search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95834"

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #Airtel



    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 90 எஸ்.எம்.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களில் உள்ள பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    தற்சமயம் ரூ.399 பிரீபெயிட் சலுதையில் ஏர்டெல் நிறுவனம் தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. புதிய சலுகை போன்று இல்லாமல், ரூ.399 சலுகையின் வேலிடிட்டி ஒவ்வொரு வட்டாரங்களிலும் வேறுபடுகிறது.

    சில வட்டாரங்களில் 70 நாட்கள் வேலிடிட்டியும் சில வட்டாரங்களில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதால், பழைய சலுகை தொடர்ந்து வழங்கப்படுமா அல்லது நிறுத்தப்பட்டு விடுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ அறிவித்து இருக்கும் ரூ.398 சலுகையில் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை மாற்றப்பட்டு தற்சமயம் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 பிரீபெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை இந்த சலுகையில் வேலிடிட்டி மற்றும் டேட்டா அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஏர்டெல் ரூ.289 சலுகை தற்சமயம் கொல்கத்தாவில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.279 விலையில் அறிவித்த சலுகையை தொடர்ந்து ஏர்டெல் தனது சலுகையை மாற்றியமைத்துள்ளது. வோடபோன் சலுகையிலும் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே பலன்களை வழங்குகின்றன.

    எனினும் வோடபோன் வழங்கும் சலுகையில், வாய்ஸ் கால் மேற்கொள்ள தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடு இருக்கிறது. ஏர்டெல் சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகை வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் வரம்பற்ற வாய்ஸ் கால் பேச முடியும்.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலையில் வழங்கும் சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.181 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Offers
    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.181 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 சலுகை, பி.எஸ்.என்.எல். ரூ.187 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.  

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் ரூ.181 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 42 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.199 பிரீபெயிட் சலுகையிலும் 42 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் இரண்டு சலுகையிலும் இருக்கும் ஒரே வித்தியாசம் ரூ.181 சலுகை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    டேட்டா சலுகைகளுடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனம் இணைப்புக்கு பின் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    ஏர்டெல் ரூ.181 சலுகையில் அதிக டேட்டா பயன்படுத்துவோருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் 42 ஜி.பி. டேட்டா கிடைக்கும். ரூ.200 விலையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் முதல் சலுகையாக இது அமைந்துள்ளது. #Airtel #Offers
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்தது. புதிய சலுகையின் படி பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel4G

     

    ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.195 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    எனினும் இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். சலுகை வழங்கப்படவில்லை. கூடுதலாக, இந்த சலுகை முதற்கட்டமாக சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள ஏர்டெல் வலைதளங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

    கேரளா வட்டாரங்களிலும் இந்த சலுகை வலைதளத்தில் மட்டுமே பதிவிடப்பட்டு இருப்பதாகவும், மைஏர்டெல் செயலியில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. புதிய ஏர்டெல் சலுகை இந்தியாவின் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கடந்த வாரம் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்.  உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது.

    ரூ.195 ஏர்டெல் சலுகை அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் நிலையில், ரூ.168 சலுகையை அதிக எஸ்.எம்.எஸ். அனுப்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

    ஏர்டெல் ரூ.195 சலுகையை விட ஜியோ சலுகையில் அதிக பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.198 பிரீபெயிட் சலுகையில் 2 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Airtel4G #Offers
    ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த 2018 ஐபோன் மாடல்களை வாடிக்கையாளர்கள் விரைவில் ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு செய்யலாம். #iPhoneXS



    ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட மாடல்களை ஏர்டெல் ஆன்லைன் வலைத்தளத்தில் விரைவில் முன்பதிவு செய்யலாம்.

    அதன்படி ஐபோன் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை செப்டம்பர் 21-ம் தேதி முதல் ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும். ஐபோன் XR மாடலின் முன்பதிவு அக்டோபர் 19-ம் தேதி துவங்குகிறது. புதிய ஐபோன் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு இதுவரை எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. 

    இந்தியாவில் ஐபோன் XS 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.99,900 முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,.09,900 என்றும் ஐபோன் XR 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.76,900 முதல் துவங்குகிறது. 

    ஏர்டெல் வலைத்தளத்தில் முன்பதிவு துவங்க இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில், முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே ஏர்டெல் ஆன்லைன் வலைத்தளத்தில் பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்கள் எளிமையான மாத தவணை முறை வசதியில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு மாத தவணையில் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு மாத தவணையுடன், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையில் ரூ.97 விலையில் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel #offer

     

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.97 காம்போ பிரீபெயிட் சலுகையில் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி காரணமாக, ஏர்டெல் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. சமீபத்தில் ரூ.100 விலையில் ஏர்டெல் காம்போ சலுகையை அறிவித்தது. காம்போ சலுகை அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் ரூ.97 காம்போ பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. 

    இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, மொத்தம் 200 எஸ்.எம்.எஸ்., 28 நாட்களுக்கு 350 நிமிடங்கள் அல்லது 21,000 நொடிகள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. குறிப்பாக வாய்ஸ் கால் சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேறுபடுகிறது. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 300 நிமிடங்கள் அல்லது 18,000 நொடிகள் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ.99 சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ரூ.99 சலுகையில் வாய்ஸ் கால் செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை, இதனால் பயனர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய மாதாந்திர தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் அதிகபட்சம் ரூ.300 பெற முடியும். #Airtel



    வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்பு கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டு இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் துவங்கப்பட்டது. புதிய நிறுவனம் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியது.

    டெலிகாம் சந்தையில் புதிய போட்டியாளரை எதிர்கொள்ள ஏர்டெல் தயாராகிவிட்டது. அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு மாதம் ரூ.50 தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி சேவையை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.349 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் ரூ.300 தள்ளுபடி பெற முடியும். புதிய சலுகையின் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெயிட் துவக்க சலுகை வோடபோனின் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. வோடபோனின் போஸ்ட்பெயிட் சலுகைகள் ரூ.299 விலையில் துவங்கும் நிலையில் ஏர்டெல் சலுகை வரிகளுடன் சேர்த்து ரூ.385 விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு கொண்டு செல்லும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், 12 மாதங்களுக்கு ஏர்டெல் நிறுவனம் மாதம் 20 ஜிபி டேட்டா வழங்குகிறது. 

    இதன் மூலம் மாதம் 40 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டிவி சந்தா மற்றும் வின்க் மியூசிக் சேவை உள்ளிட்டவற்றுக்கு இலவச சந்தா வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு மூன்று புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.35 முதல் துவங்குகிறது. #Airtel #offers



    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய சலுகையில் டேட்டா, டாக்டைம், மற்றும் வேலிடிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டு, அதிக ஆய்வுக்குப் பின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய சலுகைகளில் பயனர்கள் டாக்டைம், டேட்டா உள்ளிட்டவை ஒரே சலுகையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வெவ்வேறு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. டாக்டைம் உடன் வெவ்வேறு வேலிடிட்டி வழங்கும் சலுகைகளின் விலை ரூ.35, ரூ.65 மற்றும் ரூ.95 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ரூ.35 விலையில் கிடைக்கும் ஏர்டெல் சலுகையில் பயனர்களுக்கு ரூ.26.66 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 100 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ரூ.65 விலையில் கிடைக்கும் சலுகையில் ரூ.65 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 200 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.95 சலுகையில் ரூ.95 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா, 500 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    முதற்கட்டமாக தமிழ் நாடு, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகள் விரைவில் நாடு முழுக்க அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஏர்டெல் அறிவித்த ரூ.449 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா என 70 நாட்களுக்கு மொத்தம் 140 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel #offers
    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை பயனர்களுக்கு 140 ஜிபி டேட்டா வழங்குகிறது. #Airtel #offers



    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள ஏர்டெல் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அதிவேக 4ஜி டேட்டா வேகம் வழங்கி வருவதாக கூறி வரும் ஏர்டெல், இம்முறை புதிதாக ரூ.449 விலையில் பிரீபெயிட் பயனர்களுக்கான சலுகையை அறிவித்துள்ளது.

    70 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 140 ஜிபி டேட்டா வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.449 விலையில் வழங்கும் சலுகையில் 91 நாட்கள் வேலிடிட்டி ஆனால் 136 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.448 சலுகைக்கும் போட்டியாக அமைந்துள்ளது. ஜியோவின் ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டு சலுகைகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சமீபத்தில் ஏர்டெல் அறிவித்த சர்வதேச ரோமிங் சலுகைகளை ரூ.196 விலையில் அறிவித்தது. இதில் பிரீபெயிட் பயனர்கள் அமெரிக்கா, ப்ரிட்டன் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இலவச ரோமிங் வழங்குகிறது. இவற்றில் லிமிட்டெட் உள்ளூர் அழைப்புகள், இன்கமிங் அழைப்புகள் மற்றும் இந்தியாவுக்கு வாய்ஸ் கால் சேவையை வழங்குகிறது. 

    வெளிநாடுகளுக்கு செல்லும் பயனர்கள் ரூ.196 விலையில் துவங்கும் சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். ரூ.196 சலுகையில் 20 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் சேவை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரூ.296 சலுகையில் 40 நிமிடங்களும், ரூ.446 சலுகையில் 75 நிமிடங்களும் பேச முடியும். இவை முறையே 30 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. 

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் சர்வதேச ரோமிங் சலுகை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாள், வங்கதேசம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பக்ரைன், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாங் காங், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயனர்களுக்கு வங்கப்படுகிறது.
    வோடபோன் இந்தியா அறிவித்திருக்கும் புதிய சலுகை பயனர்களுக்கு அன்லிமிட்டெட் சேவைகளை 168 நாட்களுக்கு வழங்குகிறது. #Vodafone

     

    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.597 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வோடபோன் சலுகையில், ஏர்டெல் வழங்கும் அதே சலுகைகள் வழங்கப்படுகிறது.

    எனினும் வோடபோன் சலுகையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வோடபோனின் புதிய சலுகை ஸ்மார்ட்போன் பயனர்கள் மற்றும் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு தனித்தனி வேலிடிட்டி வழங்குகிறது. இதேபோன்ற டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கும் சலுகையை ஜியோ இதுவரை வழங்கவில்லை.

    வோடபோனின் புதிய ரூ.597 சலுகையில் பயனர்களுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இந்தியா முழுக்க ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு 112 நாட்கள் வேலி்டிட்டியும், ஃபீச்சர்போன் பயனர்களுக்கு 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

    இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகளில் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும், வேலிடிட்டி முழுக்க வாய்ஸ் கால் அளவு 100 எண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய சலுகை இந்தியா முழுக்க அனைத்து 4ஜி வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் புதிய சலுகையை செயலி மற்றும் வலைத்தளம் உள்ளிட்டவற்றிலும் பெற முடியும்.

    ஏர்டெல் சார்பில் 168 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையில் 10 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த சலுகைக்கான கட்டணம் ரூ.597 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் ஃபீச்சர்போன் பயனர்களுக்கான வேலிடிட்டி குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஏர்டெல் ரூ.597 சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.199 சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.75 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #offers



    இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படும் போன்பெ ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    அதன்படி போன்பெ ஆப் மூலம் ரூ.199 பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைஏர்டெல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்து, போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்துவோருக்கும் கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் வழங்கும் ரூ.199 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர் மற்றும் வெளியூர்), இலவச ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ.199 சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையின் கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மாதம் ரூ.25 கேஷ்பேக் ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் தொகை போன்பெ வாலெட் / கிஃப்ட் வவுச்சர் பேலென்ஸ் / போன்பெ அக்கவுன்ட் மூலம் பெற முடியும். 
    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #Airtel #offer



    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட், வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    அதன் பின் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது ஹோம் பிராட்பேன்ட் சேவக்கான கட்டணத்திலேயே இணைத்துக் கொண்டு செலுத்த முடியும். தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இலவச சேவை வழங்கப்படுகிறது.

    இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படாத பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை ஏர்டெல் செயலிகள் மூலம் சைன்-இன் செய்து தங்களது சந்தாவுக்கான கட்டணத்தை ஏர்டெல் கட்டணத்துடன் இணைத்து செலுத்த முடியும். இலவச சேவை வழங்கப்பட்டுள்ள பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு தைன்-அப் செய்து மூன்று மாத சேவையை ஏர்டெல் டிவி ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.

    புதிய சலுகையில் தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்களுக்கு வரும் வாரங்களில் தகவல் 
    தெரிவிக்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை விளம்பரப்படுத்தி ஏர்டெல் டிவி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளன.

    அந்த வகையில் ஏர்டெல் டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் தரவுகள் பிரத்யேகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.
    ×