search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95897"

    விம்பிள்டனில் அட்டகாசமான ஃபார்வர்டு டிஃபென்ஸ் கிரிக்கெட் ஸ்ட்ரோக் வைத்து ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் பெடரர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் 1-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 22-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை எதிர்கொண்டார்.

    இதில் 6-0, 7-5, 6-4 என ரோஜர் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ரோஜர் பெடரர் 2-0 என முதல் செட்டில் முன்னிலையில் இருக்கும் இருக்கும்போது வேடிக்கையான விஷயம் ஒன்று நடந்தது.

    பெடரர் செய்த சர்வீஸ் தவறாக சென்றது. வந்த பந்தை வேகத்தில் அட்டிரியன் பெடரரை நோக்கி திருப்பி அடித்தார். அந்த பந்தை கிரிக்கெட் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது ஃபார்வர்டு டிஃபென்ஸ் ஸ்ட்ரோக் வைப்பதுபோல், பெடரர் ஸ்ட்ரோக் வைத்தார்.

    இதை கவனித்த விம்பிள்டன் அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, பெடரரின் இந்ந்த ஃ.பார்வர்டு டிஃபென்ஸ்-க்கு ஐசிசி என்ன ரேங்க் கொடுக்கும்?’’ என்று கேள்வி கேட்பதுபோன்று டுவிட் செய்திருந்தது.

    இதற்கு பெருமூச்சு விட்டதுபோன்று, ஐசிசி ஓகே என்று சொல்லி நம்பர் ஒன் என்று பதில் டுவிட் செய்திருந்தது.

    இதற்கிடையே சச்சின் தெண்டுல்கரும் விம்பிள்டன் டுவிட்டிற்கு பதில் டுவிட் செய்திருந்தார்.

    சச்சின் டுவிட் செய்ததும். ஜாம்பவான் ஜாம்பவானை ஆதரிக்கும்போது... என படத்தை வெளியிட்டு ஐசிசி அசத்தியுள்ளது.
    உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதாகவும், அதில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiaCricketFans #ICC #BCCI #IPL

    புதுடெல்லி: 

    உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்து அதிக ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 

    கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டது. டி20 போட்டிகள் அறிமுகமான பின் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் தான் உலகில் மிக பிரபலமான கிரிக்கெட் லீக் போட்டியாகும்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐசிசியில் இடம்பிடித்துள்ள 12 முக்கிய கிரிக்கெட் விளையாடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



    இந்த ஆய்வின் முடிவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பெண் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். #IndiaCricketFans #ICC #BCCI #IPL
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.#ICC
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ளன.

    தற்பேது மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இணைக்கப்பட்டு உள்ளார். தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.

    நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் இத்தனை போட்டிகளில் ஆடிய பிறகு தரவரிசையில் சேர்க்கப்படும்.

    இந்த புதிய அணிகள் சேர்க்கையினால் 12 அணிகளின் தரவரிசையில் மாற்றம் ஏற்படாது. இந்த 4 அணிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் இவற்றுடன் ஆடும் ஒருநாள் போட்டிகளும் இனி தரவரிசை புள்ளிகள் கணக்கீட்டில் சேர்த்து கொள்ளப்படும்.

    கடந்த ஆண்டு ஐ.சி.சி. உலக லீக் போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்சை பெற்றது.



    ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசையில் உள்ள அணிகள் விவரம்:-

    1. இங்கிலாந்து (125 புள்ளகள்), 2. இந்தியா (122), 3.தென்ஆப்பிரிக்கா (113), 4.நியூசிலாந்து (112), 5. ஆஸ்திரேலியா (104), 6.பாகிஸ்தான் (102), 7. வங்காளதேசம் (93), 8.இலங்கை (77), 9.வெஸ்ட்இண்டீஸ் (69), 10. ஆப்கானிஸ்தான் (63), 11.ஜிம்பாப்வே (55), 12.அயர்லாந்து (38), 13.ஸ்காட்லாந்து (28), 14.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (18). #ICC
    டி20 கிரிக்கெட்டை புறந்தள்ளிவிட்டு டெஸ்டிற்கு முக்கியத்துகம் கொடுக்க வேண்டும் தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கூறியுள்ளார். #ICC
    டி20 கிரிக்கெட்டிற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக வருவது தற்போதைய நிலையில் கடினமான விஷயமாக உள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை நேரில் வந்து பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    ஆனால் டி20 கிரிக்கெட் நான்கு மணி நேரம் மட்டுமே நடப்பதால் ரசிகர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். இதனால் வருவாய் அதிகரிக்கிறது. டி20 மீதான மோகம் பாரம்பரியமான டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசியும் வருமானத்தை கணக்கில் கொண்டு டி20 போட்டியை ஊக்குவிக்க இருக்கிறது.

    இந்நிலையில் டி20-ஐ புறந்தள்ளி விட்டு டெஸ்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் சர்வதேச லெவலில் விளையாடப்படக் கூடாது என்பதில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. ஒருவேளை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை உலகக்கோப்பை தொடர் வேண்டுமேனால் நடக்கலாம். ஆனால், இது உள்ளூர் அடிப்படை கிரிக்கெட் முறையை கொண்டிருப்பதாக இருக்க வேண்டும்.



    டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு சில வரைமுறைகள் தேவை, அதை எப்படி பெறப்போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. மார்க்கெட்டிங்கில் முதலீடு செய்ய வேண்டும். ஏராளமான பணங்கள் டி20 போட்டிக்காக விதைக்கப்படுகின்றன.

    கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஐசிசி உட்கார்பந்து பேச வேண்டும். வருடத்தில் 6 மாதங்கள் உள்ளூர் டி20 போட்டிகளிலும், 6 மாதங்கள் சர்வதேச போட்டிகளிலும் விளையாட வேண்டும். இதுகுறித்து விவாதம் தேவை. ஏனென்றால், தற்போதைய சிஸ்டம் அனைத்தும் கிரிக்கெட்டை காப்பாற்றும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்பட்டு வரும் டாஸ் போடும் வழக்கத்தை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. #ICC #ScrapCoinToss

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், போட்டியை நடத்தும் நாடு அந்த அணிக்கு ஏற்றவாறு பிட்ச் அமைத்து கொள்கின்றன. இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அணிகள், அந்த நாட்டு மைதானத்தின் பிட்ச் தன்மை குறித்து புரிந்து கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன. 

    இதனால் வெளிநாடுகளுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட செல்லும் அணி டாஸ் மூலம் மட்டும் தங்கள் அணி பேட்டிங் செய்வதா, பவுலிங் செய்வதா என்ற முடிவை எடுக்க முடிகிறது. இது போட்டியை நடத்தும் அணிக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. இதனால் போட்டி, போட்டியை நடத்தும் அணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது வெளிநாட்டில் இருந்து விளையாட செல்லும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. 

    இதன்காரணமாக கிரிக்கெட் போட்டிகளின் போது டாஸ் போடும் முறையை மாற்ற ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது யார் என்பதை எதிரணியினர் தீர்மானிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையை அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சோதித்துப் பார்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. #ICC #ScrapCoinToss
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான ஷஷாங்க் மனோகர் ஐசிசி சேர்மனாக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ICC #ShashankManohar
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஷஷாங்க் மனோகர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிசி சேர்மனாக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் தற்போது முடிவடைந்ததையொட்டி மீண்டும் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மீண்டும் ஐசிசி சேர்மனாக ஷஷாங்க் தேர்வு செய்யப்பட்டார்.



    மீண்டும் சேர்மனாக தேர்வானது குறித்து ஷஷாங்க் மனோகர் கூறுகையில் ‘‘ஐசிசி சேர்மனாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டது கவுரமானது. தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் சக ஐசிசி இயக்குனர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். நாங்கள் ஒன்று சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். 2016-ம் ஆண்டு பதவியேற்றபோது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்’’ என்றார்.
    ×