனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். வழிப்பறி சம்பவம் நடைபெற்றதாக ஜெர்மன்காரர் புகாரில் குறிப்பிட்டிருந்த இடம் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியாகும். இதையடுத்து போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெர்மன் வாலிபரிடம் வழிப்பறி செய்ததற்கான எந்த அடையாளங்களும் தென்படவில்லை. அது தொடர்பான ஆதாரங்களும் சிக்கவில்லை. ஜெர்மன் வாலிபர் கையில் பை எதுவும் இல்லாமல் ஹாயாக நடந்து செல்லும் காட்சிகள் சாலையோர கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகே போலீசார் நன்றாக ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தனர். வீடியோ காட்சியை போட்டு காட்டி ஜெர்மன் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதனை பார்த்து அவர் திரு திரு வென முழித்தார். எங்களை பார்த்தால் எப்படி தெரியுது என்று ஜெர்மன் வாலிபரை பார்த்து கேள்வி எழுப்பிய போலீசார் எதற்காக இந்த வேலை என்றும் கேட்டனர். அதற்கு நமட்டு சிரிப்பையே பதிலாக தந்த அவர் சும்மா விளையாட்டுக்கு என்று போலீசை பார்த்து கூலாக கூறி இருக்கிறார்.

    இதைதொடர்ந்து ஜெர்மன் வாலிபர் பிரட்ரிச் வின்செண்ட் மீது 182 ஐ.பி.சி சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அரசு பணியில் இருக்கும் ஒருவரிடம் வேண்டும் என்றே பொய்யை சொல்லி அவரது பணி நேரத்தில் தேவை இல்லாமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் சட்டபிரிவாகும் இது.

    இதை தொடர்ந்து ஜெர்மன் பயணியின் இந்த செயல் குறித்து முறைப்படி ஜெர்மன் தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன் வாலிபரின் செயலால் போலீசார் தேவை இல்லாமல் 2 நாட்கள் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

    • வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முருகன் (39). இவர் 2 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார்.

    இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக வேலை தேடி வந்தார். அப்போது பத்தி ரிக்கையில் வெளியான விளம்பரம் ஒன்றை பார்த்து திருநெல்வேலியில் செயல்படும் ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டார்.

    அவர்கள் பிரேசில் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை தயாராக இருப்பதாகவும், அதற்கு ரூ. 1 ½ லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய முருகன் 3 தவணைகளில் ரூ.1 ½லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் மேலும் ரூ.50 ஆயிரம் வாங்கி கொண்டு விசா ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனால் அது போலியானது என தெரியவந்தது.

    அதுகுறித்து அவர் ஏஜென்சியிடம் கேட்ட போது, வேலை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து ராஜபாளையம் கோர்ட்டில் முருகன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தாய்மாமாவின் பேச்சை நம்பிய சித்ரா, கணவரின் உறவினர்கள் மேலும் 4 பேரிடம் கூறியுள்ளார்.
    • பரமேஸ்வரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவரது மனைவி சுகாஷிணி ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கிள்ளியூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள நாட்டுவள்ளி பகுதியை சேர்ந்தவர் சுஜின், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சித்ரா (வயது 39). இவரது தாய் மாமா பரமேஸ்வரன் (60). திருப்பூரையடுத்த மண்ணரை பகுதியை சேர்ந்த இவர் நீலகிரி மாவட்டத்தில் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார்.

    சித்ரா, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். இதனை அறிந்த அவரது மாமா பரமேசுவரன், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் பணம் வாங்கியுள்ளார். மேலும் பல வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், வேறு நபர்கள் இருந்தால் அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கலாம் என பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

    தாய்மாமாவின் பேச்சை நம்பிய சித்ரா, கணவரின் உறவினர்கள் மேலும் 4 பேரிடம் கூறியுள்ளார். அவர்களிடமும் வேலைக்கு பணம் பெற்று பரமேஸ்வரனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வகையில் மொத்தம் ரூ. 29 லட்சம், பரமேஸ்வரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வருடங்களாகியும் அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    இதையடுத்து சித்ரா, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பரமேசுவரன் ஆத்திரம் அடைந்து சித்ராவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சித்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி பணம் வாங்கியது உறுதியானது. அதன் அடிப்படையில் பரமேஸ்வரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவரது மனைவி சுகாஷிணி ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய நபரான பரமேஸ்வரன் நாளை (31-ந்தேதி) பணி ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில் தற்போது வழக்கு பதிவாகியுள்ளது.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்
    • மது விற்ற ரூ.850-ஐ போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். காப்புக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாத 21 பாட்டில் மதுபானம் காணப்பட்டது. இதை அதிக விலைக்கு விற்க வைத்திருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து வாகனம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதி கண்ணம்விளாகத்தை சேர்ந்த கிருஷ்ணராஜன் (வயது 55) என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து மது விற்ற ரூ.850-ஐ போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

    • வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சத்தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறினர்.
    • பதிவுகள் உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து கடந்த 2021 செப்டம்பர் 9-ந் தேதி புறப்பட்டது. மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வணிக வரித்துறை அதிகாரி சசிகலா மற்றும் கணேசன், பாலகுமார் ஆகியோர் சோதனைக்காக லாரியை நிறுத்தினர்.

    அப்போது ஆவணங்களை பரிசோதித்த போது காகித பண்டல்களுக்கான இணைய வழி ஆவணங்களை செப்டம்பர் 13 என்ற தேதிக்கு பதிலாக, காகிதம் வாங்கிய தேதியான செப்டம்பர் 9-ந் தேதி என்று தவறுதலாகப் பதிவாகியுள்ளது. இதனால் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களில் தேதி சரியாக குறிப்பிடாததால் அபராதம் விதிக்க வேண்டும், அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து லாரி டிரைவர் சரவணன், உரிமையாளர் நாராயண சாமியை தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவித்தார். ஆவணங்களில் தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சரியான ஆவணங்களை அனுப்பி வைப்பதாகவும் லாரியை விடுவிக்குமாறும் உரிமையாளர் கூறியுள்ளார்.

    இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சத்தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறினர்.

    இதில் லாரி டிரைவர் சரவணன் தன்னிடமுள்ள ரூ.5 ஆயிரத்தை தருவதாகவும் மீதித்தொகையை தூத்துக்குடி சென்று அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு வணிக வரி அதிகாரிகள் லாரியை விடுவித்தனர். இந்த நிலையில் லாரி டிரைவர் சரவணன், வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது, ரூ.5 ஆயிரம் கொடுத்தது உள்ளிட்ட அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து உரிமையாளரிடம் அளித்திருந்தார்.

    இதையடுத்து உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் லாரி டிரைவர் சரவணனின் கைப்பேசியை பெற்று அதில் உள்ள பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பதிவுகள் உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மதுரை ஜெய்ஹிந்துபுரம் சரக மாநில வரி அலுவலராக பணிபுரியும் சசிகலா, மதுரை வணிக வரித்துறை அலுவலகத்தில் மாநில துணை வரி அலுவலராக பணிபுரியும் கணேசன், மாநில துணை வரி அலுவலர் பாலகுமார் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • 2-வது திருமணம் செய்ததை தட்டி கேட்டதால் முதல் மனைவியை தாக்கிய கணவர்
    • கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெறும் நிலையில்தொ ட்டியம் அருகே சம்பவம்

    முசிறி,

    தொட்டியம் அருகே உள்ள மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37)இவருக்கும் பெட்டவாய்த்தலை பழைய தபால் நிலைய பகுதியைச் சேர்ந்த சிவகாமி (34) என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடந்தது. அப்போது நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதனிடையே மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு சிவகாமியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வீட்டில் இருந்து துரத்தினர். அதைத்தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு முசிறி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரவிக்குமார் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்து தன பிரியா (31) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இது பற்றி அறிந்த முதல் மனைவி சிவகாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவரின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்றார். அப்போது ரவிக்குமார் அவரது இரண்டாவது மனைவி தன பிரியா, தாய் விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் ராஜா என்கிற ராஜசேகர், மகாலட்சுமி, சுந்தரி, சுப்பிரமணியன், அலமேலு மங்கை ஆகிய 8 பேரும் சேர்ந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிவகாமி மீண்டும் தொட்டியம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளித்தார். அதன் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரவிக்குமார் உள்ளிட்ட 8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×