search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரடி"

    கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கரடி புகுந்தது. அந்த கரடி அங்கு ஜாலியாக உலா வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஊட்டி நகருக்குள் புகுந்த கரடியால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.இதன் காரணமாக தண்ணீர் , உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கிறது.

    இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஊட்டி நகரில் உள்ள மாரியம்மன் கோவில் வீதிக்கு வந்தது. கரடியை பார்த்த தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டியது.

    நாய்களிடம் இருந்து தப்பிக்க கரடி அந்த பகுதியில் உள்ள வீட்டின் கூரை மீது ஏறியது. பின்னர் அங்குமிங்கும் துள்ளி குதித்து ஓடியது. இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கரடி ஊருக்குள் நுழைந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். பொது மக்கள் சத்தம் எழுப்பி கரடியை விரட்டினர். இதில் பயந்த கரடி கட்டடங்கள் மீது ஏறியும், பொது மக்களை விரட்டியும் அச்சுறுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்களுக்கு பயந்த கரடி மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் பதுங்கி உள்ளது.

    கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை டாக்டர்கள் வராததால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

    மார்க்கெட் பகுதியில் மக்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வனத்துறை டாக்டர்கள் வந்த உடன் மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

    கர்நாடக மாநிலம் கானாப்பூர் வனப்பகுதியில் விவசாயியை தாக்க வந்த கரடியிடம் நாய்கள் போராடி விவசாயியை காப்பாற்றியது. #bearattack #dogssavedfarmer

    பெல்காம்:

    கர்நாடக மாநிலம் கானாபூர் தாலுக்காவில் உள்ள மோகிசெட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம் கிரப்பா மிராஷி (51) விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் தனது வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அவர் தன்னுடன் 2 நாய்களையும் அழைத்து வந்தார். கானாப்பூர் வனப்பகுதியில் வந்தபோது அங்கு புதரில் மறைந்திருந்த 2 கரடிகள் மிராஷியை தாக்க பாய்ந்து வந்தன. அதை பார்த்ததும் நாய்கள் குரைத்தன. உடனே சுதாரித்துக்கொண்ட மிராஷி உயிர்பிழைக்க அருகில் இருந்த ஒருமரத்தில் ஏறினார்.

    அப்போது கரடிகள் அவரது காலை கவ்விப்பிடித்து கீழே இழுத்தன. அதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த நாய்கள் கரடி மீது வெறிகொண்டு பாய்ந்து தாக்கியது. அதற்குள் அவர் மரத்தின் மீது பாதுகாப்பாக ஏறினார்.

    அதேநேரத்தில் கரடிகளின் தாக்குதல் நாய்கள் மீது மாறியது. அவை நாய்களை விரட்டி சென்றன. அந்த நேரத்தில் மிராஷா மரத்தில் இருந்து கீழே இறங்கி அருகில் உள்ள தனது வயலில் கட்டப்பட்டுள்ள கொட்டகையில் பாதுகாப்புடன் தங்கினார்.

    சிறுது நேரம் கழித்து பத்திரமாக வீடுதிரும்பினார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மிராஷியை பார்த்தனர். இரவு நேரத்தில் கிராமமக்கள் கானாபூர் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தினர்.

    இந்த சம்பவத்தின் மூலம் “நாய்கள் மனிதர்களின் நண்பன். தனது எஜமானுக்கு ஆபத்து ஏற்பட்டால் போராடி காப்பாற்றும்” என்ற கருத்து நிரூபணமாகி உள்ளது. #bearattack #dogssavedfarmer

    கோத்தகிரி அருகே பேக்கரியில் புகுந்து கரடி அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் எஸ். கைகாட்டி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மெயின் ரோட்டில் ஜெகதீஷ் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார்.

    இதன் பின்புறம் இவரது வீடு உள்ளது. நேற்று நள்ளிரவு கரடி ஒன்று பேக்கரியின் முன்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. சத்தம் கேட்டு ஜெகதீஷ் அங்கு வந்தார். அப்போது கரடி பேக்கரியில் வைக்கப்பட்டு இருந்த ஷோகேசை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த முறுக்கு, கேக் உள்ளிட்டவைகளை தின்று சேதப்படுத்தி கொண்டு இருந்தது. இதனால் ஜெகதீஷ் அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் தொடர்ந்து கூச்சல் போடவே கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அலுவலர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் இன்று காலை அங்கு வந்தனர்.

    அவர்கள் பேக்கரியில் ஆய்வு செய்த போது கரடி புகுந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அப்பகுதி கிராம மக்கள் கூறும் போது, கடந்த சில நாட்களாகவே இப் பகுதியில் கரடி சுற்றி திரிந்து வருகிறது.

    இதனை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஊருக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி டானிங்டனில் இன்று அதிகாலை வீட்டின் கேட்டில் கரடியின் தலை சிக்கி கொண்டது. இதனால் அதிகாலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொலக்கம்பை, தூதூர்மட்டம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர்.

    இன்று அதிகாலை டானிங்டன்னை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது வீட்டு முன்பு ஒரு பெண் கரடி 2 குட்டிகளுடன் வந்தது. அந்த கரடிகள் கேட் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டில் இருந்து வெளியேற முயன்ற போது 2 குட்டிகளில் ஒரு கரடி குட்டியின் தலை கேட்டில் சிக்கி கொண்டது.

    தலை வெளியே வராததால் கரடி சத்தம் போட்டது. குட்டி வரமுடியாமல் தவித்ததால் தாய் கரடி மற்றொரு குட்டியுடன் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.

    கரடியின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு குட்டியுடன் நின்று கொண்டு இருந்த தாய் கரடியை தீ பந்தம் கொளுத்தி காட்டுக்குள் விரட்டினர். பின்னர் கேட்டில் சிக்கிய குட்டி கரடியை மீட்டு காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர்.

    இதனால் அதிகாலையில் டானிங்டன்னில் பரபரப்பு ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பகல் நேரத்திலேயே சாலைகளில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த ஆண்டு தம்பதியை அடித்துக்கொன்ற கரடியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

    இந்த ஆண்டு கோத்தகிரி, அணைஹட்டி, தேன்மழை, கோர்பெட்டா, காந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைக்கு ஊடுபயிராக பேரிக்காய் பயிரிட்டுள்ளனர். தற்போது பேரிக்காய் நன்கு காய்த்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து கரடிகள் பேரிக்காய் தின்பதிற்காக தேயிலை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.

    இதைப்பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பகல் நேரத்தலேயே சாலைகளில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். இது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை கரடிகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மயிலாடும்பாறை, பொன்னம்படுகை, அரசரடி, கொங்கரவு, பழையகோட்டை, வண்டியூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய், முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    மேலும் இப்பகுதியிலேயே வீடுகட்டி விவசாயிகள் காவலுக்கு இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கிலி மலைப்பகுதியில் உணவுதேடி வந்த கரடிகள் தோட்டப்பயிர்களை நாசம் செய்தன. இதனால் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    தற்போது பழையகோட்டை வண்டியூர் பகுதியில் கரடிகள் தோட்டப்பயிர்களை நாசம் செய்து சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் கரடிகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews
    சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் கரடி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #Bearattack
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள கர்சியா வனச்சரகம் அருகே இன்று காலை தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக இந்தல் சிங் ரதியா (50) என்ற விவசாயி சென்றுள்ளார்.

    அப்போது அங்கு தனது குட்டிகளுடன் வந்த பெண் கரடி அவரை தாக்கியதில் ரதியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துரையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக, விவசாயினுடைய உறவினர்களுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Bearattack
    ×