search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95834"

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதத்தில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான அன்லிமிட்டெட் டேட்டா அனுபவத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக பாரதி ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்வோருக்கு உண்மையான அன்லிமிட்டெட் அனுபவத்தை வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

    புதிய அறிவிப்பை தொடர்ந்து அதிவேக டேட்டா அளவு பயன்படுத்தியதும், டேட்டா வேகம் 128Kbps ஆக இருக்கும், பிஎஸ்என்எல் ஏற்கனவே இதே வேகத்தில் டேட்டா சேவையை வழங்குகிறது, சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தினசரி பயன்பாட்டு அளவை கடந்ததும் டேட்டா வேகம் 128Kbps இல் இருந்து 64Kbps ஆக குறைக்கப்பட்டது. 

    மார்ச் மாதம் ஏர்டெல் அறிவித்த ரூ.995 சலுகையில் முதல்முறையாக உண்மையான அன்லிமிட்டெட் சேவையை வாய்ஸ் கால் சேவைகளில் அறிமுகம் செய்தது. ஏர்டெல் வாடிக்கையாளர்களில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகையை பயன்படுத்துவோர் தங்களின் தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும் 128Kbps வேகத்தில் டேட்டா பயன்படுத்த முடியும். 


    கோப்பு படம்

    இதனால் தினசரி டேட்டா அளவு கடந்ததும் கூடுதல் டேட்டா வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்ததும், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டா அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பிராட்பேன்ட் சேவையில் குறிப்பிட்ட அளவை கடந்ததும் டேட்டா வேகம் 512Kbps ஆக மாற்றப்படுகிறது. 

    ஏர்டெல் புதிய அறிவிப்பு தினசரி டேட்டா வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும், இதனால் வழக்கமான இன்டர்நெட் பேக் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், கட்டணம் வசூலிக்கப்படும். புதிய சலுகையை பெற புதிதாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, ஏற்கனவே ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் தானாக 128Kbps ஆக மாற்றப்படும்.
    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.118 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    புதிய பிஎஸ்என்எல் சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ரூ.98 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சார்பில் PRBT டியூன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய சலுகையை ரீசார்ஜ் செய்ததும், இந்த சேவை தானாக ஆக்டிவேட் ஆகிவிடும். வாடிக்கையாளர்கள் இந்த டியூன்களை மாற்றும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    பிஎஸ்என்எல் புதிய ரூ.118 சலுகை சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா மற்றும் பல்வேறு இதர வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரோமிங்கின் போது மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களை தவிர்த்த பகுதிகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. ஏர்டெல் ரூ.93 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐடியா வழங்கும் ரூ.109 சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழை்ப்புகள், 1 ஜிபி டேட்டா, 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை கடந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு ஒரு பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பாரதி ஏர்டெல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது. #Airtel #RelianceJio
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பாரதி ஏர்டெல் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களுக்கு வழங்கும் சில சேவைகளில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாகவும், இந்த விவகாரத்தில் ஏர்டெல் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ கேட்டு கொண்டுள்ளது.

    “ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சேவை ஏர்டெல் சார்பில் வழங்கப்பட்டு வருவதில் ஒருங்கிணைந்த உரிமத்தின் விதிகளை மீறும் வகையில் உள்ளது,” என ரிலையன்ஸ் ஜியோ சார்பில் அனுப்பப்பட்டு இருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து ஏர்டெல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தை மே 11-ம் தேதி முதல் விற்பனை செய்து வருகின்றன. ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபோன் பயன்படுத்துவோர் ஒரே சிம் கார்டு கொண்டு ஐபோன் மற்றும் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் இ-சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.


    இ-சிம் கார்டு, ஐபோனில் உள்ள சிம் கார்டுடன் பிரத்யேக நெட்வொர்க் நோட் மூலம் இணைந்து கொள்ளும். இந்த நோட் இ-சிம் கார்டில் உள்ள ப்ரோஃபைல் அலோகேஷனில் ஆப்பரேட்டர், சிம் தகவல்கள், பின், ரிமோட் ஃபைல் மேனேஜ்மென்ட் போன்ற தகவல்களை கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்திருக்கும் புகாரில் ஏர்டெல் சார்பில் இந்தியாவில் இசிம்-களுக்கான ப்ரோவிஷனிங் நோட்களை செட்டப் செய்யவில்லை என குறிப்பிட்டிருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களில் வழங்கும் நோட்கள் இந்தியாவுக்கு வெளியே அமைந்திருக்கிறது, என்றும் விதிமுறைகளை மீறும் செயல் என ஜியோ தெரிவித்திருக்கிறது.

    மேலும் “ஏர்டெல் நிறுவனம் மேண்டுமென்றே இந்திய எல்லைக்கு வெளியே நெட்வொர்க்களை கட்டமைத்திருக்கிறது, இந்த விவகாரத்தில் உடனடியாக ஏர்டெல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம். இதுமட்டுமின்றி ஏர்டெல் உடனடியாக இந்த சேவையை நிறுத்த உத்தரவிட வேண்டுமென,” ஜியோ தெரிவித்துள்ளது.  #Airtel #RelianceJio
    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ([ஜிபிஎஸ் + செல்லுலார்) விற்பனை துவங்கியுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஆப்பிள் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடலின் விற்பனையை இந்தியாவில் துவங்கியுள்ளது. 

    இந்தியாவில் மே 4-ம் தேதி முன்பதிவு துவங்கிய நிலையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பேஸ் மாடல் விலை ரூ.39,080 முதல் துவங்குகிறது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இசிம் பயன்படுத்துவதால், பிரத்யேக சிம் கார்டு தேவைப்படாது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 70% வேகமாக இயங்கும், புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வேகமான வைபை, 50% சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளையும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி கொண்டுள்ளது.



    அறிமுக சலுகைகள்:

    ஏர்டெல் சார்பில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.5000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் (JioEverywhereConnect) சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் சேவை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.



    பல்வேறு நாடுகளில் விற்பனை:

    இந்தியா மட்டுமின்றி ஸ்வீடன், டென்மார்க் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 9ஜிபிஎஸ் + செல்லுலார்) ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இந்திய விலை:

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் 38 மில்லிமீட்டர் சில்வர் அலுமினியம் கேஸ் ஃபாக் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / கோல்டு அலுமினியம் கேஸ் மற்றும் பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், கிரே ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.39,080 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஆரம்ப விலை ரூ.39,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு கேஸ்கள், மற்றும் நிறங்களுக்கு ஏற்ப விலை மாறுகிறது. ஆப்பிள் வாட்ச் எடிஷன் (ஜிபிஎஸ் + செல்லுலார்) 42 மில்லிமீட்டர் செராமிக் கேஸ், சாஃப்ட் வைட் / பெப்பிள் ஸ்போர்ட் பேன்ட் கொண்ட மாடலின் விலை ரூ.1,22,090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் விலை உயர்ந்த் சீரிஸ் 3 வாட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடல் நோக்கியா 6.1 என அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மே 13-ம் தேதி விற்பனைக்கும் வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஹெச்எம்டி குளோபல் புதிய ஸ்மார்ட்போனின் விலையை அறிவித்துள்ளது.

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் டூயல் சைட் / போத்தி அம்சம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஃபேஸ் அன்லாக் OTA அப்டேட் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 6.1 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி



    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் பிளாக்/காப்பர், வைட்/ஐயன் மற்றும் புளு/கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. மே 13-ம் தேதி முதல் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6.1 விலை இந்தியாவில் ரூ.18,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் விற்பனையாகும் நோக்கியா 6 (2018) 3 ஜிபி ரேம் / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    நோக்கியா 6.1 அறிமுக சலுகைகள்:

    - ஏர்டெல் 4ஜி சந்தாதாரர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக்
    - டிசம்பர் 31, 2018 வரை இலவச ஏர்டெல் டிவி சந்தா
    - சர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான டேமேஜ் இன்சூரன்ஸ்
    - மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி
    - வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    ×